இராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

Amoxicillin 500mg tablets for urinary tract infections, amoxicillin tablets (500mg), amoxicillin 500mg tablets for urinary tract infections, generic amoxicillin 500mg tablets for urinary tract infections buy amoxicillin from usa pharmacy online from australia pharmacy online from australia online chemist and australia online chemist. How https://fergkz.com.br/ to buy generic version of drugs without prescription. And to be perfectly honest, they don’t really sound like a good match.

Ivermectin, also known as avermectin, is an antiparasitic agent that is used as a treatment for certain types of internal parasites like hookworm, roundworm, and lungworm. The most cost of clomid in india Oyan common adverse effect with doxycycline is diarrhea. Welcome to our online store, we are offering the best and cheap price of mamofen 20 on our website.

The antibiotic for pigeon is amoxicillin and how to use amoxicillin? In the last step, the drug was packed into the syringe without using any preservatives to prepare the clomiphene citrate price in india dry powder. Nolvadex is not covered under any health insurance plan.

15.1 அக்னி சாட்சி

பம்பா எரிக்கரையோரமாய் இரண்டு மனிதர்கள் வில், அம்பு, வாள் இவைகளுடன் வந்துகொண்டிருப்பதை ரிஷ்யமுக மலை மேலிருந்த ஒரு கண்காணிப்பு மூலையிலிருந்து சுக்ரீவன் பார்த்தான். தன்னைக் கொல்லத்தான் வாலி அவனுடைய ஒற்றர்களை அனுப்பியிருக்கிறானோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அப்போது அவனுடன் கூட இருந்த அவனது அறிவுமிக்க அமைச்சரான அனுமான் அப்படி ஆயுதம் தாங்கி அந்த மலைப் பக்கம் வருவோர் போவோரையெல்லாம் சந்தேகப்படுவது தவறு என்று ஆலோசனை சொன்னான். மேலும் அவர்கள் யார், எதற்காக அங்கு வந்திருக்கிறார்கள் என்று விசாரித்து அறிவது நல்லது என்றும் சொன்னான். அதை ஒத்துக்கொண்ட சுக்ரீவன் அனுமனையே அதற்கு அனுப்பி வைக்க, அவனும் வந்து அவர்களுடன் இதமாகவும், பதமாகவும் பேசி அவர்கள் தசரத மகாராஜாவின் புதல்வர்கள் இராம-லக்ஷ்மணர்கள் என்றும், இராமரின் மனைவி சீதை காணாமல் போனதால் அவளைத் தேடும் பணியில் சுக்ரீவனின் உதவியை அவர்கள் நாடி வந்திருப்பதாகவும் அறிகிறான்.

வந்திருப்பவர்கள் வாலியின் ஒற்றர்கள் அல்ல என்று தெரிந்ததால் மகிழ்ந்து, அனுமன் அவர்களை சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறான். சுக்ரீவனிடம் அறிமுகம் செய்துகொண்ட இராமர், தான் சீதையை இழந்திருப்பது போலவே சுக்ரீவனுடைய மனைவியும் அண்ணன் வாலியால் அபகரிக்கப்பட்டுள்ளாள் என்றும் மேற்கொண்டு அறிகிறார். ராஜ்ஜியத்தையும் இழந்து, மனைவியையும் அண்ணனிடமே இழந்துள்ள சுக்ரீவனுக்கு, தான் வாலியை அடக்கி அனைத்தையும் மீட்டுத் தருகிறேன் என்று சுக்ரீவனுக்கு வாக்கு கொடுக்கிறார். அதேபோல இராமரும் தவிப்பதைக் கேட்ட சுக்ரீவன்,  தன் பங்கிற்கு சீதையை மீட்கும் பணியில் தான் எல்லாவிதமான உதவிகளும் செய்வதாக வாக்கு கொடுக்கிறான். இப்படியாக தேவைக்கேற்ப ஒரு கூட்டணி அங்கு உருவாகிறது. அங்கேயே அவர்கள் அக்னி வளர்த்து இருவரும் அக்னி சாட்சியாய் ஒருவருக்கொருவர் சொன்ன வாக்கை உறுதிபடுத்திக் கொள்கிறார்கள்.

 

ததோ(அ)க்³னிம்ʼ தீ³ப்யமானம்ʼ தௌ சக்ரதுஸ்²ச ப்ரத³க்ஷிணம்|| 4.5.15||

ஸுக்³ரீவோ ராக⁴வஸ்²சைவ வயஸ்யத்வமுபாக³தௌ|

தத:  = then, அப்போதே
தௌ  = both of them, அவர்கள் இருவரும்
தீ³ப்யமானம்  = blazing, எரியும்
அக்³னிம் = fire, அக்னி
ப்ரத³க்ஷிணம் சக்த: = went round in great reverence, சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்
ஸுக்³ரீவ: = Sugriva, சுக்ரீவன்
ராக⁴வஸ்²சைவ = and Raghava also, இராமரும்
வயஸ்யத்வம் = friendship, நட்பை
உபாக³தௌ = both established, உறுதி செய்துகொண்டார்கள்.

உடனே அவர்கள் இருவரும் அக்னி வளர்த்து, அதனை சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள். இப்படியாக இராமரும், சுக்ரீவனும் தங்கள் நட்பை பண்டைய வழக்கப்படி உறுதி செய்துகொண்டார்கள்.

ஒப்பந்தம் ஒன்று போடும்போது அதற்கு சாட்சிகள் வேண்டும். நீதிபதி, நீதி மன்றம், சாட்சி என்பதெல்லாம் மனிதர்களைப் பொறுத்தவரை தேவை என்றாலும் அவை சற்றே கீழ்த்தரமானது; ஏனென்றால் வற்புறுத்தப்பட்ட பொய் சாட்சி, சாட்சியே பின்னர் மாற்றிச் சொல்வது போன்ற தகிடுதத்தங்களை நாமே அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் கடவுளையே சாட்சியாக வைத்து தெய்வ சந்நிதியிலோ, அக்னி வளர்த்தோ அதன் முன் வாக்கு கொடுப்பது என்பது மிக மேலானது. ஏனென்றால் கடவுளே அங்கு உள்ளதால் அதற்கு மேலே வேறெந்த சாட்சியும் தேவையில்லை. அக்னியே நாம் காணும் கடவுள் வடிவம் என்பதால் மனித சாட்சிகளை விட இது மிக உயர்ந்தது. இதுவே நமது பண்டைய முறைகளில் முதன்மையானது ஆகும்.

15.2 காணும் சாட்சியும் கவலை நீக்கலும்

இராமர் சீதையைப் பற்றிச் சொன்னபோது, சுக்ரீவன் முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்தான். ஒரு முறை ஓர் அரக்கன் “ராமா, ராமா” என்று கத்திக்கொண்டு இருந்த பெண்மணி ஒருவரை ஆகாய வழியாக வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தான். அவர் சீதையாகத்தான் இருக்கும் என்று தனக்கு இப்போது தோன்றுகிறது. கீழே அவர் பார்த்த தானும் மற்ற வானரர்களும் நண்பர்கள் போல் தெரிந்ததால், அந்தப் பெண் தன் மேலாடையைக் கிழித்து அதில் தனது நகைகள் சிலவற்றை வைத்துக் கட்டி, எங்கள் பக்கம் தூக்கி எறிந்தார். ஒரு வேளை இராமர் வந்தால் ராவணன் சீதையை எடுத்துப் போனதற்கு சாட்சியாக அது இருக்கலாம் என்று நினைத்து செய்தாரோ என்று சொல்லிக்கொண்டு, தான் எடுத்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த சிறிய மூட்டையை இராமருக்குக் காட்டினான். அவருக்கு அது சீதையினுடையதுதான் என்று தெரிந்ததும் நிம்மதி, துக்கம் இரண்டும் கலந்ததுபோல் கண் கலங்கினார். கண்ணீர் வழிய கலங்கி நின்றிருந்த இராமரை சுக்ரீவன் நடந்ததை நினைத்து, செயலற்று துக்கத்தில் ஆழ்வது நல்லது அல்ல என்று தேற்றினான். மாறாக மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தீர யோசித்து, அதற்கான வியூகங்களை வகுத்து, செயல்களை துவக்க வேண்டும் என்றும்  சொன்னான்.

வ்யஸனே வா(அ)ர்த²க்ருʼச்ச்²ரே வா ப⁴யே வா ஜீவிதாந்தகே|

விம்ருʼஸ²ன்வை ஸ்வயா பு³த்³த்⁴யா த்⁴ருʼதிமான்னாவஸீத³தி|| 4.7.9|

வ்யஸனே வா = in sorrow or, துக்கத்திலோ
அர்த²க்ருʼச்ச்²ரே வா = or even at loss of wealth, செல்வத்தை இழக்கும் நிலையிலோ
ஜீவிதாந்தகே = at the hour of death, உயிரே போகக்கூடிய சூழ்நிலையிலோ
ப⁴யே வா = when in fear, பயத்திலோ
த்⁴ருʼதிமான் = one who is steadfast, மனம் தளராத ஒருவன்
ஸ்வயா பு³த்³த்⁴யா = by his own intelligence, தன் மதியினால்
விம்ருʼஸ²ன் = while deliberating, யோசித்துக்கொண்டு
நாவஸீத³தி = he will not despair, துவண்டு போகமாட்டான்.

