நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள் என்ற கட்டுரையின் இரண்டாம் பகுதி.
If these issues are not bothersome to you and you can take enough clomid to get pregnant, we recommend you go for the recommended dose of 150 mg. It is also used in the treatment of asthma Inisa clomiphene price with insurance and allergies. Cost ivermectin has gained considerable acceptance as an important adjunct to conventional treatment for scabies [@b0005].
I'll say i have to take my medications with a bit of water and will take. There http://pdmbhind.org/about-us/ is a common problem with taking prescription medications. Zithromax 100mg tablets with no delivery to india.
Buy nolvadex no prescription and get a discount on this item! About the lowdown on levitra coupon: levitra is a medication to take on a https://blog.ratonviajero.com/riviera-maya-combinacion-perfecta-para-el-descanso-y-lo-cultural/ regular basis. No prescription is needed to get a prescription online from this pharmacy.
முதல் பகுதி இங்கே.
எனது இரண்டாவது இழப்பு டோண்டு என்னும் விசித்திரமான பெயரில் உலவிய ராகவன் அவர்கள். அவரை எனக்கு அறிமுகப் படுத்தியதே திருமலை ராஜன் தான். நான் சென்னை புற நகர் மடிப்பாக்கத்தில் இருந்த போது ஒரு நாள் திடீரென திருமலை ராஜன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். அவரை அன்று தான் முதலில் பார்க்கிறேன். உடன் டோண்டு ராகவனும். வயதானவர் ஆனால் என்னிலும் இளையவர். நல்ல தாட்டியான உடம்பு. திருமலை ராஜனை சில இணைய குழுமங்கள் மூலம் தான் தெரியும். எனக்கு கம்ப்யூட்டர் வாங்கி அதில் கொஞ்சம் தட்டுத் தடுமாறி கற்றுக்கொண்டு பின்னர் இணைய தளங்களில் அலைய ஆரம்பித்து அரவிந்தன் தான் என்று நினைக்கிறேன், சில இணைய குழுமங்களில் அறிமுகப்படுத்தி, பின்னர் தான் திருமலை ராஜனைத் தெரியும். ஆனால் இணையத்தில் தனக்கென ஒரு சாம்ராயத்தையே உருவாக்கி ஒரு மாதிரியான சர்வாதிகார ஆட்சி செய்து கொண்டிருந்த டோண்டு வைத் தெரியாது. அன்றைய சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாக அப்போது தெரியாவிட்டாலும் பின்னாட்களில் விரிந்த உறவும் நட்பும் அதன் முக்கியத்துவத்தைப் பின்னர் உணர்த்தியது.
டோண்டு ராகவனுக்கு மடிப்பாக்கத்தை அடுத்த நங்கநல்லூரில் வீடு. வந்த முதல் நாளே அவரை எனக்கு கம்ப்யூட்டரில் ஏற்பட்ட சிக்கல்களைச் சொல்லி ஒரு அரை மணிநேரம் அவரிடம் பாடம் கற்றேன். அப்படியெல்லாம் ஒரு தடவை சொல்லி விளங்கிக் கொள்கிறவன் இல்லை நான். இதற்கு முன் அரவிந்தனிடமும் பாடம் கேட்டிருக்கிறேன். ”என்னடா இது?, அவர் அப்பாவையும், அவருடன் வந்த நண்பரையும் உட்கார்த்தி வைத்துவிட்டு அரவிந்தனை அழைத்துக்கொண்டு கம்ப்யூட்டரின் முன் உடகார்ந்து விட்ட குற்ற உணர்வு இருந்த போதிலும், அதைக் கொஞ்சம் தட்டித் துடைத்தேன். அதே காரியம் தான் திருமலை ராஜனுடன் டோண்டு வந்த போதும். இது எப்போதும் யார் வந்தாலும் ஒவ்வொருத்தரிடமிருந்தும் கொஞ்சம் கற்றுக் கொள்ளும் அல்லது கற்றதை நினைவு படுத்திக் கொள்ளும் காரியம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
முதல் சந்திப்பிற்குப் பின் கொஞ்சநாள் கழித்து ஒரு முன் காலை நேரம் டோண்டு மறுப்டியும் தரிசனம் தந்தார் ”சும்மா இப்படி வாக்கிங் வந்தேன். அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போலாம்னு” என்றார். அப்போதிருந்து அந்த கணத்திலிருந்து நான் அவரை மிக நெருக்கமானவராக உணர்ந்தேன். நங்க நல்லூரி லிருந்து வாக்கிங் போகிறவர்கள் மடிப்பாக்கம் வருவதென்றால் அது வாக்கிங் என்கிற காரியத்தை அதன் இயல்புக்கு மீறி இழுக்கும் காரியம். வாக்கிங் போன உற்சாகத்துப் பதிலாக மனிதம் கால்களைத் துவள வைத்துவிடும். ஆனால் அதை அவர் வெகு அனாயாசமாகச் செய்பவர். அனேகமாக தினம் செய்பவர். அதிலும் பார்க்க அவர் கொஞ்சம் கனத்த சரீரி. ஒரு வேளை அதற்காகவே அப்படி ஒரு காலை நடைபயணத்தை மேற் கொண்டாரோ என்னவோ. அப்போது தான் அவர் வாக்கிங் பற்றிப் பேச்செடுத்தேன். “என்ன ஸ்வாமி இது, காலாற நடக்கிற நடையா இது? எப்படி ஸ்வாமி உம்மால் இது முடிகிறது? என்று கேட்டால், அதை “அதொன்னும் பெரிய விஷயமில்லை என்று ஒதுக்கி விடுவார்.
