சொல்லப்படாத பறையர் வரலாறு

சில தினங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் அதிக நிலவரிக்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த பறையர் போராட்டத்தை குறித்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனை மறு பகிர்வு செய்தபோது, பறையர்கள் நில உடமையாளர்களாக, நில வரி கட்டுபவர்களாக அந்த காலத்திலேயே இருந்திருந்ததை சுட்டிக் காட்டினேன். பறையர்களின் அக்கால சமூக, பொருளாதார, கல்வி நிலைகள் குறித்து இப்போது கொடுக்கப்படும் சித்திரம் சரியானதும் பூர்ணமானதும் இல்லை என்னும் வாதத்தை நான் பலகாலமாக முன்வைத்து வருகிறேன். இதற்கான சான்றுகள் பலதும் கள ஆய்விலும், ஆவண ஆய்விலும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

The recommended dosage of this medication for this condition is 1,000 mg/d. A total of 9 of the 15 (60.0%) of patients with rheumatoid arthritis who received tofacitinib, 3 of 8 (37.5%) receiving etanercept, 6 of 10 (60.0%) with Albertville etanercept and 1 of 8 (12.5%) receiving adalimumab had das28 scores below 3.2 at the time of study discontinuation (table 1). It has defined the following conditions for inclusion as potentially transmissible or transmittable agents: influenza virus a and b; parvovirus b19; adenovirus; respiratory syncytial virus; severe acute respiratory syndrome coronavirus; severe acute respiratory syndrome coronavirus 2; and respiratory syncytial virus subtype a.

The company released a marketing campaign in may 2014 that stated the drug could help treat chronic fatigue. It is also used in the treatment of osteoporosis, paget's disease of the bone, Eibar purchase clomid and gout, and in the treatment of fibromyalgia. These have become an important drug class in the treatment of heart failure.

Pfizer's activities in the opioid field were very recent and should not be used to justify any other drug company to spend large amounts of money on research that might have the potential to benefit the public. The clomid tablets price best drug for attention deficit hyperactivity disorder (adhd) View this e-card (topix) for a free, instant e-cards on any topic from the topix site.

ஓலைச் சுவடிகளை சேகரிக்கும் போதும், மாந்த்ரீகர்கள் தொடர்பான ஆய்வுகளின் போதும் பறையர்களிடம் ஏராளமான மாந்த்ரீக, வைத்திய சுவடிகள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதுமட்டும் இல்லாமல் இவர்களின் வைத்திய, மாந்த்ரீக திறனை அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தி இருக்கின்றனர்; அதற்கான தக்ஷிணையும் கொடுத்திருக்கின்றனர் என்றும் தெரிந்தது. சிதம்பர பஞ்சாக்ஷர சக்கரம் இவர்களில் ஒரு பிரிவினரிடையே பிரபலமாக இருந்து வந்திருக்கிறது.

மேலும் துபாஷி அனந்தரங்கன் பிள்ளையின் மருமகனான திருவேங்கடம் பிள்ளையின் குறிப்புகளில் ஒரு சம்பவம் ஆவண படுத்தப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் வசித்து வந்த பறையர் சமூகத்தினருக்கும் விஸ்வகர்மா சமூகத்தினருக்கும் இடையே நடந்த விவகாரம் அது. விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த ஒருவர் இறந்து போகிறார். அவருக்கு பாடை கட்டி ஊர்வலமாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்கின்றனர். இதற்கு பறையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இடங்கை ஜாதியினரான விஸ்வகர்மாக்களுக்கு அப்படி விமர்சையாக சடங்குகளை செய்யும் உரிமை இல்லை என்று கூறி அது வலங்கை இனத்தவரான தங்களின் உரிமையில் தலைவஇடுவதாகும் என்றும் வாதிட்டு மூன்று நாட்கள் அந்த பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல விடாமல் தடுக்கின்றனர். பிரெஞ்சு அதிகாரிகள் தலையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் இறந்து போனவரின் உறவினர்கள், வேறு பாதை வழியாக அந்த பிரேதத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். இச்சம்பவத்தை வாசித்த போது பறையர்கள் எல்லா காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாக இருந்ததில்லை என்று எண்ணிக்கொண்டேன். இதே ரீதியிலான ஒரு கருத்து ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஒரு காட்சிச்சித்திரமாக வரும். அதற்காக அவர் பொய்யன் என்று வசைபாடப்பட்டதும் பிறகு இறையியல் கல்லூரி வே.அலெக்ஸ் உடனான நட்பு, அதைத் தொடர்ந்து அவர் முன்வைத்த விஷயங்கள் எல்லாம் ஒரு பக்கம்.

இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்னர் போகன் சங்கர் ஒரு புத்தகத்தை தந்து வாசிக்க சொன்னார். நான் முன்வைத்த பல கருத்துக்களுக்கான தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இப்புத்தகத்தில் இருந்தன. புத்தகத்தின் பெயர்: காலனிய தொடக்கக் காலம் (கி பி 1500-1800). ஜெயசீலன் ஸ்டீபன் என்பவர் எழுதிய ஆங்கில புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து NCBH வெளியிட்டிருக்கின்றனர். நூல் ஆசிரியர் இடதுசாரி நோக்குடன் தான் தமது வாதங்களை முன்வைக்கிறார். ஆனால் நான் அவற்றில் உள்ள வரலாற்று உண்மைகள் /தரவுகளை மட்டும் பிரித்து எடுத்து வேறு ஒரு வகையில் மற்றொரு சித்திரத்தை உருவாக்க விரும்புகிறேன்.

டேனிஷ் மிஷனரி ஆவணங்களில் இருந்து பறையர்கள் பெருமளவில் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இங்கு படை என்பது ஐரோப்பிய படை மட்டும் அல்ல, மராத்திய அரசர்களின் படையும் தான். பறையர்களின் குடியிருப்பு பகுதியை குறித்த சித்திரம் பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கும். அக்கால பாதிரியார்கள் தொடங்கி இன்றய தலித்திய எழுத்தாளர்கள் வரை எதிர்மறை சித்திரத்தையே தந்துள்ளனர். Spatiality என்னும் திறனாய்வு முறையில் இக்குடியிருப்பு பகுதிகள் குறித்த விவரணைகள் மிக்க முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் விஷயம் மோசமாக இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கொடிகட்டி பறக்கவில்லை. தரங்கம்பாடி பாதிரியார் ஒருவர் 1700 களில் பறையர்களது குடியிருப்பு பகுதிகளை இவ்வாறு விவரிக்கிறார்: “பறைச்சேரிகள் தோட்டப்பயிர்களுடன், மரங்கள் வளர்ந்து செழித்து கால்நடைகள் நிரம்பி இருந்தன. இவை சூத்திர கிராமத்தோடு இணைந்தே இருந்தன.பறைசேரியும் சூத்திர கிராமத்தின் பகுதியே” (பக். 20). இந்த வர்ணனையால் நமக்கு தெரியும் விஷயம் என்னவென்றால் சூத்திரர்களான வேளாளர்கள் பறையர்கள் மீது எந்த வித தீண்டாமையும் அக்காலத்தில் அவ்விடத்தில் கொள்ளவில்லை என்பது தான். அதாவது அக்காலத்தில் அவ்விடத்தில் பறையர்கள் “கீழ்” ஜாதியினராக கருதப்படவில்லை. அவர்களும் ஹிந்து சமூகத்தின் ஒரு பகுதியாக சூத்திரர்களில் ஒரு பிரிவினராக கருத்தப்பட்டிருக்கக்கூடும்.

1786: தரங்கம்பாடி பறையர்களில் விவசாய ஊழியர்களாக இருந்தவர்கள் கூலியை பணமாக பெற்றுக்கொள்ள முடியாது எனவும் நெல்லாகத்தான் வேண்டும் என்று கேட்டும் போராடி ,அப்போராட்டத்தில் வெற்றி பெறவும் செய்திருக்கின்றனர். இது பறையர்களின் நுண்ணறிவிற்கு ஒரு சான்று. பணமாக பெற்றால் விலைவாசி பிரச்சனையால் தங்கள் உழைப்பு வீணாகிவிடும் என்று உணர்ந்து தானியமாக பெற்றுள்ளனர். தானியம் இருந்தால் பஞ்சமோ மழையோ வந்தால் கூட பிரச்சனை இல்லை. மேலும் ஊதியத்திற்காக /கூலிக்காக போராடும் அளவிற்கு அவர்கள் சுதந்திரர்களாகவும் ஒருங்கிணைப்பு உள்ளவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு.

1729: தஞ்சை துக்காஜியின் படையில் முக்கிய தளபதியாக பறையர்களின் தலைவரான ராய நாயக்கன் இருந்துள்ளார். இவரது சகோதரர் கல்லு நாயக்கன் கிறிஸ்தவத்திற்கு மாறியவர் என்பதால் இவரை குறித்த தகவல்கள் பாதிரியார்கள் குறிப்பில் கிடைக்கின்றன. ராய நாயக்கன் மீது பொறாமை கொண்ட அவரது உறவினர்களே பொய் புகார்களை அனுப்பியதும் அவை விசாரிக்கப்பட்டதும் எல்லாம் ஆவணத்தில் வருகிறது. பறையர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தளபதியாக இருந்துள்ளார். தவிர நாயக்க விகுதியை அவர் தனது பெயரோடு இணைத்துள்ளார். நாயக்க என்னும் விகுதி போர்குடியினரில் ஜாதிகளை கடந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்று. கேரளாவில் நாயர், குறுப்பு போன்றவை ஒருகாலத்தில் இதே போல பயன்படுத்தப்பட்டன.

1717: பறையர் இனப்பெண் ஒருவர் மதராஸில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார். இதனை தொடர்ந்து மதராஸில் பெருங்கலவரம் வெடிக்கிறது. பறையர்களுடன் சேர்ந்து வலங்கை ஜாதியினர் அனைவரும் நகரையே சூறையாடுகின்றனர் (பக். 31). குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட பிறகு தான் கலவரம் அடங்குகிறது.

அதே போல சில ஆங்கில சிப்பாய்களால் பறையர் பெண்களுக்கு தொல்லை வந்த போதும் அவர்கள் பலத்த பதிலடியை கொடுக்கின்றனர்.