செல்வத்தை இழக்கும் நிலையிலோ, துக்கம் துரத்தும் நிலையிலோ, உயிரே போகக்கூடிய சூழ்நிலையிலோ அல்லது பயத்திலோ, மனம் தளராது இருக்கும் ஒருவன் தன் மதியினால் அவைகளை எதிர்கொள்ளும் முறைகளை யோசிப்பானே தவிர துக்கத்தில் துவண்டு போகமாட்டான்.

துன்பம் என்று வந்துவிட்டால் துக்கமும், அதைத் தொடர்ந்து எதையும் செய்ய இயலாத நிலையும் வருவது இயற்கையே. அப்போது ஒருவன் தன்னை மேலும் வருத்திக் கொள்ளாமல், மனத்தைத் தளர விடாமல் வந்த துன்பத்தைத் துடைத்து இன்பம் மலரச் செய்ய வழிகளை யோசிக்க வேண்டும். ஆக இராமருக்குச் சொல்வதுபோல் வரும் இந்த அறிவுரை எல்லோருக்கும் மிகத் தேவையானதே. தனக்கு வந்திருக்கும் நிலையின் காரணங்கள் மற்றவரை விட தனக்கே நன்கு தெரியும் ஆதலால், மற்றவர் கொடுக்கும் ஆலோசனைகளை விட, தன் சுய புத்தியால் அனைத்தையும் யோசித்து ஆவன செய்ய வேண்டும் என்று வால்மீகி இங்கு வலியுறுத்துகிறார். அப்படிச் சிந்தித்து செயல்படுவதற்கு மனம் ஒரு திட நிலைக்கு வரவேண்டும். அதற்கு கையாலாகாத நிலை ஒத்துவராது; ஆதலால் அது முதலில் மாறவேண்டும்.

15.3 உயிர் காப்பான் தோழன்

வானரர்களைத் தான் பார்த்தும் அவர்களால் ராவணனை ஒன்றும் செய்யமுடியாது என்பதை உணர்ந்த சீதை, அவர்களை கூக்குரலிட்டுக் கூப்பிடாமல் தன் நகைகளில் சிலவற்றை ஒரு துணிக் கிழிசலில் கட்டி அவர்கள் பக்கம் கீழே போடுகிறாள். அப்படி அவள் செய்தாலும், அந்தப் பக்கம் இராமர் வருவார் என்பதும், அவர் வானரர்களைப் பார்ப்போர் என்பதும், வானரர் அவரிடம் அதைக் கொடுக்கலாம் என்பதற்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவே. ஆனாலும் அப்படி நடக்கலாம் என்று சீதைக்குத் தோன்றியதும் அவளது கெட்ட காலத்தில் ஒரு நல்ல திருப்பமே. அது எல்லாமே அப்படியே நடந்திருப்பது அவளது நல்ல காலத்தின் ஆரம்பமே. நகைகளைப் பார்த்த இராமர் அவை எல்லாம் சீதையுடையதுதான் என்கிறார். சீதையின் கால் சிலம்பைப் பார்த்த லக்ஷ்மணனும் அது அவருடையதுதான் என்று தீர்மானமாகச் சொல்கிறான். இங்கு வால்மீகி சிலம்பைச் சிறப்பாகக் குறிப்பிடுவது லக்ஷ்மணன் மரியாதை நிமித்தம் எப்போதும் தன் அண்ணி சீதையின் கால்களை அன்றி நிமிர்ந்து கூட நன்றாகப் பார்த்ததில்லை என்பதைச் சொல்வதற்காக இருக்கும்.

நகைகளைப் பார்த்த இராமருக்கு சீதையின் ஞாபகம் வந்து, அவள் இலங்கையில் எப்படியெல்லாம் அவதிப்படுகிறாளோ? இலங்கைக்குப் போக இங்கிருந்து எப்படிக் கடலைத் தாண்டுவது? மகா வலிமை பொருந்திய அரக்கனான ராவணனிடம் சண்டை போட்டு சீதையை மீட்க ஒரு பெரிய சேனை எங்கிருக்கிறது? அந்தச் சேனை எப்படி ஆழ்கடலைத் தாண்டி வரும்? என்றிவ்வாரான கேள்விகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவரை வந்து தாக்கி அவரை மேலும் வேதனையில் ஆழ்த்துகிறது. இப்படி இராமர் யோசிக்கக்கூடும் என்பதை எளிதில் உணர்ந்த சுக்ரீவன் இராமரிடம் எந்தக் கவலையும் வேண்டாம், உண்மையான நண்பனாக சீதையை மீட்கும் பணியில் தானும், தன்னைச் சார்ந்த வானரர்களும் வேண்டிய அனைத்தையும் செய்து வெற்றி பெற வழி செய்வோம் என்று கூறுகிறான்.

ஆட்⁴யோ வாபி த³ரித்³ரோ வா து³:கி²தஸ்ஸுகி²தோ(அ)பி வா|

நிர்தோ³ஷோ வா ஸதோ³ஷோ வா வயஸ்ய: பரமா க³தி:|| 4.8.8|

ஆட்⁴யோ வாபி = whether a rich man, பணக்காரனோ
த³ரித்³ரோ வா = or poor, ஏழையோ
து³:கி²த: = or sad one,துன்பத்துடனோ
ஸுகி²தோ(அ)பி வா = or a happy man, இன்பத்துடனோ
நிர்தோ³ஷோ = flawless one, குறையில்லாமலோ
ஸதோ³ஷ: guilty one, குறையுடனோ
வயஸ்ய: = a friend, நண்பன்
பரமா = ultimate, கடைசி
க³தி: = refuge, புகலிடம்.

பணக்காரனோ ஏழையோ, துன்பத்துடனோ இன்பத்துடனோ, குறையுடனோ குறையில்லாமலோ உள்ள நண்பன்தான் ஒருவனுக்குக் கடைசி புகலிடம்.

ஒருவனுக்கு நண்பர்கள் பலர் இருக்கலாம். நமது நல்ல வேளையில் நம் கூட இருந்து எல்லாம் அனுபவித்துவிட்டு, நமக்குத் துன்பம் வந்த வேளையில் நம்மைத் தனியே விட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போகும் ஒருவன் நண்பனே அல்ல. நல்லதோ, கேட்டதோ நம்முடன் எப்போதும் கூட இருந்து நம்மைக்  காக்கும் ஒருவனே நண்பன். சுக்ரீவன் இராமரிடம் தான் நல்ல விதமான நண்பர்களில் ஒருவன் என்றும், அந்த நட்பு அக்னி சாட்சியாய் செய்த ஒப்பந்தத்திற்கு அப்பாலும் செல்லக் கூடியது என்கிறான்.

நட்பின் இலக்கணத்திற்கு இரண்டு வித உதாரணங்களைப் பார்க்கலாம். ஒன்று துரோணர்-துருபதன் நட்பு, மற்றது கிருஷ்ணர்-குசேலர் நட்பு. இவ்விரு ஜோடி நண்பர்களும் சிறிய வயதில் ஒன்றாய் கல்வி கற்று, கூடிக் குலவி வளர்ந்து வந்தவர்கள்தான்.  பின்னாளில் துருபதன் ஒரு செல்வம் கொழிக்கும் ராஜாவாகவும், துரோணர் கல்வி-வித்தை கற்றுக் கொடுக்கும் ஏழை ஆச்சாரியாராகவும் ஆகின்றனர். அப்போது துரோணர் துருபதனிடம் ஒரு உதவி கேட்கப் போக, அவன் துரோணரை ஓர் அரசனுக்கும் ஆண்டிக்கும் எந்தவிதக் கொடுப்பினையும் கிடையாது என்று துச்சமாக அவரை மதித்து அனுப்பி விடுகின்றான். அப்புறம் துரோணர் அதற்கு பதிலடி கொடுப்பது இருக்கட்டும். இதுவா நட்பு? மாறாக ஏழ்மையைப் போக்க வேண்டி வந்த குசேலன் மறைத்து வைத்திருந்த அவலை  வாங்கி கிருஷ்ணன் வலுக்கட்டாயமாகச் சாப்பிட்டதும், குசேலன் வெட்கத்தினால் ஏதும் கேட்காமலே போயும் குசேலன் குடும்பத்தில் செல்வம் கொழிக்க வழியும் செய்த கிருஷ்ணரின் நட்பு எங்கே? கேட்டும் கொடுக்காதது ஒன்று, கேட்காமலேயே அள்ளிக் கொடுப்பது இன்னொன்று.