அப்போது முதலாக அவர் வரும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பற்றியும் நான் அறிந்தேன். எதுவும் துருவிக் கேட்டதில்லை. பேச்சு வாக்கில் வந்து விழும் செய்திகள் தான். ஆனால் ஆர்வமுடன் எங்கள் சம்பாஷணைகள் தொடரும். அவர் எங்கெங்கோ வெல்லாம் வேலை செய்திருக்கிறார். எங்கெங்கெல்லாமோ சுற்றி இருக்கிறார். அதெல்லாம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. இப்போது அவர் இத்தாலியன், ப்ரெஞ்ச், ஜெர்மன் மொழிகளிலிருந்து இங்கிலீஷ் மொழிக்கு எதானாலும், technical papers, projects, reports எல்லாம் மொழி பெயர்த்துத் தருகிறார். பணம் வருகிறது. குடும்ப க்ஷேமம் நடக்கிறது. எப்படி இவ்வளவு மொழிகள் கற்றுக்கொள்ள முடிந்தது. என்ன அவசியம் பற்றி? தெரியாது. நான் கேட்க வில்லை. இதெல்லாம் போக அவர் தன் பெயரில் ஒரு தளம் இணையத்தில் வைத்திருக்கிறார். Dondu.blogspot.com Dos and Don’ts of Dondu சொன்னார். அதில் வேறு நிறைய, உலக விஷயங்கள், அரசியல் நிகழ்வுகள், குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல் அலங்கோலங்கள் பற்றியெல்லாம். நிறைய எழுதுவார். டோண்டு என்று பெயர் வைத்துக்கொண்டு அதற்கேற்றாற் போல் தான் அவருடைய மொழியும், அதுக்கு வரும் பின்னூட்டங்களும் அந்த பின்னூட்டங்களின் மொழியும். உண்மையில் அவர் தொடாத விஷயம் கிடையாது. தன்னைத் தாக்கி வன்முறையில் நாகரீகமற்ற மொழியில் எழுதுபவர்கள் அனைவருக்கும் இவரும் சளைக்காது பதில் சொல்லிக்கொண்டிருப்பார். இவருக்கு ஏன் இந்த வீண் வேலை என்று எனக்குத் தோன்றும்.
இடையில் ஒரு நாள், ”நான் நேத்திக்கு எழுதினதைப் படித்தேளா?” என்பார். ”இல்லை சார் இனிமேல் தான் படிக்கணும்,” என்பேன். ”ஆமாம் படிக்கறேளா,” என்று என் பதிலில் சந்தேகம் வந்து கேட்பார். ”எல்லாத்தையும் படிக்கிறதில்லை சார். நீங்க எழுதறது அத்தனையும் படிக்க நேரம் வேண்டும். அதோட நீங்க ஊரில் இருக்கற கழிசடைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண் டிருக்கிறீர்களே, உங்களுக்கு நேரம் எங்கேயிருந்து கிடைக்கிறது?” என்று கேட்பேன். “ஜனங்கள் இப்படித்தான் இருக்கான்னா அவாளோட தானே நாம் காலம் தள்ளியாகணும். பதிலுக்குப் பதில் கொடுத்துடணும். இல்லாட்டா, ”பாரு, வாயடைச்சுப் போச்சு பாரு பாப்பானுக்கு”ன்னு கும்மாளம் போடுவாணுங்க” என்றார்.
”இருந்தாலும் சார் வேறு உருப்படியான காரியம் நிக்கக் கூடிய காரியமா செய்யலாம். இப்ப இவங்களுக்கு உங்களைச் சீண்டறதிலே தான் குறி. இவனுகள்ளே ஒத்தனாவது உங்க பேச்சைக் கேட்டு மாறியிருக்கானோ?” என்று கேட்பேன். பாவம் மனுஷன் அனாவசியமா தன் நேரத்தை வீணாக்குகிறாரே என்று எனக்குத் தோன்றும்.
ஒரு நாள் இந்த ஆளை நம்பிப் பயனில்லை என்று என் ப்ளாக்கை சரி செய்து கொடுக்கறேன் பேர்வழி என்று, என் ப்ளாக்கின் ஃபார்மாட்டை மாற்றி, (எனக்கு என்று ப்ளாக் ஒன்று ஆரம்பித்துக் கொடுத்ததே அவர் தான் Ve saa Musings என்றும் என்னை வெ.சா என்றும் வெங்கட் சாமிநாதன் என்றும் அழைப்பார்கள் என்றும் என்னை விமர்சகன் என்றும் சொல்வார்கள் என்றெல்லாம் எழுதிக்கொடுத்ததும் அவர் தான். அத்தோடு என் ப்ளாகிலேயே தன் ப்ளாக், இட்லிவடை ப்ளாக்கையும் சேர்த்து என் ப்ளாகைத் திறந்தாலேயே இட்லிவடையும் டோண்டுவையும் திறக்கத் தூண்டும் வகை செய்து கொடுத்துவிட்டுப் போனார். “உங்களுக்கு சிரமமில்லாமல் செய்து கொடுத்து விட்டேன்,” என்றார்.
