கேரளத்தில் வேகமாக பரவும் வஹாபிஸம்

ஜீன் மாதம் 24ந் தேதி  ஆங்கில  நாளிதழில் கவலைக்குறிய செய்தி ஒன்று வெளியானது.   கேரள பல்கலைகழகங்களில்  சுமார் 1046   வெளிநாட்டு மாணவர்கள்  சேர்வதற்கு  பல்கலைகழங்கள் அனுமதி அளித்துள்ளதாக வந்த செய்தி.  வெளிநாடுகளிலிருந்து  நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  ஆனால்  கேரள பல்கலைகழகங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள்  ஆப்கானிஸ்தான், ஈராக் , சிரியா , பாலஸ்தீனம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாட்டிலிருந்து  உயர்கல்வி கற்பதற்கு , குறிப்பாக ஆராய்ச்சி படிப்பு பயில விண்ணப்பத்துள்ளார்கள்.   மேற்படி நாடுகளிலிருந்து படிக்க வரும் மாணவர்களில் பெரும்பாலோனோர்  ஐ.எஸ்.ஜ.எஸ் ஆதரவாளர்கள்   உயர் கல்வி படிக்க வருவதாகவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

I am really impressed by your writing skills as well as the layout on your blog. It has no side effects prednisone online incontinently as it has the lowest dosage of all other drugs. However, they were also at the highest risk of sexual dysfunction.

Zyprexa 10mg tablet zyprexa is an approved, generic prescription medicine, the active ingredients in zyprexa are similar to those found in other anti-psychotic drugs. Azithromycin, a prescription drug used in the treatment of bacterial infections, especially those caused by clomid 50 mg online the herpes viruses including herpes simplex virus, varicella zoster virus, human cytomegalovirus, and herpes zoster. The second is generic cialis buy online viagra without prescription and the most important thing on sale.

Clomid price without insurance can also cause serious problems. Metformin (gliflo) was launched in 1993 in the united states and is indicated for the treatment of diabetes mellitus, in adult patients with Beloeil how to get clomid privately type 2 diabetes. It is possible to make the best possible purchases, the time is right to do it!

                ஜாகிர் நாயக்கின்  ஹிஸ்ரா கோட்பாட்டின் படி, கேரள மாநில பல்கலைகழகங்களில்  முஸ்லீம் நாடுகளிலிருந்து  உயர் கல்வி கற்க வருவது.  ஒரு புறம் என்றால்  கேரள மாநிலத்தின் மக்கள் தொகையை மாற்ற முஸ்லீம்களை அதிக அளவில் கேரளாவுக்கு இடம்பெயறுமாறு வேண்டுகோள் விடுத்துப்பது,  இதனிடையில்  கேரளாவில் வஹாகபியத்தை பரப்புவது.    ஐ.எஸ்.ஐ.எஸ். கோட்டைகளாக கருதப்படும் ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானை சார்ந்த மாணவர்கள் தீவிரவாத இஸ்லாமியர்களாக இருப்பதால்,  கேரளத்தில் உள்ள முஸ்லீம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை  தீவிரவாதிகளாக மாற்றுவதற்காக அழைத்து வரப்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.   எவ்வாறாயினும் அல்கொய்தா,  ஐஎஸ்.ஐ.எஸ். மற்றும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு கேரளா நீண்டகாலமாகவே வளரும் இடமாக மாறியுள்ளது.  இதன் காரணமாகவும்  சிரியா ஈராக் ஆப்கானிஸ்தான்  மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு  கேரள பல்கலைகழகங்களை தேர்வு செய்துள்ளார்கள் என உளவு துறையினர்  சந்தேகத்தை கண்டறிந்துள்ளதாக  ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                மேலும்  கேரளத்தில் வஹாபிஸம் வளர்வதற்கு சௌதி அரேபியா அதிக அளவில்  நிதி வழங்கி வருகிறது.  மேற்படி நிதியை கொண்டு  கேரள பல்கலைகழகங்களில்  செமினார் என்ற பெயரில்  வஹாபிஸத்தை வளரக்க முயலுகிறார்கள்.   2017 ல்  தேசிய புலனாய்வு அமைப்பினர்  ஒமர் அலி மோடல் சம்பந்தமான குற்றப் பத்திரிக்கையில்  ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்களில்  உயர் படிப்பு படித்தவர்கள்  ஐ.எஸ்.ஐ.எஸ். யில் சேர்கிறார்கள்  என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.   2010-ல் கேரள பல்கலைகழகங்களின் சார்பாக   மொழி சம்பந்தமான சர்வதேச செமினர் ( International Seminar of Language ) நடத்தப்பட்டது.   இதில் கலந்து கொண்டர்களில் ஒருவர்  கத்தார் நாட்டின்   Yusub Al-Quradawi என்பவர் கலந்து கொண்டார்.   இவர்  முஸ்லீம் அடிப்படைவாதி என்பது குறிப்பிடதக்கது.   ஏன் என்றால்  முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது  Yusub Al-Quradawi       கேரளத்திற்கு வருவதை தடை செய்தது என்பது குறிப்பிட தக்கது.

                கேரளத்தில்  இடதுசாரிகளின் ஆட்சியில்  அடிப்படை முஸ்லீம்வாதிகளும்,  இடதுசாரியினரும் இணைந்து ஜாகீர் நாயக்கின் ஹிஸ்ரா கோட்பாட்டிற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.   24.7 சதவீத  முஸ்லீம்களின் வாக்குகளை கவர்வதற்காகவே, இடதுசாரி அரசாங்கம்  மலப்புரம் மாவட்டத்தில்  அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தின்  வளாகம் அமைக்க முடிவு செய்தார்கள்.   இந்த செயல்பாடு  கேரளத்தில் வஹாகபிஸத்தை வளர்த்துவதற்கு துணையாக இருக்கிறது.   இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்து வருவது  அரபு நாட்டினர்.    இதற்கிடையில்  மலப்புரம் மற்றும் வடக்கு கேரளாவில்  உள்ள மதரஸாக்களில்  வஹாபிஸம் போதனைகள் கற்றுக் கொடுப்பதாகவும்,  மேற்படி மதரஸாக்களுக்கு நிதியானது அடையாளம் தெரியாத வளைகுடா நாடுகளிலிருந்து வருவதாகவும்  கூறப்பட்டது.   வஹாபிஸம் என்பது தீவிரவாத முஸ்லீம்களின் சவுதி ஆதரவு பெற்ற மதமாகும்.   ஷியா மற்றும் சன்னி பிரிவினைரிடையே மோதல் போக்கை உருவாக்குவதும் வஹாபியத்தின் முக்கிய நோக்கமாகும்.

                இதற்கு மூலக்காரணமாக இருப்வர்  பிரச்சினைக்குறிய மத போதகர்  ஜாகீர் நாயக்.  இண்டர்நேஷனல் குரான் செமினாரை  25.4.2010-ல் கேரளத்தில் நடத்தினார்.   ஆனால் இதற்கு அரபு நாடுகளில் உள்ள செய்தியில்  உலக குரான் ஆய்வு செமினார் கேரளத்தில் நடத்தப்பட்டது என தலைப்பிட்டு வெளியிட்டது.  கேளரத்தில் வஹாபிஸத்தை  முஸ்லீம்களிடம் கொண்டு செல்வதற்கு  சௌதி அரேபியா நிதி உதவி செய்வதாகவும் ஒரு குற்றசசாட்டு உண்டு. மேற்படி கருத்தரங்கு நடத்த ஹவாலா மூலம் நிதி வருவதாகவும், சட்ட விரோதமான செயல் என தெரிந்தும்  இடதுசாரி அரசு அனுமதிக்கிறது.   ஒருபுறம்  பயங்கராதத்தை தடுக்க வேண்டும்,  அதற்காக சௌதி அரேபியா  துணை நிற்கும் என உறுதி மொழி கொடுத்தாலும்,  மறுபுறம்  வன்முறையை ஆயுதமாக கொண்டு செயல்படும் வஹாபிஸத்திற்கு ஆதரவாக நிதி உதவி செய்வது முரண்பாடான செயல்பாடாக கருத வேண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், வஹாபி அறிஞர்கள் மசூதியின் சில உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து நிர்வாகத்தை கைப்பற்ற முயன்றனர். பல மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள் வஹாபிகளின் நுழைவை  எதிர்த்தாலும், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற வஹாபிகளுக்கு கேரளாவில் வெற்றி அதிகம். இந்தியா மீது ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், தெஹ்ரான் ஷியா சமூகத்திற்கு செல்வது கவலை அளிப்பதாகவும் சவூதி அரேபியா கவலை தெரிவிக்கிறது.

              கேரளாவின் தெற்கே உள்ள மதரஸாக்களில் இப்போது உலகளாவிய பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தீவிரவாத இஸ்லாமியர்களின் சவுதி ஆதரவிலான மதமான வஹாபிஸத்தை போதிக்கிறார்கள்.  பெட்ரோ டாலர் நிறைந்த வளைகுடா நாடுகளின் ஹவாலா நிதியுதவியுடன் , வஹாபிஸத்தைப் பற்றிய  கருத்தரங்குகள் மூலம் உலகளாவிய கலிபாவை நிறுவுவதற்கான ஐஎஸ்ஐஎஸ் இன் தீய குறிக்கோளாகும்.    இளம் முஸ்லீம்களின் மனதை  ஈர்க்கக்கூடிய வகையில்  வஹாபிஸம்  கற்பிக்கப்படுகின்றன.  பல மதரஸாக்கள் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொலை தூரவாதி ஜாகிர் நாயக்ஸைப் போல அதிகமான ஆண்களை உருவாக்க அதிக நேரம் வேலை செய்கின்றனர்.  கரந்தூரில் தனது மதரஸாவை நடத்தும் அப்துல் மாலிக், தனது மையத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு நாயக் காணொளிகள் தொடர்ந்து காட்டப்படுவதை ஒப்புக்கொண்டார்.  “ஜாகிர் நாயக் யார் என்பது ஒவ்வொரு நபருக்கும் தெரியும். இங்கு ஜாகிர் நாயக் பெண்களையும் மற்ற மதக் குழுக்களையும் இஸ்லாத்திற்கு அழைப்பதையும், பின்னர் அவர்கள் வீடியோ கிளிப்பிங்கு மூலம்  இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதைக் காணலாம்” என்று கரந்தூரின் இஸ்லாமிய மையத்தின் தலைவர் மாணிக் கூறினார்.  பஷீர் மற்றும் மாணிக் இருவரும் அரபு உலகத்திலிருந்து  சட்ட விரோத  ஹவாலா சேனல்கள் மூலம் நிதி உதவி பெறுவதை ஒப்புக்கொண்டனர்.  “வங்கிகள் மூலம் நிதி பெறுவது கடினமாக உள்ளது. இது ஹண்டி (ஹவாலா) வழியாக செய்யப்படுகிறது” என்று பஷீர்  ஒப்புக்கொண்டார்.  

                வஹாபியத்தை பரப்ப கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி அரபு கல்லூரிகள் நடத்த அனுமதியும் சலுகைகளும் அளித்துள்ளது.   அனுமதி அளிப்பதற்கு முன் இது சம்பந்தமாக  ஒரு குழு அமைக்கப்பட்டது.  10 பேர்கள் கொண்ட இந்த குழுவில் ஒருவர் மட்டுமே இந்து மற்றவரகள் இஸ்லாமியர்கள்.  குழு அமைப்பதற்கு முன், கேரளாவில் உதவி பெறும் அரபிக் கல்லூரிகளின் ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை அனுபவிப்பதில்லை பல்வேறு விஷயங்களில், கேரளாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தால் தடை  செய்யப்பட்டது. எனவே அனைத்து உத்தரவுகளும்  மற்ற கல்லூரிகளுக்கு வழங்கப்படுவதை போலவே அரபிக் கல்லூரிகளுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்  என்று குழு பரிந்துரைத்தது.  இந்த பரிந்துரையை கேரளத்தின் இடதுசாரி அரசாங்கம் ஏற்றுக் கொண்டு உரிய உத்திரவும் பிறபிக்கப்பட்டது.  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஓரியண்டல் கல்லூரிகளுக்கும் அரபிக்கும் சமமாக பொருந்தும் என அரசு சட்டத்தை திருத்த வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை  இடதுசாரி அரசு ஏற்றுக் கொண்டது. 

              2020 செப்டம்பர் 25 அன்று தனது சமீபத்திய டெல்லி பயணத்தில், சிரியா நாட்டின்  கிராண்ட் முஃப்தி, ஷேக் அஹ்மத் பத்ரெடின் ஹசூன் இந்தியாவை “வஹாபி ஜிஹாத்தின் வெளிப்புற அழைப்புகளுக்கு” கவனம் செலுத்துமாறு எச்சரித்தார்.    இந்திய முஸ்லீம்களையும், அவர்கள் நிர்வகிக்கும்  மதரஸாக்களையும்  வஹாபிஸத்தின்   பாசிசத் நம்பிக்கையை உணரும்படி வலியுறுத்தினார்.  வஹாபிஸத்தின்  “கூலிப்படையினர் மற்றும் ஊடுருவல்களிலிருந்து விலகி இருங்கள்” மற்றும் “வஹாபி தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக இருங்கள்” என்று அவர் கூறினார்.  இவர் கூறியதை வலியுறுத்தும் விதமாக இந்தியாவுக்கான சிரியாவின்  தூதுவர் ரியாத் அப்பாஸ், “வஹாபிசம் மக்களின் எதிரி மற்றும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்தியர்கள் வஹாபிகளின் அழைப்புகளை ஏற்க கூடாது” என்று கூறினார்.  முஸ்லீம் உலகம் முழுவதும்  வஹாபிஸம் எனும் “மதவெறி பயங்கரவாதம்” பேரழிவை ஏற்படுத்துவது குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்திய ஹாசன், இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாகக் கூறினார்.       

         கேரளாவில் வெளிப்படையான மத வெறியின் செயல்பாடுகள்  அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில்  வஹாபிஸம் பற்றிய  பிரச்சினை தேசிய கவனத்தை ஈர்த்திருந்தாலும், கேரள முஸ்லிம்கள் தாங்கள் யார்  என்பதும் மற்றும் வரும் காலங்களில்  தங்கள் மாநிலம் எங்கு செல்கிறது என்பதை சிந்திக்க பார்க்க வேண்டும்  .   முஸ்லீம்  சமூகத்தின் பெரும் பகுதியினர்   இது பற்றி உணர்ந்தாக தெரியவில்லை.   முற்போக்கு  சிந்தனை கொண்ட முஸ்லீம்கள் மட்டுமே, தவறான கருத்துக்களை பரப்பும் இஸ்லாமிய பள்ளிகளை நம்பக்கூடிய  இளைஞர்களிடையே ஒருமித்த  கருத்தியல் தீவிரவாதத்தை உருவாக்குகிறார்கள்.   கேரளாவில் உள்ள அரசியல்  களத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் இக்வான் அல்-முஸ்லீம் அல்லது முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதையே  உறுதி செய்கின்றன. மதகுருமார்கள், அரபு மற்றும் இஸ்லாமிய இதழ்களின் ஆசிரியர்கள், சலாபி-வஹாபி பிரிவின் சாமியார்கள் மற்றும் தொலைதூரவாதிகள் போன்றவர்கள்  படித்த வர்க்கத்தைச் சார்ந்த இளைஞர்கள்  வஹாபிஸயத்தை ஏற்றுக்  கொள்ள முறையாக குறிவைக்கப்படுகிறார்கள்   

                கேரளாவை தளமாகக் கொண்ட அரசியல் இஸ்லாமிய அமைப்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று கூறினாலும்,  முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு (இக்வான்-உல்-முஸ்லிமின்) விசுவாசமாக இருப்பதையே  உறுதிப்படுத்துகிறது. கேரளாவின் இடுக்கியில் ஒரு கிறிஸ்தவ பேராசிரியரின் கையை வெட்டுதல், மற்றும் “இஸ்லாமிய அரசு அல்-ஹிந்தி தொகுதி” போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசாங்க அட்டவணையில் உள்ள என்ஐஏ அறிக்கை வெளிப்படுத்தியபடி, இஸ்லாமிய அரசு அல்-ஹிந்தியை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் முக்கிய நபர்களையும் இடங்களையும் குறிவைக்க PFI திட்டமிட்ட ஒரு சம்பவம்  முறியடிக்கப்பட்டது.    இன்று, கேரள முஸ்லிம்களின் இரண்டு முக்கிய குழுக்கள் செயலாக்கத்தில் உள்ளன.   சிந்தனையிலும் செயலிலும் முற்றிலும் வேறுபட்டவை: சன்னி முஸ்லிம்கள் மற்றும் முஜாஹித் முஸ்லிம்கள். கேரள சன்னி முஸ்லீம்கள் பன்மைத்துவம், அமைதி மற்றும் சூஃபி சார்ந்த வழிபாட்டு தலமாக வருபவர்கள் என்று  வெளிப்பார்வைக்கு நம்பப்பட்டாலும், கேரளாவில் உள்ள “முஜாஹித் முஸ்லீம்கள்” வகுப்புவாத மற்றும் மதவாத மோதல்களில் ஈடுபடும் “தூய்மையான” சலாபிகளாக உள்ளனர்.   

                பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  அதன் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயக கட்சி ( SDPI) வஹாபிஸத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள்.   ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் மற்றும்   கொலைகள், இந்து சன்னியாசிகள்  கொலை, லவ்-ஜிஹாத் போன்ற மோசமான செயல்களை செய்துள்ளனர். மனித கடத்தல், மற்றும் PFI வெற்றிகரமாக கேரளாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ISIS ஆட்களை உருவாக்கியுள்ளது. உண்மையில், பாதுகாப்பு நிறுவனங்களின் ரேடாரின் கீழ் வரும் எந்த ஐஎஸ்ஐஎஸ் ஆள்சேர்ப்பும் எப்படியாவது எப்போதாவது பிஎஃப்ஐ -யுடன் இணைக்கப்பட்டிருக்கும் –  தொடர்பிலிருப்பவர்கள் என்பது புறக்கணிக்க முடியாத ஒரு உண்மை. அதே நேரத்தில், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி திரு. ஹமீத் அன்சாரி, தெஹ்ரானில் RAW நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதாகக் கூறப்பட்டதும்,  PFI  மகளிர் பிரிவினர் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதும் உண்டு.   

                வழக்கு ஆய்வுகளின்படி, அரபுப் பணம், குறிப்பாக சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவில் வஹாபிசத்தை வளர்க்கும் முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. ஜே.கே முதல் கேரளா வரை, சவூதி பணம் இந்தியாவில் வஹாபிசம் இயக்கத்திற்கு நிதியளிப்பதற்காக மூலோபாய ரீதியாக அனுப்பப்பட்டது.    பல்வேறு  பல.வேறு உளவு துறையின் அறிக்கைகள், சவுதி நிதியுதவி பெறும் கேரளாவின் மதரஸாக்கள் வஹாபிஸத்தை முறையாக போதிக்கின்றன என்று கூறுகின்றன.  சவுதி தனது பணத்தை பல்வேறு வழிகளில் கொட்டி வருகிறது, நமது தீவிரவாத இந்திய சகோதரர்கள் அந்த பணத்திற்கான தேவையை உருவாக்கினர். கேரள வெள்ளத்தின் போது, ​​ரூ. 700 கோடி நிவாரண உதவியுடன் கேரளாவுக்கு உதவ சவுதி தயாராக இருப்பதாக ஒரு வதந்தி பரவியது. 700 கோடி. இருப்பினும், பேரிடருக்கு எதிரான தனது சொந்தப் போரில் தன்னிறைவு பெற்றதாக இந்தியா கூறியபோது, ​​பலரும், குறிப்பாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கும் பிரதமர் மோடியிடம் உதவி எடுக்கவில்லை என்று சாடினார். UAE பின்னர் அத்தகைய சலுகைகளை வழங்க மறுத்தது.

                இன்றைய நிலையில் இந்தியாவில்  18 லட்சம் முஸ்லீம்கள் வஹாபிஸத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.  கடந்த மூன்று ஆண்டுகளில்  சுமார் ரூ 1,700 கோடி  சௌதி அரேபியா மூலம்  நிதி வந்துள்ளது.  கேரளத்தில் மட்டும் 75க்கும் மேற்பட்ட மசூதிகள் வஹாபிஸத்தின் கட்டுக்குள் வந்திருப்பதாகவும்  தகவல் தெரிவிக்கின்றன.   முதலில் ஜம்மு-காஷ்மீரில் மட்டுமே  பரவியிருந்த வஹாபிஸம்  ,  தற்போது கேரளாவில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.  கேரளத்தை ஆளும் இடதுசாரி அரசும் இவர்களுடன் இணைந்து செயலாற்றுவதாக கூறப்படுகிறது.   மத்திய கிழக்கு நாடுகளில்  கேரளத்தை சார்ந்தவர்கள் சுமார் 3 மில்லியன் பேர்கள் பணியாற்றுகிறார்கள்.   ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும்  அரபு நாடுகளில் பணியாற்றும்  கேரளத்தவர்களில்  80 சதவீதம்  முஸ்லீம்கள்.   குறிப்பாக உயர் கல்வி கற்றவர்கள் அதிக அளவில்  அரபு நாடுகளில்  பணியாற்றுவதால்,  ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு  ஆட்கள் சேருவதற்கு  தயக்கம் காட்டுவதில்லை.   இன்றைய நிலையில்  ஐ.எஸ்.ஐ.எஸ்.யில் கேரளத்தைச் சார்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையானது   இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியும்  என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.   லட்சத்தீவில் நடக்கும் சம்பவங்களுக்கும்,  வஹாபிஸத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும்  கூறப்படுகிறது.