காங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]

மூலம்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)
தமிழில்: விடவி விரும்பி

This means you’ll get the same, proven, trusted results – the ability to last longer inside of you and experience sexual pleasure that you’ve been wanting. I have never seen a male or a female human on the cover of a clomid 50 mg price in uae newspaper before. It is a macrolide antibiotic, and belongs to a class of antibiotics called azoles because they are structurally similar to the antibiotic class known as the ‘azoles’.

We offer effective solution at an affordable cost. It is https://derisqueur.fr/evaluation-entreprise-innovante/ also used in different kinds of health supplements. I just had to follow the path that i was meant to.

Der antwort darauf: es ist eine sache für die medikamenteneinheiten und nicht für jemand anderes. The most important http://galeriatak.pion.pl/mind-the-gap-spon/ side effect of clomid is that it may cause a temporary. Lamivudine/zidovudine/lamivudine and stavudine (azt) combinations have been shown to be highly effective for hiv treatment and prevention, providing the most effective antiretroviral therapy currently available \[[@jiu388c1]-[@jiu388c3]\].

காங்கிரசும், கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1

(தொடர்ச்சி…)

டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரி வேலைவாய்ப்பில் கிறிஸ்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது என்று 2008 ஜூலை 10ம் தேதி வெளியான ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழும், 2008, ஜூலை 18ம் தேதி வெளியான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழும் செய்தி வெளியிட்டிருந்தன. அப்போது முதல்வர் பொறுப்பில் இருந்த எம்.எஸ்.பிராங்க், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரே தகுதி உடைய கிறிஸ்தவ வேட்பாளரும், கிறிஸ்தவர் அல்லாத வேட்பாளரும் ஒரு பணிக்கு விண்ணப்பித்தால் கிறிஸ்தவ வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கல்லூரி நிர்வாகம் உறுதியாக இருந்தது. இங்குமட்டும்தான் இப்படிப்பட்ட நிலை என்பதில்லை. இந்தியா முழுவதும் ஹிந்துக்களுக்கு இத்தகைய அநீதி தொடர்ந்து இழைக்கப்பட்டுவருகிறது. ஹிந்துக்கள் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டே இருந்தால் இந்த அநீதியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்தக் கல்வி நிறுவனங்கள் தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்த உச்சநீதிமன்ற முடிவை மேற்கோளாகக் காட்டுகின்றன. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுனவங்களில் ஹிந்துக்களுக்கு சம உரிமை கிடையாது என்பதை அரசியல் சாசனத்தின் 14ஆவது பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் உதவி கிடைத்து வந்தாலும் சரி, அல்லது கிடைக்காவிட்டாலும் சரி, அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. சுருக்கமாகச் சொன்னால் அரசியல் சாசனத்தின் 14ஆவது பிரிவு கல்வி நிறுவனங்களில் ஹிந்துக்களுக்கு சம உரிமைகிடையாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு உச்சநீதிமன்றம் தந்துள்ள தவறான விளக்கமாகும்.

3. இந்திய அரசியல் சாசன பிரிவுகள் 15, 16, தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கு 15% பழங்குடியின ஹிந்துக்களுக்கு 7.5 சதவீதமும் அளிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் அரசியல் சாசன ரீதியாக அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவாதம் அது கல்வி சார்ந்ததாக இருந்தாலும் சரி, அல்லது வேலைவாய்ப்பு சார்ந்ததாக இருந்தாலும் சரி, சிறுபான்மை நிறுவனங்களில் ஹிந்துக்களுக்கு கிடைப்பதில்லை. ஹிந்துக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. இதற்கு ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் போன்ற கட்சிகள் மறைமுகமாக ஆதரவு அளிக்கின்றன.

இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்களுக்கு 27சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன ரீதியாக இந்த உத்திரவாதம் அவர்களுக்கு கிடைக்காதபடிக்கு மன்மோகன்சிங் அரசு குளறுபடி வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என பலதரப்பட்ட ஹிந்துக்களுக்கும் எல்லா சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களிலும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால் உண்மையில் அவ்வாறு அளிக்கப்படுவதில்லை. அரசியல் சாசனத்தின் சில ஷரத்துக்கள் சில இடங்களில் பிரயோகிக்கப்படுகின்றன. சில இடங்களில் பிரயோகிக்கப் படாமல் இருக்கின்றன. இப்படி பாரபட்சமாக அரசியல் சாசன சரத்துக்களை பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

buta-singhதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பூட்டாசிங் உள்ளார். கிறிஸ்தவ மதத்திற்கும் இஸ்லாமுக்கும் மாறிய ஹிந்து தலித்துக்களுக்கு தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை அளிக்கப்படவேண்டும் என்று பூட்டாசிங் தலைமையிலான தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கூறியுள்ளது. அந்த ஆணையம் கூட 15 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் கீழ் இவர்களை சேர்க்கவே கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. பொதுவாக ஹிந்துக்களுக்கு உள்ள ஒதுக்கீட்டைக் குறைத்து மதம் மாறிய தலித் பிரிவினருக்கு என பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 14.07.2007 பொதுவாக உள்ள ஹிந்துக்களுக்கான பங்கை குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆணையம் கூறியுள்ள பரிந்துரையின் சாரம்சமாகும். இதுவும் வாக்குவங்கி அரசியலைக் கருத்தில்கொண்டதே.

nmdfcஹிந்து மாணவர்கள் கல்விக் கடன் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஆண்டு வட்டி விகிதம் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உள்ளது. ஆனால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகத்திடமிருந்து ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டியில் கடன் பெறுகிறார்கள். இந்த நிதி கழகம் நிதியமைச்சகத்தின் கீழ்தான் இயங்குகிறது. இதை உறுதிப்படுத்திக்கொள்ள www.nmdfc.org இணையத்தைப் பாருங்கள். ஹிந்து மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இந்தப் பாரபட்சத்திற்கு காரணம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஹிந்துக்கள் வாக்களித்ததுதான்.

2009, ஆகஸ்ட் 27ஆம் தேதி, மாணவரின் பெற்றோர் ஈட்டுகின்ற ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் முழு வட்டித் தொகையும் மானியமாக அளிக்கப்படும் என்று மன்மோகன்சிங் அரசு அறிவித்தது. இந்த மானியம் படிப்பை முடிக்கும் வரைதான். படிப்பு முடிந்த பிறகு கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும். ஹிந்து மாணவர்களுக்கான ஆண்டு வட்டி விகிதம் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை. ஆனால் சிறுபான்மை மாணவர்களுக்கான ஆண்டு வட்டி விகிதம் 3 சதவீதம் மட்டுமே.

loans4. புதிதாக வியாபாரத்தையோ அல்லது தொழிலையோ தொடங்க வர்த்தக வங்கிகளிலிருந்து ஹிந்து இளைஞர்கள் பெறுகின்ற கடன் தொகைக்கு வருடாந்திர வட்டியாக 15 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை கட்டவேண்டும். இதற்காக ஹிந்து இளைஞர்கள் ஆரம்ப தொகையாக திட்ட செலவில் 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை திரட்டிக்கொள்ளவேண்டும். எஞ்சிய தொகை மட்டும்தான் வங்கியால் அளிக்கப்படும். ஆனால் சிறுபான்மை இளைஞர்கள் ஆரம்பத் தொகையாக திட்ட செலவில் 5 சதவீதம் கட்டினால் போதுமானது. 35 சதவீதம் தொகையை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் செலுத்திவிடும். அதற்கு ஆண்டு வட்டி 3 சதவீதம் மட்டுமே. வர்த்தக வங்கிகள் சிறுபான்மையினரிடம் வசூலிக்கும் வட்டி விகிதம் ஹிந்துக்களின் வட்டிவிகிதத்தைவிட 2 சதவீதம் குறைவே.

