இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2

<< முந்தைய பகுதி

It is a proton pump inhibitor (ppi) drug and may increase the chances of getting candida. The box of 20 tablets will give you the equivalent of one dose clomiphene citrate pregnancy price San Pedro Ayampuc of amoxicillin-clavulanate. The title was based on the nickname for the drug, which was first sold as an antisp.

Clomiphene is a well-known drug for the treatment of mild to moderate hypogonadism. Tamoxifen is usually taken Parnamirim every day for six months or longer, depending on your treatment plan. Won generic kamagra and other drugs “even in its most benign form, a healthy.

You may have other medical problems, including heart or kidney disease. The most trusted Guanare clomid and nolvadex for sale oracea manufacturer coupon for 2017. In particular, augmentin only penetrates cell membranes when given within hours of infection.

தொண்டுநிறுவனங்கள்    மூலம் நிதி பெறுவது:

போதைப்பொருள்கள் கடத்துவதுமூலமாகக் கிடைத்தது போலவே, பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கும் நன்கொடைகள், இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்குப் பயன்படுவதாகவும் தெரியவருகிறது. உலகிலேயே முதன்முதலில் உருவாகிய தொண்டுநிறுவனங்கள் உலக முஸ்லீம் லீக் (Muslim World League), மற்றும் ரபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமி (Rabita al-Alam al-Islami) என்பவை.

இதையடுத்து, 1978-ல் சவுதி அரேபிய அரசு உலக இஸ்லாமிய நிவாரண அமைப்பு (International Islamic Relief Organization) என்ற ஒன்றைத் துவக்கியது.  இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கமான அல்கெயிதாவிற்கு, இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் வழங்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை  அல்காயிதாவனது பயங்கரவாத இயக்கமான  லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் வழங்கிறது  பாகிஸ்தானில் இருக்கின்ற ஜமாத்-உத்-தாவா என்று அமைப்பின் மூலமாகவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்கிறது.

பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதிவழங்குவதற்காகவே, இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் செயல்படுகின்றன.  இதில் அமெரிக்காவிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு, இங்கிலாந்து நாட்டிலிருந்து செயல்படும் தொண்டுநிறுவனங்கள் ஆறு, மற்றும் சவுதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், கனடா போன்ற நாடுகளிலிருந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிக்கின்ற தொண்டுநிறுவனங்களும் அடங்குகின்றன.

அமெரிக்காவிலிருந்து செயல்படும் இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்களில் இஸ்லாமிய நிவாரணம் (Islamic Relief), முஸ்லீம் உதவி, (Muslim Aid), முஸ்லீம் கைகள்(Muslims Hands), நிவாரணம் மற்றும் வளர்ச்சிக்கு உதவும் கரங்கள் (Helping Hand for Relief and Development)  போன்ற நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவை.

ஏழை இஸ்லாமியர்களுக்கு உதவிவழங்குவதற்கும், பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கும் கனடாவில் நிதிதிரட்டப்பட்டது.  திரடப்பட்ட நிதியானது, எந்த நோக்கத்திற்காக திரடப்பட்டதோ அதற்குச் செலவிடாமல், காஷ்மீரில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஹிஸ்புல் முஜாஹூதின் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுத்திருப்பதாக, கனடா அரசின் ரெவின்யு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் அறிக்கையின்படி $2,80,000 பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியத் தொண்டுநிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, மேற்படி நிதியானது காஷ்மீரில் உள்ள  ஹிஸ்புல் முஜாஹூதினுக்கு  வழங்கப்பட்டுள்ளது.  இஸ்லாமியத் தொண்டுநிறுவனமான இஸ்லாமிக் செசைட்டி ஆப் நார்த் அமெரிக்கா. இந்த காரியத்தை செய்தது.

             காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை [Jammu & Kashmir Affectees Relief Trust]  என்ற தொண்டு அமைப்பானது, 2011 மற்றும் 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும், உலகில் உள்ள இஸ்லாமியர்களிடம் நன்கொடையாகப்பெற்ற ரூ600 கோடியை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பிற்கு கொடுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள்,

இதுபோக, இந்தத்தொண்டுநிறுவனம் தானாகமட்டுமே சுமார் 65 கோடி ரூபாய் வசூலித்து கொடுத்த்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் இயங்கிகொண்டு இருக்கிறது.  பயங்கரவாதிகளுக்கு நிதிகொடுப்பது மட்டுமில்லாமல், பாகிஸ்தானிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ இந்நிறுவனம் துணைபோயிற்று.

தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு  ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை மூலம் இருபது மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டுள்ளது.  மத்திய பிரதேச காவல்துறையினரும், டெல்லி காவல்துறையினரும் கூட்டாக சோதனைநடத்தியதில் இந்தச் செய்தி தெரியவந்தது.

