ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?

ஹைட்ரோ  கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதையொட்டிய கிராம மக்கள் கடந்த மாதம் போராட்டம் செய்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பிரச்சினையை நான்கு விதமாக அணுக வேண்டியுள்ளது.

It kills bacteria that are resistant to other antibiotics. The following Balrāmpur buy clomid ebay is a list of drug lawsuits involving the drug cyclobenzaprine, including settlements involving individual plaintiffs, as well as settlements involving plaintiffs in combined cases, with plaintiffs being considered a group if they are represented by the same legal counsel (either corporate or individual). Doxycycline is indicated for treating acne, rashes, pruritus and infection.

Albendazole is an imidazolate drug and acts against a broad range of intestinal parasitic species and can be used. The https://tree.nu/produkt/shou-sugi-ban-karnfuru-brand-stalborstad-och-linoljad/ use of antibiotics in the human or veterinarian medicine. In this case report, a 50-year-old man with a background of diabetes mellitus is described who took a prescription medication that he took for two months without seeking medical advice for any side effects.

I’m so happy, so excited, and can’t stop talking about it to everyone i know. We are using online pharmacies to make sure you get the medicine that clomid tablet price in nigeria Kālol is most appropriate for you. This can be very helpful when trying to make an informed choice about which one to take, but we’re still working to make it easier to understand.

  1. வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு/ மாநில அரசு எவ்வாறு கையாள்கிறது?
  2. ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்/பலன்கள்.
  3. இந்தியாவில் ஹைட்ரோ கார்பனை எடுக்கப்பயன்படுத்தப் போகும் தொழில் நுட்பம் என்ன? அதனால் எம்மாதியான சூழலியல் பாதிப்புகள்  உண்டு அல்லது ஏற்படலாம்?
  4. ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேறுமானால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

மேற்கூறிய கேள்விகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மட்டுமல்ல இனி அரசு கொண்டு வரும் எந்த வளர்ச்சித் திட்டத்திற்கும் கூட பொருந்தும்.

இக்கேள்விகளுக்கு விடையைப் பெறுவதற்கு முன்பாக ஹைட்ரோ கார்பன் என்பதென்ன? அனைத்து உயிரினங்களிலும் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவைதான் உள்ளது. ஹைட்ரஜனும் கார்பனும் சேர்வதன் கலவையைப் பொறுத்து அவ்வேதிப்பொருளுக்கு பெயர் சூட்டியுள்ளனர். ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும்  இணைந்தால் மீத்தேன் என்று பெயர். இரண்டு கார்பனும்  ஆறு ஹைட்ரஜனும்  இணைந்தால் ஈத்தேன் என்று பெயர். இவ்வாறாக அதன் கலவையைப் பொறுத்து ஒவ்வொரு வேதிப்பொருளுக்கும் பெயர் உள்ளது. லட்சக்கணக்கான வேதிப்பொருட்கள் ஹைட்ரஜன், கார்பன், நீர், ஆச்சிஜன், நைட்ரஜன் கலப்பதால் கிடைக்கும்.

ஹைட்ரோ கார்பனை எடுப்பதால் எரிபொருள் தேவையும், மின் உற்பத்தித் தேவையையும் பூர்த்தி செய்ய உதவும் என்பதால்தான் அரசு ஹைட்ரோ கார்பன் எங்கெல்லாம் உள்ளது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு சில இடங்களைக் கண்டறிந்தன. கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி படுகைகளிலும், அந்தமான் வரையிலுமான வங்க வளைகுடா பகுதியிலும், அஸ்ஸாம், ராஜஸ்தான், மேலும் சில இடங்களிலும் ஹைட்ரோ கார்பனை எடுக்கலாம் எனக் கண்டறிந்துள்ளது. ஹைட்ரோ  கார்பனிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் எரிவாயு என பல வகையான வேதிப் பொருட்களைப் பிரித்தெடுக்க இயலும். 

வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு/ மாநில அரசு எவ்வாறு கையாள்கிறது?

வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதற்கான நிலங்களைக் கையாள்வதில் தொடங்கி, பொது மக்கள் அத்திட்டத்தால் தமக்கு ஏற்படப்போகும் விளைவுகளைக் கண்டு அஞ்சி எதிர்ப்பைத் தாமாக தெரிவித்தாலோ, சூழலியல் போராளிகளின் தூண்டுதலில் தவறாகப் புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தால் கூட மக்களை அணுகி தொழில் நுட்ப ரீதியிலான விளக்கத்தை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. கொண்டு வரப்போகும் திட்டத்தால் இந்தியாவிற்கு  என்ன பலன், அதைக்காட்டிலும் நிலங்களை இழக்கும் மற்றும் அதனால் பாதிப்புக்குள்ளாகும் அதைச் சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் கிடைக்கப்பெறும் பொருளாதார நன்மைகள் மற்றும் மருத்துவக் காப்பீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதன் வாயிலாக அவர்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில்  மத்திய/மாநில அரசு செயல்பட வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தையும் , போராடும் மக்களின் உணர்வுகளையும்  புரிந்துக் கொண்டு செயல்படுவதாகத் தெரியவில்லை. மத்திய/ மாநில அரசுப் பொறுப்பில் உள்ளவர்களும், அதிகாரிகளும் இதை வெறுமனே வளர்ச்சித் திட்டமென்றும், மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று சொல்வதும், அவர்களே மக்கள் விரும்பவில்லையென்றால் இத்திட்டம் கைவிடப்படும் என்ற மாற்றையும் முன்வைப்பதைக்  காட்டிலும் மக்களைக் குழப்பத்தில் கொண்டு செல்வதும், அச்சத்தை அதிகப்படுத்துவதும் வேறொன்றாக இருக்க இயலாது. குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது அதிகாரத்தில் உள்ள அரசும், முந்தைய அரசின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் வெறுமனே நாங்களும் இத்திட்டத்தை எதிர்க்கிறோம், இதை வரவிட மாட்டோம் என்று சொல்வது கூட அரசியல்தான். ஜெயலலிதா கூடங்குளம் அணுஉலை பிரச்சினையிலும் ஆரம்பத்தில் போராட்டத்திற்கு மாநில அரசின் ஆதரவுண்டு என்று சொன்னதும், பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றியதும் வரலாறு. ஆகையால்தான் இம்முறை மாநில  அரசு உறுதி மொழியைக் கொடுத்த பின்னரும் போராட்டக்குழுவினர் போராட்டத்தைக் கைவிடவில்லை.

சூழலியல் போராளிகள் என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள் வளர்ச்சித் திட்டங்களை வெறும் சூழலியல் பிரச்சினையாக மாற்றி  ஊடகங்களைத் தங்களுக்குச் சாதகமாக தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுப்பதன் வாயிலாக பொது மக்களையும், கிராம மக்களையும் மிகத் தெளிவாக அச்சத்தில் ஆழ்த்த இயலுகிறது. இத்திட்டங்களால் ஏற்படும்  இழப்பைக் காட்டிலும் இந்தியாவிற்கு பலன் என்று இருந்த போதிலும் மத்திய அரசும் சரி, ஆளும் அரசின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் விளக்கமும் சரி பார்வையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதில்லை. தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களை வாங்குவதைக் காட்டிலும் விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் துணையோடு ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை அரசிற்கே உள்ளது. ஹைட்ரோ கார்பன் விஷயத்தில் தொழில் நுட்பம் சார்ந்த விளக்கங்களும் வழங்கப்படவில்லை. நிலங்களை இழக்கும், குத்தகைக்கு விடும் மக்களுக்கு இதனால் கிடைக்கப்பெறும் பலன்களைக் கூட அரசு அதிகாரிகள் அதிகளவில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்/பலன்கள் :

அரசு குத்தகைக்குச் சிலரிடமிருந்து நிலங்களை ஆய்வுக்காக வாங்கியது. அதற்கான பணம் மும்மடங்கு வாங்கிய தினத்திலிருந்து அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. அரசு இதை மேற்கொண்டு எடுக்க முப்பது வருடங்களுக்குக் குத்தகை போட்டுள்ளது. முப்பது வருடங்களுக்குப் பின்னர் நிலம் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்ற உறுதியை அரசு கொடுத்தாலும், அவ்விடத்தில் சில/பல ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய இயலாது. ஏனெனில் அங்கு ரசாயானம் கொட்டிக் கிடந்திருக்கும். அந்த மண்ணின் தன்மை விவசாயம் செய்வதற்கான சக்தியை இழந்திருக்கும் என்பதும் உண்மை.

விவசாயிகள் நிரந்தரமாக எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகளை மனதிற்கொண்டு நிலங்களை விற்பவர்களுக்கு அல்லது குத்தகைக்கு விடுபவர்களுக்கு மிகுந்த லாபம் தரும் வகையில் செய்தால் தாங்களாகவே மாற்றுத் தொழிலுக்கு ஆயத்தம் செய்வார்கள்.  மேலும் இதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட நிலப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்களுக்கும் பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் சிறப்புச் சலுகைகள் வழங்கும் என்கிற உறுதி மொழியையும் கொடுத்தால் நிச்சயமாக அரசின் திட்டங்களுக்குத் துணை செய்வார்கள். என்னைக் கேட்டால் நிலத்தைக் கொடுப்பவர்களுக்கு ஹைட்ரோ கார்பன் வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் கிடைக்கும் என்ற உறுதியும் கொடுக்க வேண்டும். நிலத்தையும் விற்க முன்வருவார்கள்.

இந்தியாவில் ஹைட்ரோ கார்பனை எடுக்கப்பயன்படுத்தப் போகும் தொழில் நுட்பம் என்ன? அதனால் எம்மாதியான சூழலியல் பாதிப்புகள்  உண்டு அல்லது ஏற்படலாம்?

ஹைட்ரோ  கார்பனில் மரபு சார்ந்த எரிபொருள் (Conventional Gas) & மரபுசாரா எரிபொருள் (UnConventional Gas) என இரண்டு இருக்கிறது. மரபு சார்ந்த எரிபொருள் என்பது  பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு (natural gas) போன்றவை. நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு, tightsand மீத்தேன் போன்றவை  மரபு சாரா எரிபொருள் வகையைச் சேர்ந்தது.  தற்போது  இந்தியாவில் மரபு சார்ந்த எரிபொருள்  (Natural Gas & Oil)எடுப்பதற்கான தொழில் நுட்பமுள்ளது. ஆழ்துளைக் குழாய்களை பூமிக்கு அடியில் செலுத்தி நீரை எடுப்பது போல மிகச் சிறிய அழுத்தத்தைக் கொடுத்து பூமிக்கு அடியிலுள்ள எண்ணெயையும், இயற்கை எரிவாயுவையும் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதை எடுப்பது என்பது பெரிதாக சுற்றுச் சூழலைப் பாதித்ததில்லை. இரண்டாவதாக சொல்லப்படும்  மரபு சாரா எரிபொருள் (methene, Shale Gas) எடுக்கப்படுவதற்கானச் சொந்தமான தொழில் நுட்பம் இந்தியாவிடம் கிடையாது. இந்தியாவில் பல்வேறு ஆய்வுகள் இது சம்பந்தமாக நடந்து வருகின்றன. இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவில் உள்ள நீரியல் விரிசல் (hydraulic  fracking) முறையைப் பயன்படுத்தினால் அதிக தண்ணீர் செலவாகும் என்பதால், தமக்கான புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓஎன்ஜிசி  உயர் அழுத்த அலைகள் (Super Shock Waves)  என்ற தொழில் நுட்பத்தை செயலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது Rock Sciences and Rock Engineering Laboratory, Department of Earth Sciences, IIT Bombay Natural Gas & Shale Gas ஐ மண்ணுக்கு அடியிலிருந்து எப்படி எடுப்பது என்பது பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இயற்கை எரிவாயுவை – ஐ எடுப்பது ஷேல் எரிவாயுவை  எடுப்பதுபோல கடினமான ஒன்று அல்ல. இயற்கை எரிவாயு என்பது மென்மையான பாறைகளில் படிந்துள்ள ஒன்று. இதை துளைகளைப் போட்டு  மென்பாறைகளில் படிந்துள்ளதையும் சிறிய அழுத்தத்தைக் கொடுப்பதன் வாயிலாக மென்பாறைகளை  ஊடுருவி எடுப்பதும் மிக எளிதான ஒன்று. ஆனால் ஷேல் எரிவாயு  என்பது கடினமான பாறைகளுக்குள்  படிந்துள்ள ஒன்று. இதை ஆழ்குழாய்களை துளையிட்டு  எடுப்பது கடினமான ஒன்று. இதை எடுக்கவே அமெரிக்கா  நீரியல் விரிசல் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கிறது. இதைப் பல்வேறு வகையான ரசாயானத்தை  மண்ணுடன் கலக்கி, அதிக  அழுத்தத்துடன் தண்ணீரைச் செலுத்தி கடின பாறைகளில் படிந்துள்ள ஷேல் எரிவாயுவானது  பிரித்தெடுக்கப்படுகிறது. ஒருவேளை இந்தப் பாறைகளை உடைத்தெடுக்கும் போது தவறுகள் நடந்தால் அது நீருடன் கலந்து மாசு ஏற்படுத்தும் என்பதே இதை எதிர்ப்பவர்களின் வாதம். அதனால் பல பிரச்சினைகள் (விவசாயம் அழியும், நோய்கள் வரும்) ஏற்படும் என்பதே எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் வாதமாக உள்ளது.