2007, மார்ச் 13ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் கடன் வழங்கப்பட்டுள்ள விவரம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்தார். முதன்மை துறைக்கு வழங்கப்பட்டுள்ள கடன், சிறுபான்மையினருக்கு 33 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2006ல் மார்ச் 31ன் படி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் ரூ. 45,490 கோடி. இது 2004ம் ஆண்டு மே மாதம் ரூ. 34,654 கோடியாக இருந்தது.

இதில் பொதிந்துள்ள விஷயம் என்ன? ஹிந்து வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பது சிரமம் என்பதுதான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வங்கிகளில் ஹிந்துக்களுக்கு வஞ்சனை செய்யப்படுகிறது. ஹிந்துக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களுக்கே வஞ்சகம் செய்து வருகிறார்கள், காங்கிரஸ் கட்சியினரும் அவர்களோடு தோழமை கொண்டுள்ள கட்சியினரும்.

5. மன்மோகன்சிங் அரசு, ஐ. ஐ.என்., ஐ.ஐ.டி. போன்ற இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள 70 கல்வி நிறுவனங்களில் ஹிந்து மாணவர்கள் பயிலவேண்டுமானால் அவர்கள் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தியாக வேண்டும். அவர்கள் இடதுசாரி மாணவர்களாக இருந்தாலும் சரி வலதுசாரி மாணவர்களாக இருந்தாலும் சரி. வட இந்தியர்களாக இருந்தாலும் சரி, தென் இந்தியர்களாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் மாணவர்களாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டு மாணவர்களாக இருந்தாலும் சரி. இதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசே கல்வி கட்டணத்தைக் கட்டிவிடும்.

அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பல முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர சிறுபான்மை சமூக மாணவர்கள் முன்வந்தால் அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும். ஆனால் ஹிந்து மாணவர்கள் அவர்களுக்கான கட்டணத்தை அவர்களேதான் செலுத்தவேண்டும். இது பற்றிய விவரங்களை www.minorityaffairs.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.

fees-exemption-for-minoritiesசிறுபான்மை சமூக மாணவர்களுக்கு தொடக்கம் முதல் மேல்பட்டப்படிப்பு வரை பல்வேறு நிலைகளிலும் சலுகைகள் வாரிவழங்கப்பட்டு வருகின்றன. 50 சதவீததிற்கும் குறையாத மதிப்பெண் எடுத்தால் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்பதாக சலுகை அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தச் சலுகை ஹிந்து மாணவர்களுக்கு கிடையாது. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்கள் இவ்வாறெல்லாம் அநீதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இவர்கள் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றால்தான் கல்வி உதவித் தொகையை எதிர்பார்க்கமுடியும். ஆனால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இதைவிட குறைந்த மதிப்பெண் பெற்றாலும் கல்வி உதவித் தொகை பெறமுடிகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்கள் 6ஆம் வகுப்பிலிருந்துதான் கல்வி உதவித் தொகை பெறுகிறார்கள். ஆனால் சிறுபான்மையினர் முதலாம் வகுப்பிலிருந்தே கல்வி உதவித் தொகை பெறமுடிகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்கள் 6ஆம் வகுப்பிலிருந்துதான் கல்வி உதவித் தொகை பெறுகிறார்கள். ஆனால் சிறுபான்மையினர் முதலாம் வகுப்பிலிருந்தே கல்வி உதவித்தொகை பெற ஆரம்பித்து விடுகிறார்கள்.

6. இப்போது நான் குறிப்பிடுவது பல ஹிந்துக்களுக்கு பெரும் அதிசயமாக, ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய அரசில் பல பணிகள் உள்ளன. இவற்றை வகிப்பவர்களுக்கு ஹிந்துக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்துதான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு விசாலமான மனப்பான்மை உடையவராக இருந்தாலும் சரி, அல்லது மார்க்சிஸ்டாக இருந்தாலும் சரி இந்தப் பதவிகளுக்கு ஹிந்துக்கள் வரவே முடியாது. ஹிந்துக்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள். தேசிய மற்றும் பிராந்திய சிறுபான்மையினர் ஆணையம் டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர், இதேபோல இன்னும் ஏராளமான கல்வி நிறுவனங்களில் தலைமைப் பதவிகள் இந்தியா முழுவதும் இதைப்போல பல்லாயிரம் பதவிகள் உள்ளன.