15.4 கூட்டணியால் வரும் குழப்பம்

கிஷ்கிந்தா ராஜ்யத்தை வாலி ஒரு வலிமை மிக்க அரசனாக ஆண்டு வந்தான். துந்துபி என்ற அரக்கன் அவனை வலுச்சண்டைக்கு அழைக்கும் வரை, வாலியும், சுக்ரீவனும் பாசமும், பரிவும் கொண்ட நல்ல சகோதரர்களாகவே இருந்தனர். வாலி அரக்கனைத் துரத்த, அவன் பின்னாலேயே சுக்ரீவனும் வரவே அரக்கன் ஒரு மலைக்குகைக்குள் போய் ஒளிந்துகொண்டான். சுக்ரீவனை குகை வாசலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, வாலி தான் மட்டும் உள்ளே போய் அரக்கனைக் கொல்லப் போனான். சுமார் ஒரு வருடம் கழிந்து குகையின் உள்ளிருந்து ரத்தம் பீறிட்டு வந்தும், வாலி வெளியே வராததால் வாலி இறந்து போயிருக்கலாம் என்று நினைத்து, அரக்கன் வெளியே வராதவாறு தடுக்க ஒரு பாறையால் குகை வாயிலை மூடிவிட்டு சுக்ரீவன் கிஷ்கிந்தாவுக்குத் திரும்பிவிட்டான்.

உண்மையில் அரக்கன் கொல்லப்பட்டு, வாலி வெளியே வர முயற்சிக்கும்போது பாறையால் குகை மூடப்பட்டிருப்பதைப் பார்த்தான். பாறையை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, சுக்ரீவனும் இல்லாததைப் பார்த்த வாலிக்குக் கோபம் வந்து நாடு திரும்பினால் அங்கு சுக்ரீவன் ஆள்வதைப் பார்த்தான். தான் அறியாமல் செய்த தவறுக்கு சுக்ரீவன் மன்னிக்கக் கோரியும், தானே ஆளவேண்டும் என்று சதி செய்து சுக்ரீவன் அப்படிச் செய்ததாக நினைத்து மிகவும்  வலிமையான வாலி சுக்ரீவனை கொல்ல முயல, அவன் காட்டிற்கு ஓடிவிட்டான். வாலி  தான் கொன்ற துந்துபியின் உடலைத் தூக்கிப் போடும்போது, அந்தப் பக்கம் தவம் செய்துகொண்டிருந்த மாதங்க முனிவரின் குடிலை ரத்தக் கறையாக்கிவிட்டான். அதனால் கோபம் கொண்ட முனிவர் அவர் இருந்த ரிஷ்யமுக மலைத்தொடர் பக்கம் வந்தால் வாலியின் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் இட்டதால், அதுதான் தங்கியிருக்கச் சரியான இடம் என்று சுக்ரீவனும் அவனுடன் இருந்த வானரர்களும் அங்கு ஓடிவிட்டனர். வானரர்களின் வழக்கப்படி சுக்ரீவன் மனைவியை வாலி தன்னுடன் வைத்துக்கொண்டான். வாலியை எதிர்த்துப் போராடுவது தற்கொலைக்குச் சமம் என்றுணர்ந்த சுக்ரீவன் ஒன்றும் செய்யமுடியாது காட்டில் இருக்கும்போதுதான் இராம-லக்ஷ்மணர்கள் அங்கு வந்து சேர்கின்றனர்.

இந்தப் பூர்விகக் கதையைக் கேட்ட இராமர், சுக்ரீவனுக்கு நம்பிக்கை தரும் வகையில், தனது வில்லால் ஓர் அம்பை எய்தி வரிசையாக இருக்கும் ஏழு சால  மரங்களைத் துளைத்துக் காட்டுகிறார். அதைப் பார்த்துப் பிரமித்த சுக்ரீவன், வாலியை எதிர்த்துப் போராடுவதில் இராமர்தான் தனக்கு வேண்டிய உதவியைத் தருவார் என்று தெளிந்து, கிஷ்கிந்தா சென்று வாலியை வலிய சண்டைக்கு இழுக்கிறான். அப்படி நடக்கும் சண்டையில் வாலியின் கை ஓங்கி அவன் சுக்ரீவனை ஓட ஓட விரட்டுகிறான். புறமுதுகு காட்டித் திரும்பிய சுக்ரீவன், சொன்னபடி உதவாது இராமர் தன்னைத் தோற்கடிக்க விட்டுவிட்டார் என்று கோபத்தில் கொதிக்கிறான். இரண்டு சகோதரர்களில் யார் எவர் என்று தனக்குத் தெளிய முடியாததால் தவறாக சுக்ரீவனையே பலி கொடுத்து விடக்கூடாது என்பதால் தான் ஒன்றும் செய்யாது இருந்து விட்டதாக இராமர் கூறவே, மறுபடி வாலியை சவால் விட்டு அழைக்கும்போது தான் ஒரு வெள்ளை மலர்களாலான மாலையை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறான். இம்முறை இராமர் தன் அம்பைச் செலுத்தி வாலியை வீழ்த்துகிறார்.

இராமரின் அம்படிபட்டு  வீழ்ந்த வாலிக்கு அது ஒரு விசேஷமானது என்று தெரிகிறது. அவர் அம்பெய்தி தன்னைக் கொன்றதை பொறுக்கமுடியாத வாலி, அவருடைய செய்கைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், தான் செய்த எந்தத் தவற்றுக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டான்.  தற்போது பரதன்தான் அரசன் என்றும், தான் ஒரு அரச பிரதிநிதியாக மட்டும்தான் அங்கு வாலியைக் கொன்று ராஜநீதியை நிலைநாட்டியதாகச் சொல்கிறார். வாலி தனது தம்பியை தன் மகன் போல் கருதி அதற்குண்டான உரிமையைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்ததாலும், அவனது மனைவியை அபகரித்துக்கொண்ட பாவத்திற்காகவும் அவனுக்கு ராஜநீதிப்படி தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

யவீயானாத்மன: புத்ரஸ²ஸி²ஷ்யஸ்²சாபி கு³ணோதி³த:|

புத்ரவத்தே த்ரயஸ்²சிந்த்யா த⁴ர்மஸ்²சேத³த்ரகாரணம்|| 4.18.14||

யவீயான் = younger brother, தம்பி
புத்ர: = son, மகன்
கு³ணோதி³த: = virtuous, நற்குணங்கள் கொண்ட
ஸி²ஷ்யஸ்²ச = a pupil, மாணவன்
தே த்ரய = these three, இம்மூவரும்
ஆத்மன: = one’s own, சொந்த
புத்ரவத் = like son,மகன்
சிந்த்யா: = should be treated, நடத்தப்பட வேண்டும்
அத்ர = there, (அப்)படி
த⁴ர்ம: = dharma, தர்மம்
காரணம் = judged, நியதி

தர்ம நியதிப்படி தன் தம்பி, தன் மகன், நற்குணங்கள் கொண்ட தன் மாணவன் இம்மூவரும் சொந்த மகன்கள் போலவே நடத்தப்பட வேண்டும்.

வாலி வதம் என்பது காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய ஒரு காட்சிதான். ஆனாலும் தம்பி, மகன், மாணவன் மூவரும் ஒரே இடத்தில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் என்னும் தர்ம நியதியை எவரும் மறுக்க முடியாதே.

(தொடரும்..)

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

12.1 தனக்கு உதவி தங்கையா தன் கையா?

ஜனஸ்தானில் ஒற்றனாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆகம்பனா என்பவன் பதினான்காயிரம் பலம் கொண்ட சேனை அடியோடு நிர்மூலம் ஆனதையும், அதன்பின் தளபதி கர களத்தில் மாண்டதையும், ராவணனுக்கு விவரமாகத் தகவல் கொடுக்கிறான். மேலும் அவன் ராவணனை நேரடித் தாக்குதலில் ஈடுபடவேண்டாம் என்றும், மாறாக சீதையை அபகரித்துச் சென்றால் ராமன் நடப்பதை மேலும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தனது மனைவிக்கு நேர்ந்துள்ள கதியை நினைத்து வெறுத்துப்போய், மனமுடைந்து ஒருவேளை காட்டிலேயே இறந்தும் போகலாம் என்றும் ஆலோசனை தருகிறான். இந்த அறிவுரை தீய சக்தியான ராவணனுக்குப் பிடித்துப்போகவே, அவன் இதை செய்துமுடிக்க மாரீசன் உதவியை நாடுகிறான். மாரீசனுக்கோ ஏற்கனவே, விஸ்வாமித்திரர் முனிக்குக் கொடுத்த இடையூறுகளின்போது, ராமனிடம் சூடு பட்டுக்கொண்ட அனுபவம் உண்டு. அப்போது ராமனுடைய வில்லால் கிடைத்த அடியால் அவன் கடல்களுக்கும் அப்பால் தூக்கி எறியப்பட்டிருந்ததால், அந்த வலி அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவன் ராமனைச் சாதாரணமாக எடைபோட வேண்டாம் என்றும், ராவணனது திட்டம் முட்டாள்தனமானது என்றும் சொல்லி அவனை அதிலிருந்து பின்வாங்கச் சொன்னான். “ராமன் காட்டிலே நிம்மதியாக இருந்துவிட்டுப் போகட்டும், நீயும் சந்தோஷமாக இலங்கையை ஆண்டுவிட்டுப் போ” என்று சொன்னதைக் கேட்டு, ராவணனும் அதில் உள்ள நியாயத்தை ஒத்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பிவிட்டான்.