1759: தரங்கம்பாடியில் வேறொரு போராட்டம் நடக்கிறது. தங்கள் திருமணத்தில் திருமண பந்தல் இடுவது போன்ற வலங்கை பிரிவினருக்கான சில உரிமைகளை இடங்கையினர் செய்ய முயல்கின்றனர் என்று கூறி அனைத்து வலங்கையினரும் கடும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் முன்னணி வகிப்பவர்கள் பறையர்கள். போராட்டம் வெற்றியும் பெறுகிறது.

1767: நவம்பர் 14 அன்று தஞ்சை நகரில் உள்ள இடங்கையினர் அனைவரும் வலங்கையினரது கொடுமை தாங்காமல் வெளியேறுகின்றனர். இவர்களை தஞ்சை அரசர் சமாதான படுத்தி நகருக்குள் திருப்பி அழைக்கிறார். அவ்வாறு திரும்பி வருபவர்களின் பாதுகாப்பிற்காக 100 காலாட்படை மற்றும் 50 குதிரைப்படை வீரர்களை அனுப்புகிறார். ஆனால் ஆயிரக்கணக்கான குத்தீட்டி தாங்கிய பறையர்கள் இந்த இடங்கை குழுவினர் மீது பாய்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். காலாட்படை வீரர்கள் வலங்கையினர் என்பதால் தங்களது சக வலங்கை ஜாதியினரான பறையர்களின் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த தாக்குதலில் 70 இடங்கை ஜாதியினர் கொல்லப்படுகின்றனர். பலர் முதலைகளுக்கு இரையாக வீசப்படுகின்றனர். குதிரைப்படை வீரர்கள் இஸ்லாமியர்கள். அவர்களும் இதில் தலையிடவில்லை. விஷயம் அறிந்து கடும் கோபம் கொண்ட அரசர் கடமை தவறிய 100 காலாட்படை வீரர்களையும் சுட்டு தள்ளுகிறார். அரச கோபத்தை ஊகித்த பறையர்கள் கூட்டத்தோடு தலைமறைவு ஆகிவிடுகின்றனர். அரசரின் தளபதியான ராய நாயக்கன் இதில் பங்கு பெறவில்லை. இருப்பினும் நிலவரம் சரி இல்லை என்பதால் அவர் நாஞ்சிக்கோட்டை என்னும் கள்ளர் ஊரில் தஞ்சம் அடைகிறார். நவம்பர் 19ம் தேதி அவரது இருப்பிடத்தை மன்னர் அறிகிறார் . பலமுறை தம் முன் ஆஜராக மன்னர் உத்தரவிட்டும் ஆஜராக ராய நாயக்கன் மறுக்கிறார். பொன்னும் பொருளும் பறையர் ஜாதி தலைவர் பதவியும் கொடுத்து அவரை தாஜா செய்ய அரசர் முயன்றும் எதுவும் நடக்கவில்லை. நவம்பர் 30 அன்று அவர் தஞ்சையை விட்டு வெளியேறி தரங்கம்பாடியில் குடியேறுகிறார் (பக். 44).

இந்த விவகாரம் பறையர்கள் ஆயுதம் தாங்கிய குடிகளாக இருந்தனர் என்பதை தெளிவு படுத்துகிறது. மேலும் மற்ற பல ஜாதியினர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு துணிந்தே இருந்தனர் என்பதும் தெளிவு. தஞ்சை மராத்தியரும் இவர்களை ஒரே அடியாக பகைக்க முடியவில்லை. கள்ளர்களுடன் நல்ல உறவு இருந்ததினால் தான் அங்கு சென்று தஞ்சம் அடைய முடிந்தது.

நான் மேலே கூறியவை அனைத்தும் பறையர்கள் தொடர்பான பொது சித்திரத்திற்கு நேர் மாறானது. மேற்கூறிய புத்தகத்தில் கூட பொது சித்திரமே பலமாக வரையப்பட்டுள்ளது. ஆனால் நுட்பமாக வரிகளுக்கு இடையே வாசித்தால் பறையர் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் மோசமாக நடத்தப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தவிர அவர்கள் தனிச்சிறப்பும் மதிப்பும் மிகுந்த ஒரு தொல் குடியாக இருப்பதையும் அறியலாம். இடங்கை ஜாதிகளின் மீது அடக்குமுறை செலுத்தும் அளவிற்கு இருந்துள்ளனர். இந்த சித்திரம் பாடப்புத்தகங்களில் ஆய்வு நூல்களிலும் எளிதில் கிட்டாத ஒன்று. பறையர்கள் சில இடங்களில் சில நேரங்களில் கொடுமைப்படுத்தபட்டனர் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர்கள் வேறு சில இடங்களில் விவசாய குடிகளாகவும் போர்குடிகளாகவும் கோலோச்சினார் என்பது. அவர்கள் பெருமையை கூறாமல் அவர்கள் அனுபவித்த கொடுமையை மட்டும் கூறுவது மன ரீதியாக அவர்களை வலிமை இழக்க செய்து தாழ்வு உணர்ச்சியை உருவாக்குவதற்கான தந்திரம். அதனை முறியடிக்க வேண்டும்.

இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது. மேற்படி சம்பவங்கள் நடந்த போதெல்லாம் பறையர்கள் ஹிந்துக்களாகவே இருந்துள்ளனர். அவர் பூர்வ பவுத்தர்களாக இருந்த போது தான் அவர்களுக்கு சிறப்பு இருந்தது என்னும் வாதம் இங்கு அடிபடுகிறது. மிஷனரிகள் தான் அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றினர் என்பது அர்த்தமற்று போகிறது. பறையர்களுக்கான சைவ மடங்கள், தந்திரி பறையர்கள் குறித்தெல்லாம் நண்பர்களிடம் விசாரித்து வேறொரு கட்டுரையாக எழுதும் எண்ணம் உள்ளது.

ஒரு விதத்தில் பார்த்தால் தமிழகத்தில் உள்ள ஜாதி பிரச்சனைகளின் அடி வேர் வலங்கை எதிர் இடங்கை என்பதில் தான் இருக்கிறதே தவிர வர்ண முறையில் அல்ல.

இதே போல தேவேந்திர குல வேளாளர்களை குறித்தும் அருந்ததியினரை குறித்தும் வெளியில் வராத சில தகவல்கள் சேகரித்து வைத்துள்ளேன். அதையும் எழுதுவேன்.

*****

புருஷ சூக்தம்

ரிக்வேத சிருஷ்டி கீதங்கள் குறித்த தொடரின் இரண்டாவது பகுதி

<< முந்தைய பகுதி

புருஷ சூக்தம்
(ரிக். பத்தாவது மண்டலம், 90வது சூக்தம்)

ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன்
ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்
புவியெங்கும் பரந்து
நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.  (1)

இவை அனைத்தும் புருஷனே
முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்
அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன்
பருவுலகு கடந்தோன். (2)

ஈதனைத்தும் அவனது மகிமையே
இதனினும் பெரியோன் புருஷன்
தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்
அழிவற்றது முக்கால் பாகம்
அதுவே ஒளியுலகு. (3)

மேற்சென்றனன் முக்கால் பாகத்துப் புருஷன்
அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும் இங்கு
திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்
அசையும் அசையாப் பொருளனைத்திலும். (4)

அவனிடத்தினின்று விராட் பிறந்தது
விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன்
பிறந்தவன் முன்னும் பின்னுமாய்
புவியெங்கும் நிறைந்தான். (5)

புருஷனே ஆகுதியாக
வேள்வி செய்தனர் தேவர்கள்
வசந்தம் நெய்யாக
கோடை விறகாக
சரத்காலம் அவியுணவாக
ஒரு வேள்வி. (6)

ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்
அவன் மீது நீர் தெளித்தனர்
நேர்வழியினர் ரிஷிகள் கூடி
வேட்டனர் தேவர்கள். (7)

அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று திரண்டது நெய்கலந்த ஊண்.
உருவாகின
காற்றால் ஆன உயிர்கள்
வனமிருகங்கள்
கிராமத்து விலங்குகள். (8)

அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று பிறந்தன ரிக்குகள் சாமகீதங்கள்
பிறந்தன சந்தங்கள்
பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)

அதனின்று பிறந்தன பரிகள்
இருவரிசைப் பல் மிருகங்கள்
அதனின்று பிறந்தன பசுக்கள்
வெள்ளாடுகள் செம்மறிகள். (10)

புருஷனை வகிர்ந்த போது
கற்பித்தது எவ்வடிவில்?
முகம் எது கை எது?
தொடை எது கால் எது? (11)

பிராமணன் முகமானான்
கைகள் அரசன்
தொடைகள் வைசியன்
பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)

மனத்தினின்று சந்திரன் பிறந்தான்
விழிகளில் கதிரோன்
முகத்தில் இந்திரன் அக்னி
மூச்சில் பிறந்தது காற்று. (13)

கொப்பூழில் உதித்தது விண்வெளி
சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்
பாதங்களினின்று பூமி
செவிகளினின்று திசைகள்
அவ்வாறே உருவெடுத்தன
உலகங்கள் அனைத்தும். (14)

ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி
மூவேழு சமித்துக்கள் கொண்டு
வேள்வி சமைக்கும் தேவர்கள்
புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)

வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்
அவையே முதல் தர்மங்கள் ஆயின.
முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்
மேன்மை உலகடைவர்
அந்த (தர்மவழிச் செல்லும்) பெரியோர். (16)

*******

purusha-sukta-1வேத சம்ஹிதைகளின் மிகப் பிரபலமான மந்திரங்களில் ஒன்று புருஷ சூக்தம் எனலாம். எல்லா வைதீக சடங்குகளிலும், வேள்விகளிலும், வழிபாடுகளிலும், பூஜைகளிலும் ஓதப் பெறும் ஒரு சூக்தம் இது. முதன்முதலில் ரிக்வேத சம்ஹிதையில் தோன்றும் இந்த சூக்தத்தின் மந்திரங்கள் சில இணைப்புகளுடன் யஜுர், சாம, அதர்வ வேதங்களிலும், சில உபநிஷதங்களிலும் மீண்டும் மீண்டும் வருகின்றன. அனைத்திலும் ஊடுருவி நிற்கும் பரம்பொருளை புருஷன் என்ற பெயரால் சுட்டி, அந்தப் பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்த சூக்தம். பிரார்த்தனை, சடங்கு, தத்துவம் என்ற மூன்று அம்சங்களையும் கொண்டு தன்னளவில் ஒரு முழுமையான சாஸ்திரமாகவே புருஷ சூக்தம் அமைந்துள்ளது எனலாம்.