இதற்கும் மேலாக, ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு நூறு மில்லியன் டாலர் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்த விவகாரமும் வெளியே வந்துள்ளது.  இந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதிகொடுப்பதுமட்டுமில்லாமல், ஆயுதங்கள் வாங்குவதற்கு இடைத்தரகர்களாகவும் செயல்பட்டார்கள்.  இவ்வாறு செயல்படும் இந்த அமைப்பு சட்டபடி அமைக்கப்பட்டது என்றாலும், செயல்படும் விதம் சட்டவிரோதமானது என்பது உலகறிந்த உண்மையாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக துவக்கப்பட்ட என்.ஜி.ஓ. என பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், இந்த அமைப்பிற்கு கிடைக்கும் பெருவாரியான நிதியானது, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாக  தேசியப்புலனாய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவைத் தாக்கத் துடிக்கும் லஷ்கர் இ தொய்பா, இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள்

2011, 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ600 கோடி அளவில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைத்துள்ளது.  இவ்வாறு கிடைத்த நிதியில் பெருவாரியான நிதியை வழங்கியது ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை என தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள்.

பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு நிவாரணப்பணி செய்வதற்கு என்ற காரணத்தைக்கூறி வெளிநாடுகளிலிருந்து  பெறப்பட்ட ரூ95 கோடியும் பயங்கரவாத அமைப்புகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.

2013 வருடம் ஆகஸ்ட் மாதம் தேசிய புலானாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பினருக்கு  100 மில்லியன் டாலர் வரை நிதி கிடைத்துள்ளது என்றும், இவ்வாறு நிதி கிடைக்க அதிக அளவில் வசூல் செய்த என்.ஜி.ஓ. ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை என்றும் தெரிவித்தார்கள் .

2011லிருந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு இந்நிறுவனம்.மூலமாக தொடர்ந்து நிதி உதவி வழங்கப்பட்டு வந்துள்ளது.  மேற்படி நிதியானது ஹவாலா மூலமாகவே பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைத்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக சையத் அலி ஷா கிலானியின் அமைப்பினர் வெளிநாடுகளில் திரட்டிய நிதியை ஹவாலா மூலமாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளை அமைப்பினர், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினருக்கு வழங்கியது போலவே, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான தாரீக்-இ-ஜிகாத் இஸ்லாமி (Tehreek-e-Jihad Islami), ஹிஸ் அல் முஜாஹிதீன்-ஐ-ஜகாத் கமாண்டோஸ் (Hizb al-Mujahideen-I-Jihad Commandos), அல்லா டைகர் (Allah Tigers), போன்ற அமைப்புகளும் நிதி உதவி செய்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளையுடன், ஃபாலா-இ-ஆலம் அறக்கட்டளை [Falah-e-Alam Trust] என்ற அமைப்பும் இணைந்து நிதிஉதவியை இன்று வரை செய்து கொண்டு இருக்கிறது.. இதற்கு முக்கியமான சூத்திரதாரிகள் ஜம்மு-காஷ்மீர் பாதிக்கப்பட்டோர் நல அறக்கட்டளையின் சேர்மன்  மொஹபூப் உல் ஹக், (Mahboob-ul-Haq), அதன் பொதுச் செயலாளர் மசூர் தார் (Masroor Dar) என்பவர்கள்.

ஜமாத்-உத்-தாவா அமைப்பிற்கு பாகிஸ்தான் முழுவதும் 50,000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர், இவர்கள் மூலமாகவும் லஷ்கர் அமைப்பினருக்கு நிதி திரட்டப்படுகிறது.  இந்த அமைப்பினர் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் உண்டியல் வைத்திருக்கிறார்கள்.  இஸ்லாத்திற்கு எதிராக இருப்பவர்கள்மீதும், இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக ஜிகாத் நடத்த நிதிஉதவி செய்யவும் என்ற வாசகத்தை எழுதி, உண்டியல் முன் வைத்து நிதி திரட்டப்படுகிறது.

இதற்காகவே பாகிஸ்தானில் சில தொண்டுநிறுவனங்கள் உருவாகின.  பாகிஸ்தானிலிருந்து பல்வேறு நாடுகளில் குடியமர்ந்துள்ள பாகிஸ்தானியர்கள் மூலமாகவும் நிதி பெறப்படுகிறது. இந்த நிதியும் தொண்டுநிறுவனங்கள் மூலமாக பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கிறது.  இதில் இங்கிலாந்து முதலிடம் வகிக்கிறது.  குவைத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் புத்துயிர் (The Revival of Islamic Society) என்ற நிறுவனத்தின்மூலமாகவும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கு நிதி கிடைக்கிறது.

இஸ்லாமிய நாடுகளில் உள்ள செல்வந்தர்களால் நிறுவப்பட்டுள்ள தொண்டுநிறுவனங்கள், பெறுகின்ற நிதியில் பெருமளவு நிவாரண பணிகளுக்கு செலவிடுவதாக கூறிக்கொண்டாலும், நன்கொடையாகப் பெறும் நிதியில் முப்பது சதவீதத்திற்குமேல் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியாகக் கொடுக்கிறார்கள்.  பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கு தொடர்ச்சியாக வரும்  நிதியானது, குவைத் நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் புத்துயிர்  என்ற அமைப்பின்மூலம் கிடைக்கிறது.

14.12.2001 அன்று, குளோபல் ரிலிப் பவுன்டேஷன் (Global Relief Foundation) என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனைநடத்தியபோது, இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான அல்கயிதாவிற்கு நிதி உதவி செய்தது தெரியவந்தது.  ஹட்டிவா சென்டர் (Hatikva Center), புனித நாட்டிற்கு நிவாரணம், வளர்ச்சி அறக்கட்டளை (Holy Land Foundation for Relief and Development), அல்-வாப்பா-மனிதநேய அமைப்பு (al-Wafa Humanitatian Organization) போன்ற நிறுவனங்களுடன்  முக்கியமான தொண்டுநிறுவனங்களும் இணைந்து, இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கொடுக்கம் வகையில்  செயல்படுகின்றன.

சவூதி அரோபியாவிலிருந்து செயல்படும் தொண்டுநிறுவனமான அல்-வாப்பா-மனித நேய அமைப்பு (Al-Haramain Islamic Foundation), தான் பெற்ற நிதியை 1997லிருந்து அதிக அளவில் காஷ்மீர் பயங்க்ரவாத அமைப்புகளுக்கு வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இந்த அமைப்பினர் 1998-ல் தான்செனியா, கென்யா போன்ற இடங்களில் நடந்த தாக்குதலை நடத்திய அல்கொயிதாவிற்கு நிதி உதவி செய்தன.  அல் கொயிதாவிற்கு ஆண்டுக்கு முப்பது மில்லியன் டாலர் வழங்கப்பட்டு வந்த்தாகவும், மேற்படி நிதியிலிருந்து லஷ்கர் அமைப்பினருக்கும் வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.  சிரியா நாட்டில் உள்ள தி சிரியன் இஸ்லாமிக் முன்னணி (The Syrian Islamic Front) என்ற அமைப்பின் கீழ் ஆறு அமைப்புகள் செயல்படுவதாகவும், இந்த அமைப்புகள் துருக்கியில் உள்ள சில தொண்டுநிறுவனங்களுடன் உறவுகொண்டு நிதியை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

,இஸ்லாமிய பாரம்பரிய புத்துயிர்ப்பு சங்கம் (Revival of Islamic Heritage Society)  லஷ்கர் அமைப்பு உட்பட பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்துவரும் தொண்டுநிறுவனமாகும்.  இவர்கள் கூரியர் மூலமாகவே நிதியை அனுப்புகிறார்கள்.  மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் அல் அக்தர் அறக்கட்டளை, அல் ரஷீத் அறக்கட்டளை [Al Akhtar Trust, Al Rashid Trust]  ஆகியவை அதிக அளவில் அல்கொயிதா மற்றும் லஷ்கர் அமைப்பினருக்கு உதவி செய்யும் தொண்டுநிறுவனங்கள்.

இந்த இரண்டு தொண்டுநிறுவனங்களும் அரசின் அனைத்து உதவிகளையும் — அதாவது புயல், வெள்ளம் போன்ற நிவாரண நிதிகளைப் பெற்று, பயங்கரவாத அமைப்பான ஹிஜ்புல் முஸாஹிதீனுக்கு  வழங்குகிறது. இந்த நிதியானது லன்டனிலிருந்து செயல்படும் உலக காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான டாக்டர் அயுப் தோக்கரால் காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஹவலாமூலம் நிதி வழங்கி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இஸ்லாமிய நிவாரண அமைப்பு (Islamic Relief) என்ற நிறுவனம், அதன் வலைத்தளத்தில் காஷ்மீரைத் தனிநாடாகக் காட்டியுள்ளது.  மேலும், இந்தியா காஷ்மீர்ப்பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாகவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்காகப் போராடும் இஸ்லாமியர்களுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு, நிதியனுப்பி வருகிறது.  இந்த நிதியை காஷமீரில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பெற்றுவருகின்றன.  இந்த நிறுவனம் உலகளாவிய நிறுவனமாகும்.   இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து., பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில். இஸ்லாமியநாடான மலேசியாவில் வாழும் இஸ்லாமியர்களிடம் குரான் வாசகத்தைக் காட்டியே ஜிகாத்திற்காக நிதி வசூலிக்கிறார்கள்.  இந்த நிதிகூட அண்டைநாடான இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பிற்கு ஹவாலாமூலம் வருகிறது.

இஸ்லாமிய நிவாரண அமைப்பு வெளிநாடுகளில் தன்னைத் தொண்டுநிறுவனமாகவே விளம்பரப்டுத்திக்கொண்டு நிதி வசூல் செய்கின்றது.  இதன் காரணமாக ஐ.நா.சபையில் உள்ள பல்வேறு பிரிவுகள்கூட நிதி கொடுக்கிறார்கள்.  மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஐரோப்பிய ஆணைக்குழு (European Commission for Humanitarian Operations) 2.3 மில்லியன் பவுன்ட்  வழங்கியுள்ளது.  இந்தக் குழுவைப்போலவே அகதிகளுக்கான ஐ.நா.சபையின் உயர் ஆணையர் (United Nations High Commissioner for Refugees) தொண்ணூறு இலட்சம் பவுன்ட் வழங்கியுள்ளார்.  ஐ.நா.சபையின் வளர்ச்சி நிகழ்ச்சி அமைப்பு (United Nations Development Program) 1.6 மில்லியன் பவுன்ட் வழங்கியுள்ளது.

இவ்வாறு வசூல் செய்யும் நிதியானது பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பப்படுகிறது.

இந்தியாவில் உருவாகிய பயங்கரவாத அமைப்பான சிமிக்கும், தடைசெய்யப்பட்ட பின்னர் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பிற்கும் பல்வேறு தொண்டுநிறுவனங்கள் பணத்தை அள்ளித்தருகின்றன.  ரியாத்தில் உள்ள உலக முஸ்லிம் இளைஞர் குழு [World Assembly of Muslim Youth]   என்கின்ற தொண்டுநிறுவனம் இந்தியன் முஜாஹிதீனுக்கு அதிக அளவில் நிதி கொடுக்கிறது.

இந்த நிறுவனத்தைப்போலவே குவைத்தில் உள்ள அனைத்துலக இஸ்லாமிய மாணவர் சங்க இணையமும்  [International Islamic Federation of Students Organisation],  சிகாகோ நகரைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்திய முஸ்லிம் ஆலோசனைக் குழுவும் [Consultative Committee of Indian Muslims] அதிக அளவில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கொடுக்கின்றன.

இங்கிலாந்து நாட்டில் துவக்கப்பட்ட முஸ்லிம் உதவி (Muslim Aid) என்ற தொண்டுநிறுவனம், பங்களாதேஷில் உள்ள  `_ஜி என்ற அமைப்பிற்கு நிதி உதவி செய்கிறது.  இந்நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் ஜிகாத்திற்கு அதிக அளவில் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள்வைத்து நிதி வசூல் செய்கிறது.

பங்களாதேஷ் நாட்டின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு உளவுப்பிரிவும், ராணுவ உளவுப்பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில், பங்களாதேஷ் நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினருக்கு பத்து இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியை பெற்று தருவதாக கண்டனர்.  இதில் வேடிக்கை என்னவென்றால், ஜமாத்-ஐ-இஸ்லாமி என்ற அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா அப்துஷ் ஷோபன் (Maulana Abdush Sobhan) என்பவர் முஸ்லிம் உதவிமையத்தின் பொறுப்பாளர் என்பது தெரியவந்த்து.

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் உதவி மையம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷீல் உள்ள  பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறது.  நேரடியாக பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லாமல், கோம்பாக் [KOMPAK] என்ற அமைப்பின் மூலம் நிதி வழங்கப்படுவதாக ஆஸ்திரேலியாவில் உள்ள உளவு அமைப்பினர் தெரிவித்தார்கள்.  கோம்பாக்  அமைப்பினர் பங்களாதேஷீல் உள்ள ஹிஜ்புல் முஜாஹுத்தினுக்கு நிதி வழங்குவதாகக் கூறப்பட்டது.

பங்களாதேஷில் உள்ள பயங்கரவாத அமைப்பிற்கு முஸ்லிம் உதவி மையத்துடன் அனைத்துலக இஸ்லாமிய நிவாரண நிறுவனமும் [International Islamic Relief Organization] இணைந்து நிதி வழங்குகிறது.  பங்களாதேஷில் உள்ள Muslim World League,  Wafa Humanitarian Organization,  Rabita Trusts,  Qatar Charitable Society,  Holy Land Foundation for Relief and Development,  Al-Aqsa Educational Fund  தொண்டுநிறுவனங்களுடன்  International Islamic Relief Organization இணைந்து நிதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 2001-ல் தடைசெய்யப்பட்ட சிமி, இந்தியன் முஜாஹிதின், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஜி முகமது போன்ற இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்கள் அனைத்தும் உலக இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கமான அல்கயிதா மற்றும் ஹமாஸூடன் நெருங்கிய தொடர்பு கொண்டவைகள்.  ஆகவே உலக பயங்கரவாத இயக்கமான அல் கயிதாவிற்கு கிடைக்கும் நிதியைக்கொண்டு, இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைத்து வருகிறது.  உலகிலுள்ள தொண்டுநிறுவனங்கள் தாங்கள் கொடுக்கும் நிதி எந்த பயங்கரவாத இயக்கத்திற்கு சென்றாலும், அனைத்து இயக்கங்களுக்கும் அந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஹஸ்புல் முஜாஹூதின் அமைப்பிற்கு அதன் தலைவரான சலாலுதீன் மற்றும் ஒன்பது பேர்களுக்கு பாகிஸ்தான் அரசு அளித்த ரூ80 கோடியை, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த நிதி அளித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தனர்.  மேற்படி நிதியை பாகிஸ்தான் அரசு தங்களது அரசு கஜானாவிலிருந்து கொடுக்கவில்லை, மாறாக போதைப்பொருள்கள் கடத்தியதில் கிடைத்த வருமானம், உலக முஸ்லீம் லீக், மற்றும் தி முஸ்லீம் உலக லீக் மூலமாக கிடைத்த நிதியையும் கொடுத்ததாக கைதானவர்கள் தகவல்கள் கொடுத்தார்கள்.

உலகில் உள்ள இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி வழங்கினாலும், நேரிடையாக வழங்குவதில்லை.  அல் காயிதா அமைப்பினர், நிதியைப் பெறுவதற்காகவே இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ரண்ட். (International Islamic Front) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இங்கிலாந்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் முஸ்லீம் உதவி (Muslim Aid), சவூதி அரேபியாயிலிருந்து செயல்படும் World Assembly of Muslim Youth,  Rabeta-al-Alam-al-Islami , இது தவிர வேறு பல தொண்டுநிறுவனங்கள் செயல்படுகின்றன.

இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும்  நிதி கொடுக்கிறார்கள்.  மசூதிகளுக்கும் மதரஸாக்களுக்கும் கொடுக்கும் நிதியானது அண்டைநாடுகளில் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குக் கிடைக்கின்றது.  உலக முஸ்லீம் இளைஞர்களின் கட்டமைப்பு (World Assembly of Muslim Youth), பாகிஸ்தானில் புதிதாக பத்து மதரஸாக்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது.

இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் முறை

இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி கொடுக்கும் பயங்கரவாத அமைப்பான அல்கயிதாவிற்கு கிடைக்கும் நிதி வழிகளை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.  அல் கயிதாவிற்கு அதிக அளவில் நிதி வழங்கும்  தொண்டுநிறுவனம் உலக முஸ்லீம் இளைஞர்களின் கூட்டமைப்பு;  இதனுடன் நெருக்கமாக இருக்கும் அமைப்பு, வட அமெரிக்காவிலிருந்து செயல்படும் Benevolence International Foundation (BIF) என்ற அமைப்பாகும். இத்துடன்  Muslim World League,  Qatar Charitable Society     அமைப்புகள் அல் கயிதாவிற்கு நிதி வசூலித்து தரும் இஸ்லாமியத் தொண்டு அமைப்பாகும்

உலக முஸ்லீம் இளைஞர்களின் கூட்டமைப்பபின் (World Assembly of Muslim Youth) நிர்வாகி, சௌதி அரேபியாவின் இஸ்லாமியப் பிரச்சினையை கவனிக்கும் துறையின் அமைச்சரான ஷேக் சலால் பின் அப்துல் அஸிஸ் அல் அல் ஷேக் (Sheikh Saleh bin  Abdul Aziz Al al-Sheikh) என்பவர்.

சௌதி அரேபியாவின் மன்னர் குடும்பம் நிதி வழங்கும் முக்கியமான அம்சமாகும்.  1996லிருந்து பாலஸ்தீனத்தில் இயங்கும் ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள I’tilaf al-Khir of Sheikh Qaradhawi  என்பவர்மூலமாகவே ஹமாஸுக்கு நேரடியாக நிதி வழங்கப்படுகிறது.   ஷேக் சலால் பின் அப்துல் அஸிஸ் அல் அல் ஷேக் (Sheikh Saleh bin  Abdul Aziz Al al-Sheikh) என்பவர்.  International Islamic Relief Organisation,  Charitable Foundation of al-Haramain என்ற மேலும் இரண்டு அமைப்புகளுக்குத் தலைமை ஏற்றுள்ளார்.. 1989லிருந்து இந்த இரண்டு அமைப்புகளிலிருந்து அல்காயிதாவிற்கும், அல் காயிதா மூலம் இந்தியாவில் இயங்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் நிதி அளிக்கப்படுகிறது.

உலக முஸ்லீம் இளைஞர்களின் கூட்டமைப்பு அல் காயிதாவிற்கு நிதி உதவி செய்யும் முக்கிய அமைப்பு என ஐ.நாசபை 19.12.2002ந் தேதி அறிவித்துள்ளது.  மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த இயக்கம் செயல்படுவதாகவும், ஒசமா பின்லேடனுடனும், அவரது இயக்கமான அல்காயிதாவுடன் உள்ள உறவைப்பற்றி விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பங்களாதேஷில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பிற்கும் நிதி உதவி செய்வது சௌதி அரேபியாவில் உள்ள மன்னர் குடும்பம்.  மீர் காசிம் அலி என்பவர் இடைத்தரகராக இருந்து செயல்படுபவர்.  பங்களாதேஷில் உள்ள இஸ்லாமி பேங்க்  பங்களாதேஷ் லிமிடெட் என்ற வங்கி தனது வருமானத்தில் 8 சதவீத்த்தை பயங்கரவாத இயக்கங்களுக்கு வழங்குகிறது.   பங்களாதேஷில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் நிதியில் கணிசமான அளவு, இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்குக் கிடைக்கிறது.

அல் கயிதா மற்றும் தாலிபான் ஜிகாதிகளின் மூலம் உருவான இயக்கம் ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (Jama’tul Mjuahideen Bangaldesh), ஒவ்வொரு மாதமும் ஹூஜி அமைப்பு(Harkat ul Jehad Islam) பெரிய அளவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளான சஜெதூர் ரகுமான், ஹபீஸ் முஹம்மது இப்ராஹீம் என்பவர்கள் மூலமாக, பங்களாதேஷ் ஜமாத்உல் முஜாஹூதின்  அமைப்பின் பொறுப்பாளரான மௌலான சைதூர் ரஹிமான் என்பவருக்கு ஹவலா மூலம் அனுப்ப்ப்படுகிறது.

ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்(Jama’tul Mjuahideen Bangaldesh, ஹூஜி,(Harkat ul Jehad Islam) அமைப்புகளையும் பங்களாதேஷ் அரசு தடைசெய்தாலும், அவர்களின் செயல்பாடுகளை தடைசெய்ய இயலவில்லை.  அல் கயிதா அமைப்பின் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ரண்ட் என்ற அமைப்பின் மூலமாகவே நிதியுதவி  ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷுக்கும், ஹூஜிக்கும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.

ஆகவே இம் மாதிரியாக உலக முழுவதும் உள்ள இஸ்லாமியத் தொண்டுநிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நிதியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.  இதில் இன்னும் ஆழமாக ஆய்வுசெய்தால், பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும்.  இந்தியாவில் உள்ள பெரும் இஸ்லாமிய வியாபாரிகள், மற்றும் செல்வந்தர்கள் பெருமளவில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதிவழங்குவதாகவும் தெரிகிறது.

ள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது:

இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்குக் கள்ளப்பணம் வரும் முறை

பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகள், அவற்றைப் புழக்கத்தில் விடுவதில் கிடைக்கும் கமிஷன் தொகை முழுவதும், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வாங்குவது, நிதி உதவி அளிப்பது போன்ற காரியங்களுக்குக் கைகொடுக்கிறது.

சதிகாரர்களும், பயங்கரவாத அமைப்புகளும் போலீசிடம் பிடிபடாமல், இந்தியாவில் தங்கள் நாசவேலைகளை நிகழ்த்த கள்ளநோட்டுத்தொழில் உதவுகிறது.  ஐ.எஸ்.ஐ அனுப்பிவைக்கும் கள்ளநோட்டுகள் — குறைந்த செலவில், சிக்கலில்லாமல், செம்மையாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகள், நெட்வொர்க்குகளுக்கு முக்கிய ஆதராமாக இருக்கிறது.  கள்ளநோட்டுகளால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்றாலும், இவற்றைப் பரப்புவதன் ஒரேநோக்கம், இந்தியப்பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதும், பயங்கரவாதம், போதைப் பொருள் வியாபாரம் போன்ற தேசவிரோதச் செயல்களை ஊக்குவிப்பதும்தான்.

பெங்களுரு குண்டு வெடிப்புக்காக சுமார் 30 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கைப்பற்றப்பட்ட கள்ளப்பணம்

இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு கள்ள நோட்டுகள் மூலமாகவே  அதிக அளவில்  நிதி கிடைத்துள்ளது.

2005-ம் வருடம் பெங்களுரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் நடத்திய குண்டு வெடிப்பிற்கும், 2007-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத் நகரில் நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும், நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும், கள்ள நோட்டின் மூலம் கிடைத்த வருவாயைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

2007-ல் ஹைதராபாத் நகரில் குண்டு வெடித்தவுடன், காவல் துறையினர் நான்கு பேர்களை கைது செய்தனர், கைது செய்தவர்களில் துபாய் நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.  இவர்களிடமிருந்து 100 கோடிக்கும் (23.6 மில்லியன்) அதிகமான இந்திய கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதராபாத் தாக்குதலுக்கு 14 முதல் 16  கோடி ரூபாய் வரை செலவிட்டதாகத் தெரிவித்தார்கள். ஆகவே இந்தியாவில் நடந்த ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போதும் பயங்கரவாத இயக்கங்கள் கணிசமான அளவுக்குக் கள்ளநோட்டுகளை உபயோகித்துள்ளன.

2009-ம் வருடம் ஜனவரி மாதம் மகாராஷ்ட்ர மாநில பயங்கரவாதத் தடுப்பு காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  வாக்குமூலத்தில், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடுவதற்கு இநதியன் முஜாஹிதீன் அமைப்பினர் உதவி புரிந்தார்கள் என்று கூறப்படுகிறது.  கோடிக்கணக்கான கள்ளநோட்டுகளை இந்திய முஜாஹிதீன் அமைப்பின் பொறுப்பாளர்களான, ரியாஸ் பட்கல், இக்பால் பட்கல், அகமது யாசின் போன்றவர்கள் மௌலான ஹுசைன் சபீர் கங்காவாலி என்பவன் மூலம் புழக்கத்தில் விட்டார்கள் என்ற தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.

இவ்வாறு புழக்கத்தில் விடும் பணத்தின் அளவில் இருபது முதல் நாற்பது சதவீதம்வரை பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஹிஜப்-உல்–முஜாஹிதீன் பயங்கரவதிகளிடமிருந்து ஜூன், 3, 2013ல் இந்திய NIAவால் கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள்

பாராளுமன்ற நிலைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் 2010-ல் ரூ1,500 கோடி வரை கள்ள நோட்டு புழக்கத்தில் விடுக்கப்பட்டதாகவும், இந்த தொகை 2012-ல் 2,500 கோடியாக மாறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதில் வேடிக்கை என்னவென்றால் 2012லிருந்து பாகிஸ்தானிலிருந்து  கடத்தல் மூலமாக கொண்டு வரப்படும் கள்ள நோட்டுகள் அனைத்தும் பயங்கரவாத செயலுக்கு மட்டுமே பயன்படுத்துப்படுவதாக இந்திய அரசுக்கு அமெரிக்காவில் உள்ள உளவுநிறுவனம் தெரிவித்துள்ளது.

25.06.2012ந் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தி இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகளில் 70 சதவீதம் பங்களாதேஷ் நாட்டிலிருந்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்குவங்க மாநிலம் வழியாக நாடுமுழுவதும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பதாகும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பில் குறைந்த பட்சம் 40 முதல் 50 சதவீதம் பயங்கரவாதச் செயலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்கள்.

இதில் தாவுத் இப்ரஹிம் குழுவைச் சார்ந்தவர்கள் அப்தாப் பட்கி (Aftab Batki), ஹாஸி அப்துல்லா என்ற இருவர். கள்ள நோட்டுகளை பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டு வந்து பயங்கரவாத இயக்கங்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் வேலையைச் செய்பவர்கள்.  பாகிஸ்தானிலிருந்து ஐ.எஸ்.ஐ அனுப்புவது, லஷ்கர், அல்பதார், இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளுக்கு தாவுத் மூலமாகவே வழங்கப்படுகிறது என்பது இந்திய அரசுக்கு நன்கு தெரியும்.

சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் துண்டாவிடம் நடத்திய விசாரணையில், அவன் இந்தியாவில் கள்ள நோட்டுகளை சுற்றுக்கு விடும் செயலில் ஈடுபட்டது ஐ.எஸ்.ஐ என்ற உண்மையைக் கூறினான்.

இது சம்பந்தமாக இந்திய உளவுத்துறையினரின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.  7.3.2011ந் தேதி புது டெல்லியில் உள்ள கான் மார்க்ட் பகுதியில் ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த மூவர் கைது செய்யப்பட்டார்கள் இவர்களிடம் ரூ4.8 கோடி கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன.  விசாரணையின்பொது பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானிலிருந்து கடத்திவருவதாகக் கூறினார்கள்.  17.1.2011ல் புதுடெல்லியில் மரத்துண்டுகள் விற்பனைசெய்யும், சுபீர் ஆலம் என்பவனிடமிருந்து சுமார் 10 லட்சம் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன, இவன் சிமி இயக்கத்திற்கு ஆதரவானவன் என்றும், முன்னர் சிமியில் இருந்தவன் என்பதும் தெரியவந்த்து.

2012-ம் வ்ருடம் புதுச்சேரியில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை விநியோகம் செய்த இஸ்மாயில் ஷேக் என்பவன் கைதுசெய்யப்பட்டான், இவன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவன்.  கைதுசெய்தபோது, \இவனுடன்சேர்ந்து ஐந்துபேர்கள் தமிழகத்திலும் கள்ளநோட்டுகளை விநியோகம்செய்ய வந்ததாகவும் தெரிவித்தான். சிட்லபாக்கத்தில் ஆயிரம்ரூபாய் நோட்டைக்கொடுத்து மாற்றமுயன்ற இஸ்ரா உல் ஷேக் என்பவனும், சைதாப்பேட்டையில் ராகுல்முகமது என்பவனும் கைதுசெய்யப்பட்டார்கள்.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு, மேற்கு வங்கம், பங்களாதேஷ், நேபாளம் வழியாக இந்தியாவின் பிறமாநிலங்களுக்கு விநியோகிக்ப்படுகிறது என்றும், மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டம் கள்ள நோட்டுக் கும்பலின் தலைநகரம் எனவும், இவர்கள் தமிழக காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்தார்கள்.

மத்திய பிரதேச தீவிரவாத தடுப்புப்படை நேபாள நாட்டைச் சார்ந்த சிலரிடமிருந்து கள்ளநோட்டை கைப்பற்றியபோது, பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், நேபாள மன்னர் பிரின்ஸ் பாராஸூக்கும் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கும் இதில் தொடர்பிருப்பதாக தெரிந்தது என்று 2011-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்,தெரிவித்தார்.

பாகிஸ்தானில் காராச்சியில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகளை, பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஐ.  பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மூலமாகவே நேபால், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு அனுப்புகிறது.  இந்த விவரங்கள், தாய்லாந்து காவல் துறையினர் கள்ள நோட்டு கடத்தல்கார்ர்கள் கைது செய்து விசாரித்தபோது வெளிவந்தன.

சிறைப்பிடிக்கப்பட்ட ஹர்கத் உல் ஜிஹாத் இஸ்லாமியப் பயங்கரவாதிகள்

24.4.2008ந் தேதி டாக்காவில் நைளஷத் ஆலம் கான் என்பவனைக் கைதுசெய்தபோது, அவனிடமிருந்து 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்திய கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன,  இவனுக்கும் பங்களாதேஷில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி அமைப்பின் தலைவர் முப்தி அப்துல் ஹன்னானுக்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்த்து.

2007-ம் வருடம் கள்ளநோட்டு விவகாரத்தில் பதிவான வழக்குகள் 2,204 என்றும், இதன் காரணமாக கைப்பற்றப்பட்ட தொகை ரூ3.63 கோடி என்றும் தெரிகிறது.   2008-ல் சி.பி.ஐ பதிவுசெய்த 13 வழக்குகள், கள்ளநோட்டுகள்மூலம் கிடைத்த நிதியை பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுத்ததாகும்.  நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் நடத்திய தாக்குதலுக்கு செலவான நிதி, கள்ளநோட்டை  இந்தியாவில் புழகத்தில் விடப்பட்டதில் கிடைத்ததே. ஆண்டு ஒன்றுக்கு இவ்வாறு கிடைப்பது ரூ1,800 கோடி என்றும், மேற்படி நிதியை பாகிஸ்தானின் ஐ,எஸ்.ஐ வழங்குகிறது என்றும் தெரிகிறது.  2005-ல் பெங்களுரில் விஞ்ஞான கழகத்தில் நடத்திய தாக்குதலுக்கு உபயோகப்படுத்திய பணம் ஐம்பது இலட்சம்  கள்ளநோட்டுகள் மூலம் கிடைத்தவையே என்றும் உளவுத்துறையினர் தெரிவித்தார்கள்.

இந்தியாவில் புழகத்தில் விடப்பட்டுள்ள கள்ள நோட்டின் மதிப்பு 1,69,000 கோடி என அரசின் மதிப்பீட்டு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  டெல்லியில் கள்ளநோட்டு விஷயத்தில் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டவர்களைப் பிடித்தபோது கைதானவர்கள்,  நயீம்(Nayeem), வாஸிம்(Wasun), முகமது முஸ்லிம் (Mohammed Muslim) ஆகிய மூவரும்.  இவர்கள் தார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாகிஸ்தானில் உள்ள முன்னபாவ் (Munnabao)என்னுமிடத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்புர் வழியாக மற்ற மாநிலங்களுக்கு கொண்டு சென்றதாக விசாரணையின் போது தெரிவித்தார்கள்.

வங்கிகளில் கொள்ளையடித்தல்:

ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் மத்தியப்பிரதேச அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது, இந்தியன் முஜாஹிதீன், மற்றும் சிமி அமைப்பைச் சார்ந்த எட்டு பேர்களைக் கைதுசெய்தார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்த விவரம் தெரியவந்தது.  தேவாஸ் என்ற பகுதியில் இரண்டு வங்கிகளிலும், இட்டார்ஜி, ஜகுரா, பிப்ளிமாண்டி ஆகிய பகுதியில் ஒரு வங்கியிலும் கொள்ளையடிக்கப்பட்டது.

வாக்குமூலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிவசதியை உருவாக்கவே வங்கிகளில் கொள்யையடித்ததாக இவர்கள் தெரிவித்தார்கள்.  இவர்களின் தகவலை வைத்து போபாலில் உள்ள வங்கிகளில் கொள்ளையடித்த மேலும் நான்குபேர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்,

ஜபல்புரில் உள்ள வங்கியில் கொள்யையடித்தவர்கள், ஷேக் முஜிப், அஸ்லம், ஹபீப், சாஜித் என்பவர்கள்.

நாடு முழுவதும் நடந்துள்ள வங்கி கொள்யைடிப்புகளில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பினர் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, மற்ற பயங்கரவாத அமைப்புகளான, மாவேயிஸ்ட்டுகள், உல்பா, மணிப்பூரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளும் இந்த செயலில் ஈடுபட்டன.

இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்திற்கு நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக்கொள்ள இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை இதுவரை வெளிச்சத்திற்கு வராமல் இருந்து.  தற்போது மெல்ல மெல்ல வெளியே வரத்துவங்கியுள்ளது.

(முற்றும்)