ஆனால் விதி யாரை விட்டது? அரக்கர்கள் சேனை முழுவதுமே அழிந்துபோனதைப் பற்றியும் கவலைப்படாமல் ராவணன் இருப்பதை அறிந்து அதிர்ச்சிகொண்ட சூர்ப்பனகை, அவனைப் பார்க்க இலங்கைக்கு வருகிறாள். சேனை அழிந்தது தெரியாதா? ஒற்றர்கள் ராவணனிடம் அதைப் பற்றிச் சொல்லவில்லையா? இல்லை ராவணன்தான் வேறெதுவும் செய்ய விரும்பாத சோம்பேறியாகி, அந்தப்புரத்திற்குள் உல்லாசமாக இருப்பதையே விரும்புகிறானா? என்ற கேள்விகள் எல்லாம் அவளைத் துளைக்க, அவள் ராவணனிடம் சில ராஜாங்க விஷயங்களை கூர்ந்து கவனித்து, உடனுக்குடன் ஆவன செய்யாவிட்டால் அரசுரிமையே பறிபோய் ஆட்சியை இழக்கும் அபாயம் வந்துவிடும் என்று எச்சரிக்கிறாள்.

ஸ்வயம்ʼ கார்யாணி ய: காலே நானுதிஷ்ட²தி பார்தி²வ:|
ஸ து வை ஸஹ ராஜ்யேன தைஸ்²ச கார்யைர்வினஸ்²யதி|| 3.33.4||

பார்தி²வ: king, அரசன்
காலே at right time, தக்க நேரத்தில்
கார்யாணி actions, செயல்கள்
நானுதிஷ்ட²தி does not carry out, செய்யாதிருப்பது
ராஜ்யேன ஸஹ along with kingdom, ஆட்சிப்பீடத்துடன்
தை: with them, அவைகளுடன்
கார்யைஸ்²ச ஸஹ along with those assignments, அரசுரிமையும்
வினஸ்²யதி is destroyed, இழக்கப்படும்.

ஓர் அரசன் தக்க நேரத்தில் தான் செய்யவேண்டிய கடமையை செய்யாவிட்டால், அந்த ஆட்சிப்பீடத்தையும் விட்டிறங்கி அரசுரிமையும் இழந்து தானும் தவிப்பான்.

சூர்ப்பனகைக்குத் தனக்கென்று ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. சேனையே அழிந்துபோயும் இப்படி ராவணன் ஒன்றும் செய்யாதிருப்பது அவள் விரும்பும் காரியத்துக்கு எந்த விதத்திலும் உதவாது. அரசனாகட்டும், சாதாரண மக்களாகட்டும் சில சமயம் சில சமயங்களில் ஒன்றும் செய்யாது அமைதியாய் இருப்பது நல்லது; அதே போல சில சமயங்களில் தள்ளிப் போடாமல் ஆகவேண்டியதை உடனே செய்து முடிப்பதும் நல்லது. ஆதலால் எதை எப்போது உடனே செய்யவேண்டும், அல்லது தள்ளிபோட்டுவிட்டு அமைதி காக்கவேண்டும் என்பதெல்லாம் நன்கு அறிந்தவனே அறிவாளி. அதே சமயம் தன்னை மற்றவர் அவர்களுக்காக உபயோகப்படுத்திக் கொண்டு ஒரு காரியத்தில் அனாவசியமாக நம்மை இழுத்து விடுகிறார்களோ என்பதையும் அவன் கண்காணித்துக் கொள்ளவேண்டும். இங்கு சூர்ப்பனகை ராவணன் மூலம் தன் காரியத்தை முடித்துக்கொள்ளப் பார்க்கிறாள் என்பதால் தான் மேதாவிபோல் இப்படி ஒரு அறிவுரை கொடுக்கிறாள்.

12.2 ஆட்சி ஒன்றே மாட்சிமை தரும்

வால்மீகி இராமாயணத்தின் ஆரண்ய காண்டம் முப்பத்திமூன்றாம் சர்க்கம் முழுவதும் சூர்ப்பனகையின் விஷம் கலந்த பேச்சானாலும், விஷயம் நிறைந்த பேச்சாக இருக்கிறது. அவையெல்லாம் நல்ல கொள்கைகள் அடிப்படையின் மேல் கூறப்படுவது போல வரும் கண்டனங்களும், ஏளனங்களும், அறிவுரைகளும் கலந்த ஒரு கலவையே. அவைகளின் உண்மை மற்றும் நேர்மைத் தன்மைக்கும் சொல்பவரின் குணாதிசயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதுபோலவே தெரியாது. சூர்ப்பனகைக்கு ராவணன் மூலம் தன் காரியம் ஆக வேண்டும் என்பதில் மட்டுமே குறி. அது தெரியாமல், அவள் பேசப் பேச ராவணன் தனது ஆசனத்தில் ஒரு புழுவைப்போல நெளிந்து கொண்டிருந்தான். ஆம்! ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்காயிரம் ஆட்கள் கொண்ட சேனை அழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு ஒரு அரசன் எப்படி சும்மா இருக்க முடியும்? அப்படியும் ஒன்றும் செய்யாது அரசன் இருந்தான் என்றால், அவனது ஆட்சிக்குக் கெடு வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். ஆட்சியை இழந்துவிட்டால் அவனை ஈ எறும்பு கூட மதிக்குமா? என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அவள் ராவணனுக்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தாள்.

ஸு²ஷ்கை: காஷ்டை²ர்ப⁴வேத்கார்யம்ʼ லோஷ்டைரபி ச பாம்ʼஸுபி⁴:|
ந து ஸ்தா²னாத்பரிப்⁴ரஷ்டை: கார்யம்ʼ ஸ்யாத்³வஸுதா⁴தி⁴பை:|| 3.33.18||

ஸு²ஷ்கை: with dried up, காய்ந்து போன
காஷ்டை²: logs of wood, மரத் துண்டுகள்
லோஷ்டைரபி even with clods of earth, மண் குவியல்கள்
பாம்ʼஸுபி⁴ரபி ச even with the dust, தூசியுடன் கூட
கார்யம் may have some value, மதிப்பு இருக்கும்
ப⁴வேத் will be, இருக்கும்
து but, ஆனால்
ஸ்தா²னாத் from the kingship, ஆட்சி பீடத்தில் இருந்து
பரிப்⁴ரஷ்டை: thrown out by the people, மக்களால் தூக்கி எறியப்பட்ட
வஸுதா⁴தி⁴பை by the kings, அரசர்களால்
கார்யம் work, காரியம்
ந ஸ்யாத் will not be, இருக்காது.

காய்ந்துபோன சருகானாலும் உபயோகம் உண்டு; அதேபோல களிமண்ணுக்கும் மதிப்பு உண்டு. ஆனால் தூசிக்கு இருக்கும் மதிப்பு கூட தன் ஆட்சியிலிருந்து மக்களால் தூக்கி எறியப்பட்ட அரசனுக்கு இருக்காது.

தன்னைப் பற்றியும், தன் சாகசங்களைப் பற்றியும் பெருமையாக நினைத்து, தான் தான் எல்லாமே, தனக்கு மேல் ஒன்றுமில்லை என்று அகம்பாவத்துடன் இருக்கும் ஆட்சியாளர்களை வால்மீகி இங்கு வஞ்சப்புகழ்ச்சி அணியில் விளாசுகிறார். உண்மை என்னவென்றால், பதவியில் இருப்பதால் நல்லது செய்வார்கள் என்றெண்ணியே அவர்களுக்கு மரியாதையும், அவர்கள்மேல் மதிப்பும் மக்கள் வைக்கின்றனர். ஆனால் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டால் அந்த மதிப்பும், மரியாதையும் கானல்நீர் போல் ஆகிவிடும். வால்மீகி சொல்வது போல் காய்ந்த மரமாவது வீடு கட்டவோ, அடுப்பில் எரிவதற்கோ பயன்படும், களிமண்ணோ பானை செய்வதற்குப் பயன்படும். ஆனால் பதவி இழந்த அரசனோ எதற்கும் உதவாதவனாகவே கருதப்படுவான்.

12.3 சொல்பவர் சிலரே, சொல் கேளார் பலரே

சூர்ப்பனகையின் விஷம் கலந்த பேச்சால் தூண்டிவிடப்பட்ட ராவணனுடைய கேடு கெட்ட மதிக்கு, சீதையை அபகரித்து வரும் திட்டமே உசிதமானது என்று படுகிறது. அதனால் அவன் மறுபடியும் மாரீசன் உதவியை அதற்கு நாடினான். ராவணனது திட்டப்படி மாரீசன் ஒரு அழகான தங்க மானாக உருவெடுத்து சீதை முன் வளைய வந்தால், அதனால் அவள் கவரப்பட்டு அவள் ராம-லக்ஷ்மணர்களை அதைப் பிடித்துத் தரச் சொல்வாள். அப்போது மாரீசன் அவர்களை வெகு தொலைவிற்கு துரத்திக்கொண்டு போக வைத்துவிட்டால், சீதை தனிமைப்பட்டுவிட ராவணன் அவளை அபகரித்து இலங்கைக்கு எடுத்துக்கொண்டு வந்துவிட முடியும்.

சீதையை இழந்த கவலையில் ராமன் நிலை தடுமாற, தான் ராமனை எளிதில் போரிட்டு வெல்ல முடியும் என்று ராவணன் விவரிக்க மாரீசன் திடுக்கிட்டுப் போனான். ராவணனோ அவனது அமைச்சர்களோ இராமனின் பலத்தைப் பற்றிச் சிறிதும் தெரிந்து கொள்ளவில்லை என்பதை மாரீசன் உணர்ந்தான். அமைச்சர்களாவது அதைத் தெரிந்து கொண்டிருந்தால் அவர்கள் இராமனை எதிர்க்கவேண்டாம் என்று ராவணனுக்கு ஆலோசனை தந்திருப்பார்கள். ராவணனை இப்படிச் செய்யவிடுவது அரசனை எதிர்க்காத அவர்களுடைய தலையாட்டித்தனம் என்று புரிந்துகொண்ட மாரீசன், ராவணனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் என்றாலும் அவனது நன்மை கருதி சொல்வதாக தன்னுடைய எண்ணத்தைத் தெரிவிப்பதாகச் சொன்னான்.

ஸுலபா⁴: புருஷா ராஜன்ஸததம்ʼ ப்ரியவாதி³ன:|
அப்ரியஸ்ய து பத்²யஸ்ய வக்தா ஸ்²ரோதா ச து³ர்லப⁴:|| 3.37.2||

ராஜன் O king, அரசே!
ப்ரியவாதி³ன: men sweet in talk, இனிப்பாகப் பேசும் ஆட்கள்
புருஷா: men, மனிதர்கள்
ஸததம் always, எப்போதும்
ஸுலபா⁴: easy to find, காண எளிது
அப்ரியஸ்ய unpleasant to hear, பிடிக்காததைக் கேட்டு
து but, ஆனால்
பத்²யஸ்ய in the long run, காலா காலத்தில்
வக்தா speaker, பேசுபவர்
ஸ்²ரோதா ச audience, கேட்பவர்கள்
து³ர்லப⁴: is difficult to find, கடினம்.

அரசே! உங்களுக்குப் பிடித்த மாதிரி பேசுவதற்கு நிறையப் பேர் இருப்பார்கள். ஆனால் பிடிக்காவிட்டாலும் நல்லதைச் சொல்வதற்கு வெகு சிலரே இருப்பார்கள்; அத்தகைய பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பதற்கும் அவரைவிட மிகக்குறைவாகவே இருப்பார்கள்.

தவறானாலும் மற்றவர்க்குப் பிடித்ததைச் சொல்லி அவரால் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதிலேயே குறியாய் இருக்கும் மனிதர்கள் எப்போதும் இருப்பதால், இந்த அறிவுரை என்றைக்குமே பொருத்தமானது. பிடிக்காததைச் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளப் பலரும் விரும்புவதில்லை. அப்படியே ஓரிருவர் இருந்தாலும், பிடிக்காததைக் கேட்டு அதன் வழி நடப்பவர்களைப் பார்ப்பதும் அரிதாகவே இருக்கிறது.

12.4 பாவிகளின் நடுவில் அப்பாவியின் கதி

ராவணனுக்குச் சரியான அறிவுரை வழங்கப்படவில்லை என்று மாரீசனுக்குத் தெரிந்தது. அதனால் இராமர் மானிட வடிவில் இருக்கும் தர்மத்தின் உருவம், எல்லோருடனும் அமைதியாய் வாழ்வதே அவர் விருப்பம், உண்மை வழி ஒன்றில் மட்டுமே எப்போதும் நடப்பதாலேயே அவரிடம் எல்லாவிதமான சக்திகளும் குடியிருக்கின்றன என்று அவன் ராவணனுக்கு எடுத்துச் சொன்னான்.

அப்படிப்பட்ட இராமரிடம் வீண்பழிச் சண்டை வளர்த்துக்கொள்வது ராவணனுக்கு நல்லதல்ல, இராமரின் பலத்தைத் தவறாக எடைபோட வேண்டாம் என்றும் சொன்னான். மேலும் ராவணனுக்கு அவன் சொல்வதில் நம்பிக்கை வருவதற்காக இராமரிடம் தனக்கு ஏற்கனவே நடந்த மோதல்களில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் விவரமாகச் சொன்னான். மாரீசனும் அவனுடன் கூட இருந்த அரக்கர்களும்தான் முன்பு விஸ்வாமித்திரர் அழைத்து வந்து இராம-லக்ஷ்மணர்களால் ஓட ஓட விரட்டப்பட்டு அடி வாங்கியவர்கள்; இராமர் அப்போது இளம்வயது பாலகனாய் இருந்தும், அவர் எய்திய அம்பால் வாங்கிய அடி எப்படி தன்னை வெகுதூரம் கடல்களுக்கும் அப்பால் தூக்கி எறிந்தும், நல்ல வேளையாக அவன் பிழைத்து எழுந்து வந்ததால்தான் இப்போது ராவணனுக்கு இராமரின் வலிமையைப் பற்றிச் சொல்ல முடிகிறது என்றான். மாரீசனின் கணிப்பில் இராமரைச் சீண்டிப் பார்ப்பது நல்லதல்ல, தவறிப்போய் அப்படி ராவணன் ஏதாவது செய்ய நேர்ந்தால் ராவணன் மட்டும் அன்றி ராக்ஷசர் குலமே அடியோடு நாசமாகிவிடும்; அதோடு ஒன்றும் அறியாத அப்பாவிகளான இலங்கை மக்களும் ராவணன் செய்யும் பாவச் செயல்களுக்காகத் தண்டனைக்கு உள்ளாவார்கள்

அகுர்வந்தோ(அ)பி பாபானி ஸு²சய: பாபஸம்ʼஸ்²ரயாத்|
பரபாபைர்வினஸ்²யந்தி மத்ஸ்யா நாக³ஹ்ரதே³ யதா²|| 3.38.26||

பாபானி sins, பாவங்கள்
அகுர்வந்தோ(அ)பி even though they do not commit, அவர்கள் செய்யாவிடினும்
ஸு²சய: pure men, நல்லவர்கள்
பாபஸம்ʼஸ்²ரயாத் by mixing with sinners, பாவிகளுடன் சேரும்போது
நாக³ஹ்ரதே³ in a pool of serpents, பாம்புகள் மத்தியில்
மத்ஸ்யா: யதா² like the fish, மீனைப்போல
பரபாபை: by others sins, மற்றவர்களின் பாவங்களுக்காக
வினஸ்²யந்தி will be destroyed, அழிவார்கள்.

பாவிகளின் கூட இருந்தால், பாம்புகளின் இடையில் மாட்டிக்கொள்ளும் மீன்களுக்கு வருவது போல, பாவம் எதுவுமே செய்யாத நல்லவர்களுக்குகூட அழிவு வரும்.

“ராமோ விக்ரவான் தர்ம” என்று இராமரைப் பற்றி ராவணனிடம் மாரீசன் சொல்வதைப் போன்ற ஒரு உண்மையான, மனப்பூர்வமான நற்சான்றிதழை ஒரு பகைவனிடமிருந்து பெறுவது மிகக் கடினம். ஆம், அவன் தன் அனுபவத்தின் மூலம் சொல்கிறான். மற்ற நல்லவர்கள் செய்யும் நற்காரியங்களினால் நமக்கு நன்மை கிடைப்பது போல, சில தீயவர்கள் செயலால் நமக்குத் தீமையும் வரலாம் என்பது எவரது வாழ்க்கையிலும் ஒரு அனுபவமே. அதேபோல நாம் செய்யும் செயல்களும் நல்லதோ, கெடுதலோ மற்றவரையும் பாதிக்கும். நீரில் உள்ள விஷப் பாம்புகளை பிடித்துக் கொல்ல முயலும்போது அவை நடுவில் சிக்கும் மீன்களும் இரையாகின்றன என்ற வால்மீகியின் உவமை மிகவும் பொருத்தமானதே.

12. 5 அமைச்சர்களின் பொறுப்பு

ராவணின் சீதையை அபகரித்துக் கொண்டுவரும் முட்டாள்தனமான செய்கையை நிறுத்துவதற்காக மாரீசன் சொன்னதைக்கேட்டு ராவணனுக்கு எரிச்சலும் கோபமும்தான் வந்தன. தன் வரம்பை மீறி மாரீசன் தனக்கு அறிவுரை கொடுப்பதாக அவன் நினைத்தான். அவனிடம் தான் ஆலோசனை கேட்கவரவில்லை என்றும், தான் சொன்னபடி செய்யவில்லை என்றால் அவனை அங்கேயே அப்போதே கொன்றுவிடுவதாக ராவணன் மிரட்டினான். நிலைமை தன்னை மீறிப் போவதை உணர்ந்த மாரீசனும் இறுதியாக ஆனால் உறுதியாக இப்படிச் சொன்னான். ராவணன் அரக்கர்களுக்கு அரசன் தான்; அவனுக்கு ஆலோசனை சொல்லவென்று அமைச்சர்களும் இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களுக்குத்தான் அவன் அழிவுப்பாதையில் போகாமல் தடுக்கவும், தான்தோன்றித்தனமாக நடக்காமல் இருக்கவும் செய்யவேண்டிய கடமை இருக்கிறது. ஓர் அரசன் எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் அந்த அரசனை மட்டுமன்றி, மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அனைவரையுமே பாதிக்கின்றன. ராவணன் இப்போது அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்வதை தடுக்காத அமைச்சர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லையே என்று வருந்தினான்.

அமாத்யை: காமவ்ருʼத்தோ ஹி ராஜா காபத²மாஸ்²ரித:|
நிக்³ராஹ்யஸ்ஸர்வதா² ஸத்³பி⁴ர்ன நிக்³ராஹ்யோ நிக்³ருʼஹ்யஸே|| 3.41.7||

காமவ்ருʼத்த: passionate, ஆசையில்
காபத²ம் bad path, தவறான பாதையில்
ஆஸ்²ரித: resorted to, செல்லுகின்ற
ராஜா king, அரசன்
ஸத்³பி⁴: by the good people, நல்ல மனிதர்களால்
அமாத்யை: by ministers, அமைச்சர்களால்
ஸர்வதா² in all ways, எந்த வழியிலும்
நிக்³ராஹ்ய: ஹி should be stopped, நிறுத்தி இருக்கவேண்டும்
நிக்³ராஹ்ய: resist, தடுத்து
ந நிக்³ருʼஹ்யஸே not resisted, தடுக்கப்படவில்லை.

ஆசையிலும், ஆத்திரத்திலும் உள்ள ஓர் அரசன் தவறான பாதையில் போக முடிவெடுக்கும்போது, அவன் அதில் செல்லாதிருக்கும்படி அவனது அமைச்சர்கள் தடுக்க ஆவன செய்யவேண்டும். நல்ல மனிதர்கள் அறிவுரை சொல்லி, அழிவுப் பாதையில் போவதிலிருந்து ஏன் உன்னை மீட்கவில்லை?

இராமயணக் காலத்தில் ஓர் அரசன் ஆலோசனை கூறும் பலருடைய எண்ணங்களையும் ஒதுக்கித் தள்ளி, தன்னிச்சைப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கும் சர்வாதிகாரியாக மாறுவது என்பது வழக்கத்தில் இல்லை. ஆலோசனை கூறவும் பல அமைச்சர்கள் இருந்தனர். ஒருவேளை அரசன் அப்படிச் செல்லும்போது, அதன் விளைவுகளின் பாதிப்புக்களைச் சொல்லி, அரசனை அதைச் செய்யாமல் இருக்கச் செய்வதே அவர்களின் தலையாய கடமை. இது எக்காலத்துக்கும் பொருந்தும் ஒரு வழிமுறை என்பதை அறிவுடைய யார்தான் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

(தொடரும்)

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்
முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

11.1 யானைக்கும் அடி சறுக்கும்

இராமர் விந்திய மலைத்தொடரைத் தாண்டி சீதை, மற்றும் லக்ஷ்மணனுடன் அகஸ்தியர் ஆஸ்ரமத்தை சென்றடைந்தார். அவர்களை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்று கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடி அவர்கள் தங்குவதற்கு ஒரு நல்ல இடம் என்று சொன்னார். அகஸ்தியர் ஒரு தீர்க்கதரிசியாதலால் அரக்கர்கள் அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்த்து, அவர்களுக்கு வில், அம்பு ஆயுதங்களைக் கொடுத்து அரக்கர்களை எதிர்ப்பதற்கென்று வைத்துக்கொள்ளச் சொன்னார். அரக்கர்களை எதிர்க்கும் தருணம் ஒருவேளை வந்துவிட்டால், அப்போது கூட இருக்கும் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். பொதுவாகப் பெண்களின் மனம் குறுகிய காலத்தில் அடிக்கடி திடீரென்று மாறக்கூடியது; அதனால் அவர்கள்கூடத் தங்குபவர்களுக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக பிரச்சினைகளைத் தோற்றுவிப்பார்கள். ஆனால் சீதை ஒரு சாதாரணப் பெண்ணைவிட மனோதிடம் கொண்டவளாய் இருப்பதால், இடர்கள் வரும்போது அவள் அவர்களுக்கு உதவுபவளாகத்தான் இருப்பாள் என்று சொல்லி, இந்த விஷயத்தில் அவள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி போல என்று இருவரைப் பற்றியும் மிக்க பெருமையுடன் பேசினார்.

 

ஸ²தஹ்ரதா³னாம்ʼ லோலத்வம்ʼ ஸ²ஸ்த்ராணாம்ʼ தீக்ஷ்ணதாம்ʼ ததா²|

க³ரூடா³னிலயோஸ்²ஸை²க்⁴ர்யமனுக³ச்ச²ந்தி யோஷித:|| 3.13.6||

 

யோஷித: = women in general,பொதுவாகப் பெண்கள்

ஸ²தஹ்ரதா³னாம் =  of the lightnings, மின்னலைப்போல

லோலத்வம் =  instability, நிலையில்லாத

ஸ²ஸ்த்ராணாம் =  of weapons, ஆயுதங்கள்

தீக்ஷ்ணதாம் =  sharpness, கூரானதாக

ததா²  = like that, போல

க³ரூடா³னிலயோஹொ = of king of birds and wind, கருடன் அல்லது வாயு

ஸை²க்⁴ர்யம் = speed, வேகம்

அனுக³ச்ச²ந்தி =  will follow, இருக்கும் , வரும்.

பொதுவாகப் பெண்கள் மின்னலைப்போல நிலையில்லாததாகவும், ஆயுதங்களைப்போல கூரானதாகவும், கருடன் அல்லது வாயுவைப் போல வேகமானதாகவும் மாறும் மனம் கொண்டவர்கள்.

 

பெண்களைப் பற்றிப் பொதுவாக இங்கு கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள், தற்காலத்துப் பெண்களால் ஒத்துக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். காலம் வெகுவாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் இப்படிப்பட்ட பெண்களைப்பற்றிய கருத்துக்களை நம்மில் பெரும்பாலோரும் நிச்சயமாக ஆதரிப்பதில்லை. ஆனால் இங்கு அவர் சொன்னதையும், பின்பு நடந்ததையும் பாருங்கள். அகஸ்தியருக்குத் தான் சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான குணங்களை உடைய பெண்களைப் பற்றியும் தெரியும் என்பதை, அவரே சீதையும், அருந்ததியும் அப்படி அல்லாத மனோதிடம் கொண்ட பெண்கள் என்பதைச் சொல்லிக் காட்டுகிறார். தீர்க்கதரிசியான அவரது இந்தக் கூற்று யானைக்கும் அடி சறுக்கும் என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் அவரால் அப்படிப் புகழப்பட்ட சீதைதான் ஒரு அரக்கன் தங்க மான் போல வரும்போது அதன் அழகால் கவரப்பட்டு ஏமாறுகிறாள். அப்படி அவள் ஒரு சாதாரணப் பெண்மணியைப்போல ஏமாந்ததினால்தான், அவள் இராமரை மட்டுமன்றி அவர் கூட இருந்தோர் அனைவரையும் மிகுந்த துயரத்திற்கும், துன்பத்திற்கும் உள்ளாக்குகிறாள்.

11.2 வீசும் காற்றும் வெப்பநிலை தோற்றமும்

கவின் மிக்க இயற்கைச் சூழ்நிலை இருக்கும் ஓர் இடத்தில் லக்ஷ்மணன் ஒரு அழகான குடிலைக் கட்டினான். நல்ல உணவாகும் கனிந்த பழங்கள், பூஜைக்கு வேண்டிய மணம் மிக்க பூக்கள், மற்றும் குளிப்பதற்கு தெள்ளிய நீர் இவை எல்லாம் கிடைக்கும் இடமாகவும் அது இருந்தது. குளிர் காலமும் விரைவில் வந்து சேர்ந்தது. பருவ காலங்களைப் பற்றி நன்கு விவரித்து எழுதும் வால்மீகி முனிவரும், இக்குளிர் காலம் பற்றியும் நன்கு எழுதியிருக்கிறார். அதில் ஒரு செய்யுளில், இயற்கையின் குளிர் காலப் பருவத்தில் வீசும் காற்று தட்பவெப்பத்தை இருமடங்கு குறைப்பது போல் காட்டுகிறது என்று சொல்லியிருக்கிறார். ( இந்திய விமானப் படையில் வானிலை தொடர்பான வேலையில் முதன்மை அதிகாரி என்பதால், மூல ஆசிரியர் இதைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பு ஏதும் இல்லை.)

 

ப்ரக்ருʼத்யா ஸீ²தலஸ்பர்ஸோ² ஹிமவித்³த⁴ஸ்²ச ஸாம்ப்ரதம்|

ப்ரவாதி பஸ்²சிமோ வாயு: காலே த்³விகு³ணஸீ²தல:|| 3.16.15|

 

ப்ரக்ருʼத்யா = by nature, இயற்கையில்

ஸீ²தலஸ்பர்ஸோ² =  cold feel, உணரப்படும் குளிர்

ஸாம்ப்ரதம் =  at this time, இந்த சமயம்

ஹிமவித்³த⁴ஸ்²ச =  hit by snow, பனி வீச்சு

பஸ்²சிமோ வாயு: = wind from the western direction, மேலைக் காற்று

காலே =  at this time, இந்த சமயம்

த்³விகு³ணஸீ²தல: = double the cold, குளிர் இரண்டு மடங்காக

வாதி = blowing, வீசுகிறது.

 

குளிர் காலத்தில் பொதுவாக காற்று சில்லென்றும், பனி பெய்தவாறும் இருக்கும். அதற்கும் மேலாக மேற்குப் பக்கத்தில் இருந்து பலத்த காற்றும் வீசுவதால் குளிர் இரண்டு மடங்காகத் தெரிகிறது.

 

வீசும் காற்று ஒருவரின் உடல் வெப்பத்தைத் தணிப்பதால், காற்று இருக்கும் நாட்களில் ஒருவருக்குக் குளிர் தெரிகிறது. காற்று பலமாக வீசும்போது குளிரும்  இன்னும் அதிகமாகத் தெரிகிறது. தற்காலத்தில் காற்று வீச்சின் அளவைக்கொண்டு வெப்பநிலையை அறியும் முறைக்கு “காற்றால் மாறும் தட்பவெப்பக்  குறியீடு” (Wind chill factor) என்று பெயர். வால்மீகியின் காலத்தில் வெப்பத்தை அளக்கும் முறையும் தெரியாது, உஷ்ணமானியும் (thermometer)  கிடையாது. ஆனாலும் அந்தக் காலத்திலேயே, வெப்பநிலை ஒன்றாய் இருந்தாலும் வீசும் காற்றிற்கு ஏற்ப அதை உணர்வது வேறாக இருக்கும் என்கின்ற தத்துவத்தை அறிந்து, அதை எழுதியும் வைத்திருக்கும் வால்மீகி போன்றோர்களுக்கு தற்காலத்து வானிலை ஆய்வாளர்கள் வணக்கத்துடன் நன்றி கூறாவிட்டாலும், இதைப் பற்றிய அறிவு அன்றே இருந்திருக்கிறது என்றாவது தெளியவேண்டும்.

11. 3 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

பஞ்சவடியில் ஒரு நாள் அவர்கள் கடுங்குளிரைத் தாங்கமுடியாது அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, லக்ஷ்மணனுக்கு முன்னாள் ஞாபகம் வர ஆரம்பித்தது. அப்போது அவன் தங்களுக்குத்தான் அப்படி அமைந்தது விதி என்றால், சகல போகங்களுடன் அயோத்தி அரண்மனையில் வசதியாய் இருக்கவேண்டிய பரதனும், தன்னிச்சையாக நம்மைப்போலவே இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, குளிரைப்போக்க எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாமல் தவிக்கிறானோ என்று ஏங்கினான். பரதன் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவன், அவன் தாயாயிருந்தும் கைகேயி எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள், சாதாரணமாக தாயைப்போல பிள்ளை என்பார்கள், ஆனால் பரதனோ வேறுமாதிரி இருக்கிறானே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். கைகேயியைப் பற்றிக் குறைவாகப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த இராமர் அதை ரசிக்கவில்லை. உடனே அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார்.

 

ஸ தே(அ)ம்பா³ மத்⁴யமா தாத க³ர்ஹிதவ்யா கத²ஞ்சன|

தாமேவேக்ஷ்வாகுனாத²ஸ்ய ப⁴ரதஸ்ய கதா²ம்ʼ குரு|| 3.16.37||

 

தாத = dear, அன்பார்ந்த

மத்⁴யமா = middle, நடு

(அ)ம்பா³ = mother, தாயார்

கத²ஞ்சன = somehow, கண்டபடி

தே = to you, உனக்கு

ந க³ர்ஹிதவ்யா = not to be criticized, குறைகூறக் கூடாது

இக்ஷ்வாகுனாத²ஸ்ய = of the lord of Ikshvaku, இஷ்வாகு குல அரசனனைப் பற்றி

ப⁴ரதஸ்ய = Bharata’s, பரதனைப்

தாம் கதா²மேவே = about him, அவனைப் பற்றி

குரு = you may, பேசலாம்.

 

அன்பார்ந்த லக்ஷ்மணா! நம் சிறிய தாயார் கைகேயியைப் பற்றிக் கண்டபடி குறைகூறி எப்போதுமே பேசாதே. இஷ்வாகு குல அரசனான பரதனைப் பற்றி நீ பேசலாம்.

 

ஒருவரைப் பற்றிப் புகழும்போது மற்றவரை மட்டம் தட்டிப் பேசுவது ஒரு அருவருக்கத்தக்க செயல். இங்கு இராமர் சொல்வதும், “யாரைப் பற்றியும் எப்போதும் இகழ்ந்து பேசக் கூடாது” என்பதாகும்.

11.4 விளையாட்டு வினை ஆகக்கூடாது

பஞ்சவடியில் இருந்த மிக மகிழ்ச்சிகரமான நாட்கள், சூர்ப்பனகையின் வரவிற்கு அப்புறம் திடீரென்று ஒரு முடிவுக்கு விட்டது. தண்டகாரண்யத்தில் அரக்கர்களின் கொட்டம் இருந்தாலும், விராதன் என்ற ஒரு அரக்கனைத் தவிர வேறெந்த அரக்கர்களிடம் இருந்தும் நல்லவேளையாக இராமருக்கு எந்தத் தொல்லைகளும் வரவில்லை. அவரது நல்லவேளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், சூர்ப்பனகை என்ற ஒரு அரக்கி வந்து சேர்ந்தாள். அவள் கொடூரமான அரக்கர் வம்சத்தில் வந்த இலங்கை அரசனான ராவணனின் தங்கை. எந்த உருவத்தை விரும்புகிறாளோ அந்த உருவத்தை எடுக்கும் வல்லமை கொண்ட அரக்கியான அவள், இங்கு ஒரு அழகிய பெண் வடிவில் வந்து நிற்கிறாள். பார்த்ததுமே இராமரின் அழகில் மயங்கிய அவள், சீதையை விலக்கிவிட்டு தன்னை அவரது மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறாள். அதற்கு ஒத்துக்கொள்ள முடியாது என்றால், மனிதர்களின் மாமிசத்தை விரும்பும் அவள் ராம-லக்ஷ்மணர்களைக் கொன்று தின்றுவிடுவதாக எச்சரிக்கிறாள். அப்படி அவள் சொன்னது அவளது உண்மை சொரூபத்தைக் காட்டிவிட்டது.

 

இராமர் தனக்கு ஏற்கனவே மணமாகி விட்டதால், அவள் கையைப் பிடிக்க இன்னும் மணம் புரியாத தன் தம்பியிடம் கேட்கும்படி சொல்ல, அவளும் லக்ஷ்மணனிடம் அப்படியே கேட்கிறாள். எனக்கு வேண்டாம் இந்தப் பூசணிக்காய் என்று உருட்டுவதுபோல, லக்ஷ்மணனும் தன் பங்கிற்கு தன்னைவிட அண்ணன் ராமனே அவளுக்குத் தகுதியானவர் என்று அவர் பக்கம் கை காட்டுகிறான். அதைக் கேட்ட அவளோ தன் விருப்பத்திற்குத் தடையாய் இருக்கும் சீதை இல்லாது போய்விட்டால், இராமர் தன்னை ஒருவேளை மணம் புரியக்கூடும் என்று நினைத்து சீதையைக் கொல்வதற்கு தயார் ஆகிறாள். விளையாட்டு வினையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த இராமர் பதட்டம் கொண்டு, லக்ஷ்மணனிடம் வேடிக்கைப் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாத ஞான சூன்யங்களிடம் இம்மாதிரிப் பேசுவதில் அர்த்தம் இல்லை என்று சொல்லி, நிலைமை இன்னும் விபரீதம் ஆகும் முன்பாக சூர்ப்பனகையை தடுத்து நிறுத்தச் சொல்கிறார்.

 

க்ரூரைரனார்யை ஸ்ஸௌமித்ரே பரிஹாஸ: கத²ஞ்சன|

ந கார்ய: பஸ்²யவைதே³ஹீம்ʼ கத²ஞ்சித்ஸௌம்ய ஜீவதீம்|| 3.18.19||

 

ஸௌம்ய = O Gentle one, மென்மையானவனே!

ஸௌமித்ரே = Lakshmana, லக்ஷ்மணா!

க்ரூரை = by the cruel ones wicked, கொடூரமானவர்களிடமும்

அனார்யை = by the unrespectable one, மதிக்க முடியாதவர்களிடமும்

கத²ஞ்சன = indeed, நிச்சயமாக

பரிஹாஸ: = fun, வேடிக்கை न not,

கார்ய: = not proper, சரியல்ல

கத²ஞ்சித் = somehow, எப்படியோ

ஜீவதீம் = a living lady, காப்பாற்ற

வைதே³ஹீம் = Sita, சீதையை

பஸ்²ய = see., பார்.

 

லக்ஷ்மணா! கொடூரமானவர்கள், எவ்விதத்திலும் மதிக்க முடியாதவர்கள் போன்றோரிடம் வேடிக்கைப் பேச்சு என்பது நிச்சயமாக வினையாகவே விளையும். உடனே சீதையைக் காப்பாற்றுவதில் உன் கவனம் இருக்கட்டும்.

 

ஆழ்ந்த கருத்துக்களுக்கும், சாதாரண பேச்சுக்களுக்கும் வேற்றுமை புரியாதவர்களிடம் பேசப்படும் வேடிக்கைப் பேச்சு வினையில்தான் கொண்டுவிடும். ஆதலால் அத்தகைய பேச்சுக்களை தெரியாமல் ஆரம்பித்துவிட்டாலும் உடனுக்குடன் முடிக்கவேண்டும். இல்லையேல் அதன் விளைவு மோசமாக இருக்கும். வால்மீகி சொல்லும் கருத்துப்படி ஒருவன் வேடிக்கையாகப் பேசுகிறான் என்றால் கலாச்சார அளவில் அவன் முன்னேறி இருக்கிறான் என்று அர்த்தம். அதில் பின்தங்கி உள்ளவர்களுக்கு அத்தகைய பேச்சின் நுணுக்கங்கள் பற்றித் தெரியும் வாய்ப்பு அதிகம் இல்லை.

11.5 வருமுன் காப்போன்

கொலை செய்யும் எண்ணத்துடன் சீதையை நெருங்கிக்கொண்டிருக்கும் சூர்ப்பனகையின் மூக்கையும், காதுகளையும் லக்ஷ்மணன் வாளால் துண்டித்து விட்டான். அந்தத் தாக்குதலிருந்து அவளுக்கு அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல என்று தெரிந்துவிட்டது. அவள் உடனே ஜனஸ்தானில் பதினான்காயிரம் ஆட்கள் உள்ள படைக்குத் தளபதியாய் உள்ள தனது சகோதரன் கராவிடம் சென்று, தனக்கு மானிடர்களால் நேர்ந்த அவமானகரமான

கதியைச் சொல்லிப் புலம்பி அழுதாள். கோபம் கொண்ட அவனும் தாக்கியவர்களைக் கொல்வதற்கு, சூர்ப்பனகையுடன் பதினாறு ராக்ஷச வீரர்களையும் அனுப்பி வைத்தான். அந்தப் பதினாறு வீரர்களும் இராமரால் கொல்லப்படவே, அவள் மறுபடியும் கராவிடம் ஓடி வந்தாள். அங்கே அரக்கர்களின் ஆட்சிக்கே உலை வைக்கப்படக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்த கரா மிகுந்த கோபத்துடன், மானிடர்களை பூண்டோடு ஒழிக்க தன் பதினான்காயிரம் வீரர் படையைத் தூஷனா என்ற தளபதியின் தலைமையில் பஞ்சவடிக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் போர் முரசு கொட்டி வரும் ஆரவாரத்தைக் கேட்ட இராமர், சீதையை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க எண்ணினார். அவர் லக்ஷ்மணனிடம் சீதையை அருகில் இருக்கும் மலை ஒன்றின் குகைக்கு அழைத்துக்கொண்டு போய், தான் அரக்கர்களிடம் போர் புரியும் வரை அவளுக்குக் காவலாகவும் இருக்கச் சொல்கிறார். ஒரு பெண்மணி போர்க்களத்தில் இருப்பது உசிதம் அல்ல என்றும், பஞ்சவடியில் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் அவளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போகவேண்டும் என்பதே அவர் எண்ணம்.

 

அனாக³தவிதா⁴னம்ʼ து கர்தவ்யம்ʼ ஸு²ப⁴மிச்ச²தா|

ஆபத³ம்ʼ ஸ²ங்கமானேன புருஷேண விபஸ்²சிதா|| 3.24.11||

 

ஆபத³ம் = danger, அபாயம்

ஸ²ங்கமானேன = by a person expecting it, வரப்போவதை உணர்பவனால்

ஸு²பம் = good, நல்ல

இச்ச²தா = by one desirous of, செய்யவேண்டும் என்பவனால்

விபஸ்²சிதா = by a learned one, அறிவுள்ளவனால்

புருஷேண = by a man, மனிதனால்

அனாக³தவிதா⁴னம் = before the onset of danger, அபாயம் வருமுன்னால்

கர்தவ்யம் ஹி = should be planned, யோசித்துச் செய்யவேண்டும்.

 

வரப்போகும் அபாயத்தை உணர்ந்து அதற்கு மாற்று வழிகளை யோசித்துச் செய்வதே, நல்ல பலன்களை எதிர்பார்க்கும் ஒரு அறிவார்ந்த மனிதனின் செயல்.

அபாயம் வருமுன்னே செய்யவேண்டியதைப் பற்றி நன்கு யோசித்து அதைச் செய்யவும் வேண்டும். துன்பம் வந்தபின் கைகளைப் பிசைந்துகொண்டு என்ன செய்வது என்று முழிக்கக் கூடாது. அதாவது, வருமுன் காப்போனாக இருக்க வேண்டும்; வந்தபின் முழிப்போனாக இருக்கக் கூடாது.

11.6 இன்னா செய்பவர்க்கு இன்னல் வரும்

தூஷனா தலைமையில் வந்த அரக்கர் படை இராமரைத் தாக்க, அவரும் ஒரே ஆளாக நின்று பதில் தாக்குதல் நடத்தி அந்தப் படையை நிர்மூலமாக்கினார். அடுத்து திஷிரா என்ற அரக்கன் வந்து தாக்க, அவனும் அவரால் கொல்லப்பட்டான். கடைசியில் எஞ்சியிருந்த தளபதி கரா ஒரு தேரில் அந்தப் போர்க்களத்துக்கு வந்தான். கையில் கதை ஒன்று ஏந்தி தேரில் இருந்து குதித்து அவரைத் தாக்க அவன் பாய்ந்து வரும்போது, இராமர் அவன் அங்கு செய்ததைப்பற்றிச் சொல்லி அவன் ஏன் அப்படிச் செய்தான் என்றும் கேட்கிறார். பாவச்செயல் என்று ஏதும் அறியாத அங்கிருந்த ஞானிகளையும், மற்றும் எந்தத் தொல்லையும் அவனுக்குத் தராத தபஸ்விகளையும் அவன் இரக்கமின்றிக் கொன்று குவித்த அவன் மகா பாவம் செய்தவன் ஆகிறான். எந்தப் பாவம் செய்பவர்களும் தான் தண்டனையிலிருந்து  தப்பித்து விடலாம் என்றே தவறாக நினைக்கின்றனர். இன்றில்லாவிட்டாலும் என்றாவது அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறார்.

 

நசிராத்ப்ராப்யதே லோகே பாபானாம்ʼ கர்மணாம்ʼ ப²லம்|

ஸவிஷாணாமிவான்னானாம்ʼ பு⁴க்தானாம்ʼ க்ஷணதா³சர|| 3.29.9|
க்ஷணதா³சர O! Rakshasa, அரக்கனே!

லோகே = in the world, இந்த உலகில்

பாபானாம் = of sinful, பாவத்துடன்

கர்மணாம் = of actions, கூடிய செயல்களை

ப²லம் = result, பலன்

பு⁴க்தானாம் = eaten, சாப்பிட்ட

ஸவிஷாணாம் = poisonous, விஷத்துடன்

அன்னானாமிவ = like the food, உணவைப் போல

நசிராத் = soon, சீக்கிரம்

ப்ராப்யதே = will obtain, அடைவார்கள்.

அரக்கனே! இந்த உலகில் எவரும், விஷம் கலந்த உணவினால் அனுபவிக்கும் முடிவைப்போல, தாங்கள் செய்த பாவத்திற்கு உண்டான பலனைச் சீக்கிரம் அனுபவிப்பார்கள்.

பாவங்கள் செய்யும் எவருக்கும் ஒரு கொடூர மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் கூடிய சீக்கிரம் அதற்குண்டான கசப்பான பலன்கள் அவர்களைத் தண்டனையாக வந்தடைகிறது.

(தொடரும்)