புருஷன் என்ற சொல்லில் இருந்தே தொடங்கலாம்.

முன் செல்பவன் புருஷன் (புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன் புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன் புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன் புருஷன் (புரு+ஷ:)

இவ்வாறு இந்தச் சொல்லுக்கு வேத அகராதிகள் மற்றும் பிராமணங்களின் துணை கொண்டு பல்வேறு அர்த்தங்கள் தரலாம்.

முடிவின்மை:

“ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்” என்ற வாசகம் ஆயிரம் என்ற எண்ணிக்கையை அல்ல, அளவிட முடியாமையை, அனந்தத்தைக் குறிக்கிறது. புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான் என்பது கருத்து. உபநிஷதமும், புருஷனே எல்லா உயிர்களின் முகமும் (விஸ்வதோமுக:) என்று கூறுகிறது.

தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே

என்று நம்மாழ்வாரும் இந்த அனந்த ரூபத்தைத் தான் பாடுகிறார்.

வட இந்தியாவில் ஆயிரம் கரங்கள் கொண்ட காளி கோயில்கள் உண்டு. காளியின் சிலாரூபம் அமைந்துள்ள பாறை முழுவதும் கரங்களாகவே செதுக்கியிருப்பார்கள். ஆயிரங்காத்தம்மன் என்று தமிழகத்திலும் அம்மனுக்குப் பெயர் உண்டு. அந்தத் திருவுருவங்களை நாம் பார்க்கும் போதும், வழிபடும் போதும் எல்லாம், அனந்தமான பரம்பொருளையே தியானிக்கிறோம். தாவோயிசம் என்ற பழம்பெரும் சீன சமய மரபில் Guyan Yin என்ற தேவி குறிப்பிடப் படுகிறாள். ஆயிரம் சுடர்க்கரங்கள் கொண்டு இந்த தேவியை சித்தரிக்கும் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம். அற்புதமும் தெய்வீகமும் ததும்பும் அழகிய நடனம்!

“நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்” என்பதன் பொருள் பூமி முழுவதிலும் ஊடுருவி நின்றாலும், அதனுள் கட்டுப் படாதவன் புருஷன் என்பதாம். ”தசா’ங்குலம்” என்பது மூலச் சொல். இதனை நேரடியாக “நிற்கிறான் பத்து அங்குலத்துக்குள்” என்று மொழிபெயர்த்து, பத்து அங்குலம் அளவேயுள்ள மனித இதயத்திலும் புருஷன் உறைகிறான் என்று அர்த்தமளிக்கும் உரைகள் உண்டு. பெரிதினும் பெரிதாகவும், சிறிதினும் சிறிதாகவும் உள்ளது பரம்பொருள் என்ற கருத்திற்கு அது இட்டுச் செல்லும்.

galaxy_m31_spyral_galaxyபேரியற்கை:

அடுத்து வரும் மந்திரங்களில் ”இவை அனைத்தும்” என்பது வெளிப்பட்டு நிற்கும் பிரபஞ்சத்தை (manifested universe) குறிக்கிறது. அது புருஷனின் ஒரு சிறு பகுதி, கால் பாகம் மட்டுமே. ”முக்கால் பகுதி விண்ணில் உறைகிறது” என்பதன் பொருள் நமக்கு வெளிப்பட்டு நிற்கும் இயற்கையை விடவும், வெளிப்படாது நிற்கும் பேரியற்கை மிகப் பெரியது என்பதாம். நாம் வசிக்கும் பூமி போல, அது அமைந்துள்ள சூரியக் குடும்பம் போல, அந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வீதி போல, அந்தப் பால்வீதி சுழல்கின்ற பிரபஞ்சம் (universe) போல, ஏராளமான கிரகங்களும் சூரியக் குடும்பங்களும், பால்வீதிகளும், பிரபஞ்சங்களும் கொண்டது பேரியற்கை. நவீன அண்டவியல் (cosmology) கூறும் இந்த பிரம்மாண்டத்தின் அதிசயத்தையே கவித்துவ மொழியில் இந்த மந்திரமும் கூறுகிறது.

”புருஷனிடமிருந்து ‘விராட்’ தோன்றினான்; பின்னர் ’விராட்’டிலிருந்து பல்லுயிர்களாக புருஷன் தோன்றினான்” என்கிறது அடுத்த மந்திரம். இங்கு முதலில் கூறப்பட்ட புருஷன் என்பது வெளிப்படாத பேரியற்கை (அவ்யக்தம்). இரண்டாவதாகக் கூறப்பட்டது வெளிப்பட்ட இயற்கை (வ்யக்தம்). விராட் என்பது இந்த வெளிப்பாட்டிற்கான சாதனம் அல்லது சக்தி. பிற்காலத்தில். சாங்கிய தரிசனத்தின் ஆதாரமாக விளங்கப் போகும் பிரகிருதி-புருஷ தத்துவத்தின் விதைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம். இதுவே சைவ மரபில் பின்னர் சிவ-சக்தி தத்துவமாக மலர்கிறது. வேத சொற்பொருள் விளக்கங்களில் “விராட்” என்பது பெண்பாற் சொல்லாகக் கொள்ளப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிரபஞ்ச வேள்வி:

அடுத்து வரும் மந்திரங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை ஒரு மகத்தான வேள்வியாக உருவகம் செய்கின்றன. அக்னி, நெய், சமித்துக்கள், அவி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்தப் படுபவை வேள்விச் சடங்குகள். இச்சடங்குகள் இயற்கை இடர்களிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்கவும், லௌகீக தேவைகளை நிறைவேற்றவும் தெய்வங்களை வேண்டும் ஒரு பழங்குடித் தன்மை கொண்ட பிரார்த்தனைகள் மட்டுமே என்பதாக நவீனத்துவ அடிப்படையில் பல இந்தியவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள். ஆனால், வேத ரிஷிகள் அத்துடன் நின்றுவிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தச் சடங்கு உடனடியாக ஒரு பிரபஞ்சம் அளாவிய குறியீடாக மாறுகிறது. அந்த கணத்தில் அங்கு ஒரு மகத்தான தத்துவப் பாய்ச்சல் நிகழ்கிறது.

யக்ஞம் என்பது sacrifice என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, பின்னர் அந்தச் சொல் மூலமாகவே எல்லா வேத மொழியாக்கங்களிலும் பொருள் கொள்ளப் பட்டது. இது மூலச் சொல்லின் ஒரு அம்சத்தைக் குறிக்கின்றதே அன்றி அதன் முழுமையை அல்ல. அடிப்படையில் யக்ஞம் என்பது வஸ்துக்களை ஒன்றிலிருந்து வேறொன்றாக மாற்றும் ஒரு செயல்பாடாகும். பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச் செயல்பாடு யக்ஞம். இந்தக் கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம் காண்கிறோம் –

”முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும். இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.”

தொடக்கத்தில் புருஷன் ஒருவரே இருக்கிறார். இந்த ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி. அதை நிகழ்த்துவது காலம். எனவே, காலத்தின் மூன்று பரிமாணங்களான வசந்தம், கோடை, சரத்ருது ஆகியவை முறையே நெய், விறகு, அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக மந்திரம் கூறுகிறது. வேத அழகியலின் படி இந்த மூன்று பருவகாலங்களும் முறையே இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சிருஷ்டி:

புருஷ சூக்தத்தில் இரண்டு வகை சிருஷ்டிகள் கூறப் படுவதாக புராதன வேத உரையாளர் சாயணர் விளக்குகிறார் – பூர்வ சிருஷ்டி (முதல் படைப்பு) மற்றும் உத்தர சிருஷ்டி (அடுத்த படைப்பு). பூர்வ சிருஷ்டியில் புருஷன் பிரபஞ்சமாகவும், அதில் உள்ள உயிர்களாகவும் வெளிப்படுகிறார். இது 4-5 மந்திரங்களில் கூறப் பட்டது. உத்தர சிருஷ்டியில் அந்த உயிர்களின் வாழ்க்கைக்கான உணவு முதலிய தேவைகளாகவும், சாதனங்களாகவும், அந்த உயிர்களின் செயல்களாகவும் எல்லாம் புருஷனே ஆகிறார். 6ம் மந்திரத்திலிருந்து உத்தர சிருஷ்டி விளக்கப் படுகிறது.

image5vishwarupa”ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்” என்னும் ஏழாம் மந்திரம் புருஷனையே வேள்வியாக உருவகிக்கிறது. ”நேர்வழியினர்” என்பது ஸாத்யர்கள் எனப்படும் ஆதி தேவர்களைக் குறிக்கும்.
இந்த மந்திரங்கள் சிருஷ்டியின் கூறுகளை சம்பிரதாயமாக விரிவாக வர்ணிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எல்லா இயற்கைக் கூறுகளையும், மிருகங்களையும், பறவைகளையும் தேவர்களையும் மனிதர்களையும் ஒவ்வொன்றாகப் படைத்தார் என்று பட்டியலிடுவது போல இதில் வரவில்லை. ஒரு தேர்ந்த ஓவியன் தூரிகைகளால் அங்கங்கு சில அர்த்தமுள்ள கோடுகளை மட்டும் தீற்றிச் செல்வது போல சிருஷ்டியைக் கூறிச் செல்கின்றன இந்த மந்திரங்கள்.

இதில் மிருகங்களைக் குறிக்க வரும் “பசூ’ன்” என்ற சொல்லுக்கு ஞானம் என்றும் பொருள் கொள்வர். பரிகள் (அச்’வா:), பசுக்கள் (காவ:) ஆடுகள் (அஜாவய:) ஆகிய சொற்களுக்கு குறியீட்டு ரீதியாக பொருள் கூறும் விளக்கங்களும் உண்டு.

இந்திய மெய்ஞான, தாந்திரீக மரபுகளில் “வாக்கு” என்பது சிருஷ்டிக்கும் சக்தியாகவே கருதப் படுகிறது. பீஜாட்சரங்கள், மந்திரங்கள், உச்சாடனங்கள் ஆகியவற்றில் சிருஷ்டியின் அளவற்ற சக்தி ரகசியமாக உறைந்துள்ளதாகவும் (குஹாஹிதம்) இம்மரபுகள் கருதுகின்றன. சப்த பிரம்மம் அல்லது வாக்கு சிருஷ்டியின் முதல் வெளிப்பாடு என்பதையே ”ரிக், யஜுர், சாம வேதங்களும், சந்தஸ் எனப்படும் கவிதை வடிவங்களும் பிரபஞ்ச வேள்வியிலிருந்தே தோன்றின” என்ற பாடல் உரைக்கிறது. மிருகங்களுக்கு அடுத்தபடியாக உடனே மந்திரங்களும் சந்தங்களும் கூறப்படுவது பருண்மையிலிருந்து நுண்மையை நோக்கிய நகர்வைக் காட்டுகிறது.

பிரபஞ்சமும் மனித உடலும்:

அடுத்துள்ள மந்திரங்கள் பிரபஞ்சத்தை புருஷனின் உடலாகப் போற்றிப் பாடுகின்றன. சந்திரனை மனத்துடனும், சூரியனைக் கண்களுடனும், முகத்தை இந்திரன் – அக்னியுடனும், காற்றை மூச்சுடனும் தொடர்புறுத்தும் கவிதை உருவகங்கள் ஆழமானவை.

vishnu-lakshmi2முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல். இதையே மேலும் விரித்து, விஷ்ணு நாபியிலிருந்து மலர்ந்தெழும் தாமரையில் அமர்ந்து படைப்புக் கடவுளான பிரமன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்குவதாக பிற்காலத்திய புராணங்கள் அற்புதமான கலைநயத்துடன் விவரிக்கின்றன.

“குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார்”

என்று ஆண்டாள் சிலிர்ப்புடன் பாடுகிறாள். உடலியல் ரீதியாக, தாயின் கருவில் இருந்து உதிக்கும் ஒவ்வொரு உயிரின் சிருஷ்டியும் தொப்புள் கொடி வழியாகவே நிகழ்கிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

பிரபஞ்ச சிருஷ்டியை மனித உடலாக உருவகித்து இந்தப் பழங்கவிதை பாடுவதில் உள்ள நுட்பம் கவனத்துக்குரியது. உலகில் எல்லா கலாசாரங்களிலும் கவிதைகள் எழுதப் படுகின்றன. அவை முற்றிலும் வேறு வேறான கவிஞர்களால், முற்றிலும் வேறு வேறான இயற்கைச் சூழல்களில், சமூக சூழல்களில் எழுதப் பட்டாலும், இவை அனைத்தையும் தாண்டி நல்ல கவிதைகள் பொதுவாக புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் படுகின்றன. இது எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ஜெயமோகன் சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதில் அவர் கூறுகிறார் –

”சர்வதேச அளவில், மானுடப் பொதுவாக, கவிமொழியைத் தீர்மானிக்கும் பொது அம்சம் என்ன? மானுட உடல்தான் என்று எனக்குப் படுகிறது. மனித மொழியைத் தீர்மானிப்பதில் உடலுக்குள்ள இடம் மிக முக்கியமானது. உடலின் வடிவம் மூலமே பிரபஞ்சம் அளக்கப்படுகிறது. உடலின் அறிதல் மூலமே பிரபஞ்ச இயல்புகள் அடையாளப் படுத்தப் படுகின்றன. உடலினூடாக அன்றி தூலப் பிரபஞ்சத்தை அணுகுவது சாத்தியமல்ல என்பதால் உடலையே நாம் பிரபஞ்சமாக அறிகிறோம் என்றால் அது வியப்பில்லை.”

ஜெயமோகன் இங்கு கண்டடையும் இந்தக் கவி தரிசனம், வரலாறு புகமுடியாத தொல்பழங்காலத்தில் இந்த மண்ணில் காலூன்றி நின்று வேத ரிஷிகள் பாடிய மகத்தான கவிதைகளின் எதிரொலியே ஆகும்.

இந்த தரிசனத்திலிருந்து தான், இந்து மதத்தில் உருவ வழிபாடு என்பது உருக் கொள்கிறது. மனிதன் தன் உடல் மூலமாகவே பிரபஞ்சத்தை அறியமுடியும்,. அதனால் தான், பிரபஞ்ச வடிவான இறைவனை மனித வடிவிலோ அல்லது மனித –மிருக –இயற்கை சார்ந்த வடிவங்களிலோ பிரதிஷ்டை செய்தார்கள். தெய்வங்களின் உறைவிடங்களான கோயில்களையும் மனித உடலின் குறியீடாகவே அமைத்தார்கள். இந்த வகையில் தியானிப்பதும் வணங்குவதும் மனிதனை தளைபட்ட அறிதலில் இருந்து தளையற்ற பிரபஞ்ச அறிதலை நோக்கி இட்டுச் செல்லும் என்று நமது ரிஷிகள் கருதினார்கள்.

நால்வகை மக்கள்:

”பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்” என்ற மந்திரம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்து எதிர்ப்பாளர்கள் வேத காலத்திலேயே சாதி வேறுபாடுகளும், அடக்குமுறைகளும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த மந்திரம் உள்ளது என்று கூறி இதனைக் கட்டுடைக்கின்றனர்.

varnasrama_dalit_casteஆனால் முழுமையாக இந்த சூக்தத்தையும், ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தையும் கற்பவர்கள் அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்பவை உணர்வார்கள். நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின் அங்கங்கள் என்றால் அதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்களும் தெய்வத் தன்மை கொண்டவை. இதில் ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும், விராட் புருஷன் குறைபட்டவனாக, ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான் என்பதே பொருள். விராட் புருஷனின் கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை. ஏனென்றால் இதே சூக்தத்தில் இன்னொரு மந்திரத்தில் “பாதங்களினின்று பூமி தோன்றியது” என்று வருகிறது. அந்த பூமியை வேதம் வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக அன்னையாகத் தான் கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக அல்ல.

நான்கு வர்ணங்கள் இருந்ததற்கான சான்று இந்த மந்திரத்தில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பிற்காலத்தில் வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது.

ரிக்வேதத்தில் வைகறையின் தேவியான உஷையைக் குறித்த சூக்தம் (1.113) கூறுகிறது –

வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.

யஜுர்வேதம் (தைத்திரிய சம்ஹிதை 5.7.6.6) கூறுகிறது –

பிராமணர்களுக்கு நல்லொளி தருக
அரசர்க்கு நல்லொளி தருக
வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும்
நல்லொளி அளித்திடுக.

சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது –

நலம் தரும் இம்மந்திரங்களை
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.

வேதகால வர்ண அமைப்பு மூன்று காலகட்டங்களைக் கடந்து, அதற்குப் பின்னர் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் குறிப்பிடப் படும் வர்ண அமைப்பாக மாறியுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கருதுகிறார். முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது. இதற்கான சான்றுகளையும் தனது நூல்களில் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். இதன் அடிப்படையில் புருஷ சூக்தத்தில் உள்ள இந்த சித்திரம் வேதகால வர்ண அமைப்பின் முதலிரண்டு காலகட்டங்களையே சார்ந்தது என்று கருத வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தர் இந்த மந்திரம் நமது பொதுப் புத்திக்குப் புலப்படுவதைக் காட்டிலும் மகத்தான பொருள் கொண்ட ஒன்று என்று கூறுகிறார் –

“இங்கு சமூகத்தின் நான்கு பிரிவுகள் சிருஷ்டிக் கடவுளின் உடலில் இருந்து, அவரது சிரம், புஜங்கள், தொடைகள் மற்றும் பாதங்களில் இருந்து உதித்ததாக சித்தரிக்கப் படுகிறது. நமக்கு இது ஒரு கவித்துவமான உருவகமாகத் தோற்றமளிக்கிறது – பிராமணர்கள் அறிவின் மக்கள், க்ஷத்திரியர்கள் ஆற்றலின் வடிவம், வைசியர்கள் உற்பத்தி செய்பவர்கள், சூத்திரர்கள் பணி செய்பவர்கள்.

ஆனால், ரிஷிகளுக்கு சிருஷ்டிக் கடவுளின் உடல் என்ற இந்தக் குறியீடு, ஒரு உருவகம் மட்டுமல்ல, அதை விட மேலானது. தெய்வீக சத்தியத்தை வெளிப்படுத்தி நிற்பது. அவர்களைப் பொறுத்த வரையில் மனித சமுதாயம் என்பது பிரபஞ்ச வடிவான புருஷனைத் தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்தும் முயற்சியே ஆகும். ஏனெனில் புருஷனே தன்னை பௌதீக உலகமாகவும், பருவெளிக்கு அப்பாலான பிரபஞ்சமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இங்கு நாம் காணும் கருத்து என்ன? நான்கு பிரிவுகளும் எதை வெளிப்படுத்துகின்றன? தெய்வீகத்தை அறிவாகவும், தெய்வீகத்தை ஆற்றலாகவும், தெய்வீகத்தை உற்பத்தி – துய்த்தல் – ஒத்துழைப்பு என்பதாகவும், தெய்வீகத்தை தொண்டு – பணிதல் – வேலை என்பதாகவும் அவை  வெளிப்படுத்துகின்றன. இந்த நான்கு பிரிவுகளும் நான்கு பிரபஞ்ச விதிகளுக்கு பொறுப்பாகின்றன. எல்லாவற்றின் ஒழுங்கையும், இயல்புகளையும் சிந்தித்து கட்டமைக்கிறது அறிவு என்ற விதி. அவற்றை நடைமுறைப் படுத்தி, நிலைநிறுத்தி, அதிகாரபூர்வமாக்குகிறது ஆற்றல் என்ற விதி. அதன் உறுப்புகளை சீராக அமைக்கிறது ஒத்துழைப்பு என்ற விதி. இவற்றின் ஏவல்களைச் செய்கிறது பணி என்ற விதி”.

வேள்வி – தர்மம்:

வேள்விக் குண்டத்தின் எல்லைக் கோடுகள் பரிதிகள் எனப்படுகின்றன. வேள்விச் சடங்கிற்கு முன் குண்டத்தைச் சுற்றி தர்ப்பைப் புற்களை இட்டு அதன் மேல் மரக்குச்சிகள் அல்லது கோல்களை வைத்து பரிதிகள் அமைக்கப் படும். அவ்வாறு அமைக்கப் பட்ட குண்டத்தில் சமித்துக்களையும், அவியையும் சொரிந்து வேள்வி நிகழ்த்தப் பெறும்.