மேலும் அமெரிக்கா, தான் வைத்திருக்கும் நீரியல் விரிசல் தொழில்நுட்பம் பற்றிய நுணுக்கங்களை யாரிடமும் பகிரத் தயாராக இல்லை என்பது ஒருபுறம். மற்றொரு புறத்தில் இதை ஆய்வு செய்து வரும் இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்காவில் உள்ள பாறை அமைப்பிற்கும் இந்தியாவில் பூமிக்கு அடியிலுள்ள பாறை அமைப்பும் ஒன்றல்ல என்று தெரிவிக்கின்றனர். மேலும் இதற்கு அதிக தண்ணீர் செலவாகும் என்பதையும் கணக்கில்கொண்டுள்ளது. எனவே தான் இந்தியா நீரியல் விரிசல் (Hydraulic Fracking)முறை நமக்கு அவசியமில்லாத ஒன்று எனக்கருதி, சொந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் பொருட்டு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் அந்நிய செலவாணியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அரசின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவோ, அல்லது நீரியல் விரிசல் முறையை இன்னமும் கொண்டு வரவில்லை என்பதை அறியாமலேயே அரசை மக்கள் விரோதி அரசாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சமூக போராளிகள் உள்ளூர் மக்களிடம் தவறான கருத்தைப் பரப்பி வருகிறார்கள் என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

பாறையின் தன்மையை, அதை உடைக்கவும் அழுத்தம் பற்றிய ஆய்வுகளை ஒரு புறம் Rock Sciences and Rock Engineering Laboratory, Department of Earth Sciences, IIT Bombayசெய்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதை அளவை செய்யும் permeameter  கருவியையும்  மற்ற கருவிகளையும்   தயார் செய்துவிட்டார்கள். இதுவரையிலும் பாறையை எப்படி உடைப்பது என்பதற்கான 6-7 முறைகளை ஆய்வு செய்துள்ளார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் பாறையை எப்படி உடைப்பது என்கிற முழுமையான ஆய்வுகள் முடியும். இந்த ஆய்வை மேற்கொள்ளுவதற்கு சர்வதே அனுமதியையும் பெற்றுவிட்டது மும்பை ஐஐடி.

Super Wave Technology Ltd (SWTL) என்ற நிறுவனத்துடன்  ஓஎன்ஜிசி  புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டு ஷேல் எரிவாயுவை எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறியும் super shock waves  என்ற விரிசல் தொழில் நுட்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளது.  SWTL என்பது ஐஐஎஸ் பங்களூரின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இந்த ஆய்வை இந்தியா ஏன் மேற்கொள்கிறது என்ற கேள்விக்குப் பதில் இதுதான்.

// Hydraulic fracturing requires very large quantities of fresh water and huge quantities of energy for pumping the same at very high pressures to break up the shale rock and free up the oil or gas. After the fracturing, the well produces substantial quantity of effluent water which needs to be disposed of.
These are issues regarding safe disposal of the water. The global oil and gas industry has been searching of late for alternate technique for fracturing which either does not require any water or minimum quantity of water ​//

அதாவது அமெரிக்காவின் நீரியல் விரிசல் தொழில் நுட்பத்திற்கு அதிக தண்ணீர் செலவும் அதிக பொருட் செலவும் ஆகும். ஆகையால் இந்தியா அவ்வழியைப் பயன்படுத்துவதினால் லாபமல்ல என்பதால்தான் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரில்லாமல் அல்லது மிக்க குறைந்த அளவில் தண்ணீர் உபயோகிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்தியா.

shock/blast waves தொழில் நுட்பத்தை முதலில் 1000 -1500 மீட்டர் ஆழத்தில் உள்ள ஷேல் காஸை எடுக்கப் பயன்படுத்தலாம் என்ற யோசனையையும் ஓஎன்ஜிசி ​ அரசிற்கு முன் வைத்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேறுமானால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

இந்தியா அந்நிய செலவாணியில் 80%-  ஐக் கச்சா எண்ணெய்  மற்றும் 18% எரிவாயு இறக்குமதி செய்வதற்கே செலவிடுகிறது. ஆண்டுக்கு 10,50,000 கோடி ரூபாய்க்கு  கச்சா எண்ணெய்  இறக்குமதிக்காக  மட்டுமே இந்தியா தற்போது செலவிடுகிறது. 2030 ல் இதே நிலை நீடித்தால் 20,00,000 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். இந்தியாவின் இயற்கை எரிவாயுவுக்கான சராசரி தேவை 6.8% அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை மனதிற் கொண்டு இந்தியா தேவையைக் கட்டுக்குள் வைக்க முயல வேண்டும். மின் உற்பத்தி முறையில் அணு மின் உற்பத்தி மற்றும் கதிர், காற்றாலைகள் போன்ற மாற்று மின் திட்டங்களைக் கொண்டு வருவதன் வாயிலாக எரிவாயு, எண்ணெய் தேவையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். மேலும் இறக்குமதியைக் குறைக்க தமக்கான சொந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு எரிவாயுவை பூமிக்கு அடியில் வைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் எரிபொருள் தேவையையும் ஓரளவுக்கு நிறைவேற்ற இயலும்.

​மக்கள் விரும்பாத திட்டங்கள் வேறு. மக்களை அறியாமைக்குள் செலுத்தி மக்களை விருப்பப்படாமல் செய்ய வைக்கும் முயற்சிகள் வேறு. ஆனால் மக்களை அறியாமையில் வைத்து ஓஎன்ஜிசி ​மற்றும் அரசுகள் முறையாகச் செயல்படுவதன் விளைவுகளே இன்று சூழலியல் போராளிகள் என்ற பெயரில் மக்களைக் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வளர்ச்சிக்கான திட்டமாகப் பார்க்காமல், கான்சர் வரும், நோய்கள் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி இந்திய வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்துகிறார்கள்.

​இப்போது அரசு செய்ய வேண்டிய பரப்புரை, இந்தியா தற்போதைய நிலையில் ஏற்கனவே மற்ற இடங்களில் எடுத்து வரும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்தான் எடுக்கப்போகிறது என்பதையும், நீரியல் விரிசல் முறையை இந்தியா பயன்படுத்தப் போவதில்லை என்பதையும், ஆகையால் அதிக அளவிற்கான நீரைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை இந்தியா நிராகரித்துள்ளது போன்ற  விஷயங்களையும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

போராட்டக் காரர்கள் இந்த சமூக விஞ்ஞானிகளிடம் இந்தியாவில் எங்கெல்லாம் நீரியல் விரிசல்  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஷேல் எரிவாயுவை எடுத்துள்ளார்கள் என்று வினாக்களை எழுப்பச் செய்ய வேண்டும். அப்போது அவர்களால் இந்தியாவில் ஒரு இடத்திலும் இதுவரை எடுக்கவில்லை என்ற உண்மையைச் சொல்ல வேண்டி வரும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட  எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் அரசுகள் கழிவுகளை அகற்ற உண்மையான அக்கறையை செலுத்துவதோடு அல்லாமல், அவற்றை முறையாக அகற்றும் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொழிற்சாலையில் அப்பொறுப்பில் உள்ளவர்கள் முறையாக செய்யாவிடில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பஞ்சாயத்துத் தலைவர்கள் இதுசார்ந்து புகார் கொடுத்தால் ஓஎன்ஜிசி முறையான நடவடிக்கையை அதிகாரியின் மீதும் எடுக்க வேண்டும். உடனுக்குடன் கழிவுகளையும் அகற்ற வேண்டும். செயல்முறைக்கு (operation) வந்த பின் இதை முறையாகச் செயல்படுத்தாமல் அன்றாட உற்பத்தியில்  மட்டுமே கவனம் செலுத்துவது சரியல்ல.

அதிக அளவிலான மீத்தேன் வெளிப்பாடு என்பது வேளாண்மையிலிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தான் வெளிப்படுகிறது. இதனால் பெருமளவு பசுமை வீட்டு வாயுக்கள் (Green House Gas) வெளிப்படுகின்றன. கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக புவி வெப்பமயமாதல் என்ற மிகப்பெரிய சூழலியல் பிரச்சினைகளுக்கு இதுவே காரணமும் கூட. மனிதர்கள் தங்கள் தேவைக்காகத் தான் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளுக்கு இடையே வாழ்கிறோம். அவ்வகையில் இன்றைய தேவையான எரிபொருளும் முக்கியமானது என்ற புரிதலையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இயன்ற அளவுக்கு  சூழலை மாசுபடுத்தாத தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பதே சமூகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சுற்றுச்சூழலையும் பேணிக்காக்க வழிவகுக்கும் என்ற புரிதலே அவசியமானது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அரசின் பொறுப்பு. பெட்ரோல் டீசலை மண்ணெண்ணெய் இறக்குமதியையும் குறைத்து, அந்நிய செலவானியையும் குறைத்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நமது ஒத்துழைப்பைக் கொடுப்போம்.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கலாம்:

http://www.business-standard.com/article/punditry/where-is-india-s-fracking-revolution-115102100273_1.html

http://www.shalegas.international/2015/02/20/indian-company-uses-shock-waves-instead-of-fluid-to-frack-shale/

https://www.kbhenergycenter.utexas.edu/2016/05/03/india-invites-texas-energy-companies-to-invest-in-its-shale-market/

http://www.heritage.org/environment/report/the-regulation-hydraulic-fracturing-federal-and-indian-land-wyoming-v-department

http://www.teriin.org/policybrief/docs/Shale_gas.pdf

http://indianexpress.com/article/technology/science/from-the-lab-studying-shale-rocks-to-extract-gas/

http://tech.economictimes.indiatimes.com/news/technology/a-billion-dollar-business-by-using-a-destructive-natural-phenomenon/51723663

http://www.business-standard.com/content/b2b-chemicals/ongc-super-wave-technology-to-co-develop-alternative-for-hydraulic-fracturing-115022000033_1.html

https://www.emis.com/insight/india-%E2%80%93-shelving-shale

http://timesofindia.indiatimes.com/business/india-business/ONGC-goes-for-shock-therapy-under-PMs-Make-in-India-move/articleshow/46291516.cms

நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா

மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நேர்த்தியாகத் தயாரிக்கப் பட்ட கிரிக்கெட், வாலிபால் சாதனங்ளை 12 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு வழங்கியுள்ளது. அந்த விளையாட்டு ‘கிட்’களில் பொறிக்கப் பட்டுள்ளது பிரபல விளையாட்டு வீரரின் படமோ திரைப்பட நடிகரின் படமோ அல்ல, ஒரு புகழ்பெற்ற இந்துத் துறவியின் படம். “எனது வாலிப நண்பர்களே, நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு இன்னும் அருகில் செல்வீர்கள்… உங்கள் புஜங்களிலும், தசைகளிலும் இன்னும் கொஞ்சம் திண்மையேறினால், கீதையை நீங்கள் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்” என்று சொன்ன வீரத் துறவியின் படம். இந்த நற்பணியைச் செய்திருப்பது குஜராத் மாநில அரசு.

சுவாமி விவேகானந்தரின் 150வது நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி மாபெரும் இளைஞர் எழுச்சியை குஜராத் மாநிலம் முழுவதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் குஜராத் மாநில அரசு. 13,000 கிராமங்களில் விவேகானந்த இளைஞர் மன்றங்கள் அமைப்பதற்கான பணிகள் துவக்கப் பட்டுள்ளன. அனைத்து அரசு நூலகங்களிலும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கும் நூல்கள் முழுவதுமாகக் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. விவேகானந்தா திறன்வளர்ப்பு திட்டத்தின் கீழ் நான்கு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் இணைந்த திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப் பட உள்ளன. ’விவேக வாணி’ என்ற தலைப்பில் சுவாமிஜியின் வாழ்வையும் செய்தியையும் விளக்கும் 3-நிமிட குறும்படங்கள் நேர்த்தியாகத் தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டுள்ளன. தனது முக நூல் பக்கத்திலும், டிவிட்டரிலும் நரேந்திர மோடி தினந்தோறும் எழுச்சியூட்டும் விவேகானந்தர் மேற்கோள்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் முழுவதும் விவேகானந்த யுவ விகாஸ் யாத்ரா என்ற யாத்திரையை நரேந்திர மோடி நடத்தி முடித்துள்ளார். மாநிலத்தின் நல்லாட்சி குறித்த தனது சாதனைகளையும், கனவுகளையும் இளைஞர்களிடம் இதன் மூலம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள மாநில முதல்வருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. யாத்திரை செல்லும் ஒவ்வொரு இடத்திலும் மாபெரும் உற்சாக வரவேற்பு அவரை எதிர்கொண்டதில் ஆச்சரியமில்லை.

தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களின் தலைமைகள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்குவது எப்படி என்ற சிக்கலில் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் குஜராத் மாநிலமெங்கும் பல்வேறு வகையான நீர் மேலாண்மை கட்டமைப்புகளையும், எல்லா கிராமங்களிலும் வெட்டுகள் இல்லாத தடையறாத மின்சாரம் வரும் வகையிலான மின் உற்பத்தி மற்றும் வினியோக அமைப்புகளையும் ஏற்கனவே மோடியின் தலைமையில் அமைந்த அரசு உருவாக்கி முடித்து விட்டது. இப்போது நரேந்திர மோடி பேசிக் கொண்டிருப்பதெல்லாம் மாநிலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றித் தான்!

ஐந்து முன்னுதாரணமான முத்திரைத் திட்டங்களை மோடியின் தலைமையிலான குஜ்ராத் அரசு செயல்படுத்தி வருகிறது.

குணோத்ஸவ் – சாமானிய மக்களுக்கு தரமான, சீரான கல்வியை அரசுப் பள்ளிகளிலேயே வழங்கும் திட்டம்.

கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும், சுத்தமாகப் பராமரிக்கப் படும் 52,0000 கழிப்பறைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. தமிழகத்தில் கடைசியாக எப்போது அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் திறக்கப் பட்டன, அது பற்றி செய்தித் தாள்களில் செய்தி வந்தது என்பது யாருக்காவது ஞாபகம் வருகிறதா? கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப் பட்டு, அப்துல் கலாம் போன்ற சாதனையாளர்களை உருவாக்கிய தமிழகத்தின் அரசுப் பள்ளிகள், திட்டமிட்டு மாநிலக் கல்வித் துறைகளால் சீரழிக்கப் பட்டு வருவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் சோகப் படலாம்.

கிருஷி மகோத்சவ் – விவசாயத் திருவிழாக்கள்

”கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக விவசாய உற்பத்தி 3 சதவீதம் வளர்ந்துள்ளது. ஆனால் குஜராத்தில் மட்டும் எப்படி அது 9 சதவீதமாக வளர முடிந்தது? குஜராத்தின் இந்த அபாரமான திருப்பு முனை தேசத்திற்கே ஒரு மாபெரும் கண் திறப்பாக அமைய வேண்டும்” என்று சொல்கிறார் டாக்டர் அப்துல் கலாம். ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் விவசாயத் திருவிழாக்களை நரேந்திர மோடியின் அரசு மாநிலத்தின் பல இடங்களில் மிக வெற்றீகரமாக நடத்தி வருகிறது. குஜராத் விவசாயத் துறையில் அடைந்து வரும் மாபெரும் வளர்ச்சியை இந்த விழாக்கள் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த வருடத்திய கிருஷி மகோத்சவ விழா ஒன்றில், 8000க்கும் மேற்பட்ட விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 27 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு 8000 கோடி ரூபாய்களுக்கு மேல் நேரடி நிதி உதவி வழங்கப் பட்டது என்று மோடி அறிவிக்கிறார். இயற்கை விவசாயம் குஜராத்தில் எந்த அளவு பரவலாக்கப் பட்டுள்ளது என்று இன்னொரு கூட்டத்தில் பேசுகிறார். மாநிலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் விவசாய நிலம் உள்ளது, அதை இதற்கு மேல் அதிகரிக்க முடியாது. எனவே இருக்கும் நிலத்தில் உற்பத்தித் திறனை (productivity) அதிகரிப்பது எப்படி என்பது பற்றித் தான் நாம் மையமாக இப்போது சிந்திக்க வேண்டும் என்று மற்றொரு விவசாயக் கூட்டத்தில் அருமையாக எடுத்துரைக்கிறார். எந்த அளவுக்கு சிரத்தையுடனும், ஈடுபாட்டுடனும் இந்த விஷயங்களை அவர் பேசுகிறார் என்பதை அறிய குஜராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு நிலமாகக் காய்ந்து கிடந்த கட்ச் பாலைவனம் முழுதும் இன்று சாலைகளின் இருமருங்கிலும் அலையடிக்கும் பசுமையுமே அதை நமக்கு உணர்த்தி விடும்.

கேல் மஹாகும்ப் – மாநிலம் தழுவிய விளையாட்டுத் திருவிழா

ஆர் எஸ் எஸ் மைதானத்தின் புழுதியிலும் வேர்வையிலும், விவேகானந்தரின் வீர மொழிகளிலும் தான் ஒரு மாபெரும் தலைவருக்கு அத்தியாவசியாக இருக்க வேண்டிய ஆளுமைத் திறன்களைக் கற்றுக் கொண்டார் மோடி. எனவே தான் கும்ப மேளா போன்று லட்சக் கணக்கான மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மேளாக்களை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்திருக்கிறது.

வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரில் வருடம் தோறும் குஜராத் மாநிலம் நடத்தும் முதலீட்டாளர்கள் மாநாடு. இம்மாநாடு இந்திய தேசிய அளவில் மட்டுமல்ல, ஆசிய அளவிலேயே ஒரு முக்கியமான நிகழ்வாகப் பிரபலமடைந்துள்ளது. 2011ம் ஆண்டில் மட்டும் 450 பில்லியன் டாலர்களுக்கும் மேலான முதலீடு குஜராத் மாநிலத்தில் குவிந்துள்ளது.

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக “வாஞ்சே குஜராத்” என்ற திட்டமும் செயல்பட்டு வருகிறது. புத்தகக் கண்காட்சிகள், நூலக மேம்பாடு ஆகியவற்றுக்காக மாநில அரசு பிரத்யேக நிதி ஒதுக்கி நிர்வகித்து வருகிறது.

மாற்று சக்தி உற்பத்தி செயல்பாடுகளில் இந்தியாவிலேயே முன்னணியில் நிற்கும் மாநிலமாக குஜராத் உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய சூரிய சக்தி மையம் குஜராத்தில் தான் இயங்கி வருகிறது. நர்மதை நதிக் கால்வாய்கள் ஓடும் பாதைகளில் நீர்ப்பரப்பு மீது சோலார் பேனல்களைப் பொருத்திய ஐடியா உலகத்தின் கவனம் முழுவதையும் குஜராத்தின் பால் ஈர்த்தது.

சில வாரங்கள் முன்பு கூகிள் நிறுவனம் தனது கூகிள் ஹேங்க் அவுட் என்ற பல்முனை வீடியோ உரையாடல் தொழில்நுட்பத்தை விமர்சையாக இந்தியாவில் அறிமுகப் படுத்த நரேந்திர மோடியுடனான இணைய வீடியோ சந்திப்பை ஏற்பாடு செய்தது. உலகெங்கும் இருந்து ஆயிரக் கணக்கானோர் மோடியுடன் உரையாட விரும்பினர்.. நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் மோடி அளித்த அருமையான பதில்கள் அவரது சிந்தனைத் தெளிவையும், நேர்மையையும் பறைசாற்றுவதாக அமைந்தன (உரையாடல்கள் அனைத்தையும் இங்கு பார்க்கலாம்).

எப்படி சார் இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று ஒரு அஸ்ஸாமிய இளம்பெண் கேட்டார். ‘நான் எனது இளமையில் 25 வருடங்களுக்கும் மேலாக பரிவ்ராஜகனாக, பிட்சுவாக அலைந்து திரிந்திருக்கிறேன். கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி, உடல் களைத்து விழும் வரை வேலை செய்திருக்கிறேன்.. எனது உடல் எப்போதும் தேசத்திற்காக தேய்ந்து கொண்டிருக்க வேண்டுமே தவிர, ஒரு போதும் தேசத்திற்கும், சமூகத்திற்கும் பாரமாகி விடக் கூடாது – இந்த எண்ணம் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எப்போதும் எனக்கு உந்துதல் அளிக்கிறது’ என்றார்.

குஜராத் மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்திருக்கிறது, இந்த விழிப்புணர்வை உருவாக்க என்ன செய்தீர்கள்? என்று ஒரு பெண்மணி கேட்டார்.. ”நமது வனவாசி,பழங்குடி மக்களின் சமூகங்களை நான் பல காலமாக அவதானித்து வருகிறேன். அவர்கள் பெண் குழந்தைகளை ஒரு போதும் சுமையாகக் கருதுவதில்லை.. படித்த, நடுத்தட்டு மேல்தட்டு மக்களே அப்படிக் கருதுகிறார்கள் என்பதை மக்களின் மனதில் பதியவைத்தோம். சாதுக்கள், சமயத் தலைவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மாணவ மாணவிகள் எல்லாரையும் ஒன்றிணைத்து இந்த விழிப்புணர்வை உண்டாக்கினோம்” என்றூ பதிலளித்தார் மோடி.

”எனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவே என் கனவும். அதற்கு என்னால் முடிந்ததைச் செய்ய இறைவன் அளித்த வரமாகவே இந்தப் பதவியைக் கருதுகிறேன்” என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டார்.

*****

சுவாமி விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். பாஜகவில் மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆளுமைகள் யாருமே இப்போது இல்லை. அதனால் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நரேந்திர மோடி விவேகானந்தரைக் கையில் எடுத்திருக்கிறார் என்பது இந்த அறிவுசீவிகளின் வாதம்.

உண்மை என்னவெனில், வீர நரேந்திரரின் கருத்துக்களால் தனது இளமைக் காலம் முதலே ஈர்க்கப் பட்டவர் நரேந்திர மோடி. அவர் ஆர் எஸ் எஸ் பிரசாரகராக இருந்த போதும் சரி, பாஜக செயல்வீரராக, ஒருங்கிணைப்பாளராக இருந்த போதும் சரி, விவேகானந்தரின் மேற்கோள்களே அவரது தாரக மந்திரமாக விளங்கின. சுவாமிஜியின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டு இது என்பதால், தனது ஆதர்சமான சுவாமிஜியின் மகோன்னதமான விழிப்புணர்வுச் செய்திகளை மாநில முதல்வர் என்ற வகையில், தனது மாநிலத்தின் எல்லா இளைஞர்களிடத்தும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுகிறார் மோடி.

இதில் என்ன தவறு? சுவாமி விவேகானந்தரின் 150வது நூற்றாண்டு என்பது நாடெங்கும் தேச பக்தியையும், இளைஞர் சக்தியையும் மீள் எழுப்பிட ஒரு நல்வாய்ப்பு அல்லவா? உண்மையில் மத்திய அரசு அல்லவா இதைவிடக் கூடுதல் முனைப்புடன் சுவாமிஜியின் நினைவைக் கொண்டாடியிருக்க வேண்டும்? தேசிய எழுச்சி நாயகரான விவேகானந்தரின் நினைவை ஒவ்வொரு மாநிலமும் குஜராத் செய்வதைப் போல பத்தில் ஒரு பங்கு முனைப்புடனாவது கொண்டாட வேண்டாமா?

’சுவாமி விவேகானந்தர் ஒரு சன்னியாசி, ஒரு spiritual leader. அவரை அரசியலுக்கு இழுத்து வருவது அபாயகரமானது. செக்யுலர் சக்திகள் இதைத் தடுக்க வேண்டும்’ என்கிறார் ஒரு தில்லி ஜே.என்.யு பல்கலை அறிவுஜீவி (இந்தியா டுடே இதழில்). பின்னே, அரசியலிலும் சரி, அரசுத் திட்டங்களிலும் சரி மீண்டும் மீண்டும் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் இவர்களது புனிதப் பெயர்கள் தானே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்க வேண்டும்? அதில் விவேகானந்தர்களோ அவர்களது சீடர்களோ எப்படி அத்துமீறி நுழையலாம்? – இது தான் அவரது உண்மையான கவலை.

தேசிய அடையாளமான சுவாமிஜியின் விசாலமான ஆளுமையைக் குறுக்கி, அவரை ஒரு மதத் தலைவர் என்ற குப்பிக்குள் அடைக்கும் விஷமத் தனம் தான் இதில் தெரியவருகிறது. சுவாமிஜி இந்தியாவின் அரசியல் விடுதலை, சமூக விடுதலை, ஆன்மீக விடுதலை ஆகிய மூன்றையும் குறித்து சிந்தித்தவர் என்பது தான் அவரை மற்ற துறவிகளில் இருந்து வேறுபடுத்துகிறது, அவரது தனிச்சிறப்பே அது தான். சுவாமிஜியை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, அவரது சிந்தனைகளைக் கற்று உள்வாங்கி இருப்பவர் நரேந்திர மோடி.

தனது தனி வாழ்க்கையில் மிகுந்த எளிமையைக் கடைப்பிடிப்பவர் நரேந்திர மோடி. ஆயிரமாயிரம் கோடிகள் காங்கிரசின் ஊழல்கள் வெடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான். அவையும் பட்டுப் பீதாம்பரங்கள் அல்ல. காதி கிராப்ஃட் அமைப்புகள் மோடிக்காக உருவாக்கித் தரும் “மோடி குர்தா” என்ற கதராடைகள்! அவரது சொந்தங்கள் என்ற வகையில் உலகுக்குத் தெரிய வருபவர் தவமே உருக்கொண்ட அவரது தாய் மட்டுமே. அந்த மூதாட்டியும் குஜராத்தில் ஒரு சிறிய கிராமத்தில் எளிய வீட்டில் வசித்து வருகிறார்.

அந்த வகையில் இன்றைய அரசியல் தலைவர்களில் மோடி தான் உண்மையான காந்திய வாதி. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சி என்று வரும்போது பெருந்தொழில்களையும் அன்னிய முதலீடுகளையும் மோடியின் அரசு ஊக்குவிக்கிறது. பொதுவாகவே தொழில் துறையிலும் வர்த்தகத்திலும் முனைப்பு கொண்ட குஜராத் மாநிலம் உலகமயமாக்கப் பட்ட சந்தைப் பொருளாதாரத்தில் தேங்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் துணி உற்பத்தியாளர்கள், பருத்தி விளைவிக்கும் விவசாயிகள் இருவரது நலன்களையும் சமன் செய்து, தனது மாநில பருத்தி விவசாயிகளுக்கு உலக சந்தையைத் திறந்து விடும் வகையில் அவரது அரசு செய்த முயற்சிகள் நரேந்திர மோடியின் கச்சிதமான பொருளாதார செயல்பாடுகளுக்கு ஒரு எடுத்துக் காட்டு. காந்தியத்தையும், சுதேசி பொருளாதாரத்தையும், உலக மயமாக்கலையும் எப்படி சமன் செய்வது என்பதற்கு அவரது அரசாட்சி செயல்பாடுகள் சிறந்த முன்னுதாரணங்கள் ஆகக் கூடும்.

******

எல்லா மக்கள் தலைவர்களுக்கும் இரண்டு முக்கியமான முகங்கள் உண்டு – ஒன்று அரசாட்சி (governance), மற்றொன்று அரசியல் (politics). முன்னாள் பிரதமர், கர்நாடக முதல்வர் தேவ கவுடா பற்றி He is a 365 day politician என்று எஸ். எம். கிருஷ்ணா ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையில் இந்தியாவின் பல அரசியல்வாதிகள் இதற்குக் கச்சிதமாகப் பொருந்தி வருவார்கள். அவர்கள் பதவியில் இருக்கும் போதும் கூட அரசாட்சி செய்வதில்லை, அரசியல் செய்வதில் மட்டுமே தான் தங்களது எண்ணங்களையும், சக்தியையும் செலவழிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பெருமளவு குடைச்சல் கொடுக்காத போதிலும் கூட அவர்கள் செம்மையாக அரசாட்சி செய்வதில்லை.