அவர் மாதிரி ஒருவர் சளைக்காமல் சலித்துக்கொள்ளாமல், அவரைச் சீண்டும் சில்லுண்டிகளின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டும் இருப்பவரை எங்கு பார்க்கமுடியும்?
எப்படி இவரால் இவ்வளவும் செய்ய முடிகிறது? வியந்து வியந்து நான் ஒன்றுக்கும் மேற்ப்ட்ட தடவைகள் கேட்டுவிட்டேன். சரியல்ல தான். ஆனாலும் கேட்டுவிட்டேன். ஒரு தடவை சிரித்துக்கொண்டே, “உங்களுக்குத் தெரியுமோ, நான் இப்போ திருக்குறளுக்குப் பரிமேலழகரின் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருத்தி சரி செய்துகொண்டிருக்கிறேன்.” என்றார். எனக்கு பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது. “என்ன ஸ்வாமி இது, இப்படி ஒரு வேலையா?. பரிமேலழகர் உரை, அதை ஆங்கிலத்தில்?” எதற்கு?” என்று கேட்டேன். “ஆச்சரியமா இருக்கு இல்லையா? யார் என்ன பண்ணினா எனக்கென்ன வந்தது?. என் சொந்தக்காரன் ஒருத்தன் தில்லிலே இருக்கான். அவன் பண்ணீண்டு இருக்கான். திருத்திக் கொடூன்னான். ”அப்பா, நான் இந்த வேலையெல்லாம் காசுக்குத் தான் பண்ணுவேன். இவ்வளவு ஆகும். முதல்லே காசு கொடுன்னேன். அனுப்பினான். பண்றேன். அவ்வளவு தான்”: என்றார். எனக்கு அவர் சொன்ன பெயரைத் தெரியும். ஒரு மாதிரியான உறைந்த பண்டிதத் தனம். ஆங்கில அறிவு பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. இன்னொரு சுயப்ரதாப கல்லறைத் தமிழ்ப் பண்டிதத்திடம் நீண்ட கால சிக்ஷை. எப்படி இருக்கும் எல்லாம்?. “ஸ்வாமி அந்த ஆளுக்கு என்ன ஆங்கிலம் தெரியும்ணு நிச்சயமா ஒண்ணும் சொல்றதுக்கில்லை. அதிலும் பரிமேலழகர் உரையை என்னத்து இப்போ ஆங்கிலத்தில்? அதுக்குப் போய் உங்கள் நேரத்தைச் செலவிடுவானேன்?”
”எதானால் என்ன? அவன் உறவுக்காரன். கேக்கறான். நான் எல்லா வேலையையும் போல காசு வாங்கிண்டு பண்றேன். என்னவோ பண்ணீட்டுப் போறான்.” என்றார்.

அவர் நேரம் இப்போது எழுதும் முக்கியமானவர்களின் எழுத்துக்களையும் படித்துத் தான் வந்திருக்கிறார். ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் உட்பட. ஒரு முறை திண்ணையில் தான், நான் எழுதும் நினைவுகளின் சுவட்டில் தொடரைப் படித்து வந்தவர், பொறுமை இழந்து “எப்போது இவர் ஹிராகுட்டை விட்டு நகரப்போகிறார்?” என்று ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். யாரையும் விட்டு வைப்பதில்லை. அவரையும் மலர்மன்னனையும் சென்னையில், வாதம், விவாதம்” வெளியீட்டு அரங்கத்தில் பார்த்தேன். டிபிகல் டோண்டு தான்.
துரதிர்ஷ்டம் தான். என் துர்ப்பாக்கியம். நான் ஹிராகுட்டை விட்டு நகர்வதற்கு முன் டோண்டு நம்மை விட்டே ந்கர்ந்து விட்டார். அவர் அளவில் ஒரு போராளி தான். எல்லா அராஜக சிந்தனைகள் செயல்களுக்கும் தார்மீகமற்ற சொல்லாடல்களுக்கு அயராது தன் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்திருக்கிறார். ஒரே குறை. அவர்கள் எல்லோரும் நான் பார்த்த வரை நாகரீகமும் பண்பும் அற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அது ஒரு சோகம் தான். நல்ல மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். தன்னை அநாகரீமாகச் சாடியவர்களுக்கு அவர் நட்புக் கரம் நீட்டியவர். ஆனால் அந்த நட்புக் கரம் பற்றியவர்களோ “ பார்ப்பன “ என்ற துவேஷ அடைமொழி இல்லாது எந்த உறவையும் பேணத் தெரியாதவர்கள். இவர்களுடன் போராடித் தான் அவர் காலம் பெரும்பாலும் கழிந்தது என்பது ஒரு சோகம்.
வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள்