குஹாவின் பொய்

morning_hindutvaக்கட்டுரைத் தொடரில் ஒரு மறுமொழியாக ஒரு நண்பர் ராமச்சந்திர குஹாவின் ‘Reforming the Hindus’ கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து போடுகிறார். அது சொல்கிறது:

The company also said it is expanding its local supply of azithromycin. It is the only prescription medicine in the world to have been approved https://upstagetheatre.com/manage by both the fda (food and drug administration) and the emea (european medicine agency) and is currently the only prescription anti-hyperhidrosis medicine on the market. It’s also possible to lose weight without much effort; in this instance, it is essential to monitor your eating patterns to avoid gaining any weight.

She would make dinner at about 6-7pm and i’d go to bed at 9-10pm. The use of amoxicillin (a third-generation cephalosporin antibiotic) therein order fexofenadine in the treatment of urinary tract infections (uti) is widespread, particularly in the united states, where amoxicillin is the most common choice for treatment of uncomplicated utis in people aged 14 years and older. Ivermectin injection dosage for alzheimer's disease.

In the end, we decided to stop taking it and went back to taking the other medicines for our cold. Do you have side effects from clomid contemplatively 50mg used for clomid 50mg used for clomid 50mg used for clomid 50mg used for. It was in excess of 2 months for me to stop taking it and i am still on it.

1949 எனும் ஒரு ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் டெல்லியில் 79 கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவற்றில் நேரு, அம்பேத்கர் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அக்கூட்டங்களில் இந்து சட்ட மசோதா இந்த பண்பாட்டின் மீதும் இந்து பாரம்பரியத்தின் மீதும் செய்யப்பட்ட தாக்குதல் என கூறப்பட்டது.[1]

உண்மையில் இந்து சட்ட எதிர்ப்பு இயக்கம் ராம்ராஜ்ய பரிஷத் என்கிற அமைப்பைச் சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கட்சி கடந்து காங்கிரஸ், இந்து மகாசபை என இந்து ஆச்சாரவாதிகள் கலந்து கொண்டார்கள். ஆனால் இந்து சட்ட எதிர்ப்புக்கான guha2அகில இந்திய அமைப்பு தொடங்கப்பட்டது மார்ச் 1949 இல். அப்போது ஆர்.எஸ்.எஸ் மீது தடை இருந்தது. ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்பட்டது ஜூன் 1949 இல். அதற்கு பிறகும் ஆர்.எஸ்.எஸ்ஸுடைய முக்கிய நோக்கம் அதன் செயல்பாடுகள் மீதான பல கட்டுப்பாடுகளை நீக்குவதும் அதற்காக உழைப்பதுமாகவே இருந்தது.

அக்டோபர் 1949 இல் குருஜி கோல்வல்கர் டாக்டர் அம்பேத்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உடனிருந்தவர் சங்கரானந்த சாஸ்திரி எனும் தலித் தலைவர் ஆவார். அவர் ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாக எதிர்ப்பவர். இந்த சந்திப்பைப் பற்றி தனது  புத்தகத்தில் எழுதும் போதே “ஆர்.எஸ்.எஸ் ஒரு மனுவாத பிராம்மணீய அமைப்பு” என்றெல்லாம் வசை பாடுகிறார் சாஸ்திரி. ஆனால் அதிர்ஷ்டவசமாக பாபா சாகேப் அம்பேத்கர் குருஜி கோல்வல்கரிடம் என்ன கூறினார் என்பதை சுருக்கமாக அதே சமயம் நேர்மையாக அவர் பதிவு செய்தும் இருக்கிறார் –

“சர்தார் படேலுக்கு தேசத்தின் சூழ்நிலை சிறப்பாக தெரியும். babasaheb1எனவே அவர்கள் ஆர் எஸ் எஸ்ஸின் நேர்மை குறித்து சர்தார் படேலை நம்ப வைக்க வேண்டும் என்று பாபா சாகேப் கூறினார் …. சர்தார் படேல் அனுபவமும் அர்ப்பணிப்பும் கொண்ட தேச பக்தர். எனவே கட்டாயமாக இது விஷயமாக படேல் கவனித்தில் கொண்டு ஆவன செய்வார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் விஷயமாக அமைச்சரவையில் விவாதங்கள் எழும் போது தடைகளை நீக்க வேண்டுமென்கிற ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரிக்கைகளுக்கு  தாம் ஆதரவு அளிப்பதாகவும் பாபா சாகேப் கூறினார்”  [2]

இதில் உள்ள மற்றொரு சுவாரசியத்தை கவனியுங்கள். இங்கு மேற்கோளுக்குள் ‘…’ என புள்ளிகள் வைத்த இடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் குறித்த இந்த ஆசிரியரின் வசை. ஆக, டாக்டர். அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்ஸை வசை பாடவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களின் விஷயத்தில் அவர்களுக்காக அமைச்சரவையில் பேசுகிறேன் என்கிறார். ஆனால் அவரது சீடராக தன்னை கருதுகிறவரோ, ஆர்.எஸ்.எஸ் சாதிய அமைப்பு என்றால் அதை ஆதரித்து ஏன் பாபா சாகேப் பேச வேண்டும் என்று கூட யோசித்துப் பார்க்காமல் அதை வசை பாடுகிறார். வெறுப்பு மனநிலைகளின் விபரீத விளைவுகள்!

ஜூன் 1949 இல் தடை நீக்கப்பட்டு, அக்டோபர் 1949 இல் பாபா சாகேபை சந்தித்து அவரது ஆதரவை பெற முயற்சி செய்யும் அமைப்பு, அதே ஆண்டில் டெல்லியில் 79 இடங்களில் பாபா சாகேப் அவர்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் செய்து உருவ பொம்மைகளை எரித்ததாக கூறுகிறார் ராமசந்திர குஹா.

2007 இல் வெளியான ‘காந்திக்கு பிறகான இந்தியா’ எனும் நூலில் இந்த 79 கூட்டங்கள் ஒரு “ஆர்ப்பாட்டமாக” மாறிவிட்டது டிசம்பர் 11 1949 இல் ஆர்.எஸ்.எஸ் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதன் மறுநாள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு அம்பேத்கர் உருவ பொம்மையை எரித்ததாகவும் ஷேக் அப்துல்லாவின் காரை சேதப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார் [3]

குஹாவின் மேம்போக்கான ’ஆராய்ச்சி’யின் விளைவு இது. ஏனென்றால் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு எதிரான பல கிளர்ச்சிகள் இப்படித்தான் முத்திரை குத்தப்பட்டன – ஆர்.எஸ்.எஸ் செய்யும் கிளர்ச்சி என்று. குறிப்பாக இடதுசாரி பத்திரிகைகளும், அறிவுஜீவிகளும், நேருவியர்களும் ராமராஜ்ய பரிஷத்தின் ஆர்பார்ட்டங்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆர்பாட்டங்கள் என்றே கருதினர். எழுதினர். 1949 இல் குஹாவின் கணக்குப்படி டெல்லியில் மட்டும் 79 ஆர்பாட்டங்களை இந்து சட்ட மசோதாவுக்கு எதிராக நடத்திய ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபை, 1950 இல் கூடிய போது இந்து சட்ட மசோதாவுக்கு எதிராக ஒரு தீர்மானமும் இல்லை!  அதே சமயம் கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் குறித்தும் அவர்களுக்கு செய்ய வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் விரிவான தீர்மானங்கள்  இருப்பதை காணலாம் [4].

karpatriமற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.

’காந்திக்கு பிறகான இந்தியா’ நூலில் ராமசந்திர குஹா இந்து சட்ட மசோதாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்திய கரபாத்ரி மஹராஜ் என்கிற துறவியின் வாதங்களை தருகிறார். அவர்தான் இந்த மசோதாவுக்கு எதிரான கிளர்ச்சியை உருவாக்கியவர் என்பதை சொல்கிறார். ஆர் எஸ் எஸ் தொடங்கிய இயக்கம் ஒன்றில் கரபாத்ரி தன்னை இணைத்து கொண்டார் என்றால், அது பசு வதை தடை சட்டத்துக்கான இயக்கத்தில் மட்டும் தான். ஆனால், அதில் கரபாத்ரி மட்டுமல்லாமல் ஆரிய சமாஜம், சமண அமைப்புகள் ஆகிய போன்ற பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன. ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸையும் கரபாத்ரியையும் இணைத்து ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார் குஹா.

அதே சமயம் அதே கரபாத்ரி ஆர்.எஸ்.எஸ்ஸின் குருஜி கோல்வல்கரை இந்து மதத்துக்கு ’கெடுதல் செய்பவர்’ என கூறுகிறார்.

 “கோல்வல்கர் தீண்டாமையும் சாதியும் வேரும் வேரடி மண்ணுமற அழிய வேண்டுமென நினைக்கிறார் ஆனால் இது தர்ம சாஸ்திரங்களுக்கு விரோதமானது”

என்கிறார் கரபாத்ரி [5]. குறைந்த பட்ச நேர்மையுடன் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் கரபாத்ரிக்குமான இந்த அடிப்படை சித்தாந்த மோதலை ஒரு வாக்கியத்தில் பதிவு செய்யும் எண்ணம் கூட குஹாவுக்கு இல்லை என்பது இயல்பான விஷயம்தான்.

பிம்பங்களை கட்டமைக்கும் அதிகார வரலாற்றாடலில் உண்மைகளுக்கு இடமிருப்பதில்லை. ஆனால் இது சத்தியசீலராக முன்னிறுத்தப்படும் காந்தியின் பெயரால் சந்தைப்படுத்தப் படுவதுதான் முரண்நகை.

rg5ஹிந்து சட்ட மசோதாவை பொறுத்தவரையில், ஆர் எஸ் எஸ் நிலைப்பாடு என்னவாக இருந்தது?  குருஜி பொதுவாக அரசு சட்டங்கள் அரசு இயந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர். ஜனசங்கம் என்ற அரசியல் கட்சி உருவாவதில் கூட அவருக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் மத்தியில் இயல்பாக மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.

ஆனால் இந்த நிலைபாட்டை கூட குருஜி பின்னாட்களில் மாற்றிக் கொண்டு விட்டார்.  சாதியம் ஒரு ஆபத்தான வீட்டை  போல இடித்து அழிக்கப்பட வேண்டும் என்றே அவர் கூறியது பதிவாகியுள்ளது.

9-ஆகஸ்ட்-1963 இல் சாகித்ய சங்க தலைவரான ஸ்ரீரிஷ் கதலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குருஜி கோல்வல்கர், பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து கூறுகிறார்:

மதிப்பிற்குரிய டாக்டர் அம்பேத்கரின் புனித நினைவுக்கு வணக்கம் செலுத்துவது என் இயற்கையான கடமை என உணர்கிறேன். ஒடுக்கப்பட்டோர், ஆதரவற்றோர், கல்வியறிவு மறுக்கபப்ட்டோர், ஏழைகள் ஆகியோரே என் தெய்வம் அவர்களுக்கு உதவுவதே இறை தொண்டு என்றார் சுவாமி விவேகானந்தர். அதை முழுமையாக நம்பியவர் பாபா சாகேப் அம்பேத்கர். நம் சமுதாயத்தின் மோசமான குணமான drambedkarதீண்டாமையை அவர் உணர்ந்திருந்தார். எனவே அவர் சம்பிரதாயங்களைத் தாக்கி புதிய விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். அரசியல் சமுதாய அறியாமைகளால் ஆத்திரமடைந்த அவர் நேரடியான சமுதாய சீரமைப்புகான அழைப்பை விடுத்தார். அறியாமையால் ஒதுக்கபப்ட்டு அவமானப்படுத்தப்பட்ட நம் சமுதாயத்தின் முக்கியமும் முதன்மையும் வாய்ந்த ஒரு பகுதிக்கு மீண்டும் கௌரவத்தை விடாத முயற்சியால் பெற்றுத் தந்தார். அவர் செய்தது அற்புதமான செயல். அவர் அளித்த அளப்பரிய பெரும் நன்மைக்கு நன்றிக்கடன் செலுத்துவது என்பது இயலாத செயலாகும்.[6]

நம் மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் 1995 களுக்கு பின்னர்தான் டாக்டர் அம்பேத்கர் குறித்து பெரிய அளவில் பேச ஆரம்பித்தார்கள் என்பதை இங்கு நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இந்து சட்ட மசோதா எதிர்ப்பு இயக்கத்தை எப்படி பார்ப்பது?  இந்த எதிர்ப்பில் எப்படி சில காங்கிரஸ்காரர்கள் சேர்ந்தார்களோ அப்படியே ஆர்.எஸ்.எஸ் தனிநபர்கள் அந்த எதிர்ப்பில் இணைந்திருந்தனர்.நேருவின் காஷ்மீர் நிலைபாடு, நேருவின் கிழக்கு வங்க அகதிகள் நிலைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட savarkar_gadgilஇந்துக்களின் நிலையால் இந்துத்துவ அரசியல் இயக்கத்தினர் நேருவின் எந்த முயற்சியையும் ஹிந்து எதிர்ப்பு என்றே நினைத்து எதிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இஸ்லாமியரின் உணர்ச்சிகள் குறித்து இஸ்லாமிய வகுப்புவாதிகளின் மனநிலையிலிருந்து சிந்தித்து செயல்பட்ட நேரு,  இந்துக்களின் நியாயமான உணர்ச்சிகளையும் கூட பிற்போக்குத்தனம் என முத்திரை குத்த இந்த இந்து சட்ட மசோதாவை நன்றாக பயன்படுத்தி கொண்டார்.

டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப் பட்ட ஹிந்து சட்ட மசோதா பல இந்து ஆச்சார வாதிகளையும், கடும் மாற்றங்களை ஜீரணிக்க இயலாத சாதாரண பொது மக்களையும் கூட  சீண்டியிருந்தது. கட்சி வேறுபாடில்லாமல் இதற்கு எதிர்ப்பு இருந்தது. டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் இதை எதிர்த்தனர்.

முகர்ஜி போன்ற தலைவர்கள் இதனை எதிர்த்த வரலாற்று பிழைக்கு ஓரளவாவது பரிகாரம் இருக்கத் தான் செய்தது. ஹிந்துத்துவ சார்பு தன்மை கொண்ட காங்கிரஸ் தலைவர்களிடமிருந்தே இதற்கு ஆதரவும் கிடைத்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, நர்ஹர் விஷ்ணு காட்கில் படேல் அணியைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர். லியாகத்-நேரு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர். குறிப்பாக இஸ்லாமியருக்கு அவர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்ய நேரு முயன்ற போது அதை மிகத் தீவிரமாக எதிர்த்து அந்த ஆபத்தை களைந்தவர். வீர சாவர்க்கரின் பக்தர். இவர் ஹிந்து சிவில் சட்ட முன்வரைவை அதே தீவிரத்துடன் ஆதரித்து பேசினார்.

சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றின் ஆசிரியரான தனஞ்ஜெய் கீர் எழுதுகிறார் –  “பாராளுமன்றத்தில் காட்கில் இந்து சட்ட மசோதாவை ஆதரித்து உயிரோட்டமான ஒரு உரையை நிகழ்த்தினார். சட்டத்தை பொதுவான ஒரு ஒழுக்க விதிக்கு கொண்டு வர இந்த சட்டம் தேவையானது என்று அவர் கூறினார் “[7].  ஹிந்து மகாசபை தலைவர்களான மூஞ்சே, ஜெயகர் ஆகியோருடன் நெருக்கமான பண்டிட் குன்ஸுரு இதை ஆதரித்தார்.

ஆக, நேரு vs படேல் அல்லது போலிமதச்சார்பின்மை vs இந்துத்துவம் என்பதை குஹா சாமர்த்தியமாக ஹிந்து சட்ட ஆதரவு- vs எதிர்ப்பு என்பதுடன் இணைக்கிறார். இதன் மூலம் இந்துத்துவம் ஜனநாயக இந்தியாவுக்கு எதிரானது என ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். இந்த இணைப்பு பொருந்தாத விஷயம். நியாயமாக இணைத்து பார்க்கப்பட வேண்டியது, கிழக்கு வங்க அகதிகள் விஷயத்தில் நேரு செய்த நேரு-லியாகத் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட எதிர்ப்பில், ஒவ்வொருவரும் எந்த அணியில் இருந்தார்கள் என்பதைத்தான்.

போலி மதச்சார்பின்மையை உயர்த்தி பிடித்த தருணங்களில் எல்லாம் நேரு ஜனநாயக விரோதமாக நடந்திருப்பதையும் பார்க்கலாம்.  இன்றைய போலி மதச்சார்பின்மை – இந்துத்துவ சித்தாந்த மோதல் என்பது ஹிந்து சட்ட மசோதா மோதலின் நீட்சி அல்ல. நேருவின் கிழக்கு வங்க அகதிகள் விஷய நிலைப்பாட்டின் நீட்சி என்பதுதான் உண்மை. இன்னும் சொன்னால், போலி மதச்சார்பின்மை தன்னை அரசியல் சட்ட முகப்பில் நுழைத்து கொண்ட தருணம் இந்தியா இந்திராவின் பாசிச இருளில் இருந்த காலகட்டம். எனவே, போலி மதச்சார்பின்மைக்கு எதிரான இந்துத்துவத்தின் எதிர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு ஆதரவானது;   ஜனநாயக எதிர்ப்புசக்திகளான  பாசிச -மார்க்ஸிய-வகாபிய அணிகளுக்கு எதிரானது.

நாளை காலை தேநீருடன் மீண்டும் சந்திப்போம்.

ஒரு சிறு பின்குறிப்பு: இங்கு எழுதப்படுபவை ஆராய்ச்சி கட்டுரைகள் அல்ல. சில பார்வை பகிர்வுகள்தான். ஆனால் அவற்றில் உள்ள தரவுகளை தேடிப் போவதில் நம் இன்றைய காந்திய -நேருவிய இணைய ஆர்வலர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதால், அதனால் அவர்கள் இதயங்கள் வேதனைப்படுவதால் இம்முறை தரவுகளின் மூலங்கள் முழுமையாக அளிக்கப்படுகின்றன. உஸ்ஸு… முடியல…

பார்க்க:
[1] ராமசந்திர குஹா, Reforming the Hindus, ‘தி இண்டு’, 18/7/2004
[2] சங்கரானந்த சாஸ்திரி, My Experiences & Memories of Dr.Babasaheb Ambedkar, Gautam Book Centre, 1989, பக்.61-62)
[3] ராமசந்திர குஹா, India After Gandhi: The History of the World’s Largest Democracy, Pan Macmillan,2011, பக்.230-1
[4]பார்க்க: ஆர்.எஸ்.எஸ் தீர்மானங்கள்: ஆன்லைன் ஆவணங்கள்: http://www.archivesofrss.org/index.php?option=com_book&task=showFile&bookid=9
[5]சுவாமி கரபாத்ரி, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்க் அவுர் ஹிந்து தர்மா, மஹந்த வீரபத்ர மிஸ்ரா, வாரணாசி, 1970, பக்.32, (மேற்கோள் காட்டப்பட்ட நூல் ருது கோக்லி, Political Ideas of M.S. Golwalkar: Hindutva, Nationalism, Secularism, Deep and Deep Publications, 1993, பக்.91
[6]மகேஷ் சர்மா, Shri Guruji Golwalkar,Diamond Pocket Books (P) Ltd., 2006, பக்.101
[7] தனஞ்ஜெய் கீர், Doctor Ambedkar, Life and Mission, Popular Prakashan, 1995,பக்.432