இந்த சூழலில் தான் நரேந்திர மோடி இந்திய அரசியல் வானில் ஒரு ஒளிவீசும் தாரகையாகத் திகழ்கிறார். மானிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவுமே தனது அதிக நேரத்தையும், உழைப்பையும் அவர் செலவழிக்கிறார். தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல்வாதி முகமூடி அணிந்து தன்னை அவதூறு செய்யும் எதிர்க் கட்சித் தலைமைகளை சமரசமின்றி விளாசித் தள்ளுகிறார். இத்தனைக்கும் 2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் ஊடகங்களும், மத்திய அரசும் பல்வேறு விதமான அவதூறுகளையும், சிக்கல்களையும் அவருக்கு உண்டாக்கி வந்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவிலும் உறுதி குலையாமல் நின்று வெற்றிகரமாக மீண்டெழுந்து இதோ குஜராத்தில் மூன்றாவது முறையாக ஒரு தேர்தல் வெற்றியை நோக்கிப் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.

இந்த குஜராத் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தான் மோடியின் முக்கிய எதிரி. அடுத்த எதிரி சாதிய அரசியல் என்கிற பழம் பெருச்சாளி. இந்தியாவே கொண்டாடும், உலகமே புகழ்ந்து போற்றும் உன்னதத் தலைவராக இருந்தாலும், அவர் பலான சாதியைச் சேர்ந்தவர் இல்லை, அவர் “ஆண்ட பரம்பரை” இல்லை என்று அவரது கட்சிக்குள்ளேயே ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. சாதி எண்ணிக்கை சவடால்களை முன்னிறுத்தி, ஒரு மாபெரும் தலைவனை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுகின்றனர் இந்தக் குறுமதியாளர்கள். இவர்கள் முறியடிக்கப் படவேண்டும். சாதிரீதியாக மட்டுமே வாக்களிப்பது என்பது இந்திய வாக்காளனின் இயல்போ பரம்பரைக் குணமோ அல்ல, அது ஒரு வக்கிரம். சாதிய உணர்வுகளைத் தாண்டி, நல்லாட்சி வழங்கும், ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்களையே மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை குஜராத் தேர்தல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும்.

I don’t see dreams, I sow dreams! I try to sow a new dream everyday in the eyes of the people of Gujarat. If these dreams realize, what else do I need..

”நான் கனவு காண்பதில்லை. கனவுகளை விதைக்கிறேன். ஒவ்வொரு நாளும் குஜராத் மக்களின் விழித்திரைகளில் புதிய கனவொன்றை விதைக்கிறேன். அந்தக் கனவுகள் மெய்ப்படுமானால், அதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?”

என்கிறார் மோடி.

நரேந்திர மோடியைப் போன்றதொரு தலைவர் அடிக்கடி வாய்ப்பதில்லை. ஒரு தேசத்தின் அரசியல் வரலாற்றில், அதன் கொந்தளிப்புகளின் ஊடாக, மக்களின் கனவுகளையும் அபேட்சைகளையும் சுமந்து, தங்கள் சுய உழைப்பாலும் தியாகத்தாலும் இலட்சியவாதத்தாலும் மேலேறி வருகிறார்கள் அவர்கள். அந்தத் தருணத்தில் வரலாற்றின் போக்கையே மாற்றுகிறார்கள். கனவுகளை விதைத்து, அவற்றை மெய்ப்படச் செய்கிறார்கள்.

குஜராத் அத்தகைய தலைவருக்கு தொடர்ந்து வெற்றி மாலை சூட்டுகிறது. எதிர்கால இந்தியா அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1

மூலம்: டாக்டர். மூர்த்தி முத்துசுவாமி
தமிழில்: ஜடாயு

இறுதியாக, இந்தியாவுக்கான தருணம் வந்திருக்கிறது. முதலில் மேற்காசிய படையெடுப்பாளர்கள், பின்னர் பிரிட்டிஷ் காலனியம் என்று ஆயிரம் ஆண்டு அன்னிய அரசாட்சியிலிருந்து விடுபட்டு இந்தியா வெளிவந்திருக்கிறது.

1947ல் இந்தியா சுதந்திரமடைந்த வுடனேயே, பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டமைப்பு ஆகிய துறைகளில் புதிய கல்வி நிறுவனங்களைத் தொலைநோக்குடன் உருவாக்கியதன் பயனாக, பின்வந்த காலங்களில் செல்வப் பெருக்கமும், அதோடு கூடிய சமூக-பொருளாதார முன்னேற்றங்களும் சாத்தியமானது.

1940களில் உருவான இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அப்போதைய தேசத்தைப் பிரதிபலித்தது – ஒட்டுமொத்தக் கல்வியறிவு 12 சதவீதமே இருந்த தேசம்; [1] இன்னும் பிரிட்டிஷ் காலனியத்தால் ஆளப் படும் தேசம். இந்தச் சூழலில் உருவாக்கப் பட்ட அரசியல் சட்டத்தில், அது பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டிருந்தும் கூட, சில குறைகளும், தவறுகளும் உண்டாவது சகஜமே. இத்தகைய ஒரு குறைபாடு, இன்றைக்கு பட்டவர்த்தனமாகத் தெரியக் கூடிய மதரீதியான பாரபட்சங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அதைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். மிகவும் வெட்கக் கேடான ஒரு விஷயம்.

எல்லாவற்றையும் விட, இந்திய தேசத்தில் இத்தகைய பாரபட்ச நடைமுறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன என்பது உலக அளவில் பலருக்கும் ஆச்சரியமளிக்கும். ஆனால் அது தான் உண்மை.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மதப்பிரிவினைக் கொள்கை (Religious Apartheid):

st_stephens_college_stampசமீபத்தில், தில்லியில் கிறிஸ்தவ மிஷனரிகளின் கட்டுப் பாட்டில் உள்ள உயர்தர உயர்கல்வி நிறுவனமான செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வெளியிட்ட ஒரு அறிவிப்பு பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தக் கல்வி நிறுவனத்தின் 50 சதவீத இடங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப் படுகின்றன என்ற அறிவிப்பு தான் அது. உயர்தர கல்லூரிகளில் பயில்வதை வாழ்க்கைக் கனவாகவே கொண்டிருக்கும் ஜனத்திரள் மிகுந்த ஒரு தேசத்தில், இத்தகைய அறிவிப்பு ஒரு பேரழிவுச் செய்தியாயிற்று.

“ஏற்கனவே ஸ்டீபன்சில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்போது, அவர்கள் பொது மாணவர்களுக்கான இடங்களை இந்த அளவுக்குக் குறைத்து விட்டால் நாங்கள் எங்கே போவோம்? இது அநியாயம், அக்கிரமம்”

என்றார் ஆர்ய பிரக்ரிதி [3]. தில்லியில் கல்லூரியில் சேரத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் இந்து மாணவர் இவர்.

ஒரு அதிர்ச்சிகர தகவல்: இந்தக் கல்லூரி இயங்குவதற்கான நிதியில் 95 சதவீதம் மத்திய அரசிடமிருந்து, அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வருகிறது. அந்த வரிப்பணத்தில் மிகப்பெரும் பகுதி பெரும்பான்மை இந்து சமூகத்தால் செலுத்தப் படுகிறது [4]. இன்னொரு கவனிக்க வேண்டிய தகவல்: புது தில்லி நகரத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை ஒரு சதவீதம், அதாவது 1% மட்டுமே [5].

என்ன நடக்கிறது இங்கே? முற்றிலும் தகுதி வாய்ந்த, கிறிஸ்தவர் அல்லாதவர்களைப் புறக்கணித்து விட்டு, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் மூலமாக கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

எப்படி நடக்கிறது இது? இந்திய அரசியல் சட்டத்தின் 30வது சட்டப்பிரிவின் (Article 30) அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பைச் சுட்டிக் காட்டி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி நிர்வாகம் தங்களது மதரீதியான பாரபட்ச நடவடிக்கை சட்டபூர்வமானது தான் என்று நியாயப் படுத்துகிறது [6].

1993ம் ஆண்டு இந்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் ஆகியோர் “சிறுபான்மையினர்” என்ற வரையறையின் கீழ் வருவார்கள் என்று அறிவித்தது [7]. இந்த சிறுபான்மையினர் சமூகங்கள் சமூக பொருளாதார ரீதியாக எந்த நிலையில் இருந்தாலும், அவை நடத்தும் கல்வி நிறுவனங்களில், அவை அரசு நிதி பெறும் நிறுவனங்களாக இருந்தாலும் கூட, தங்கள் சமூகத்தவர்களுக்கு என்று 50 சதவிகிதம் கல்வியிடங்களையும், வேலைவாய்ப்புகளையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்று 30வது சட்டப் பிரிவு கூறுகிறது [8]. இங்கு “சிறுபான்மையினர்” என்பது முன்பு சொன்னபடி தேசிய அளவில் ஒட்டுமொத்தமாகத் தான் வரையறை செய்யப் பட்டிருக்கிறது, ஒவ்வொரு பிரதேசத்தின் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, பஞ்சாபிலும், மிசோரத்திலும் முறையே சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையினர்; இந்துக்கள் சிறுபான்மையினர். ஆனால், 30-வது சட்டப் பிரிவின் பிடி, இந்த மாநிலங்களிலும் கூட, கிறிஸ்தவர்களும், சீக்கியர்களுமே “சிறுபான்மையினர்” என்று கருதப் படுவார்கள். அங்குள்ள இந்துக்கள் “பெரும்பான்மையினர்” என்றே கருதப் படுவார்கள்!

கல்வியிடங்களில் மட்டுமல்ல, கிறிஸ்தவ மிஷநரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளிலும் ஒதுக்கீடும், முன்னுரிமையும் உண்டு. ஏனென்றால், இதையும் 30வது சட்டப் பிரிவு அனுமதிக்கிறது. உதாரணமாக, மிஷநரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று கல்லூரிகளை எடுத்துக் கொள்வோம். மதுரை அமெரிக்கன் கல்லூரி பணியாளர்களில் 66 சதவீதம் கிறிஸ்தவர்கள். யூனியன் கிறிஸ்தவ கல்லூரி பணியாளர்களில் 83 சதவீதம் கிறிஸ்தவர்கள். மும்பை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பணியாளர்களில் 42 சதவீதம் கிறிஸ்தவர்கள் [9]. ஆனால், இந்தக் கல்லூரிகள் அமைந்துள்ள தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அங்கு கிறிஸ்தவர்களின் சதவீதம் முறையே 7, 19 மற்றும் 1 ஆகும். [10]. பணியாளர்களை அமர்த்துவதில் மதரீதியான பாரபட்சம் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டபூர்வமான மதப் பாரபட்ச நடைமுறைகள் இந்தியா முழுவதிலும் உள்ள எல்லாவிதமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தப் படுகின்றன என்பது கண்கூடு. சலுகைகளின் கவர்ச்சி ஒருபுறம், இவை சட்டபூர்வமானவை தான் என்பது இன்னொரு புறம். பின்னர் ஏன் மதரீதியாக பாரபட்சம் காட்டத் துடிக்க மாட்டார்கள்?

christian_dental_collegeமிஷநரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவன்ங்களின் விகிதம், “சிறுபான்மை” கிறிஸ்தவர்களின் விகிதத்திற்கு சரிசமமாக இருந்தால், இந்த மதரீதியான பாரபட்சங்கள் ”மதச்சார்பற்ற” என்ற அடைமொழி கொடுத்துத் தன்னை அழைத்துக் கொள்ளும் நாட்டுக்குப் பொருந்தாவிட்டாலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடாது என்று கருதலாம். ஆனால் பிரசினையின் மையமே அங்கு தான் இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள். மொத்தம் 40,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் [11, 12, 13].

30வது சட்டப் பிரிவையும், மேற்கண்ட விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், வெளிப்படையாகத் தெரிய வருவது – கிறிஸ்தவர்கள் இந்தியாவில் விசேஷ உரிமைகளும், சலுகைகளும் பெற்ற சிறுபான்மையினர். அவர்களை மட்டும் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக அரசின் வளங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன – வேண்டுமென்றே திட்டமிட்டு அப்படிச் செய்யப் படவில்லை என்று தோன்றினாலும் கூட. எனவே, கிறிஸ்தவர்களில் கல்வியறிவு பெற்றவர்கள், சராசரிக்கும் அதிகமாக 80 சதவீதம் இருப்பது ஆச்சரியமே அல்ல (தேசிய அளவில் சராசரிக் கல்வியறிவு 65 சதவீதம்). [14,15]. இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளில் 30 சதவீதம் மிஷநரிகள் கையில் உள்ளதால் [16], கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட, கிறிஸ்தவர்களாக மதம் மாறுபவர்களுக்கான வேலை வாய்ப்பு சாத்தியங்கள் அங்கும் மிக அதிகமாக இருக்கும். இதுபோக, சிறுபான்மையினர் என்பதை வைத்து, மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு, நில ஒதுக்கீடு மற்றும் வேறு பலவிதமான சலுகைகளும் மிஷநரி நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. [17].

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் பிற்பட்டவர்கள் என்று கோருவதை எந்த வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால் கிறிஸ்வத சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பே சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் [18] இவ்வாறு கூறியிருக்கிறது – “தற்போது ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், எழுத்தர்கள், ஜூனியர் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) ஆகிய பல பணிகளில் கிறிஸ்தவர்களின் பங்கு, அவர்களது எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கிறது”. ஆனால் அதே அறிக்கை அடுத்த வரியில் சொல்கிறது – “இதற்குக் காரணம் கிறிஸ்தவர்களது சிரத்தை, நேர்மை, நல்ல கல்வி ஆகியவை தான்”. ஆனால் முக்கியமாக, 30வது சட்டப் பிரிவு ஏற்கனவே கிறிஸ்தவர்களுக்கு வெகுமதியான இட ஒதுக்கீடுகளையும், பிற வாய்ப்புக்களையும் அள்ளிக் கொடுத்து விட்டிருக்கிறது என்ற உண்மையை அந்த அறிக்கை, வருத்தமளிக்கும் வகையில், கண்டுகொள்ளவே இல்லை.

இத்தகைய பாரபட்சத்தின் பரிமாணமும், வீச்சும் நிலைகுலையவைப்பவை. மிஷநரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் மாணவர்களும், பணியாளர்களுமாக சேர்த்து சராசரியாக 300 இடங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். சராசரியாக, ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கையிலும், பணியிடங்களிலும் கிறிஸ்தவரல்லாத 10 பேர் இந்த பாரபட்ச நடைமுறையின் காரணமாக நிராகரிக்கப் படுகிறார்கள் என்று கொள்வோம். ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சம் நிராகரிப்புக்கள்! உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் 400 மாணவர்கள் உள்ளே வரும் [19] செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லுரியில், 200 இடங்கள் ஏகபோகமாக கிறிஸ்தவர்களுக்கு மட்டுமாக ஒதுக்கீடு செய்யப் படுகிறது – இதன் பொருள் ஒவ்வொரு வருடமும், 200 நிராகரிப்புகள் நிகழ்கின்றன என்பது தான்.

இந்த இடத்தில், நிறவெறிக் காலகட்டத்தின் போது வெள்ளையர்களால் ஆளப்பட்ட தென்னாப்பிரிக்காவில் (அங்கு வெள்ளையர் சிறுபான்மையினர்) செயல்படுத்தப் பட்ட நடைமுறையுடன் இதை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும். அந்தக் காலகட்டத்தில் இனரீதியாக, வெள்ளையர்களுக்கே சாதகமாக அமையும் அரசு சட்டங்களின் மூலம், பெரும்பான்மையினரான கறுப்பின மக்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்புகளும் மறுக்கப் பட்டன. [20]. இதனால், தங்கள் மண்ணின்மீது கறுப்பர்களுக்கு உரிமையும், அதிகாரமும் இல்லாமலாயிற்று. தென்னாப்பிரிக்கா விஷயத்தில், அரசாட்சியில் இருந்த வெள்ளையரின் நிறவெறி, இனப்பிரிவினை நடவடிக்கைகள் கறுப்பர்களை அரசு அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. ஆனால், இந்தியா விஷயத்தில், இப்போது வெளிப்படையாகத் தெரியும் இந்த மதரீதியான பாரபட்ச நடவடிக்கைகள், அரசியல் சட்டத்தின் 30வது சட்டப் பிரிவின் காரணமாக எதிர்பாராமல் உருவாகி விட்டிருப்பவை. அல்லது நமக்கு அப்படித் தோன்றுகிறது.

உலகெங்கும் மக்கள் தென்னாப்பிரிக்காவின் இனப்பிரிவினை நடவடிக்கைகள் விளைவித்த அநீதியையும், கொடூரத்தையும் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால், இந்தியாவில் அதே போன்ற நடவடிக்கைகளினால் உருவாகும் பூதாகாரமான விளைவுகளைப் பற்றிய புரிதலே முழுமையாக ஏற்படவில்லை. அப்புறம் தானே குரல் கொடுப்பதற்கு! விற்பனையைக் குவிக்கும் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா இதே செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவர் தான். ஆனால் தனது முன்னாள் கல்லூரியின் இட ஒதுக்கீடுக் கொள்கைகளை “நெறிகளுக்கு எதிரானவை” (unethical) என்று மிகவும் மென்மையான தொனியில் அவர் குறிப்பிடும்போது, அவரது பார்வையில் உள்ள குறைபாடு நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது.

un_declaration_human_rightsஉள்ளபடி பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தின் 30வது சட்டப் பிரிவு விளைவித்திருக்கும் இந்த பாரபட்சமான கொள்கைகள், இந்தியா கையெழுத்திட்டு ஏற்றிருக்கும் ஐ.நா சபையின் ”உலக மனித உரிமைப் பிரகடனத்தின்” 23 மற்றும் 26வது ஷரத்துக்களை மீறுகின்றன என்று நாம் வாதிடலாம் [22]. குறிப்பாக, ”பணி புரிவதற்கான உரிமை மற்றும் சுதந்திரமான பணித் தேர்வுக்கான உரிமை” (23வது ஷரத்து), “உயர்கல்வியானது திறமையின் அடிப்படையில்அனைவரும் சம உரிமையுடன் பெற வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டும்” (26வது ஷரத்து) ஆகிய கொள்கைகளை மீறுவதாகத் தோன்றுகிறது. எனவே, 30வது சட்டப் பிரிவு விளைவித்துள்ள பாரபட்சங்கள் ”மனித உரிமை மீறல்கள்” என்று அழைக்கப் படவும் தகுதியுடையதாகின்றன.

இந்தியாவின் எழுச்சி பற்றி நாம் எவ்வளவு பேசினாலும், உலக அளவில் மிகவும் ஏழ்மைப் பட்ட நாடுகளில் ஒன்றாகத் தான் இந்தியா இன்னமும் இருக்கிறது. 2006ம் வருடத்திய குடும்ப நல கணக்கெடுப்புப் படி, மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 46 சதவீதம் மிகவும் எடைகுறைவானவர்களாக உள்ளார்கள் (சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க தேசங்களில் கூட இது 28 சதவீதம் தான்). இந்தியக் குழந்தைகளில், சத்துக் குறைவால் ஏற்படும் சோகை நோய் (அனீமியா) அதிகரித்து 79 சதவீதத்தை எட்டியிருக்கிறது (1999ல் இது 74 சதவீதம் தான்) [23]. சத்துக் குறைவு எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்றால், ஒவ்வொரு வருடமும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் (அதாவது ஒவ்வொரு நாளும் 6000 குழந்தைகள்) இதனால் மடிகிறார்கள். [24].

பெரும்பான்மையினரான இந்துக்கள் பிற்படுத்தப் பட்டு, உரிமை இழந்ததற்கு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த அன்னிய ஆட்சியில் அவர்கள் அதிகாரத்திலிருந்து ஒதுக்கப் பட்டு, நிராகரிக்கப் பட்டதும் ஒரு காரணம். மேலும், தற்போதைய நிலவரங்களின் படி, சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஒப்பீட்டில் இந்துக்களை விடவும் அதிகம் பிற்பட்டு இருக்கிறார்கள் என்பதும் ஓரளவு உண்மையே [25]. ஆயினும், இதில் எவ்வளவு தூரம் முஸ்லிம்கள் தாங்களே விளைவித்துக் கொண்டது என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்திய முஸ்லீம் சமூகங்கள் நவீனக் கல்வியை அணைத்துக் கொள்வதில் பெரும் தயக்கம் காட்டி வருவதும், மதரஸா கல்வியையே அதிகம் தெரிவு செய்து படிப்பதும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது [26]. இந்தியாவைப் போன்று அதே சாத்தியங்கள் கொண்டிருந்த, ஆனால் முஸ்லிம் பெரும்பான்மை தேசமான பாகிஸ்தான் எப்படி சமூக, பொருளாத பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிச் சென்றிருக்கிறது என்பதை வைத்துப் பார்த்தால் “முஸ்லிம்கள் தாங்களே விளைவித்துக் கொண்டது” என்ற கருத்திற்கு அது வலு சேர்க்கிறது [27].

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் இந்தியாவின் மிக உரிமை பெற்ற, மிக முன்னேறிய வர்க்கத்தினரில் அடங்குவர் என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் வாக்குமூலங்களே சாட்சி. கணிசமான அளவிலுள்ள மற்றொரு சிறுபான்மையினரான சீக்கியர்களும், பெரும்பான்மையினரை விட மிக நல்ல நிலையில் தான் உள்ளனர்; வளம் கொழிக்கும் மாநிலமான பஞ்சாபில் தான் அவர்கள் அதிகபட்சமாக வசிக்கின்றனர். இந்தச் சூழலில், 30வது சட்டப் பிரிவை என்ன சொல்லியும் நியாயப் படுத்த முடியாது. அது மட்டுமல்ல, நூற்றாண்டுகளாக பெரும்பான்மை சமூகம் அனுபவித்து வந்த இன்னல்களை இந்த சட்டப் பிரிவு இன்னும் நீட்டிக்கிறது. அதுவும் அந்த சமூகமே வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அடுத்தடுத்த அரசுகளே இதற்கு உதவியும் உள்ளன.

கல்வியும் வேலைவாய்ப்புகளுமே வறுமையிலிருந்து மீள்வதற்கும், சுய உரிமை பெறுவதற்குமான வாசல்கள். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டமே விளைவித்திருக்கும் மேற்கூறிய பாரபட்ச நடவடிக்கைகள், தகுதியைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தில் மதச்சார்பு நிலைகள் ஆதிக்கம் செலுத்த வகை செய்துள்ளன. லட்சக்கணக்கான தகுதிவாய்ந்த குழந்தைகளும், இளைஞர்களும் வறுமையின் கோரப் பிடியிலிருந்து வெளிவர வழிசெய்யும் வாய்ப்புக்கள் அநியாயமாக அவர்களுக்கு மறுக்கப் படுகின்றன.

இந்த தேசத்தின் மக்கள் தொகையில் 95 சதவீதம் உள்ள மக்களைப் பாரபட்சத்துடன் நிராகரிப்பதைக் கொள்கையாகவே கொண்டுள்ள மிஷநரிகளின் கட்டுப் பாட்டில் தான் தேசத்தின் தலைசிறந்த பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன. இதை மனதில் வைத்துப் பார்த்தால் சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றம் இயற்றியிருக்கும் கல்வி உரிமைச் சட்டம் [28] எவ்வளவு முட்டாள்தனமானது என்று விளங்கும்.

இந்தியாவில் மிஷநரி பணிகளுக்காக பெரும் தொகை வெளிநாடுகளிலிருந்து பாய்கிறது. உதாரணமாக, 2006-2007 வருடத்தில் 100 மில்லியன் டாலர்களுக்கும் (10 கோடி) அதிகமான பணம் வந்துள்ளது. [29]. தேவைப் படுபவர்களுக்கு உதவுவதற்கே இந்தப் பணம் முழுவதும் செலவழிக்கப் படுவதாக சொல்லப் படுகிறது, அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால், மிஷநரி கல்வி நிறுவனங்களின் பாரபட்ச அணுகுமுறைகள், அவர்கள் புரியும் பாராட்டுக்குரிய சேவைப் பணிகளை முற்றிலும் மதிப்பிழக்கச் செய்கின்றன. மிஷநரி நிறுவனங்களின் பாரபட்சமான இட ஒதுக்கீடுகள் பெரும்பான்மையினர் மத்தியில் பெரும் கசப்புணர்வை ஏற்படுத்துகின்றன [30] என்று நன்கு தெரிந்திருந்தும் கூட, இவற்றை ரத்து செய்வதையோ குறைப்பதையோ பற்றிய எண்ணம் சிறிது கூட அவர்களிடம் இல்லை. மாறாக, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி செய்தது போல, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன [31].

நீண்டகால நோக்கில், இதனால் பாதிக்கப் படுவது இந்தியாவின் வளர்ச்சி விகிதமும், மனித உரிமைகளும் மட்டுமல்ல, அதைவிட மேலும் பெரியதான அபாயங்களும் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

30வது சட்டப் பிரிவு உருவாக்கும் மதப் பாரபட்சங்கள், கல்வி நிறுவனங்கள் மீது மிஷநரிகளின் அளவுக்கதிகமான கட்டுப்பாடு – இவை உருவாக்கும் நீண்டகால விளைவுகளை “பிரிவினைகளின் தொடர் இயங்குமுறைக் கோட்பாடு” (Dynamic Models of Segregation) என்கிற அறிவியல்பூர்வமான முறை கொண்டு அடுத்த பகுதியில் ஆராய்வோம். இந்த அறிவியல் முறை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங் உருவாக்கியது.

(தொடரும்)

அடுத்த பகுதி >> 

moorthy-muthuswamyடாக்டர். மூர்த்தி முத்துசுவாமி அமெரிக்காவில் வசிக்கும் அணு இயற்பியலாளர். 1979ல் இந்தியாவின் பிர்லா அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் (BITS, Pilani) தனது பட்டப் படிப்பை முடித்தார். 1989ல் நியூயார்க் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தில் அணு இயற்பியலில் ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் பல கல்வி நிறுவனங்களில் பதவி வகித்தும் உள்ளார். அண்மைக் காலமாக உலக அரசியல், சமூகவியல் ஆகிய துறைகள் குறித்து எழுதி வருகிறார். உலகளாகிய இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து இவர் எழுதியுள்ள Defeating Political Islam என்ற நூல் இந்தப் பிரசினை குறித்த முழுமையான பார்வையை முன்வைப்பதாக விமர்சகர்களால் மதிப்பிடப் பட்டுள்ளது.

சான்றுகள்:

[1] “Literacy in India,” Wikipedia, http://en.wikipedia.org/wiki/Literacy_in_India (accessed Nov. 12, 2010).

[2] NDTV, June 09, 2008, http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080052488 (accessed Nov. 11, 2010).

[3] Ibid.

[4] Outlook India, June 25, 2007, http://www.outlookindia.com/article.aspx?234958 (accessed Nov. 11, 2010).

[5] “2001 Census India – State-wide Population Breakdown by Religion,” http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_data_finder/C_Series/Population_by_religious_communities.htm (accessed Nov. 13, 2010).

[6] Outlook India.

[7] “National Commission for Minorities – Genesis,” http://ncm.nic.in/genesis.html (accessed Nov. 14, 2010).

[8] “National Commission for Minorities – Constitutional Provisions,” http://ncm.nic.in/constitutional_prov.html (accessed Nov. 13, 2010); see also, “Minority Rights – The Judicial Approach,” http://www.legalservicesindia.com/articles/judi.htm (accessed Nov. 12, 2010).

[9] “Indian Constitution, Religious Discrimination and USCIRF,” South Asia Analysis Group, May 19, 2005, http://www.southasiaanalysis.org/%5Cpapers14%5Cpaper1386.html (accessed Nov. 12, 2010).

[10] “2001 Census India – State-wide Population Breakdown by Religion.”

[11] Ibid.

[12] India Currents, July 17-23, 2008, http://www.hvk.org/articles/0708/138.html (accessed Nov. 12, 2010).

[13] The New York Times, August 28, 2008, http://www.nytimes.com/2008/08/29/world/asia/29india.html (accessed Nov. 13, 2010).

[14] “National Commission for Minorities – Minority Literacy Rates,” http://ncm.nic.in/minority_population.pdf (accessed Nov. 13, 2010).

[15] “2001 Census India – Literacy Rates,” http://www.censusindia.gov.in/Census_Data_2001/India_at_glance/literates1.aspx (accessed Nov. 13, 2010).

[16] India Currents.

[17] “National Commission for Minorities – Constitutional Provisions.”

[18] Free Press Release, Dec. 18, 2009, http://www.free-press-release.com/news-christians-oppose-rangnath-mishra-report-1261137900.html (accessed Nov. 13, 2010).

[19] “St. Stephen’s College – Delhi,” Wikipedia, http://en.wikipedia.org/wiki/St._Stephen’s_College,_Delhi (accessed Nov. 17, 2010).

[20] “South Africa under Apartheid,” Wikipedia, http://en.wikipedia.org/wiki/South_Africa_under_apartheid (accessed Nov. 13, 2010).

[21] Outlook India.

[22] “The Universal Declaration of Human Rights,” http://www.un.org/Overview/rights.html (accessed Nov. 13, 2010).

[23] Peter Wonacott, “Lawless Legislators Thwart Social Progress in India,” Wall Street Journal, May 4, 2007.

[24] CNN-IBN, Mar. 29, 2008, http://ibnlive.in.com/news/in-booming-india-hunger-kills-6000-kidsdaily/62220-17.html (accessed Nov. 13, 2010).

[25] “National Commission for Minorities – Minority Literacy Rates.”

[26] Sadanand Dhume, “Is India an Ally?” Commentary Magazine, Jan. 2008.

[27] “Why have Pakistan and India Evolved so differently?” South Asia Analysis Group, Nov. 1, 2010, http://www.southasiaanalysis.org/papers42/paper4138.html (accessed Nov. 13, 2010).

[28] “Right to Education Act,” http://www.indg.in/primary-education/policiesandschemes/right-to-education-bill (accessed Nov. 13, 2010).

[29] “Receipt and Utilization of Foreign Contribution by Voluntary Associations,” http://www.mha.gov.in/fcra/annual/ar2006-07.pdf (accessed Nov. 14, 2010).

[30] NDTV.

[31] Outlook India.

ஒரு தேசம், இரு உரைகள்

ந்திய தர்க்க சாஸ்திரத்தில் அருந்ததி நியாயம் என்று ஒரு கருதுகோள் உண்டு. அருந்ததி என்ற நட்சத்திரம் மிகச் சிறியது. வானவெளியில் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதனால் அதற்கு அருகில் உள்ள பெரிய நட்சத்திரத்தைக் காட்டி, பிறகு படிப்படியாக சின்ன நட்சத்திரத்தை அடையாளம் சொல்வார்கள். பருண்மையிலிருந்து நுண்மைக்கு அறிவுபூர்வமாக இட்டுச் செல்லும் வழிமுறை.

வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிக் கூட நுண்ணுணர்வு கொண்டவர் தான் அவர். ஆனால் God of small things என்றே ஒரு ஆங்கில நாவல் எழுதி புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் சமீபத்தில் தில்லியில் ஆற்றிய உரையில் நியாயம் என்பது சிறிதும் இல்லை என்று இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கருதுகிறார்கள்.

’காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை, அது தான் வரலாற்று உண்மை. பசியும் நிர்வாணமும் தாண்டவமாடும் இந்தியாவிலிருந்து (bhookhe nange hindustan) காஷ்மீரிகள் விடுதலை அடைய வேண்டும்.இந்தியாவின் அடக்குமுறைக்கான சாதனங்களாக தாங்கள் பயன்படுத்தப் படுவதை காஷ்மீரிகள் அனுமதிக்கக் கூடாது’.

arundhati_royதில்லியில் ஒரு பொது நிகழ்ச்சியில் காஷ்மீர் பிரிவினைவாதியும் தீவிரவாதியுமான சையத் அலி ஷா கீலானியுடன் ஒரே மேடையில் அமர்ந்து அவர் பேசிய மேற்கூறிய சொற்கள் அங்கு அமர்ந்திருந்த சட்டத்தை மதிக்கும் பல தரப்பட்ட இந்தியர்களையும், குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தால் காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாகி விட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையும், கொதித்தெழ வைத்தன. அவர்கள் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்ப, காவலர்கள் உள்நுழைந்து அந்த தேசபக்தர்களை வெளியேற்ற, காவல்துறை பாதுகாப்புடன் அம்மணியின் பிரசாரம் இனிதே நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, அவர்மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப் படலாம், அவர் கைது கூட செய்யப்படலாம் என்று செய்தி ஊடகங்கள் சொல்லத் தொடங்கின.

’ஸ்ரீநகரில் இருந்து இதை எழுதுகிறேன். சமீபத்தில் காஷ்மீர் பற்றி பொதுக்கூட்டங்களில் நான் சொன்ன கருத்துக்களுக்காக தேசவிரோகக் குற்றத்தின் கீழ் நான் கைது செய்யப் படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பல காலமாக சொல்வதைத் தான் நான் எதிரொலிக்கிறேன். எனது பேச்சை உன்னிப்பாகப் படிப்பவர்கள் அது நீதிக்கான அழைப்பு என்பதைப் புரிந்து கொள்வார்கள். உலகின் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்புகளில் ஒன்றின் கீழ் வாழ்ந்து வரும் காஷ்மீர் மக்களுக்காக நீதி கேட்கிறேன்.. தங்கள் மனத்திலிருப்பதைப் பேசும் எழுத்தாளர்களின் வாயை அடைக்கும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன். கார்ப்பரேட் ஊழல் பெருச்சாளிகளும், கொலைகாரர்களும் சுதந்திரமாகத் திரிய, நீதிக்காக பேசுபவர்களை ஜெயிலில் அடைக்கக் கோரும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன்’

என்று அடுத்த நாள் தனக்கே உரிய தார்மீக தளுக்கு மொழியில் அறிக்கை வெளியிட்டார் அருந்ததி ராய். எப்போது கைது வரும், எப்போது தியாகக் கிரீடத்தை சூடிக் கொள்ளலாம் என்று அவர் துடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.

மேலும், இந்த தேசத்தின் ஏழைகளிலும் ஏழைகளுக்காக (poorest of the poor) தான் குரல் கொடுப்பதாகவும் அவர் முரசறைகிறார். சக இந்தியர்கள் மீது தீராத வெறுப்பும் மதவெறியும் ததும்பி வழியும் முகங்களுடன் இந்தியக் காவல் படைகள் மீது கூலிவாங்கிக் கொண்டு கல்லெறியும் காஷ்மீரி லும்பன் கூட்டங்களை நாடு முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்கத் தான் செய்தது. நன்கு தின்று ஊட்டம் பெற்ற உடல்கள். நேர்த்தியான உடைகள். அகம்பாவமும் திமிரும் கலந்த பேச்சுகள். காலை எழுந்தவுடன் தெருவுக்கு வந்து நின்றுகொண்டு இந்தியா எங்களை நசுக்குகிறது என்று வெறிக்கூச்சல்கள். பல பத்தாண்டுகளாக காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்று இந்திய அரசு கோடிகோடியாகக் கொண்டு கொட்டும் பணத்தை (The Great Kashmiri Loot of India என்று ரிடீஃப் ராஜீவ் சீனிவாசன் ஒருமுறை எழுதியிருந்தார்) எந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த விடாமல் எப்போதும் இந்திய தேசிய எதிர்ப்பையும், வன்முறையையும் ஆறாமல் வைத்திருக்கும் பிரிவினைவாதிகள்.

இவர்களைப் பார்த்து நாம் ஏழைகளிலும் ஏழைகள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்று அருந்ததி நினைக்கிறாரோ? மாறாக, இந்த நாட்டின் உண்மையான ஏழைகள் காஷ்மீரில் இல்லை. தோற்றத்திலேயே பரிதாபகரமாகக் காட்சியளிக்கும் வனவாசிகளும், வாழ்க்கையே ஒரு தினசரி போராட்டமாக உடலை உருக்கி உதிரத்தைச் சிந்தி வேலை செய்யும் உழைப்பாளிகளும் ஒரிஸ்ஸாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் ஜார்கண்டிலும், ஏன் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட மற்ற எல்லா இந்திய மாநிலங்களிலும் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பில் பசியாறி, கனவுகளைக் கண்ணில் தேக்கி தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் கோடிக் கணக்கான இந்திய கீழ் நடுத்தர வர்க்கத்து மாந்தர்கள் “ஏழைகள்” இல்லையா?

tamilnadu_poor_govt_school

அவர்கள் அடக்குமுறையின் கீழ் வாழ்வதாக நினைக்கவில்லை. பிரிவினை கோரவும் இல்லை. அவர்கள் விழைவது ஒன்றுபட்ட தேசிய வாழ்க்கையை, அது சாத்தியமாக்கும் அளப்பரிய வாய்ப்பு வசதிகளை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை. அவர்கள் வேண்டுவது உணவும், உடையும், கல்வியும், தொழில் வாய்ப்புகளும். சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். காஷ்மீர் பிரிவினைவாதத்தால் நாட்டின் வடக்கு மூலையில் மட்டும் தான் பிரசினை. மாவோயிச பயங்கரவாதம் தலையெடுத்தால் இந்தியா முழுவதுமே தீப்பற்றி எரியுமே. இதை விட இந்தியாவின் ஏழையிலும் ஏழைகளான மக்களுக்கு நல்லது என்ன இருக்க முடியும்?

அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் (state), தேசத்தையும் (nation) வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும் என்ற கருத்து தான் உண்மையில் அவர் பிரசாரம் செய்வது. ’பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த மக்களை அவர்கள் விருப்பதிற்கு மாறாகப் பிடித்து அடைத்து வைத்திருக்கும் கூண்டு இந்தியா’ என்று இதற்கு முன்பு ஒருமுறை தன் உள்ளக் கருத்தை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

அரசு இயந்திரத்தின் திறமையின்மையையும், போலிஸ் அராஜகங்களையும், உள்ளூர் பிரசினைகளையும் குழைத்துக் கலக்கி, அதன்மீது தேசவிரோத பிரிவினை வாதத்தையும், இஸ்லாமிய மதவெறியையும், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தையும் அவியலாகக் கலந்து அப்பி ஒட்டுமொத்தமாக இந்தியா என்ற கருத்தையே தன் காழ்ப்புணர்ச்சிக்கு இலக்காக்கி துவேஷ பிரசாரம் செய்கிறார் அருந்ததி ராய். அவர் அடக்குமுறை என்று முத்திரை குத்தி வசைபாடுதை இந்த தேசத்தின் மண்மீது மட்டும் தான் நின்று கொண்டு அவர் செய்ய முடியும்.

இது கருத்துச் சுதந்திரத்தின் கட்டற்ற வெளிப்பாடு அல்ல, அதன் துஷ்பிரயோகம். இதற்குப் பெயர் நீதிக்கும் நல்வாழ்வுக்குமான குரல் அல்ல, கடைந்தெடுத்த அறிவுஜீவிக் கயமைத்தனம். அதனால் தான் அதே வார்ப்பில் உள்ள தேசவிரோதிகளும், அறிவுஜீவி கிரிமினல்களும் உடனடியாக இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.

‘அருந்ததி ராய் சொல்வதைத் தான் நானும் நாற்பது வருஷமாக சொல்லி வருகிறேன். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேசும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது இந்தியா மட்டுமல்ல உலக அளவில் கவனிக்கப் படுகிறது’ என்று புல்லரிக்கிறார் ஆந்திராவின் பிரபல நக்சலைட் பயங்கரவாதி வரவர ராவ். இந்திய வெறுப்பு பிரசாரத்தில் அருந்ததி ராயின் சக பயணி இவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன் என்ற தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ”ஆய்வாளர்” சொல்கிறார் – “1962ல் அண்ணாதுரை தனிநாடு வேண்டும் என்றே முழங்கினார் – நேரடியான பிரிவினைக் கோரிக்கை அது.இப்போது அப்படியெல்லாம் பேசுவதே அபசாரம் (taboo) ஆகி விட்டது. காளைச்சாணம்! ஜனநாயகம் என்ற பெயரில் *இந்த விவாதம் கூட* செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அக்கிரமம்” (இந்தியன் எக்ஸ்பிரஸ், 14 நவம்பர்,2010). இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு மானியம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் இதைப் பேசுகிறார்.

நல்லது. பாண்டியன் வீட்டில் தினந்தோறும் காலை எழுந்தவுடன் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து வாழலாமா வேண்டாமா என்ற விவாதம் ஒவ்வொரு நாளும் நடந்தால் தான் அது உண்மையான ஜனநாயக குடும்ப அமைப்பு என்று கருதுகிறார் போலத் தெரிகிறது. முதலில் அதை அவர் தன் வீட்டில் செயல்படுத்தத் தயாரா? வீட்டுக்கு ஒரு நீதி நாட்டுக்கு வேறோரு நீதியா?

அருந்ததி ராய்க்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புணர்வை நடுத்தர வர்க்க போலி பாவனை (middle class hypocricy) என்று வசைபாடுகிறார்கள் இந்த மேல்தட்டு, மேட்டிமைவாத அறிவுஜீவிகள்.

ஏனென்றால் நாட்டின் அமைதியிலும் நல்வாழ்விலும் அதிக அக்கறை கொண்டது இந்த நடுத்தர வர்க்கம் தான். இந்த மாபெரும் ஜன சமூகத்தில் வேதனைகளைச் சகித்துக் கொண்டு, அதே சமயம் தன் கனவுகளையும் உயிரோட்டத்துடன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கம் என்றால் அது தான். இந்த சமூகத்தின் சில்லறைத் தனமும் கையறு நிலையும் முட்டாள்தனங்களும் மட்டுமல்ல, இதன் நீதியுணர்வும் அறவுணர்வும் சாதனைகளுக்கும் உன்னதங்களுக்குமான பெருமையும் கூட பெருமளவில் நடுத்தரவர்க்கத்தைத் தான் சாரும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் அப்படித் தான்.

அருந்ததியின் உரையால் கடுப்படைந்திருந்த இந்திய உள்ளங்களில் பாரக் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உடனடியாக ஒரு உவகையையும் ஒத்திசைவையும் உண்டாக்கியது ஆச்சரியமில்லை.

barack_obama2பொருளாதார, உலக அரசியல் ரீதியாக ஒபாமா விஜயத்தின் தாக்கம் என்ன, சாதக பாதங்கள் என்ன என்பது பற்றி நிறையவே பேசி விவாதிக்கப் பட்டு விட்டது. அதற்குள் போகவேண்டாம். தனது சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில், குறியீடுகளிலும் (symbolism), சமிக்ஞைகளிலும் (gestures) மிகவும் கவனம் செலுத்துபவர் ஒபாமா என்று கூறப்படுகிறது. எனவே இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் என்ன என்று பார்க்கலாம். அந்த உரை ஒரு சம்பிரதாய நடைமுறையே என்றாலும் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதில் உள்ள நேர்த்தியும் பொருட்செறிவும் அதைத் தயாரித்தவரின் கைவண்ணமே என்றாலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அரசின் முழு அங்கீகாரமும் அதன் மீது படிந்துள்ளது என்பதால் அது முக்கியமாகிறது.

”அறிவியலும், சிந்தனைத் திறனும் வளர்ந்த ஒரு பழம்பெரும் பண்பாடு. மானுட வளர்ச்சியின் மீதான அடிப்படை நம்பிக்கை. இந்த அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் மீது தான், சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி உயர்ந்த அந்த நள்ளிரவு முதற்கொண்டு நீங்கள் தேசத்தைக் கட்டமைத்திருக்கிறீர்கள். இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக ஆகியிருக்கிறீர்கள்”.

இது வெறும் புகழுரை அல்ல. பெரும் வேறுபாடுகள் கொண்ட ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக ஒபாமா தன் மன ஆழத்திலிருந்தே இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ண இடமிருக்கிறது.

மகாத்மா காந்தியைப் பலமுறை குறிப்பிட்டது அந்த உரை.

”காந்தி என்ற ஒருவர் தனது செய்தியை அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அளித்திருக்காவிட்டால், இன்று அமெரிக்க ஜனாதிபதியாக உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்க முடியாது என்பதையும் நான் மனதில் கொள்கிறேன்”.

தனது சொந்த வாழ்க்கையை முன்வைத்து, உலகெங்கும் உள்ள அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான பேரொளியாக எப்படி “அடக்குமுறை தேசியமான” இந்தியா விளங்கி வருகிறது என்பதைச் சொல்ல ஒபாமா தவறவில்லை.

“இந்தியாவின் வலிமை, சொல்லப் போனால் இந்தியா என்ற கருத்தாக்கமே (the very idea of india) அனைத்து நிறங்களையும், சாதிகளையும், குழுக்களையும் அரவணைத்துக் கொள்வது தான் என்று நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். இந்த சபையே அந்தப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. சமயங்களின் இந்தப் பன்முகத் தன்மையைத் தான் எனது சொந்த ஊரான சிகாகோவுக்கு நூறு வருடம் முன்பு வந்த புகழ்பெற்ற சுவாமி, விவேகானந்தர் என்ற அந்த சுவாமி சிலாகித்துப் பேசினார். புனிதமும் தூய்மையும் ஈகையும் உலகில் எந்த ஒரு திருச்சபையின் தனிச்சொத்தும் அல்ல; ஒவ்வொரு சமயமும் உயர்ந்த ஒழுக்கமும், பண்புகளும் கொண்ட ஆண்களையும் பெண்களையும் உருவாக்கியிருக்கிறது என்று அவர் சொன்னார்.”

இது தான் அமெரிக்காவின், உலகத்தின் பார்வையில் இந்திய தேசியத்தின் உண்மையான மதிப்பீடு.

”.. ஒன்றிணைந்த மானுடம் என்பதைக் கண்டறிந்த பிறகு, நாம் நேசிக்கும் லட்சியங்களை நிறைவேற்றுவது பற்றி நாம் யோசிக்கலாம். இந்தியர்களுக்கு நூற்றாண்டுகளாக வழிகாட்டி வரும் பஞ்சதந்திரம் என்ற கதைத் தொகுப்பில் ஒரு எளிய அறிவுரை உள்ளது. இந்தப் பேரவையின் நுழைவாயிலில் உள்ளே வருபவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கும் படி கல்வெட்டாக அதை வைத்திருக்கிறார்கள் – இது உன்னுடையது அது என்னுடையது என்பது சிறிய மனங்களின் கணக்கு. விசால இதயம் படைத்தவர்களுக்கு உலகமே அவர்களது குடும்பம்.”

நவீன ஆன்மிகவாதிகளின் பிரசங்கங்களில் நாம் அடிக்கடி கேட்கும் “வசுதைவ குடும்பகம்”- உலகமே ஒரு குடும்பம் என்ற மேற்கோளை அதன் சரியான இடம்பொருள் சுட்டி ஒபாமா குறிப்பிட்டார். இந்த மேற்கோள் பஞ்சதந்திரக் கதையில் ஒரு நரி சொல்லும் ராஜதந்திர உபதேசமாகத் தான் வருகிறது. ஆனால் உலக சகோதரத்துவத்துக்கான செய்தியும் உள்ளுறை பொருளாக இதில் உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க நட்பு சீனாவையோ, பாகிஸ்தானையோ தனிமைப் படுத்தும் நோக்கில் இருக்காது, ஏனென்றால் அரசியலில் “உலகம் எல்லாம் ஒரே குடும்பம்” என்று குறிப்புணர்த்தக் கூட ஒபாமா எண்ணியிருக்கலாம். எதுவானாலும், பண்டைய இந்தியாவின் முதிர்ச்சியடைந்த அரசியல் ஞானத்தை அந்த இடத்தில் சரியாக மேற்கோள் காட்டியது பாராட்டத் தக்கது.

“நமது இணைந்த எதிர்காலத்திற்கான எனது நம்பிக்கை இந்தியாவின் புகழ்மிக்க கடந்தகாலத்தின் மீது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகை உருவாக்கி வரும் பண்பாட்டின் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பின் அடிப்படையிலானது. மனித உடலின் நுட்பங்களையும், நமது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் பற்றிய அறிவின் திறவுகோல் இந்தியர்களிடம் இருந்தது. நமது தகவல் யுகமே, ஏன் பூஜ்யம் என்ற எண் உட்பட, இந்தியக் கண்டுபிடிப்புகளின் மீது தான் வேர்விட்டு நின்று கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகையாகாது.”

timesless_indian_civilizationஇதையே நாம் சொன்னால் இந்துத்துவ புருடா என்று எள்ளி நகையாடுபவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

ஒபாமாவின் உரை இந்தியாவை ஒரு அரசாட்சியாக மட்டுமல்ல, ஒரு தேசமாக, ஒரு வாழும் கலாசாரமாக, ஒரு பண்பாடாக (civilization) அணுகிப் பேசியது என்பதைக் கவனிக்க வேண்டும். மரங்களை வைத்து காட்டை எடைபோடுவது போல இந்திய அரசு அமைப்பின் ஊழல்களை மட்டும் வைத்து இந்தியா என்ற மகோன்னதத்தை அது மதிப்பிடவில்லை. நமது போலி மதச்சார்பின்மை அறிவுஜீவிகளுக்கு என்னென்ன கருத்தாக்கங்கள் கடும் மலச்சிக்கலை ஏற்படுத்துமேர் அவற்றை ஒவ்வொன்றாகப் போற்றிப் புகழ்ந்து ஒபாமா பேசியிருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.

அருந்ததி ராயின் தேசவிரோத உரைக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இணையத்தில் பெடிஷன்கள் மூலம் பிரசாரம் நடத்தப் பட்டது. அந்த நேரத்தின் உணர்ச்சி வசத்தில் அதில் நானும் உடனே கையெழுத்திட்டேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது தவறு என்று தோன்றுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்ட அரசின் நிலைப்பாடு, இப்போதைக்கு மிகச் சரியானது என்றே நினைக்கிறேன். கருத்து சுதந்திரத்தின் பதாகையைத் தூக்கிப் பிடித்ததற்காக ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கொடுங் கரங்களால் சிறைப்படுத்தப் பட்டவர் என்ற தியாகிப் பட்டம் பற்றியும், அவரது இலக்கியப் படைப்புகளை இப்போது யாருமே படிக்காத காரணத்தால் தவறவிட்ட சர்வதேச கவனத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றியும் அருந்ததி ராய் கனவு கண்டிருக்கக் கூடும். அவரது அந்தக் கனவில் மண் விழுந்திருக்கிறது.

கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் தீர்மானத்தில் (First amendment) வரையறுக்கப் பட்டுள்ளது. அதனை வடிவமைத்த சட்ட மேதை ஜேம்ஸ் மேடிஸன் அப்போது சொன்ன ஒரு கருத்து சிந்தனைக்குரியது – ’ஒரு சில நச்சுக் கிளைகளை வெட்டப் போய் நற்கனிகளை வழங்கும் மரத்தின் வீரியத்தை நாம் காயப் படுத்துவதைக் காட்டிலும், அவை கொஞ்சம் செழித்து வளர்வதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது’.

அருந்ததி நியாயத்தின் இன்னொரு பரிணாமம்?

**********

சுட்டிகள்: அருந்ததி ராய் உரை, ஒபாமா உரை

வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

தமிழக அரசின் ‘சின்ன’ சிந்தனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போது தோன்றியவை இந்த என் எண்ணங்கள். கோபுரத்தை இறக்குவதா அல்லது அய்யனை ஏற்றுவதா என்ற விவாதம் ஒரு புறம் நடக்கட்டும். அய்யனை பாறையில் ஏற்றிக் காட்டிய திரு. ரானடேயின் கனவுகள் நிசத்தில் பெரு உருவாய் நடந்ததது போல அவரது மற்ற கனவுகளும் நனவானாலும் ஆகட்டும். நான் சொல்ல வந்தது சின்னத்தில் கீழே உள்ள வாக்கியம் குறித்து ஜடாயு அவர்கள் அவரது கட்டுரையில் சற்றே தொட்டுக் காட்டியது பற்றியே.  (ஜடாயுவின் கட்டுரை இங்கே.)

“வாய்மை” பற்றி எனக்கும் அவர் சொல்லியதை ஒத்த  ஓர் எண்ணம் உண்டு. அவர் குறிப்பிட்டுள்ளது போல் “சத்யமேவ ஜயதே” என்ற சொற்றொடருக்கு “வாய்மையே வெல்லும்” என்பது முழு விளக்கமாகாது.

எந்த மொழியிலும் சில சொற்களுக்கு சில விசேஷமான பொருள் இருக்கும். அதை வேறு மொழியில் பெயர்த்து எழுதுவது சற்றே கடினம்தான். அப்படிப்பட்ட ஒரு வார்த்தைதான் சம்ஸ்க்ருதத்தில் உள்ள “சத்” என்பதும்.

அதற்கு தமிழில் “உள்ளது”, “இருப்பது” என்று பொருள் கொள்வது ஓரளவே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், “இருப்பது” என்று பொருள் கொண்டால் அதன் எதிர்மறையாக “இல்லாதது” என்று வரும். ஆனால் “சத்” என்பது “இருப்பது”, “இல்லாதது” என்ற இரண்டையும் அடக்கி, அவைகளையும் கடந்து உள்ள ஒன்றைக் குறிப்பிடுவது.

ramana-maharshi-09அதாவது, தமிழில் இவ்வார்த்தையின் பொருளாக “என்றும் உள்ளது” என்றே கொள்ளவேண்டும். மகரிஷியான ரமணரே இதைப் பற்றி எழுதும்போது எல்லா விவரங்களையும் தந்து விட்டு, கடைசியில் அதை உணர்ந்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே முடிக்கிறார். அவர் எழுதியது:

“உள்ளதிலது உள்ளவுணர்வு உள்ளதோ உள்ளபொருள்

உள்ளலற உள்ளத்தே உள்ளதால் – உள்ளமெனும

உள்ளபொருள் உள்ளலெவன் உள்ளத்தே உள்ளபடி

உள்ளதே உள்ளல் உணர்”

உள்ளம் என்றும் சித்தம் என்றும் அழைக்கப்படும் மனம் கலக்கும்போது எண்ணங்களின் தூய்மை மாறுகிறது. மனம் என்பது பழைய எண்ணங்களின் வாசனைகள் – அதாவது பெருங்காயம் இல்லாவிட்டாலும் பெருங்காய டப்பாவில் உள்ள வாடை போல். இது நமது காயத்திற்கும் (உடலுக்கும்) பொருந்தும்.  (இந்த பெரிய விஷயத்தை நமக்கு உணர்த்துவதால்தான் அதற்கு பெருங்காயம் என்று பெயர் வந்திருக்குமோ?)

ஆக உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாது, மற்றும் பிறிதொன்று செய்யாதிருப்பவனே யோகி. எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாகிய நிலையின் விளைவே  யோகம். சித்தம் விருத்தி ஆகாமல் தடுப்பதே யோகம் அனைத்தினும் குறிக்கோள்.

இப்படியாக தூய எண்ணங்களைக் கருத்தில் கொள்ளாது, மனமானது விருத்தி அடைந்து செய்யப்படும் காரியங்களால் வருவதுதான் ஒருவரை பந்தப் படுத்தும் வினை. இதையே ரமணர் “வினைப் பயன் விளிவுற்று வித்தாய் வினைக் கடல் வீழ்த்திடும்” என்பார்.

இதைப் புரிந்தவர் எவருக்கும் வேறு எதுவும் தேவையுமில்லை. நிற்க; நாம் இப்போது நமது “சின்ன” வார்த்தையான “சத்” விஷயத்திற்கு வருவோம்.

“வாய்மை” என்னும் சொல் இந்த “என்றும் உள்ளதை” எவ்வளவு தூரம்  பிரதிபலிக்கிறது? இதை விளக்குவதற்கு நாம் பலரும் அறிந்திருக்கக்கூடிய இந்த ஆங்கிலத் தொடரை எடுத்துக் கொள்வோம்:

“Truth in thought, word, and deed”.