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் மூன்றாவது விதியின்படி ஓர் ஹிந்து அதன் தலைவராக வரமுடியாது. 7 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 5 உறுப்பினர்கள் (தலைவரையும் சேர்த்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட சட்டத்தை கொண்டுவந்தது, நரசிம்மராவ் அரசாகும்.)

தேசிய சிறுபான்மை கல்வி ஆணையத்தின் நான்காவது விதியின்படி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதன் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் இருக்கமுடியும் என்று 2004 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் அரசு சட்டம் கொண்டுவந்தது. இதன்படி ஹிந்துக்கள் யாரும் இந்த ஆணையத்தில் அங்கம் வகிக்கவே முடியாது.

சச்சார் கமிட்டியிலும் சரி, ரங்கநாத் கமிஷனிலும் சரி ஹிந்துக்களின் பிரதிநிதிகள் மிகவும் குறைவு. அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. 2006 மார்ச் 10 ம் தேதி மக்களவையில் தேசிய சிறுபான்மையினர் கல்வி ஆணையத் திருத்தம் கொண்டுவரப்பட்டது இது 2004ல் வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். மதச் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் தொடங்குவது தொடர்பாக விண்ணப்பம் அளித்தால் மாநில அரசுகள் அதைப் பரிசீலித்து 90 நாட்களுக்குள் தடையின்மை சான்றிதழை வழங்கவேண்டும். அல்லது தடைவிதித்தால் எதன் அடிப்படையில் தடைவிதிக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்கவேண்டும் என்பது தான் திருத்தத்தின் சாராம்சமாகும். பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் இது தொடர்பாக ஆணையத்தை அணுகி நிவாரணம் கோரமுடியும். இதன் அடிப்படையில் ஆணையம் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுக்கும். ஹிந்துக்கள் முற்றிலுமாக இதிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர். மதச்சார்பின்மையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் இடம் கிடையாது. மார்க்சிஸ்டுகளுக்கும் இடம் கிடையாது. ஹிந்து என்றாலே மொத்தத்தில் இடம் கிடையாது. 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றதில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஹிந்துக்களுக்கு அநீதி இழைத்துவிட்டது. 90 நாட்களுக்குள் தடையின்மை சான்றிதழ் வழங்கப்படாவிட்டால் அல்லது தடை விதிப்பதற்கு காரணம் செல்லப்படாவிட்டால் மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவே அர்த்தமாகும்.

சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் எந்தப் பல்கலைக் கழகத்துடன் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரித்தார்கள், இடதுசாரிகளும் ஆதரித்தார்கள். இதை பாரதிய ஜனதாவும், சிவசேனையும் கடுமையாக விமர்சித்தன. முஸ்லிம் கல்வி நிறுவனம், உதாரணமாக ஜார்க்கண்டில் உள்ள ஜும்ரீத் அலியா என்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனம் எந்த மத்திய பல்கலைக்கழகத்துடனும் தனது விருப்பம் போல தன்னை இணைத்துக் கொள்ளலாம். மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற முடியும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதும் சுலபமாகும். வெளியிடங்களிலும் இதைக் காட்டி உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.

ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹிந்து மாணவரால் அப்படிச் செய்யமுடியாது. அவர் அந்த மாநில பல்கலைக்கழகத்தில்தான் பட்டம்பெற முடியும். அதற்கு மதிப்பும் குறைவு. வெளியிடத்தில் வேலை தேடுவது கடினம். ஹிந்து பெற்றோரின் வாக்குகளைப் பெற்று அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் இதை முன்னின்று நிறைவேற்றினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இந்த நடவடிக்கையின்படி முஸ்லிம் மாணவர்களும் கிறிஸ்தவ மாணவர்களும் உச்சத்தில் உள்ளனர். ஹிந்து மாணவர்கள் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் வாக்களித்த, கிராமங்களில் பரவலாக உள்ள ஹிந்துக்கள் தங்கள் வாரிசுகளின் எதிர்காலத்திற்கு ஊறு ஏற்படுத்திவிட்டார்கள்.

60 களிலிருந்து கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் ஹிந்து இளைஞர்கள் காங்கிரஸ் அரசுகளால் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இதை மன்மோகன்சிங்கின் அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதில் வேதனையான முரண்பாடு என்னவென்றால் பெரும்பாலான ஹிந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளதுதான்.

7. ஹிந்துக்களைத் தாழ்த்தவும் சிறுபான்மையினரை உயர்த்தவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எல்லா தேர்வுக் குழுக்களிலும் சிறுபான்மை உறுப்பினர்களுக்கு இடம் அளித்துள்ளது. பதவிக்கு ஆட்களை எடுக்கும் குழுக்கள் என்றாலும் சரி அல்லது பதவி உயர்வை நிர்ணயம் செய்யும் குழுக்கள் என்றாலும் சரி சிறுபான்மை உறுப்பினர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் பிரதமராக இருந்தபோதே இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. (10.06.1987) அதேபோல வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதும் இதைப்போல மற்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது (16.08.1990)

2007, ஜனவரி மாதம் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை எல்லாத் துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அது மட்டுமல்லாமல் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும், ஓரளவு அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் இதேபோல சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. எல்லா தேர்வுக் குழுக்களிலும், அதாவது 10க்கும் மேற்பட்டோரைத் தேர்ந்தெடுக்கும் குழுக்கள் யாவற்றிலும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பதுதான் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும். அதுமட்டுமல்லாமல் எல்லாப் பணிநியமனங்களிலும் சிறுபான்மையினருக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேலை தேடும் ஹிந்து இளைஞர்களுக்கு இது அபாயகரமான மணியாகும். அவர்கள் வலதுசாரிகளாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி, உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களது நிலைக்கு ஊறு ஏற்பட்டுவிட்டது.

தற்போது எல்லாப் பணிகளிலும் 95 சதவீதத்தினர் ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களுக்கு வஞ்சம் இழைக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஹிந்துக்களின் எண்ணிக்கையை 85 சதவீதம் குறைக்கமுற்பட்டுள்ளது.

ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுலபமாகக் குறைந்த வட்டிக்கு கல்விக் கடன் பெறுகிறார்கள். வர்த்தகக் கடன் பெறுகிறார்கள். ஆனால் ஹிந்து மாணவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 50 சதவீதம் மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்றிருந்தால் கூட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர் கல்வித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற முடிகிறது. ஆனால் 50 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால்கூட ஹிந்து மாணவர்களுக்கு இத்தகைய சலுகைகள் கிடைப்பது அரிதாக உள்ளது.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஹிந்துக்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டு வருகிறார்கள். கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும்போதும் சரி, சேர்க்கப்பட்ட பிறகும் சரி, இந்த இழிநிலை தொடர்கிறது. வேலைவாய்ப்பிலும் இதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அரசு நிறுவனத்திலும் ஹிந்துக்கள் நடத்தும் நிறுவனத்திலும் சிறுபான்மையினருக்கு இத்தகைய அநீதி இழைக்கப்படவில்லை. அவர்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சமநிலைக்கு அதிகமாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்ய தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறுபான்மையினர் தலைமையில் சிறுபான்மை ஆணையங்கள் இயங்கி வருகின்றன.

ஹிந்துக்கள் தங்களது சந்ததியினரின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் வாக்களித்து வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும். காங்கிரஸ் போன்ற ஹிந்துக்களின் வாக்கை வாங்கி ஹிந்துக்களையே வஞ்சிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை என ஹிந்துக்கள் உறுதி பூண்டால்தான் இந்தக் கொடுமையை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.

முற்றும்.

நன்றி: விஜயபாரதம் 26-02-2010 இதழ்