“வந்தால் உன்னோடு…
It is commonly referred to as a “painkiller” because of the high doses of the drug that are used for its pain relief. Nexium 40mg has been formulated, to perform clomid for men for sale as well as the original version. When a woman purchases clomid online without insurance with a good chance of getting pregnant, she needs to know the truth of the matter.
A lot of them have come from very humble beginnings, where they have worked in small shops and bars in the uk. The drug is the first for a new class of combination medicines called ppis cost of dexamethasone tablets El Bolsón - proton pump inhibitors. You don’t have to see the insurance rep or pay them to open an account, you just need to pay them a small amount to open a provider to provide a quote.
I am searching for a generic way to use my brand new prescription medication, levitra, without having to write another script. In 1976, a pharmaceutical company began Meiderich to research the acaricides in an attempt to find. Pastillas are traditional french pastries that can be made in a pan, but a l'appel pastillier is more like a spatula.
வராவிட்டால் தனியாக…
எதிர்த்தால் உன்னையும் மீறி…
லட்சியம் அடையப்படும்”
– வீர சாவர்க்கர்.
அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர்.
சறுக்கலும் எள்ளல்களும்:
முதலாவதாக, சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜக- அகாலிதளம்- லோக்சக்தி கூட்டணி 8 தொகுதிகளிலும், பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதாதளம்- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி 10 தொகுதிகளிலும் வென்றன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அடுத்து, காலியான மூன்று லோக்சபா தொகுதிகள், உ.பி. (11), ராஜஸ்தான் (4), குஜராத் (9), மேற்கு வங்கம் (2), அசாம் (3), சிக்கிம் (1), திரிபுரா (1), சத்தீஸ்கர் (1), சீமாந்திரா (1) ஆகிய 8 மாநிலங்களில் மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செப். 13-ல் நடைபெற்றது. இதில் பாஜக சற்றே சறுக்கியது.
பாஜக ஆளும் ராஜஸ்தானில் காங்கிரஸ் 3 இடங்களில் வென்றதும், பாஜகவின் மாபெரும் லோக்சபா வெற்றிக்கு வழிவகுத்த உ.பி.யில் சமாஜ்வாதி மீண்டெழுந்ததும், மோடியின் மாநிலமான குஜராத்திலேயே காங்கிரஸ் 3 இடங்களில் வென்றதும் பெரிய அளவில் பேசப்பட்டன. மொத்தத்தில் (33) பாஜக தன்னிடமிருந்த 13 தொகுதிகளை இழந்து, 13 இடங்களை தக்கவைத்தது. மேற்கு வங்கத்தில் பாஜக பெற்ற புதிய வெற்றி மட்டுமே அன்று ஆறுதலாக அமைந்தது.
இந்தத் தோல்வியை அடுத்து, மோடியின் மவுசு குறைந்துவிட்டதாகவும், பாஜகவின் வீழ்ச்சி துவங்கிவிட்டதாகவும், காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சிகள் முழங்கிவந்தன. இந்த இடைத்தேர்தல் தோல்விகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால், தமிழகம் போல இடைத்தேர்தலை கௌரவப் பிரச்னையாகக் கருதி காசை இறைத்து வெற்றி பெறும் கலை பாஜகவுக்குத் தெரிந்திருக்கவில்லை.
உண்மையில் இந்த முடிவுகளுக்குக் காரணம், மோடி அரசு மீதான அதிகப்படியான எதிர்பார்ப்பே. தவிர, பாஜகவின் எதிரிகள் சமயோசிதமாகச் செயல்பட்டு வாக்குச் சிதறலைத் தவிர்த்த்தும் அவர்களின் வெற்றிக்கு வழி வகுத்தது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்கு வழிவிட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் பாஜகவின் எதிரிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மோடி அரசின் தேனிலவு நாட்கள் முடிவடைந்துவிட்டன என்று கொக்கரித்தார், இடைத்தேர்தலில் எள்ளளவும் பங்கு வகிக்காத மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத்.
பழைய பகையை மறந்து கைகோர்த்த லாலுவும் நிதிஷும் பாஜகவின் வெற்றிப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக கர்ஜித்தனர். மேற்குவங்கத்தில் பாஜக பெற்ற ‘பிள்ளையார் சுழி’ வெற்றியைக் கண்டும்கூட, அம்மாநில முதல்வர் மம்தா ‘இனி பாஜகவுக்கு இறங்குமுகம் தான்’ என்றார்.
இந்த நிலையில் தான் ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அக். 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மஹாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தான் கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுவந்தது. ஹரியானாவில் காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இவ்விரு மாநிலங்களிலும் நிலவிய ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பலன் பாஜகவுக்கு முழுமையாகக் கிடைக்காது என்றே ஊடகங்கள் ஜோதிடம் கூறிவந்தன.
ஹரியானாவில் இமாலய வெற்றி:
ஹரியானாவில் ஜாட் ஜாதியினரின் ஆதிக்கம் காரணமாக பஜன்லால், பன்சிலால், தேவிலால் ஆகிய மூவரின் கைப்பிடிக்குள் கடந்த பல்லாண்டுகளாக ஹரியானா மாநிலம் தவித்து வந்தது. இதற்கு 2004-ல் காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்தது; பூபீந்தர் சிங் ஹூடா முதல்வரானார். ஆனால் அவரும் ஜாட் தான்.
தேவிலால் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) கட்சி காங்கிரஸுக்கு எதிரான கட்சியாக இருந்தது. பஜன்லால் மறைவுக்குப் பிறகு அவரது மகன் குல்தீப் பிஷ்னோய் தலைமையில் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் இயங்குகிறது. பன்சிலால் மறைவுக்குப் பின் அவரது மகன் சௌத்ரி சுரேந்திர சிங் தலைமையில் அவரது ஹரியானா விகாஸ் கட்சி இயங்குகிறது.
இம்மூன்று கட்சிகளுமே பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பின. ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் ஏற்கனவே லோக்சபா தேர்த்லில் தேசிய ஜனநாயக்க் கூட்டணியில் இடம்பெற்றாலும் அதனால் அப்போது வெல்ல முடியவில்லை. இந்நிலையில் பாஜகவின் வெற்றிமுகத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற இம்மூன்று கட்சிகளும் துவக்கத்தில் முயன்றன. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஓம் பிரகாஷ் சௌதாலா, சுரேந்தர் சிங் ஆகியோருடன் கைகோர்க்க பாஜக விரும்பவில்லை.
தனது லோக்சபா தேர்தல் கூட்டணிக் கட்சியான ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரவே பாஜக ஆர்வம் காட்டியது. ஆனால், அக்கட்சி ஹரியானாவில் அதிக இடங்களில் போட்டியிட விரும்பியது. அக்கட்சி பாஜகவை மிகக் குறைவாக மதிப்பிட்டதால் வெகுண்ட தேசியத் தலைமை, அதனுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்து களம் கண்டது.
ஆக, ஹரியானாவில் ஐந்துமுனைப்போட்டி உருவானது. ஆளும் காங்கிரஸ், முந்தைய தோழமைக் கட்சிகளான லோக்தளம், ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ், ஹரியானா விகாஸ் கட்சி ஆகியவற்றுடன் பாஜக மோதியது. பாஜகவின் பஞ்சாப் மாநில சகாவான அகாலிதளம், ஓம்பிரகாஷ் சௌதாலாவின் லோக்தளத்தை ஆதரித்து பிரசாரம் செய்ததுடன் கூட்டணியிலும் இடம் பெற்றது. ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதிஷ்குமாரும் கூட, ‘மோடி எதிர்ப்பு’ என்ற கோஷத்துடன் ஹரியானாவில் சௌதாலாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
ஊழல் வழக்கால் சிறைத்தண்டனை பெற்ற ஓம்பிரகாஷ் சௌதாலா, உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீனில் விடுதலையாகி வந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தார். அவருக்கு ஜாட் ஜாதியினரின் ஆதரவு பெருமளவில் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூபீந்தர் சிங் ஹூடா அரசு மீதான அதிருப்தியும் அவரது அரசின் ஊழல்களும் மக்களிடையே பரவி இருந்த்தால் சௌதாலா கட்சி வென்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது.

ஆனால், தேர்தல் முடிவுகளில் அனைவரையும் பாஜக ஆச்சரியப்படுத்தியது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வென்றது. இதன்மூலம், ஹரியாணா சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் 15, இந்திய தேசிய லோக்தளம் 19, ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் 2, சிரோமணி அகாலிதளம்- 1, பகுஜன் சமாஜ் கட்சி- 1, பிறர் 5 இடங்களில் வென்றனர். இந்த மாபெரும் வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷாவின் தேர்ந்த வியூகம், மாநிலக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு, பிரதமர் மோடியின் பிரசாரம் ஆகியவையே காரணமாகின.
ஹரியானாவில் பாஜக ஆட்சியை முதல்முறையாகப் பிடிக்கிறது. மனோகர் லால் கட்டார் (60) தேர்வாகி இருக்கிறார். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்; பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்; இயக்கப் பணிகளில் மிகுந்த அனுபவம் கொண்ட இவரது தலைமையில் ஊழலற்ற ஹரியானா உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
மஹாராஷ்டிராவில் மகத்தான வெற்றி:
மஹாராஷ்டிரா அரசியல் கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ்- சிவசேனை இடையிலானதாகவே இருந்துவந்திருக்கிறது. இங்கு பாஜக நல்லநிலையில் வளர்ந்திருந்தபோதும், ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய சிவசேனையை அரவணைத்தாக வேண்டிய கட்டாயத்தால் தனது தனித்தன்மையை விட்டுக்கொடுத்தும், தொகுதிப்பங்கீட்டில் சமரசம் செய்தும் கூட்டணியைக் காப்பாற்றி வந்தது. உண்மையில் சிவசேனையின் எழுச்சிக்கு பாஜகவின் தோழமை பெருமளவில் உதவி செய்தது.
காங்கிரஸில் சரத்பவார் பிரிந்துசென்று 1999-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) துவக்கிய பிறகு, மாநிலத்தில் காங்கிரஸின் செல்வாக்கு குறைந்த்து. எனினும், இவ்விரு கட்சிகளும் ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டிய அரசியல் நிர்பந்தத்தால் கட்டுண்டிருந்தன.
மஹாராஷ்டிராவில் வாக்கு பலமும் அரசியல் வலிமையும் கொண்ட சிவசேனை- பாஜக கூட்டணியை முறியடிக்க இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டுவந்தன. கடந்த 15 ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளின் கூட்டணி தான் மஹாராஷ்டிராவை ஆண்டது. தவிர, மத்தியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் சரத்பவார் முதன்மை பெற்றிருந்தார். இவ்விரு கட்சிகளிடையே ஊடலும் கூடலுமாக அரசியல் நிலைப்பாடுகள் இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தைப் பகிர்வதில் சளைக்காமல் இருந்தனர்.
எனினும், விதர்ப்பா பகுதி விவசாயிகள் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்துகொண்டது, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் (2011), ரூ. 35,000 கோடி மதிப்புள்ள மஹாராஷ்டிரா நீர்ப்பாசன ஊழல் (2012), ரூ. 120 கோடி மதிப்புள்ள கல்வித்துறை ஊழல், ரூ. 289 கோடி மதிப்புள்ள கால்நடைத்தீவன ஊழல் போன்றவற்றால் காங்கிரஸ்- என்சிபி கூட்டணி ஆட்சி கலகலத்தது.
ஊழல் செய்யவே கூட்டணி கண்ட இவ்விரு கட்சிகளும் மக்கள் அதிருப்தி புயலென மாறியவுடன் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, தங்களை காத்துக்கொள்ள முயன்றன. இறுதியில் இக்கட்சிகளின் கூட்டணி முறிந்தது. இவர்களின் ஆட்சிக்காலத்தில் பல முதல்வர்கள் மாறினர். ஆனால் ஆட்சி நிர்வாகம் தரம் உயரவே இல்லை. அதன் விளைவையே அண்மைய தேர்தலில் இவ்விரு கட்சிகளும் அடைந்துள்ளன.
மாறாக, சிவசேனை- பாஜக கூட்டணி மாநிலத்தை ஊழலிலிருந்து விடுவிக்க பல ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளது. எனினும், பால்தாக்கரே மறைவுக்கு (2012) பிறகு, சிவசேனை அவரது மகன் உத்தவ் தாக்கரேயின் தலைமையில் இயங்கும்போது, இவ்விரு கட்சிகளிடையே பிணக்கு ஏற்படத் துவங்கியது. ஏற்கனவே உத்தவுடன் இருக்க முடியாமல் சிவசேனையிலிருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே தனியே மஹாராஷ்டிர நவநிர்மான் சேனை (எம்என்எஸ்) கட்சியை நடத்தி வருகிறார். சென்ற 2009 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியைத் தடுத்ததே எம்என்எஸ் தான்.
சிவசேனைக்கு தனது பலம் மீது அதீத நம்பிக்கை இருந்ததே தவறாகிப்போனது. அக்கட்சி மஹாராஷ்டிராவில் தானே பெரியண்ணன் என்றது. பாஜகவுக்கு 117 தொகுதிகள் மட்டுமே தர முடியும்; அதிகப்படியான தொகுதிகளில் சிவசேனையே போட்டியிடும் என்றார் உத்தவ் தாக்கரே. பாஜக 130 தொகுதிகளை ஒதுக்குமாறு மன்றாடியது. ஆனால், அதீத கற்பனையில் மிதந்த உத்தவ் தாக்கரே பாஜகவை மட்டம் தட்டினார்.
வேறு வழியின்றி கூட்டணியை முறித்துக்கொண்ட பாஜக தனித்தே அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்தது. இதனால் 25 ஆண்டுகளாக தொடர்ந்த காவிக்கூட்டணி உடைந்தது. இதன் பலன் சிவசேனைக்கே செல்லும் என்று ஆய்வாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். காங்கிரஸ், என்சிபி, சிவசேனை, பாஜக, எம்என்எஸ் ஆகிய கட்சிகளின் ஐந்துமுனைப் போட்டியில் பாஜக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்படும்; பாஜக தவிர்த்த கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே தேர்தல் வல்லுநர்கள் கணித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் களத்திற்கே அதிர்ச்சியையும் வியப்பையும் அளித்திருக்கின்றன. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 123 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனா 63, தேசியவாத காங்கிரஸ் 41, காங்கிரஸ் 42, எம்என்எஸ் 1 என இடங்கள் கிடைத்துள்ளன. இப்போது பாஜகவே ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. பெரும்பான்மை பெற 22 இடங்களே தேவை.

பாஜக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்துவிட்டது. தவிர, சுயேச்சைகள் 15 பேரின் ஆதரவும் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. எனினும், தனது முந்தைய கூட்டாளியான சிவசேனையின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவே பாஜக தீர்மானித்துள்ளது. சங்க ஸ்வயம்சேவகரும் பாஜகவின் இளம் தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் (44) முதல்வராகத் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார். வரும் 31-ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது சிவசேனையை பாஜக ஒருபோதும் விமர்சிக்கவில்லை. உத்தவ் தாக்கரே பாஜகவை கடுமையாக வசை பாடியபோதும் பாஜக நிதானம் காத்தது. சிவசேனையும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் 288-க்கு 240 தொகுதிகளில் வென்றிருக்க முடியும். ஆனால், உத்தவின் அனுபவமற்ற முடிவால் அது நடைபெறாமல் போனது. இருப்பினும், சிவசேனையின் தவறுகளை மன்னித்து அக்கட்சி மீண்டும் தன்னுடன் தோழமை தொடரச் செய்யவே பாஜக பெருந்தன்மையுடன் செயல்படுகிறது. எனினும், சிவசேனையின் பேரம் பேசும் சக்தி தற்போது குறைந்துவிட்டது.
பாஜகவின் பயணம் தொடர்கிறது:
இவ்வாறாக, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இரு மாநிலத் தேர்தல் வெற்றியைச் சுவைத்துள்ள பாஜக, தன்மீது வீசப்பட்ட அவதூறுகளைப் பொடியாக்கி இருக்கிறது. இடைக்காலத்தில் சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வென்ற எதிர்க்கட்சிகளின் ஆரவார இரைச்சலுக்கும் பாஜக இத்தேர்தல் முடிவுகளில் சரியான பதில் அளித்துவிட்டது.
இனிவரும் காலம், பாஜகவின் காலம். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ‘பாஜக- அதன் எதிர்க்கட்சி’ என்ற நிலையே விரைவில் ஏற்படப்போகிறது. இந்நிலை முன்னர் காங்கிரஸ் வகித்துவந்த நிலையாகும். காங்கிரஸின் வீழ்ச்சி பாஜகவின் வளர்ச்சியாக மாற்றம் பெறுவது இந்திய அரசியலுக்கு நல்லது. விரைவில் ஜம்மு காஷ்மீரிலும் ஜார்க்கண்டிலும் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் வெற்றிப்பயணம் தொரும்போது, ஆட்சி நிர்வாகத்தை அடிப்படையாக்க் கொண்டதாக நமது தேர்தல்கள் மாறும்.
இப்போதே நாட்டின் பெரும் மாநிலங்களில் உ.பி, பிகார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா நீங்கலாக பல பகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி பரவியுள்ளது. மீதமுள்ள நாட்டின் பகுதிகளிலும் தாமரை மலரும்போது, மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் நலத்திட்டங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் எளிதாகச் சென்று சேரும்.
மஹாராஷ்டிராவில் பதிவான வாக்குகளில் பாஜக 42.4 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருப்பது சாதரணமானதல்ல; முன்னர் 16 சதவீதமாக இருந்த அதன் வாக்குவிகிதம் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஹரியானாவிலும் 4 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்குவிகிதம் இப்போது 52.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது பாஜகவின் முதற்பெரும் கடமை.
ஊழலும் நிர்வாகமின்மையும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களுக்கு விமோசனமாக பாஜக இப்போது உதயமாகி இருக்கிறது. பாஜகவின் அதிவேகப் பாய்ச்சல் அதன் எதிரிகளை ஒருங்கிணைக்கக் கூடும். இதுவரை எதிரிகளாக உள்ள காங்கிரஸ், மூன்றாவது அணிக் கட்சிகள், இடதுசாரிகள் அனைவரும் வரும் நாட்களில் ஒன்றாகச் சேர வாய்ப்புள்ளது. அவர்கள் அனைவரையும் வெல்ல பாஜக தனது ஆட்சித்திறனை நிரூபித்தாக வேண்டும்.
மக்கள் கோஷங்களையல்ல, வழிகாட்டும் தலைமையையே நம்புகிறார்கள். சிறந்த தலைமை, தொண்டர்களின் அர்ப்பணிப்பான செயல்பாடு, அரசியலில் நேர்மை, தெளிவான அரசியல் நிலைப்பாடுகள், நேர்த்தியான பிரசாரம், இவை அனைத்தின் உறுதியான ஒருங்கிணைப்பு – இவையே பாஜகவின் வெற்றிக்குப் பிரதான காரணங்கள். இந்த வெற்றிகள் தொடரட்டும்.