ஓமம் - Homamபிரபஞ்ச வேள்வியில் “ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி – மூவேழு சமித்துக்கள் கொண்டு” என்பது சிருஷ்டியின் அடிப்படைத் தத்துவங்களைக் குறிப்பதாக வேத உரையாசிரியர்கள் விளக்கமளித்துள்ளனர்.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களும், இரவு, பகல் என்ற இரு பொழுதுகளும் சேர்ந்து ஏழு பரிதிகளாகின்றன. இது புற இயற்கை.

மூவேழு  சமித்துக்கள் என்பது ஐந்து கர்மேந்திரியங்கள் (கை, கால், வாய், குறி, குதம்), ஐந்து ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி), ஐந்து பிராணன்கள் (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்), நான்கு அந்தக் கரணங்கள் (சித்தம், புத்தி, மனம், அகங்காரம்), இவற்றுடன் தர்மம், அதர்மம் ஆகியவை இணைந்து இருபத்தொரு தத்துவங்கள். இது அக இயற்கை.

இவ்வாறு அக, இயற்கையும் புற இயற்கையும் வேள்விக்கான விறகுகளாக ஆகின்றன.

”புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர்” என்பது பிரபஞ்ச ரூபனான பரம புருஷனின் ஒரு அம்சம், இந்த வேள்வியில் தானே பலியாக ஆகி படைப்பு நிகழ்கிறது என்பதைக் குறித்து நிற்கிறது. சம்ஸ்கிருதத்தில் பசு என்பதற்குப் பொருள் மிருகம், பசு மாடு அல்ல.

”வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்” என்பது பிரபஞ்ச ஒருமையைக் குறிக்கும் வாசகமாகும். வேள்வி என்பதை செயலின் குறியீடாகக் கொண்டால், செயலும், செய்வோனும், அந்தச் செயலுக்கான கருவிகளும், செயலின் இலக்கும் பயனும் எல்லாம் ஒருமுகப் படுதலை இந்த மந்திரம் குறிக்கிறது. இதனை முன்பு விரிவாக அக்னி சூக்தம் குறித்த கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.

பிரபஞ்ச வேள்வியே முதன்மையான தர்மங்களாக ஆயிற்று என்று முடிகிறது புருஷ சூக்தம். தர்மம் என்பது இயற்கையில் உள்ள மாறாத ஒழுங்கு – ரிதம். அந்த ஒழுங்கை செவ்வனே நிலைபெறச் செய்வது வேள்வி. அந்த ஒழுங்கில் இருந்தே மனித சமுதாயத்திற்கான அற நெறிகள் அனைத்தும் உருவாகின்றன. அந்த தர்ம நெறிகளைப் பின்பற்றுவோர் மேன்மையான ஆன்மீக நிலைகளை (உலகங்களை) அடைகின்றனர்.

கண்டேன் கடவுளை

சில பாரம்பரிய வேத சாகைகளில் உள்ள புருஷ சூக்தத்தில் இறுதி மந்திரத்திற்கு முன் இரண்டு கூடுதல் மந்திரங்கள் உள்ளன.

இருளுக்கு அப்பால் திகழும் கதிரொளி வண்ணன்
அனைத்திற்கும் உரு அளித்து பெயர் அமைத்து
செயல் புரிவோன்
நான் அறிவேன் அந்தப் புருஷனை பெரியோனை.

ஆதியில் பிரம்மன் அவனைக் கண்டுரைத்தான்
நாற்றிசைகளிலும் இந்திரன் கண்டறிந்தான்
இவ்வாறு அவனை அறிவோன்
இங்கேயே அழிவற்றவன் ஆகிறான்
வேறு வழி ஏதுமில்லை
விடுதலைக்கு.

இம்மந்திரங்களில், பிரபஞ்ச வடிவான பரம்பொருளை நான் மெய்யுணர்வில் கண்டறிந்தேன் என்று ரிஷி பிரகடனம் செய்கிறார். அந்தப் பரம்பொருளை அறிதேலே முற்றான விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்றும் உரைக்கிறார். ”கண்ணால் யானும் கண்டேன் காண்க” என்று திருவாசகம் உரைப்பது இந்த வேத ஞானத்தின் எதிரொலியன்றி வேறேன்ன?

****

புருஷ சூக்தம் வேத ரிஷிகள் தங்களது பிரபஞ்ச தரிசனத்தைக் கவித்துவமாகப் பாடிய ஒரு மகத்தான பாடலாகும். பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள தேவன் (Extra Cosmic God) என்ற கோட்பாட்டை அல்ல, பிரபஞ்சத்தின் ஊடாக நிற்கும் கடவுள் (Cosmic God) என்ற இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாட்டையே புருஷ சூக்தம் முன்வைக்கிறது. இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு கருதுகோளும் இந்து மத தத்துவங்களுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை கொண்டவை என்பதை இதைப் படித்துணரும் எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், சில குறுமதி கொண்ட கிறிஸ்தவ இறையியலாளர்கள் புருஷ சூக்தம் கூறும் புருஷன், விராட், பிரஜாபதி ஆகிய இறை உருவகங்களை பைபிளில் உள்ள ”ஏழு வானங்களுக்கு அப்பால்” ”ஏழு நாட்களில் உலகம்” புகழ் படைப்புக் கடவுளுடன் தொடர்பு படுத்துகிறார்கள். சாத்தான், ஆதி பாவம், சிலுவை போன்றவற்றையெல்லாம் புருஷ சூக்தத்தில் கண்டு பிடிக்கிறார்கள் இந்தப் புரட்டர்கள். இந்த மோசடியையும் பொய்ப் பிரசாரத்தையும் இந்து அறிஞர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தீவிரமாகக் கண்டித்து அவற்றை நிறுத்தச் செய்ய வேண்டும். சத்தியத்தையும் நேர்மையையும் நல்லுறவையும் விரும்பும் கிறிஸ்தவ சகோதரர்களும் இந்தக் கண்டனத்தில் இணைய வேண்டும்.

ரிக்வேதத்தில் உள்ள இன்னும் சில சிருஷ்டி கீதங்களை அடுத்துப் பார்க்கலாம்.

(தொடரும்)

எழுமின் விழிமின் – 23

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

பாரதப் பெண்ணினமும் ஐரோப்பியப் பெண்ணினமும்* 

உங்களது அறிவுக்கூர்மை எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட வேண்டுமென்று நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் தூய்மையை விலையாகக் கொடுத்து அதைப் பெறுவதாயின் வேண்டாம்.

உங்களுக்குத் தெரிகிற பல விஷயங்களைக் கண்டு அதற்காக உங்களைப் போற்றுகிறேன். ஆனால் தீயனவற்றை ரோஜா மலரால் மூடி மறைத்து அதை நல்லது என்று அழைக்கின்ற முறையை நான் வெறுக்கிறேன். ஒருவருக்குள்ள அறிவுத் திறமை தான் மிக உயர்ந்த நல்ல குணம் என்பது தவறு; ஒழுக்க நேர்மையும் ஆத்மீக சக்தியும் தான் நாங்கள் அடைய விரும்புகிற குணங்கள். எங்கள் நாட்டுப் பெண்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகள் அல்ல. ஆனால் அதிகமான தூய்மை அவர்களுக்கு உண்டு. எல்லாப் பெண்களும் தமது கணவரைத் தவிர மற்றெல்லாரையும் புதல்வர்களைப் போலவே கருதுவார்கள்.

எல்லா ஆண்களும் தனது மனைவியைத் தவிர மற்றப் பெண்களைத் தாயைப் போலக் கருதுதல் வேண்டும். என்னைச் சுற்றி நடக்கிற சம்பவங்களைக் கவனித்து ஆண்மைத் தனத்தின் பேரால் ஆண்கள் பெண்களை உபசரிக்கின்ற டம்பத்தைப் பார்த்தால் எனது ஆத்மா வெறுப்பால் நிறைந்து விடுகிறது. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது. அதுவரை அவர்கள் வெறும் விளையாட்டுச் சாமான்களாக இருப்பார்களே ஒழிய அதைவிட உயரமாட்டார்கள். திருமண முறிவுக்கும் (விவாகரத்து) காரணம் இவையெல்லாம் தான். உங்களுடைய ஆண்மக்கள் உங்களைக் குனிந்து வணங்குகிறார்கள். உட்கார நாற்காலி தருகிறார்கள். அடுத்த மூச்சில் உங்களுக்குப் பாராட்டுத் தருகிறார்கள். “பெண்ணே, உனது கண்கள் எவ்வளவு அழகாக உள்ளன!” என்று கூறுகிறார்கள். இவ்வளவு செய்ய அவர்களுக்கு உரிமை ஏது? அவ்வளவு தூரம் போவதற்கு மனிதன் எப்படித் துணிகிறான்? பெண்களாகிய நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள்? மனிதத் தன்மையிலுள்ள கண்யக் குறைவான விஷயங்களை இத்தகைய செயல்கள் வளர்க்கின்றன. கண்யமான உயர்ந்த லட்சியங்களை நோக்கி மனிதனை அவை உயர்த்துவதில்லை.

நாம் ஆண்கள், பெண்கள் என்று நினைக்கக் கூடாது. நாம் மனிதர்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும், பரஸ்பரம் உதவி செய்து கொள்ளவும் பிறந்துள்ளோம் என்று நினைக்க வேண்டும். ஓர் இளைஞனும் யுவதியும் தனித்து விடப்பட்டால் உடனே அவன் அவளுக்குப் புகழ்மாலை சூட்டுகிறான். ஒரு மனைவியை அவன் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் ஒருகால் அவன் இருநூறு பெண்களைக் காதலித்திருப்பான். அப்பாடா! நான் மாத்திரம் கலியாணம் பண்ணிக் கொள்கிற கோஷ்டியில் சேர்ந்திருந்தால், இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமலேயே அன்புக்கு ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துக் கொள்வேன்.

நான் பாரதத்தில் இருந்த போது, இந்த விஷயங்களை எல்லாம் வெளியிலிருந்து பார்த்த போது, இதெல்லாம் சரிதான் என்றும் இவை வெறும் கேலிச் செயல்கள் தான் என்றும் சொன்ன விளக்கத்தை நம்பினேன். அதன்பின் நான் பிரயாணத்துக்குக் கிளம்பினேன். உங்களது இப்பழக்கம் சரியல்ல என்று எனக்குத் தெரியும். அது தவறு தான். ஆனால் மேல் நாட்டினரான நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டு விட்டு அது நல்லது தான் என்று அழைக்கிறீர்கள். மேல்நாட்டிலுள்ள தேசங்களுடைய கஷ்டம் என்னவென்றால், அதை முதிர்ச்சியடையாத வாலிப நாடுகள். வாலிபம், முட்டாள்தனம், சஞ்சலமான சித்தம், ஏராளமான செல்வம் – இவை அவர்களிடம் ஒன்று சேர்ந்துள்ளன. இதுதான் கஷ்டம். இந்தக் கெட்ட குணங்களில் ஏதாவது ஒன்று இருந்தாலே எவ்வளவோ விஷமங்கள் நடந்து விடும். அப்படியிருக்க, இவை நான்கும் ஒன்று சேர்ந்து விட்டாலோ, கேட்க வேண்டுமா? ஜாக்கிரதையாக இருங்கள்!

(*நியூயார்க்கில் 1890களில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி)

********

ஆரிய, ஐரோப்பிய நாகரிகங்களின் அமைப்பு முறை:

ஐரோப்பிய நாகரிகத்தை ஒரு துணித்துண்டுக்கு ஒப்பிடலாம். இவைதான் அதிலுள்ள பொருட்கள்: கடற்கரையிலுள்ள பரந்த, மித சீதோஷ்ண நிலையிலுள்ள மலைநாடு தான் அதற்கான தறி; பலமுள்ள, போர்க்குணங்கள் வாய்ந்த, பல இனங்களின் சேர்க்கையால் உருவான கலப்பு இனம் தான் அதற்கான பஞ்சு. தனது சொந்தப் பாதுகாப்புக்காகவும், தனது சமயப் பாதுகாப்புக்காகவும் நடக்கிற போர்முறை தான் அதன் ஊடுநூல். வாள் வீசுகிறவன் பெரியவன், வாள்வீச முடியாதவன் தனது சுதந்திரத்தைக் கைவிட்டு யாராவது ஒரு போர்வீரனுடைய பாதுகாப்பின் கீழ் வாழ்கிறான். அதனுடைய பாவு நூல்தான் வாணிபம். இந்த நாகரிகத்தின் பாதை வாள் ஆகும். அதற்குத் துணைபுரியும் படை தைரியமும் சக்தியும். அதன் குறிக்கோள், இவ்வுலகிலும் மறு உலகிலும் சுக போகங்களை அனுபவிப்பது ஆகும்.

நம் நிலை எப்படி? ஆரியர்கள் அமைதியில் ஆர்வமுள்ளவர்கள். நிலத்தைப் பண்படுத்தும் உழவர்கள். தமது குடும்பங்களுக்கு எவ்விதத் தொந்தரவும் இன்றி அதனை நிர்வகித்து வரமுடிந்தால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள். அப்படிப் பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏராளமான ஓய்வு நேரம் இருந்ததால், ஆழ்ந்து சிந்திக்கவும் நாகரிகத்துடன் விளங்கவும் அதிகமான சந்தர்ப்பம் கிடைத்தது. நம்முடைய ஜனக மகாராஜா தம் கையாலேயே நிலத்தை உழுதார். அந்தக் காலத்தில் சத்தியத்தை உணர்ந்தவர்களில் அவர் மிகவும் பெரியவராக இருந்தார். நமது நாட்டில் ரிஷிகள், முனிவர்கள், யோகிகள் இவர்கள் ஆரம்ப முதலே தோன்றியுள்ளார்கள். ஆரம்ப முதலே உலகம் ஒரு மாயக் கற்பனையாகும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நீங்கள் கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம். ஆனால் நீங்கள் தேடுகிற இன்பம் சமாதானத்தில் தான் உறைந்துள்ளது. புலன்வழி இன்பங்களைத் துறப்பதில் தான் சாந்தி உள்ளது. உடலின் வளர்ச்சி முன்னேற்றத்தில் மட்டும் இன்ப சுகம் இல்லை, மனத்தையும் அறிவையும் பயன்படுத்துவதில் தான் உள்ளது.

காடுகளை விளைச்சல் நிலமாகத் திருத்தி மாற்றியவர்கள் ஞானிகளான முனிவர்களே தான். பின்னர், தாம் திருத்திய நிலப்பகுதியில் வேத காலத்து யாக மேடையை அமைத்தார்கள். பாரத நாட்டின் தூய வானில் யாக யக்ஞங்களின் புனிதப் புகை எழுந்தது. அமைதி நிலவும் அந்தக் காற்றில் வேத மந்திரங்களின் ஒலியும் எதிரொலியும் எழுந்தன. மாடுகளும், கன்றுகளும் மற்ற மிருகங்களும் எத்தகைய அபாயமும் அச்சமுமின்றி மேய்ந்து வந்தன. கல்வியறிவு, தர்மம் இவற்றின் கீழ் வாளுக்கான இடம் அமைக்கப் பட்டது. வாளின் வேலை தர்மத்தையும், மக்கள், கால்நடைகள் இவற்றின் உயிர்களையும் பாதுகாப்பது தான். பலமற்றவர்களை அபாய காலத்தில் காப்பாற்றுகிறவன் வீரன், க்ஷத்திரியன். உழுகிற ஏர் மீதும், வாளின் மீதும், தர்மம் – அனைவரையும் பாதுகாக்கும் சக்தி – ஆதிக்கம் செலுத்தியது. தர்மமானது மன்னர்களுக்கெல்லாம் மன்னன். உலகமெல்லாம் உறங்கும் பொழுது கூட தர்மம் எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கும். தர்மத்தின் பாதுகாப்பின் கீழ் ஒவ்வொருவரும் சுகமாக இருந்தார்கள்.

ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தார்கள் என்றும், பூர்வீகக் குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும், அவர்களை நிர்மூலமாக்கி விட்டுப் பாரதத்தில் குடியேறினார்கள் என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்பற்ற பொய், முட்டாள்தனமான பேச்சு ஆகும். இப்படியெல்லாம் உங்கள் ஐரோப்பியப் பண்டிதர்கள் பேசுகிறார்கள். நமது பாரத அறிஞர்கள் கூட இத்தகைய கருத்துக்களூக்கெல்லாம் ‘ஆமாம்’ போடுவது விந்தையாக இருக்கிறது. அன்றியும், இந்த ராட்சதப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் பட்டு வருகின்றன. இது உண்மையில் மிகமிக மோசமான செயலாகும்.

நானே ஓர் அறிவிலி. ஏதோ புலமை இருப்பதாக நான் பாசாங்கு பண்ணவில்லை. ஆனால் எனக்குப் புரிகின்ற சிறு விஷயங்களை வைத்துக் கொண்டு பாரிஸ் மகாநாட்டில் நான் இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்தேன். இந்த விஷயத்தைக் குறித்து நான் பாரதீய அறிஞர்களிடமும், மேனாட்டு வித்வான்களிடமும் பேசிக் கொண்டிருந்தேன். வாய்ப்பான நேரம் கிடைக்கும் போது, அவர்களது இந்த ஊகக் கற்பனையை விரிவாக, அணு அணுவாக எதிர்த்துப் பல ஆட்சேபங்களை எழுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு – நமது நாட்டுப் பண்டிதர்களுக்குச் சொல்லுகிறேன் – “நீங்கள் எல்லாம் கற்றறிந்த மனிதர்கள். தயது செய்து உங்களது பழைய நூல்களையும், சாஸ்திரங்களையும் துருவி ஆராய்ந்து, சொந்தமான முடிவுக்கு வாருங்கள்” என்று சொல்லுகிறேன்.

ஐரோப்பியர் தமக்கு வாய்ப்பான சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அங்கங்குள்ள பூர்வீக குடிமக்களைப் பூண்டறுத்து விட்டு, அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சௌகரியமாகவும், வசதியாகவும் குடியேறி விடுவார்கள். ஆகவே ஆரியர்களும் அவ்வாறே செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேல்நாட்டவர்கள் தமது சொந்த நாட்டிலேயே தங்கிக் கொண்டு, தமது உள்நாட்டு விளைபொருள் வசதிகளையே முற்றிலும் நம்பி வாழ்ந்திருப்பார்களேயானால், அவர்கள் மிக மோசமான நாடோடி மக்களாகக் கருதப் பட்டிருப்பார்கள். ஆகவே, அவர்கள் வெறி கொண்டு உலகெங்கும் ஓடிச் சென்றார்கள். பிறருடைய நிலங்களின் செழுமை வளத்தால் தம் ஊனை வளர்க்க வகை தேடினார்கள். ஆகவே ஆரியர்களும் அது போலவே செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டுகிறார்கள். இப்படிக் கூறுவதற்கெல்லாம் சாட்சிகள் எங்கே? கற்பனைக் கதை அளக்கிறீர்களா? அப்படியாயின், உங்களுடைய விசித்திரக் கதைப்புகளை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? காடுகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளை அவர்கள் வெட்டி வீழ்த்தியதாக உங்களுக்கு எங்கிருந்து தெரிய வந்தது? இது போன்ற மடமைப் பேச்சுகளைப் பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே.. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?

அது சரி. ராமாயணம் என்பது என்ன? தென்பாரதத்தில் இருந்த காட்டுமிராண்டிப் பூர்வீகக் குடிகளை ஆரியர்கள் தோற்கடித்ததா? ராமச்சந்திரர் நாகரிகமுள்ள ஆரிய மன்னர். யாருடன் அவர் போரிடுகிறார்? இலங்கை மன்னனான ராவணனுடன். ராமாயணத்தைச் சற்றே படித்துப் பாருங்கள். ராவணன் ராமனை விட சற்றே உயர்ந்த நாகரிகம் வாய்த்திருந்தானே ஒழிய, தாழ்ந்தவனாக இருக்கவில்லை. இலங்கையின் நாகரிகம் அயோத்தியை விட ஒருவிதத்தில் உயர்ந்து இருந்ததே ஒழிய, நிச்சயமாகத் தாழ்ந்திருக்கவில்லை. இதற்குப் பிறகு, இந்த வானரர்களும், மற்ற தென் பாரத மக்களும் எப்பொழுது தோற்கடிக்கப் பட்டார்கள்? அதற்கு மாறாக, அவர்களெல்லாம் ராமச்சந்திரரின் நண்பர்களாகவும், உடன் உழைப்பவர்களாக இருந்தார்கள். வாலி, குகன் ஆகியோருடைய எந்தெந்த ராஜ்யங்கள் ராமச்சந்திரரால் ஆக்கிரமிக்கப் பட்டு தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளப் பட்டன? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆரிய நாகரிகமாகிற தறியிலுள்ள துணி பரந்த, உஷ்ணமான சமதள பூமியாகும். அதனிடையிலே அகலமான, போக்குவரத்துக்கு உகந்த நதிகள் ஓடுகின்றன. இந்தத் துணிக்கான பஞ்சு மிக உயர்ந்த நாகரிக நிலை, அரை நாகரிக நிலை, காட்டுமிராண்டி நிலை ஆகியவற்றைக் கொண்டது. இந்த நிலைகளிலுள்ள பெருமளவிலான ஆரிய மக்களின் வர்ணாசிரம முறை அதன் ஊடுநூல். இயற்கையில் காணப்படும் பூசலையும் போட்டா போட்டியையும் வெல்வது அதன் பாவுநூல்.

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்களது நிலங்களில் நீங்கள் குடியேறி இருக்கிறீர்கள். நிரந்தரமாக அவர்கள் தீர்ந்து போனார்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? அங்கிருந்த ஆதிக் குடிமக்கள் இப்பொழுது எங்கே? அவர்கள் வேரறுக்கப் பட்டு விட்டார்கள். காட்டு மிருகங்களைப் போல அவர்களைக் கருதி நீங்கள் அடியோடு கொலை செய்து விட்டீர்கள். எங்கே அவ்வாறு செய்ய உங்களுக்கு ஆற்றல் இல்லையோ, அந்த நாடுகள் மட்டுமே தான், அந்த தேசம் தான் இன்றும் உயிருடன் இருக்கிறது.

ஆனால், பாரதம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. ஆரியர்கள் அன்பும், தாராள மனப்பான்மையும் வாய்த்திருந்தார்கள். அவர்களது உள்ளங்கள் கடலைப் போலப் பரந்தும், எல்லையில்லாமலும் இருந்தன. அவர்களது மூளைகள் மனித வரம்புக்கு மீறி மேதாவிலாசம் வாய்த்திருந்தன. உலகத்தில் தோன்றி மறைகிற, வெளிப்பார்வைக்கு இன்பம் போலத் தோன்றுகிற, ஆனால் உண்மையில் பார்த்தால் மிருகத் தனமான செயல்கள், அவர்களது உள்ளத்திலும் மூளையிலும் இடம் பெறவே இல்லை. எனது சொந்த நாட்டினரான முட்டாள்களே! உங்களை ஒன்று கேட்கிறேன். முதற்குடிகளின் நிலத்தில் குடியேறுவதற்காக ஆரியர்கள் அவர்களை அழித்து ஒழித்திருந்தால், வர்ணாசிரம முறையை ஏற்படுத்தியிருக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

தாமே வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும். தம்முடைய தரத்துக்கு, இல்லை, தம்மையும் விட உயர்ந்த நிலைக்கு எல்லோரையும் உயர்த்துவது ஆரியர்களின் நோக்கம். ஐரோப்பிய நாகரிகத்தின் பாதை வாள். ஆரியர்களின் பாதை, மக்கள் சமூகத்தை வர்ணங்களாகப் பகுப்பதாக இருந்தது. வெவ்வேறு வர்ணங்களாகப் பகுக்கும் இந்த முறை நாகரிக நிலைக்கு ஏறிச் செல்லும் படியாகவே கட்டமைக்கப் பட்டது. ஒருவனது கல்விக்கும் பண்பாட்டுக்கும் தக்க அளவில், அவனை மேலும் மேலும் உயர்ந்து எழுந்து முன்னேறச் செய்வதாகவே இந்தப் பாகுபாட்டு அமைப்பு இருந்தது. ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனுக்கு வெற்றி, பலவீனனுக்கு சாவு என்பது நிலை. பாரத பூமியில் சமூகச் சட்டம் ஒவ்வொன்றும் பலவீனனின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதாகும்.

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

ஸ்ரீ களிமிகு கணபதி தமிழ் ஹிந்துவில் எழுதிய ‘இஸ்லாமியருக்கு: ஹிந்து மதத்தை எப்படிப் புரிந்து கொள்வதுஎன்ற கட்டுரையைப் படிக்குமாறும் கருத்துத் தெரிவிக்குமாறும் நேற்றுவரை ஐந்து மின்னஞ்சல்கள் வந்தனஇருந்தும் தேவையில்லை என்றே முடிவு செய்திருந்தேன். இன்று, மேலும் ஒரு மின்னஞ்சல் உன்னிடமிருந்து தெளிவு பெறவேண்டும் எனபதற்காகத்தான் கேட்கிறோம். ஆகவே பிகு செய்து கொள்ளாமல் எழுது என்று கட்டளையிடுகிறது (சம்பந்தப்பட்டவர்கள் அனுமதித்தால் அவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக உள்ளேன்).

என்னிடமிருந்து தெளிவு பெற முடியும் என்கிற நம்பிக்கை சிலருக்கு இருப்பதால் சரி என்று படித்துப் பார்த்து, எழுதவும் துணிந்தேன்.

முதலில் இப்படியொரு கட்டுரையை எழுதியதற்காக ஸ்ரீ களிமிகு கணபதியும் பிரசுரம் செய்தமைக்காக தமிழ்ஹிந்துவும் வெட்கப்பட வேண்டியிருக்கும்.

சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

hindu-symbol-aum

சமயம் என்பது ஆன்மிகம் சார்ந்தது. சமூகம் என்பது வாழ்வியல் சார்ந்தது. இரண்டுமே மக்களுக்கு அவசியமானவையாக இருப்பதால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளன. சமயம் என்பதில் ஆன்மிகம் தவிர ஏதும் இல்லை. சமூகத்தில் முக்கியமாக ஆன்மிகத் தூண்டுதலுக்காகவும் அடுத்தபடியாக ஒற்றுமை உணர்வை நிலைபெறச் செய்யவும் தனி அடையாளத்திற்காகவும் வழிபாடு, திருவிழா, வழிபாட்டுத் தலம் சடங்குகள் ஆசாரங்கள் என்பவை சமயத்தின் பெயரால் கடைப்பிடிக்கப் பட்டாலும், கலாசாரம், பொருளியல், சமூக நடைமுறை, அதிகாரம், கட்டமைப்பு போன்றவையே சமூகம் சார்ந்த முன்னுரிமைகளாக உள்ளன. சமயமும் சமூகமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான் இரண்டையும் ஒன்றாகக் காணும் மயக்கம் ஏற்படுகிறது. காலப் போக்கில் சமுகப் பழக்க வழக்கங்களில், முக்கியமாக மேலாதிக்க விழைவின் காரணமாக வலியுறுத்தப்படும் ஏற்பாடுகளும் எளிதில் அங்கீகாரம் கிட்ட வேண்டும் என்பதற்காக சமயத்தின் பெயரால் கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்து, அதன் விளைவாகச் சமயம் அந்தப் பழியைச் சுமக்க நேரிடுகிறது (இதுபற்றி நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்).

shivamuruga1சமயம் சமூகத்திற்குச் சில வழிகாட்டுதல்களைச் செய்தாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆன்மிகம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இல்லை. ஆன்மிகத் தேடலுக்கு ஆன்மா குடிபுகவும் பரிணாமப் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் செல்லவும் சரீரம் தேவையாயிருக்கிறது. சரீரத்திற்கு சமுகத் தொடர்பும் பொருளியல் தேவைகளும் அவசியப்படுகின்றன. அவ்வளவில் சரீரம் சம்பந்தப்பட்ட சமூக ஏற்பாட்டில் சமயம் சில வழிகாட்டுதல்களைக் கட்டளைகளாக அல்லாமல் கோட்பாடுகளாக அறிவுறுத்துகின்றது. உதாரணமாக குணத்தின் காரணமாகவும் மன நாட்டங்களுக்கு ஏற்பவும் அமையும் வர்ணப் பிரிவுகள். இந்த வர்ணப் பிரிவுகள் சுட்டிக் காட்டப்படுகின்றனவேயன்றி அவற்றுள் இன்னது உயர்ந்தது, இன்னது தாழ்ந்தது என பேதம் கற்பிப்பதில்லை. ஆனால் சமூகம் தன் வசதிக்கு ஏற்ப இந்த வர்ணப் பிரிவுகளை வளைத்துச் சில தரப்புகளுக்குச் சாதகமாகவும் சில தரப்புகளுக்கு பாதகமாகவும் நடைமுறைப் படுத்திக்கொண்டது. விளைவு, சமூகம் செய்த பிழைக்குச் சமயம் பழி சுமக்க வேண்டியதாயிற்று. உதாரணத்திற்கு இது ஒன்றைச் சொன்னேன். சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன. ஆனால் தேவையில்லை. பேசுவதற்கு வேறு முக்கியமான விஷயங்கள் உள்ளன.

சரி, ஆன்மிகம் சார்ந்த சமயமும் பொருளியல் சார்ந்த சமூகமும் அடிப்படையில் வெவ்வேறானவையானாலும் இரண்டுமே மனிதக் கூட்டத்திற்கு அவசியமாக இருப்பதோடு இணைந்தும் இருக்க வேண்டியுள்ளது. சரீரமும் ஆன்மாவும் இணைந்து இருக்க வேண்டியிருப்பது போலத்தான்! ஆனால் சமயம் ஆன்மாவைப் போலவே பூடகமாக இருப்பதால் சமூகத்தின் தாக்கம் அதன்மீது எளிதாகச் செல்லுபடியாகிவிடுகிறது. ஒரு சமூகத்தை முன்வைத்தே அதன் சமயத்தைக் காண்பதான நடைமுறை வந்துவிட்டிருக்கிறது. சமூகம் இவ்வாறாக முதல் மரியாதை பெறக் காரணம், சமூகம் தோன்றிய பின்னரே சமயம் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் சமூகத்திலிருந்துதான் சமயம் தோன்றி, தகப்பன் சாமியாகிவிட்டது. தந்தைக்கு உபதேசம் செய்த தனயன் புராணம் இதைத்தான் சொல்கிறது. மனித மனதின் உள்ளுணர்வே இதற்கு, சமயம் தோன்றுவதற்கு, காரணம். தேடலில் உள்ள ஆர்வம், அதில் உள்ள சுகம். அதுவே சமயமாகப் பரிணமித்தது.

இதுவரை நாம் பார்த்த சமயம் என்ற கருதுகோளுக்குப் பொருந்தி வருவது ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய ஸனாதனதர்மம் என்று சொல்லக் கூடிய ஹிந்து சமயமும் (ஸனாதன தர்மம் என்பதேகூட அடையாளம் காட்டுவதற்காக, அவசியம் கருதிப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்தான். தர்மம் மட்டுமே உண்டு, சமணம் தோன்றியதன் விளைவாகத்தான் ஸனாதனபுராதன என்பது சேர்க்கப்பட்டது. சரித்திரப் புத்தகத்தில் சமணத்தைத் தோற்றுவித்தவர் வர்த்தமான மஹாவீரர் என்று எழுதப் பட்டிருந்தாலும், பரீட்சையில் அவ்வாறு விடை எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் சமணம் மஹாவீரருக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார் என்று எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் எனப்துபோல!). சமணம், பெளத்தம் ஆகியவையுமே.

religion-cartoon-salesman1ஆபிரகாமிய மதங்கள், மதம் என்கிற அடையாளத்தைப் பெற்று விட்ட போதிலும், மதம் அல்லது சமயம் என்பதற்கு உரிய லட்சணங்களைப் பெற்றவை அல்ல. ஆன்மிகத்தின் சுவடுகளை யூத சமயத்திலாவது காணமுடியும். ஏனெனில் அது தொல் நம்பிக்கை சார்ந்தது. உலகில் உள்ள எல்லா தொல் நம்பிக்கைகளிலும் ஆன்மிகத்தின் சுவடுகளைக் காணலாம். இவற்றைப் பாகனியம் என்ற இழிவான பெயரில் குறிப்பிட நான் விரும்பவில்லை. மெளட்டீகமான கிறிஸ்தவம் ஒரு தொற்று நோய் போலப் பல்வேறு சமுதாயங்கள் மீதும் தாக்குதல் நடத்தியபோது அங்கு நிலவிய நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளுக்கு அவ்வாறான இழி பெயரைச் சூட்டியது. பாகன் என்பதற்கும் காஃபிர் என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.

கிறிஸ்தவம், முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன், தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லை. ஆண்டவன், பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம். ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும். கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லை. எல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.

கிறிஸ்தவம் என்பது ரோமானியப் பேரரசின் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலாதிக்கச் செயல் திட்டமேயன்றி வேறல்ல. அதன் ஸ்தாபகரான ரோமானிய ஸால் என்கிற பால் ஆன்மிகவாதியும் அல்ல.

முகமதியத்தை ஸ்தாபித்த முகமதுவை எடுத்துக்கொண்டால் அவருக்கும் ஆன்மிகத்துக்கும் ஒருசிறிதும் தொடர்பு இல்லை.

இறைவனின் தூதன் என்று தன்னை அழைத்துக் கொண்டு இறைவன் பெயரால் கட்டளை பிறப்பித்தல் ஆன்மிகம் அல்ல.

நாட்ஸியம், மார்க்சியம் போல் முகமதியம் ஒரு மேலாதிக்கப் பேராசை கொண்ட எதேச்சாதிகார அரசியல் கோட்பாடே ஆகும்.

குரானை முழுவதும் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு எள்ளளவும் இடம் இல்லாதது மட்டுமின்றி, மாற்று நம்பிக்கைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிச் சாகடிக்குமாறு உத்தரவுகளும் கடவுளின் பெயரால் இடப்பட்டிருப்பது விளங்கும். அதேபோல் கிறிஸ்தவத்தின் ஆணி வேரான புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளைப் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு இடமில்லை என்பதும் அதுவும் கட்டளைகளின் தொகுப்புதான் என்பதும் muslimcartoon1002தெளிவாகும். சுவிசேஷங்களில் ஆன்மிகத் தேடலுக்கு இடமில்லை என்றாலும் ஏசு சொன்னதாகக் கூறப்படும் வாசகங்களில் ஆன்மிக நாட்டத்தின் தெறிப்புகளைக் காண முடியும். காரணம் அவர் யூத தொல் சமுதாயத்தில் தோன்றி அதன் நம்பிக்கை பாதிப்பில் இருந்தவர் (ஏசு என்று ஒருவர் இருந்தாரா என்கிற சர்ச்சை ஒரு தனி சமாசாரம். இப்போது இங்கு அது தேவையில்லை).

முற்றிலும் ஆன்மிகம் சார்ந்த ஹிந்து சமயத்தைப் புரிய வைக்கிறேன் பேர்வழி என்று எவராவது நல்லெண்ணத்துடன் புறப்பட்டாலும், ஆன்மிகம் என்றாலே ஆண்டவன் என்பதாக ஒரு பெரியண்ணனின் கட்டளைகள்தான் என்கிற புரிதலுடன் காலங் காலமாக இருந்து வருவோருக்குப் புரிய வைக்க முடியாது.

அவர்களுடனான இணக்கத்திற்காக பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழங்குவதும் கேலிக் கூத்தாக முடியும்.

ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?

பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?

என்மீது நம்பிக்கையில்லாதோரிடம் இந்த வாசகங்களைக் கூற வேண்டாம் என்றும் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறான்.

krishna-arjuna

அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்! அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?

inquistion_islam_christian_jihad_abrahamicஆர். எஸ். எஸ். பேரியக்கம் பேரழிவு, விபத்து, இடர்பாடு போன்ற தருணங்களில் மத வேறுபாடு பாராமல் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் தொண்டாற்றுகிறது. அதற்காக சமயக்கோட்பாட்டில் சமரசம் எதுவும் அது செய்துகொண்டு விடவில்லை! குஜராத்தில் மோதி அரசு முகமதியரும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதால் அவர்களுக்கும் உரியதைச் செய்கிறது. முகமதிய மதத்தை அல்ல, முகமதிய சமூகத்தையே அது கருத்தில் கொள்கிறது. அதே போல் ஆர். எஸ். எஸ். இயக்கமும் முகமதியரை மத அடிப்படையில் பாராமல் சமூக நோக்கிலேயே அணுகுகிறது.

ஆனால் ஸ்ரீ களிமிகு கணபதியின் கட்டுரையோ, முகமதியருக்கு ஹிந்து மதத்தைப் புரிய வைப்பதாகப் புறப்பட்டு, இரு வேறு கோட்பாடுகளையும் ஒன்றிணைக்க முற்பட்டு அல்லாஹோ அக்பர் என முழங்குவதில் முற்றுப் பெறுகிறது. இதில் வேடிக்கை, அல்லாஹோ அக்பர் என்ற முடிந்த முடிபான பிரகடனத்தை முகமதியத்தை மகிழ்விப்பதற்காகச் சொல்லிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஸத்யமேவ ஜயதேயை அதனுடன் இணைக்கிறது. அல்லாஹோ அக்பர் என்கிற ஸத்யம் ஜயிக்கட்டும் என்று பொருள்படக் கூடிய விதமாக!

எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.

ஹிந்து சமயக் கோட்பாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்து, மனத்தளவில் ஹிந்துக்களாக வாழ வைத்திருக்கிறேன். சிலர் துணிந்து தாய்மதம் திரும்பவும் உதவியிருக்கிறேன். மனதளவில் ஹிந்துக்களாக வாழும் என் முகமதிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டால் திகைப்படைவீர்கள். ஆனால் நான் அவர்களின் பெயர்களை வெளியிட்டால் அவர்களுடைய ஜமாத்துகளில் பல சங்கடங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடும்.

jamathமுகமதிய சமுதாயங்களில் ஜமாத் என்ற பெயரில் ஒரு போட்டி அரசாங்கமே கண்டுகொள்ளப்படாமல் கோலோச்சி வருகிறது என்பதைக் காதுள்ளவர்கள் கேட்கக் கடவீர்கள். முகமதியரிடையே ஏதும் சச்சரவு என்றால் உங்க ஜமாத்துலயே பேசி முடிச்சுக்குங்க என்று காவல் துறையே சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. மனதளவில் ஹிந்துக்களாக வாழும் எனது முகமதிய நண்பர்கள் என்னிடம் தெரிவிக்கும் செய்திகள் வேதனை தருபவை.

தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.

நமது மண்ணுக்குப் பொருந்தாத அரபு சம்பிரதாயங்கள் எங்கள் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன. எதிர்த்து நிற்க இயலவில்லை என்கிறார்கள். எங்களுக்கென்று உள்ள சுயம் வேகமாக அழிந்து வருகிறது என்று வருந்துகிறார்கள்.

வேதங்களையும் உபநிடதங்களையும் திரு மந்திரத்தையும் படித்துவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கும் முகமதிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவரும் குரான் வாசகங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பேசவில்லை. உருவ வழிபாடு தவிர்க்க இயலாதது என்று சொல்லும் அளவிற்குச் சிலர் உள்ளனர். முகமதுவுக்கு உருவம் சமைப்பது சில நூற்றாண்டுகள் முன்புவரை இருந்ததை ஒப்புக்கொள்வது மட்டுமின்றி அதில் தவறு இல்லை என்று சூசகமாக எழுதும் அளவிற்குத் துணிவு பெற்றுள்ளனர். இத்தகையோரை நாம் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அல்லா கீதையில் சொன்ன மாதிரி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கலாகாது.

மத நல்லிணக்கம் என்பது ஹிந்து சமயத்தில் உள்ள ஷண் மதப் பிரிவுகளை முன்னிட்டுச் சொல்லப்பட்டதேயாகும். நமது மண்ணுக்கும் பாரம்பரியமான மனோபாவத்திற்கும் பொருந்தாத அயல் பிரதேசங்களிலிருந்து மதத்தின் பெயராலும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டும் வந்த மேலாதிக்கப் பேராசையும் அடிமைப் படுத்தும் நோக்கமும் உள்ள புறக்கோட்பாடுகளையல்ல.thai_maatham1

ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது. முதல் படியாக அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ முகமதியராகவோ இருப்பதால் அடி பணிய வேண்டியிருக்கிற கட்டாயத்தை சமூக நோக்கில் விவரித்துப் பின்னர் நமது சமூகசமய மேன்மைகளை உணர்த்த வேண்டும்.

இதனை எனது வழிமுறையாகக் கொண்டிருப்பதால்தான் எனக்கு திராவிட இயக்கம், கிறிஸ்தவ, முகமதிய வட்டாரங்கள் ஆகியவற்றில் இனிக்கும் நஞ்சு என்பதாக ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.