இதை ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? உண்மை எனப்படுவது நடந்த நிகழ்ச்சியை சிறிதும் பிசகாமல் சொல்வது, அல்லது  ஒருவன் உள்ளத்தில் எண்ணமாக உதித்ததை, அதுவே அவனது வாய்மொழியாக வெளியே வந்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் முடிந்தால் அதுவும் ஆகும். இவைகளே அப்பட்டமான உண்மை என்பதன் விளக்கம். இதைத்தான்  கவியரசு கண்ணதாசனும் ஒரு பாடலில் “உள்ளதை சொல்வேன், சொன்னதைச் செய்வேன்” என்கிறாரோ?

நடந்ததைப் பற்றிச் சொல்வதை அப்புறமாக எடுத்துக் கொள்வோம். இப்போது அந்த ஆங்கில வாக்கியத்தில் உள்ள ஆழங்களைக் கவனிப்போம்.

Thought எனப்படும் எண்ணம் வேறெவருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை. அது நம் உள்ளேயே இருப்பது. ஆனால் அதுதான் மேற்கொண்டு வெளிப்படும் எதற்கும் முன்னோடியாக உள்ள வேர்.

அறிந்தோ அறியாமலோ வரும் அதனுடைய வெளிப்பாடுதான் அந்த எண்ணத்தை ஒட்டி வரும் words எனப்படும் வார்த்தைகள். அந்த வடிவத்தில்தான் அது மற்றவர்களைப் போய்ச் சேர்கிறது.

தனது எண்ணங்களையும், வார்த்தைகளையும் மிகத் தெளிவாக மற்றவர் அறியும்படி தனது உடல் உறுப்புகளான கை, கால் போன்ற ஏதேனும் ஒன்றினாலாவது செய்யப்படும் செயல் தான் கடைசியாகச் சொல்லப்பட்ட deed.

இந்த மனோ, வாக்கு, காயங்களில் சீராக வெளிப்படுவது Truth.  அது ஒரு மலை மேல் புறப்பட்டு சமவெளியைக் கடந்து கடலில் கலக்கும் ஆறு போல் தெள்ளத் தெளிநீராக ஓடவேண்டும். இந்த மாதிரியான சீரோட்டம் இல்லை என்றால் எங்கோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம். அது ஓடும் வழியில் உள்ள மற்றவற்றையும் கலந்து எடுத்துக்கொண்டு போகும்போதுதான் தூய எண்ணங்கள் மாற்றம் கொள்கின்றன.

ஆக Truth என்பதில் இவ்வளவு பரிமாணங்கள் இருக்கின்றன. Truth என்ற ஒரே சொல்லிற்கு உள்ள மூன்று பரிமாணங்களையும் காட்டும்படி மூன்று சொற்களே தமிழில் இருக்கின்றன. அந்த வகையில் தமிழிற்கு ஒரு சிறப்பும் இருக்கின்றது. உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர்.

ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். satyameva_jeyate

நுண்மையான பொருள் கொண்ட இப் பதத்தை “சத்யமேவ ஜயதே” என்ற வசனத்தை மொழி பெயர்த்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ”சத்” என்ற பதத்தின் பொருளில் இருந்து மெய், வாய்மை, உண்மை என்ற  இம்மூன்று வார்த்தைகளின் பொருள் வேறுபட்டவை. ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?

இருப்பதுள் நுண்ணியதான “உண்மை” எனும் சொல்லை எடுத்துக் கொண்டிருந்தாலாவது பரவாயில்லை எனச் சொல்லியிருக்கலாம்.

ஏனெனில், வாழ்வில் உயரவேண்டும் வளரவேண்டும் என்று உள்ளம் நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. சகல சீவ ராசிகளும் கல்வி அறிவினாலோ, பட்டறிவினாலோ மேலும் மேலும் வளர்வதற்குத்தான் உயிரெடுத்திருக்கின்றன என்றே பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். இதுவரை பரிணமித்த ராசிகளில் மனித ராசி ஒன்றுக்குத்தான் தான் மற்றும் தன்னைச் சார்ந்த சூழ்நிலைகளைப் பற்றிய உயரிய சிந்தனையும், தொழில் நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த வளர்ச்சியும் இருந்திருக்கின்றன என்று கணித்துள்ளனர். அது அனைவருக்கும் பொதுவாக உதவுவதாகவே அமைந்திருக்கிறது என்றும் கண்டுள்ளனர். (இது பற்றி வேறு ஒரு கட்டுரையில் தனியே ஆராய்வோம்.)

ஆக, உயரவேண்டும் என ஊக்குவிப்பது மனித மனத்தின் இயல்பு. இயல்பாக மனத்தில் தோன்றும் எண்ணத்திற்கு “உண்மை” என்று பெயர். அதன்படி “உண்மையே உய்விக்கும்” அல்லது “உண்மையே உயர்த்தும்” என்றாவது வாசகம் அமைந்திருக்கலாம்.

gandhiஉண்மை யொன்றையே வலியுறுத்தி அது அரசியலிலும் எடுபடும் என்று வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தியைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு நோபல் அமைதிக் குழு பற்பல காரணங்களினால் பரிசு கொடுக்க இயலவில்லை என்றாலும், அவர் இறந்த வருடத்தில் குழு “இந்த வருடம் நோபல் பரிசைப் பெறத் தகுதியுள்ள நபர் எவரும் உயிருடன் இல்லை” என்று சொல்லி பரிசை எவருக்குமே அளிக்காதிருந்து காந்தியைக்  கௌரவித்தது  அல்லவா?

அந்த உண்மை பேசிய, அரசியலில் இருந்தும் இல்லாத ஞானி போல் வாழ்ந்த மகானை நேரில் காண முடியா அமெரிக்கத் தலைவர்களான மார்டின் லூதர் கிங், தற்போதைய குடியரசுத் தலைவர் ஒபாமா மற்றும் பலரும் தங்கள் மானசீக குருவாகக் கொண்டுள்ளனர் என்றால் உண்மையின் மதிப்பை மேலும் சொல்வதற்கு என்ன வேண்டும்?

“உண்மையே உன் விலை என்ன” என்று கேட்கும், நமக்கு மிகவும் பரிச்சயமான, தலைவர்களுக்கு இதுவாவது புரியுமா? தமிழையே கரைத்துக் குடித்து விட்டவர்கள் போலும் வாயினால் பேசிப் பேசியே புகழ் நிலைக்கு வந்தவர்களிடம் இதற்கு மேல் எதை எதிர்பார்க்க முடியும்?

எண்ணம் வேறு ஏதோ. வாய் ஒன்று பேசும். கையோ வேறொன்று செய்யும் என்றே உலவி வரும் “சின்ன” மதியாளருக்கு இது புரியுமா? இதுதான் போகட்டும். வேறு ஒன்று சொல்கிறேன். அதாவது புரிகிறதா என்று பார்க்கலாம்.

இதை நான் பல வருடங்கள் முன்பு Readers’ Digest எனும் ஆங்கில மாதப் பத்திரிகையில் படித்திருந்தேன். இது ஒரு மேற்கோள். யார் சொன்னது என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளவில்லை.

“There is no essential difference between Truthfulness and Spirituality. Truthfulness is characterized by ‘words following the facts’, whereas Spirituality is that of ‘facts following the words’.

அதன் விளக்கமாவது: நடந்த நிகழ்ச்சியைச் சற்றும் மாற்றாமல் அப்படியே சொல்பவன் உண்மை பேசுபவன். ஒருவர் சொன்னது அப்படியே நடந்தால் அவரே ஞானி.

இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஞானியாவதற்கு இப்படியும் ஒரு சுலப வழி இருக்கிறது. இதன்படி ஒருவர் உண்மையே பேசி வந்தால் போதும். அவர் இறுதியில் ஞானி ஆவதற்கு முற்றிலும் தகுதி ஆகிறார்.

சொல்வது நடக்கும் எனும் ஞானியிடம் ஓர் அனுபவம் உண்டா, அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஏதேனும் ஒன்று நம் வாழ்வில் நடந்திருக்கிறதா என்று யோசிக்கத்தான் எனக்கு முதலில் தோன்றியது. யோசித்துப் பார்த்ததில் 1972 -ல் நடந்த ஒரு நிகழ்வும் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த வருடம் எங்கள் தகப்பனாருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு பெற்றது. அவர் ஜாம்ஷெட்பூரில் இருந்தார்; நாங்கள் சென்னையில் இருந்தோம். முதலில் செய்த ஏற்பாட்டின்படி ஷஷ்டி அப்த பூர்த்தி விழா ஜாம்ஷெட்பூரில் நடப்பதாக இருந்தது. புதிய  தம்பதிகளாகிய எங்களது முதல் பொறுப்பாகவும் அது அமைந்தது. அதனால் விவரங்களை அப்படியே குறிப்பிட்டு ஒரு கையெழுத்துப் பத்திரிகையும் தயார் செய்துகொண்டு காஞ்சி மகா முனிவரின் ஆசீர்வாதம் வாங்க வேண்டி அவரைப் பார்க்க தேனம்பாக்கம் சென்றோம்.

அன்று அவர் மௌனத்தில் இருந்தார். ஆனால், தரிசனம் கொடுத்துக்கொண்டும், வந்தோர்களை ஆசீர்வதித்துக்கொண்டும் இருந்தார். எங்கள் முறை வந்ததும் பூ, பழத் தட்டில் பத்திரிகையையும் பார்த்து விட்டு கை சைகையாலேயே என்ன விசேஷம் என்று கேட்டார். என் கூட வந்த பெரியவர் விசேஷத்தைப் பற்றிச் சொன்னதும், சைகையாலேயே எங்கே நடக்கிறது என்றும் கேட்டார். ஜாம்ஷெட்பூரில் என்றதும் கை இரண்டையும் நன்கு தூக்கி ஆசீர்வாதம் செய்தார். ஜாம்ஷெட்பூரில் அந்த விழா நல்லபடியாக நடக்கும் என்ற அவரது ஆசிகள் திருப்தி அளித்தன. ஆனால், விதியின் விளையாட்டு விசித்திரமானது அல்லவா ?

அன்று இரவு சென்னை திரும்பி வீட்டின் கதவைத் திறக்கும் போதே ஜாம்ஷெட்பூரில் இருந்து வந்திருக்கும் போஸ்ட் கார்ட் ஒன்றைப் பார்த்தோம். அதில் என் பெற்றோர்கள் தாங்கள் மட்டும் சென்னை வருவதாகவும், ஆதலால் விழாவை சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தனர்.

விழா நல்லபடியாக நடக்கும் என்று மகா சுவாமியிடம் ஆசீர்வாதம் வாங்கியாயிற்று. மகா சுவாமிகளிடம் தெரிவித்ததற்கு மாறாக, விழா எங்கு நடந்தால் என்ன என்று விட்டுவிட்டோம். மேலும் பத்திரிக்கை என்று ஏதும் அடிக்கவில்லை; நேரில் அழைத்ததோடு சரி.

விழா நடக்கும் வாரம் வந்தது. எனது தந்தையின் நோய்வாய்பட்டிருந்த தமக்கையார் விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னால் சென்னையில் காலமாகிவிட்டார். சென்னையில் நாங்கள் கொண்டாட நினைத்திருந்த விழா தடைபட்டது.

அன்றே எனது சகோதரன், சகோதரிகள் இருந்த  ஜாம்ஷெட்பூருக்கு விழா தடைபட்டது பற்றி தந்தியும் கொடுத்து விட்டேன். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு இப்போதுள்ளது போல் தொலை பேசி பரவலாகக் கிடையாது. சில இடங்களில் தந்தி வசதியும் மகா மட்டமாக இருக்கும். அதனால், நான் கொடுத்த தந்தி அவர்களுக்குப் போய் சேர மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நாங்கள் அத்தையின் இறுதி காரியங்களில் ஈடுபட்டிருந்தோம். ஆனால், விழா தடைபட்டது பற்றி ஜாம்ஷெட்பூரில் இருந்த என் சகோதர, சகோதரிகளுக்கு ஏதும் தெரியாது.

அறியாத அவர்கள் அன்று காலை தடபுடலாக வடை, பாயசத்துடன் உணவு அருந்திவிட்டு, புது உடை உடுத்திக் கொண்டு அன்று மாலை அருகில் இருக்கும் கோவில் ஒன்றுக்குச் சென்று பெற்றோர்கள் பெயருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து முடித்து விட்டனர்.

அது எங்களுக்குத் தெரியவர மேலும் ஒரு வாரம் ஆகிவிட்டது. இங்கு பாருங்கள்: காஞ்சி முனிவர் குறிப்பால் என்ன கேட்டாரோ, அந்த விழா எங்கு நடக்கும் என்று ஆசிர்வதித்தாரோ அங்கு அது எப்படியோ நடந்து விட்டதல்லவா? நடக்க வாய்ப்பே இல்லாவிட்டாலும்கூட அவர் சொன்னதுதான் நடந்தது. அதுதான் ஞானியின் விசேஷம்.

இதைப் போன்ற நிகழ்ச்சிகளை அனுபவித்தால்தான் Readers’ Digest -ன் அந்த ஆங்கிலத் தொடரின் அருமை தெரியும்.

மாறாக, உள்ளத்தில் ஒன்று எண்ணி வாயால் வேறு பேசி செயலால் பிறிதொன்று செய்பவர்களும் வையகத்தில் உண்டு. “ஒரு ரூபாய்க்கு அரிசி மூன்று படி; இல்லையேல் முச்சந்தியில் எனக்கு சாட்டையடி” என்று சொல்லிய வாய்ச்சொல் வீரர்களின் ஆண்டவர்களைத்தான் நமக்குத் தெரியுமே.

அவர்கள் சொன்ன வாசகம் தான் “வாய்மையே வெல்லும்” என்பது. இப்போதாவது உண்மைக்கும், வாய்மைக்கும் உள்ள தூரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதா?