சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு (எப்.டி.ஐ) எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புகள், நமது அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றன. இதன்மூலமாக ‘LAW MAKERS’ என்று ஜனநாயகத்தில் பெருமையாகக் குறிப்பிடப்படும் நமது மக்கள் பிரதிநிதிகளில் பலரின் சாயம் வெளுத்திருக்கிறது; தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தரம் (ஏற்கனவே என்ன தரத்தைக் கண்டீர்கள் என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) அதல பாதாளத்துக்கு சரிந்திருக்கிறது. ஆனால் இம்முடிவு தெரிவதற்குள் நடந்த நாடகங்கள் தான் எத்தனை, எத்தனை?

This is what i have seen in the wild most often: a couple of guys trying to chat up a woman at a diner booth. In may 2010, the Settimo Torinese clomid for sale near me first-generation concept, the z1, was unveiled in geneva, switzerland. The generic-approval programs by pfizer and teva, the major manufacturers of generic drugs, could not be reconciled with the terms of the u.s.

Dapoxetine is used to treat major depressive disorder (mdd). I was in a bind and a friend told me to go to 100mg price in india and is fluticasone nasal spray available over the counter Toktogul order some. I don't see how the med can be so bad for you but i think the only way that you can use it is if you buy it from canada.

The drug has been available in two forms: the tablets are available in 100mg strengths, and the injection is available in 50mg and 100mg strengths. Precoose is a tool used by Bad Wildungen metformin out of pocket cost any organization to help them reduce the manual work involved in the recruitment process as well as reducing the amount of time that goes into recruiting. It is usually not a viable option for children due to its potential use in children as an allergen, although its use on infants with food allergies is becoming of more common fashion.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவை அமலாக்க சென்ற ஆண்டே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயன்றது. பிரதமர் மன்மோகன் சிங், ”ஒரே வணிக முத்திரை கொண்ட நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட நிறுவனங்களில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடும் செய்ய அனுமதி அளிக்கப்படும். இதனால் நமது நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும்; விவசாயிகள் பலன் அடைவார்கள்’’ என்றெல்லாம் சொன்னார் (நவ. 24, 2011). இதற்கு காங்கிரஸ் தவிர்த்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது, ‘சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு கொள்கை அடிப்படையில் அனுமதிப்பது என்றும், தத்தமது மாநிலத்தில் இதனை அனுமதிப்பது பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைக் காட்டி கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் அரசு தந்திரங்களை செய்தது.

2011 நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே எப்.டி.ஐ.க்கு ஒப்புதல் பெற்றுவிட காங்கிரஸ் முயன்றது. ஆனால், அப்போது காங்கிரஸ் பக்கம் சாதகமாகக் காற்று வீசவில்லை. கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சியின் கனவு கலைந்தது. தவிர, கோவா, உத்தர்கண்ட், உ.பி, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில் சில்லறை வர்த்தகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க அரசு தயாராகவும் இல்லை

எனினும் காங்கிரஸ் கட்சி ‘நூல்’ விட்டுப் பார்த்தது. ஆளும் தரப்பிலேயே எழுந்த கடும் எதிர்ப்பால் பிறகு பின்வாங்கியது. ‘அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, இவ்விஷயத்தில் தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக’ நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்தது. நாட்டின் வர்த்தகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை முன்னெடுத்ததும் அரசின் அந்தர்பல்டிக்கு காரணமாக அமைந்தது.

” அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ”தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம்” என்று வெளிப்படையாகவே கூறினார். அதற்கேற்ப “‘சட்டசபை தேர்தல்கள் முடிந்தவுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் விரிவாக விவாதித்து, அனைவரது ஒத்துழைப்புடன் சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. கொண்டுவரப்படும்” என்று பிரதமர் மன்மோகனும் சொன்னார். அதாவது, அரசு தனது நிலையை தற்காலிகமாக மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது என்பதை அவர் பகிரங்கப்படுத்தினார்.

அதேபோல, இப்போது காங்கிரஸ் கட்சி தனக்குத் தெரிந்த அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு, எப்.டி.ஐ. விவகாரத்தில் அரசியல் சடுகுடு ஆடியிருக்கிறது. ‘அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதித்து கருத்தொற்றுமையுடன் முடிவு காணப்படும்’ என்ற மன்மோகன் சிங், இப்போது அனைத்து அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தி, எதேச்சதிகாரத்துடன் எப்.டி.ஐ. தீர்மானத்தில் அரசு ‘வெற்றி’ பெற ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு, ‘மதவாத பூச்சாண்டி’ காட்டிக்கொண்டே, காங்கிரஸ் கட்சிக்கு வால் பிடிக்கும் முலாயம், மாயாவதி கருணாநிதி கும்பல்கள் உதவி இருக்கின்றன.

2011 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மூக்கடி பட்டு ஜகா வாங்கிய காங்கிரஸ், கொல்லைப்புற வழியாக 2012 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சிகளை விலை பேசியும், மிரட்டியும் ஜனநாயகத்தின் மூக்கை உடைத்திருக்கிறது. வர்த்தகர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்த சில சுயநல அரசியல்வாதிகள் ஜகா வாங்கியதைக் கண்டு இந்திய வர்த்தக உலகம் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. நமக்கு வாய்த்த தலைவர்களின் யோக்கியதையை நாடு இம்முறை தெள்ளத் தெளிவாகக் கண்டுகொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற லோக்சபாவில் இதுகுறித்த விவாதம் நடந்தபோது, எப்.டி.ஐ.க்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறுமாறு சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. ”எப்.டி.ஐ.யை சில்லறை வர்த்தகத்தில் அனுமதித்தால் அடுத்த தேர்தலில் அது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்; பாஜகவுக்கு சாதகமாக அது அமையும்’ என்றும் கூட முலாயம் சிங் யாதவ் லோக்சபாவில் பேசினார். ”சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை அனுமதித்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்று சொல்வதெல்லாம் மாயை. அதனால் 25 கோடி சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். சோனியா தனது பெயரில் ஏற்றுக் கொண்டிருக்கும் காந்தி என்ற பெயருக்காகவேனும் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று அவர் உருக்கமாகவே பேசினார்.

பல்டி அடிப்பதில் சமர்த்தரான திமுக தலைவரை சொல்லவே வேண்டாம். ”எப்.டி.ஐ. விவகாரத்தில் அரசின் நிலையை திமுக ஆதரிக்கவில்லை இவ்விஷயத்தில் திமுக என்ன நிலையை எடுக்கும் என்பது சஸ்பென்ஸ்” என்றெல்லாம் கூறிய பகுத்தறிவுப் பகலவன், ‘’பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் எப்.டி.ஐ.க்கு ஆதரவாக வாக்களிப்போம்” என்று குட்டிக்கரணம் அடித்தார். இதற்கு பின்புலமாக கருணாநிதிக்கு அளிக்கப்பட வாக்களிப்பு என்னவோ? கனிமொழிக்கும் ராசாவுக்குமே வெளிச்சம்!

இத்தனைக்கும் பாஜகவுடன் கூடிக் குலாவி தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததை தாத்தா வசதியாக மறந்துவிட்டார். அமைச்சராக இருந்த முரசொலி மாறன் படுத்த படுக்கையாக, நினைவின்றிக் கிடந்தபோதும் அவரை நீக்காமல் கூட்டணி தர்மம் காத்த பிரதமர் வாஜ்பாய்க்கு செம்மொழி கொண்டான் நல்ல நன்றிக்கடன் செலுத்தி இருக்கிறார். அதிமுக ஆதரவுடன் 1998 ல் வாஜ்பாய் அரசு அமைந்தபோது, அப்போதைய திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதாவின் பிடிவாதத்துக்கு சம்மதிக்காததால் தான், அவரது ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது. அதையும் நன்றி மறந்த கருணாநிதி மறந்துவிட்டார். எல்லாம் காலக்கொடுமை!

இவரைவிட அற்புதமான பல்டி அடித்திருக்கிறார் மாயாவதி. கருணாநிதியாவது, முதலிலேயே தனது நிலையைத் தெளிவு படுத்தினார்; தான் நன்றி கொன்றவன் தான் என்பதை ருசுப்படுத்தினார். வியாபாரிகள் நலம் எல்லாம் தனது சுயநலத்துக்கு அப்பால் தான் என்பதை அவர் சொல்லாமல் சொன்னார். மாயாவதியோ, லோக்சபாவில் ஒரு முடிவும், ராஜ்யசபாவில் ஒரு முடிவும் எடுக்கிறார்! இதே மாயாவதி பாஜக ஆதரவுடன்தான் இருமுறை உபி முதல்வரானார். இப்போது பாஜக அவருக்கு மதவாதக் கட்சியாக மாறி இருக்கிறது! தங்கள் பேரங்களை சாமர்த்தியமாக முடித்துக்கொள்ள உதவும் மதவாத பூச்சாண்டிக்கு இந்த அரசியல் தரகர்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

”சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்” என்று லோக்சபாவில் பேசிய பகுஜன் சமாஜ் உறுப்பினர் தாரா சிங், ‘எப்..டி.ஐ. விவகாரத்தில் மதவாத சக்திகள் பக்கம் இருப்பதா (அரசை எதிர்ப்பதா) அல்லது அவர்களை எதிர்ப்பதா (அரசை ஆதரிப்பதா) என்று மறுநாள் முடிவு செய்வதாக’ அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, லோக்சபாவில் எப்.டி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவித்து மாயாவதி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக முலாயம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். முதுகெலும்பற்ற திமுக அரசை ஆதரித்தது. விளைவாக, எப்.டி.ஐக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் அரசால் 253- 218 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. அத்துடன் அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் (பெமா) குறித்த இடதுசாரிகளின் தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

லோக்சபாவில் காங்கிரஸ் வென்றாலும், ராஜ்யசபாவில் காங்கிரஸ் தரப்புக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அங்கு எதிர்க்கட்சிகளின் தீர்மானம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு ‘அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது’ என்று அந்தர்பல்டி அடித்து அரசைக் காப்பாற்றி இருக்கிறார் மாயாவதி. லோக்சபாவில் ஒரு வேஷம்; ராஜ்யசபாவில் ஒரு வேஷம். இவரைத் தான் நாட்டின் முக்கியமான தலித் தலைவியாக கொண்டாடுகிறார்கள். மாமேதை அம்பேத்கர் தலைமை தாங்கிய தலித் மக்களுக்கு இப்போது வாய்த்துள்ள தலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இதே முலாயமும் மாயாவதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடுமிப்பிடி சண்டையிடுகிறார்கள். இவர்களை இன்னமும் நம்பும் உ.பி. மக்களை நினைந்தால் மிக மிக பாவமாக இருக்கிறது.

இதில் விசேஷம் என்னவென்றால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வென்றிருந்தாலும் கூட, அரசுக்கு ஆபத்தில்லை. ஏனெனில் இது அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அல்ல. எப்.டி.ஐ. முடிவு தள்ளிப் போயிருக்கும். அவ்வளவுதான். அதற்கும் கூட காங்கிரஸ் விடவில்லை. இதை தனது கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு, நாட்டின் கௌரவத்தை அடகு வைத்திருக்கிறது காங்கிரஸ். சுதந்திரம் அடைந்தவுடனேயே, ‘காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்’ என்று மகாத்மா காந்தி ஏன் சொன்னார் என்பது இப்போது புரிகிறது.

இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள். மதவாதம் என்று அச்சுறுத்திக்கொண்டு தங்கள் பேரங்களை முடித்துக்கொண்டு, வீராவேசமாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல நூறு கோடிகளைக் கூட்டிக்கொண்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்து, அரசியல் சாகசம் செய்பவர்கள் தான் இன்று ராஜதந்திரிகள். இதைக் கண்டிக்க வேண்டிய ஊடக உலகம் மௌனம் காக்கிறது. குறைந்தபட்சம் இடதுசாரிகள் எப்.டி.ஐ.யை எதிர்ப்பதற்காகவேனும், ஊடகங்கள் நியாயமாகச் செயல்பட்டிருக்கலாம். சில பத்திரிகைகள் தவிர பெரும்பாலானவை, அரசின் வெற்றியை மெச்சுகின்றனவே ஒழிய, அது எந்த வழியில் பெறப்பட்டது என்பதைச் சொல்லவும் தயங்குகின்றன. அவையும் மதவாத பூச்சாண்டிக்கு ஆட்பட்டுவிட்டனவா?

மொத்தத்தில் நமது நாட்டின் சுயநிர்ணயமும் வர்த்தக சுதந்திரமும் காலவதியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் ‘கோடிக் கரங்கள்’ நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுபிடிக்க வேண்டிய மத்திய புலனாய்வுத் துறையோ, எதிர்க்கட்சிகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படும் வேட்டைநாயாக மாறி இருக்கிறது. ஆக, இந்திய ஜனநாயகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் குலைந்துள்ள காலகட்டத்தில் நாம் வாழ்வது உறுதியாகி இருக்கிறது.

இந்த நேரத்தில் எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெயலலிதாவின் அதிமுக, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில், ‘நாங்கள் அடிமைகள் அல்ல’ என்று நாடாளுமன்றத்தில் கூற 218 பேரேனும் இருந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இந்தத் தோல்வி தற்காலிகமானது. நாட்டை விலைபேசும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் பாடம் கற்பிக்கும் வாய்ப்பு விரைவில் வரும். அதற்கு இக்கட்சிகள் தயாராக வேண்டும். தங்களிடையிலான அரசியல் பேதங்களை மறந்து, நாட்டு நலனுக்காக இக்கட்சிகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். அதையே, தற்போதைய சில்லறை மனிதர்களின் தகிடுதத்தங்கள் நினைவுபடுத்தி இருக்கின்றன.

அரசுக்கு வெற்றியா?

சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. க்கு அனுமதி என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்திருப்பதை அரசு வெற்றி பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியுமா? இக்கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

லோக்சபாவில் மொத்தமுள்ள 545 எம்.பி.க்களில் அரசு பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 என்ற மந்திர எண்ணிக்கையைப் பெற்றே ஆக வேண்டும். சோனியா முன்னொரு முறை (1999) அந்த மந்திர எண் தன்னிடம் இருப்பதாகக் கூறிக்கொண்டு ஜனாதிபதியிடம் சென்று அவமானப்பட்டதை நாடு மறந்திருக்காது.

சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தபோது, எப்.டி.ஐ.யை சில கட்சிகள் எதிர்த்தபோதும், ‘பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட விரும்பவில்லை’ என்று கூறி, வெளிநடப்பு செய்தன. எப்.டி.ஐ.யை எதிர்த்தபோதும், அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தீர்மானத்தை எதிர்த்து திமுக வாக்களித்தது. இது போன்ற காரணங்களால் தான் எப்.டி.ஐ.க்கு எதிரான தீர்மானம் தோற்றதே ஒழிய, இவ்விஷயத்தில் அரசு வென்றதாகக் கூற முடியாது.

இத்தீர்மானத்துக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் 218; எதிராக (அரசுக்கு சார்பாக) விழுந்த வாக்குகள் 253. எனினும், எப்.டி.ஐ.யை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை 253ஐ விட அதிகம். மொத்தம் வாக்களித்த 471 பேரை மட்டும் கொண்டு, நாடாளுமன்றம் எப்.டி.ஐ.யை ஆதரித்துவிட்டதாகக் கூற முடியாது.

இதை லோக்சபாவில் நடந்த விவாதத்திலேயே (05.12.2012) எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டினார். ”அவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய 8 கட்சிகளைச் சார்ந்த 22 தலைவர்களில் 14 பேர் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். அதன்படி கணக்கிட்டால் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை 282 ஆகவும், எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை 224 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால், வெளிநடப்பு உள்ளிட்ட நாடகங்களால், எதிர்க்கட்சிகள் நினைத்து நடக்காது என்று எனக்குத் தெரியும்” என்றார் அவர். அதுவே யதார்த்தமான உண்மை. இந்த நிலலையில் அரசு வென்றுவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆர்ப்பரிப்பதில் எந்தப் பொருளும் இல்லை.

ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 244 உறுப்பினர்களில் 10 நியமன உறுப்பினர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் 94 உறுப்பினர்களுடன் சேர்த்து 104 பேர் மட்டுமே அரசு சார்பாக இருந்தனர். மாயாவதியின் திடீர் பல்டியால் (இவர் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவராம்!) பகுஜன் சமாஜ் கட்சியின் 15 உறுப்பினர்கள் அரசை ஆதரிக்க , முலாயமின் (இவரும் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவராம்!) சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்ய, ராஜ்யசபாவிலும் காங்கிரஸ் அரசியல் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எண்ணிக்கை வலுவுடன் இருந்தும் பயனில்லாமல் போனது.

ராஜ்யசபாவிலும், சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை (சுமார் 140) அதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை (104) விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறது. இது கையாலாகாதவன் பீம புஷ்டி லேஹியம் சாப்பிட்டது போலத் தான் இருக்கிறது.

காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

காங்கிரஸை ஆதரிக்கும் கருணாநிதியின் முடிவுக்குக்கான காரணங்களை அவரும், அவரின் அடிவருடிகளும் விவரிக்கிறார்கள்.

அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் சோனியாவின் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு என்று நம்பும் ஒன்றுக்கு தங்கள் நிபந்தனையற்ற ஆதரவை கருணாநிதி மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த அபரிமிதமான பரிசை அரசியல் சாணக்கியர் கருணாநிதி, தியாகத் திருவிளக்கு அம்மையாருக்கு தன் கிறிஸ்த்துமஸ், புத்தாண்டுப் பரிசாக வழங்கி அமெரிக்காவையும், அம்மையாரையும் ஒரே நேரத்தில் குஷிப்படுத்தி உள்ளார்.

கருணாநிதியின் கட்சியை– காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை– அதாவது சில நேரங்களில் சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்த நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவுக் கரத்தை மீண்டும் துடைத்துக் கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிரூபித்திருக்கும் கருணாநிதியின் ராஜதந்திரத்தை மன்னிக்க ”இராசதந்திர“, ” இனமான ” உணர்வு மிக்க நகர்வை, மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பனப் பதர்களும், மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிகின்றன.

சூடு சொரணையற்ற, மானங்கெட்ட, உப்பை உணவில் சேர்க்காத பிறவி என்று அவை வர்ணித்து வந்தாலும் அதை முறியடிக்க பெரியார் அன்றே சொன்னது போல இவை அனைத்துமே ஆரிய சதியை, ஒடுக்க நம் இனமான இளவல் கருணாநிதிவின் அபாரமான சாணக்கியத்தனத்தை பகடி செய்தாலும் இது எதையுமே காதில் வாங்கதது போல நடிக்கும் தம் அண்ணனின் சாதுர்யத்தை எப்படி மெச்சுவது என்பது புரியாமல் இருக்கிறார், மானமிகு வீரமணி அவர்கள்.

நம் தலைவரின் தேசபக்தியைப் புரிந்து கொள்ள ஈரேழு 14 லோகங்களிலும் வார்த்தை கிடையாது. 600-க்கும் மேற்பட்ட செம்மொழி வடிவங்களில் மெளனம் சாதிக்கும் (பிரதமர் என்று அடிக்கடி குறிப்பிடப்படும்) மன்மோகன்சிங்கே, நம் தலைவரின் தேசப்பற்றைக் கண்டு புளாகாங்கிதத்தோடு கண்ணில் நீர் சொறிய என்ன சொல்வது என்பது புரியாமல் மேலும் 5 மொழிகளில் மெளனம் சாதித்துக்கொண்டு நிற்கிறார். அனைத்துக் களேபரங்களும், இன்று காலை கருணாநிதி தேச நலன் கருதி (எந்த தேசத்தின் நலன் கருதி என்பதைச் சொல்லாமல் விட்டதை அரசியல் சாணக்கியத்தனம் என்றே பொருள் கொள்க.) அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தரும் மத்திய அரசின் கொள்கையை, தான் எதிர்த்தாலும், இந்த அரசு கவிழக்கூடாது என்பதற்காக தன் ஆதரவை அரசுக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்.

இது ஒன்றும், தான் திருவிளக்கு அம்மையாரின் மிரட்டல், பிளாக்மெயிலுக்கு பயந்தோ. இனமான இளவல் தம்பி ராசா இனி கோர்ட்டில் விசாரித்தால் கொள்ளையடித்ததில் கொடுத்த பங்கைப் பற்றியும், குடும்பம் அடித்த கொள்ளைகளைப் பற்றியும் கோர்ட்டில் சந்தி சிரிக்கச் செய்து விடுவேன் என செல்லமாய் சொல்லியதற்காகவோ, 2G-யை இன்னும் கொஞ்சமாய் தோண்டினால்கூட திருக்குவளை முன்னேற்ற கழகமும், திருட்டுத்தனமாய் ஆரம்பித்த சன், கலைஞர் டி.வி சாம்ராஜ்யங்களும் சரிந்து மீண்டும் திருட்டு ரயில் ஏறி திருவாரூருக்குச் செல்ல வேண்டுமோ என்பதற்காகவோ, பங்குப் பணத்தை பங்கம் வராமல் பங்கு வைத்த தன் மனைவி, துணைவி, இணைவி, இவர்கள் பெற்றெடுத்த குலக்கொழுந்துகள், அவர்கள் பெற்றெடுத்த வாரிசுகள் அனைவருடனும், தன் மொத்த சொத்தும் ஜப்தி செய்யப்பட்டு கம்பி எண்ணிக் களி தின்போம் என்பதற்காகவோ அல்ல; வெறும் தேச நலன் கருதியும் உழைக்கும் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தான் இது போன்ற கடினமான முடிவை எடுத்துள்ளார் கருணாநிதி.

இதைப் புரிந்து கொள்ளாத அறிவிலிகள், பார்ப்பனக் கொடுக்குகள், குல்லுக பட்டரின் வாரிசுகள், பார்ப்பன அடிவருடிகள், ஆரிய சதி செய்யும் அரவக்கொடுக்குகள், தமிழ் பேசும் வல்லூறுகள் கருணாநிதியைக் கிண்டலும் கேலியும் செய்தாலும் அதைத் தாண்டியும் தியாகத் திருவிளக்கு அம்மையார் அவர்களுக்கு அடிபணிந்து சேவையாற்றுவார் நம் கலைஞர் என்பதை தெரிவிக்கிறார் கலைஞர் டீவி புகழ் சூனா பானா வீணா.

இது தொடர்பாக தப்பட்டை ஒலி நாளிதழில் தன் தம்பிக்கு ஒரு உணர்ச்சிமிகு கடிதம் எழுதுகிறார் கருணாநிதி –

“கழக உடன்பிறப்புக்களே, அந்நிய முதலீட்டை ஆதரிப்பதால் நாட்டில் வெறும் 30 கோடி குடும்பங்கள் மட்டும் தான் வாழ்வாதரத்தை இழந்து தெருவில் பிச்சை எடுத்து உண்ண வேண்டிய நிலை வரும். ஆனாலும் பாருங்கள் குலக்கொழுந்துகளே! அதிலும் 2 அல்லது 3 பார்ப்பனக் குடும்பங்களும் வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் என்பதற்காகவே தான் இதை இந்தக் கருணாநிதி ஆதரிக்கிறான். என் திராவிட இனக் கடவுள் பெரியாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக 30 கோடி குடும்பங்களை என்ன இந்த தேசத்தையே சூறையாடுவான் இந்த கருணாநிதி. அதற்காக இரட்டை ஆயுள்தண்டனை என்ன, தூக்கு தண்டனையே ஆனாலும் ஏற்றுக்கொள்ள என் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களை வெளியிலிருந்து வழிநடத்த என் வாரிசுகள் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் என்னும் பெரும்சுமையை என் குடும்பமும், சிறை, மரண தண்டனைகள் இன்ன பிற சில்லறைக் கஷ்டங்களை என் தொண்டர்களும் பார்த்து கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியைப் பற்றி தெரியாத கயவர்களும், ஆரிய வந்தேறிகளும்தான் திருவிளக்கு அம்மையாரை அந்நிய ஆபத்து என வர்ணிக்கிறார்கள். தம்பி! அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா?

1,76,000 கோடி கொள்ளை அடிக்கச் சொன்னதோடு அல்லாமல் நம் பங்குப் பணத்தை 10% மேல் போட்டுக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், வெறும் 3 மாதத்திலேயே நம்மை எல்லாம் சிறையில் இருந்து விடுவித்ததோடு அல்லாமல் அப்படி ஒரு கொள்ளையே நடக்கவில்லை என்று சொல்லி 120 கோடி மக்களையும் நம்பவைத்திருக்கிறார். அவர் சாமர்த்தியம் யாருக்கு வரும்?. பெரியார், அண்ணா கூட ஆரிய மாயை, பார்ப்பன சதி என்றெல்லாம் ஜல்லியடித்து சித்தாந்தம், வெங்காயம் வெளக்குமாறு என்று சொல்லியே 2 கோடி மக்களை மட்டும்தான் ஏமாற்றி காதில் பூசுத்த முடிந்தது. ஆனால் அந்நிய அம்மையார் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தையே போலியாக நடத்தி ஃபோர்ஜரி செய்ய எப்படியெல்லாம் சதி செய்கிறார்! 120 கோடி மக்களை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைவருக்கும் காதில் பூ சுற்றும் கலை, வேறு யாருக்கு வரும்? நயவஞ்சகத்தைக் கூட எவ்வளவு நாகரிகமாகச் செய்கிறார் பாருங்கள்!! இவரோடு கூட்டணி வைத்தது நம் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் மட்டுமே சாத்தியம். இவருக்கு முன்னால் நம் திருட்டெல்லாம் ஒன்றுமே இல்லை.

இவரோடு கூட்டணி வைத்துக் கொள்ளையடிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? கூட்டணி வைத்திருப்பவர்களை பாராடா தம்பி, மாட்டுத்தீவனத்திலேயே பல ஆயிரம் கோடி திருடிய லல்லு பிரசாத்ஜி, தாஜ் காரிடர் கேஸில் 4000 கோடி திருடிய மாயாவதி அம்மையார். கொள்ளை, கொலையில் வல்ல சிபு சோரனார், சர்க்கரை ஊழல் புகழ் சரத் பவார்; தவிர சொந்தக் கட்சியில் உள்ள 206 பேருமே கடைந்தெடுத்த ஊழல்வாதிகள்தான். நாமும் தான் 1950-லிருந்து மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறோம். கொள்கை, கோட்பாடு, கடமை, கண்ணியம், தெருப்புழுதி என்று வாயில் வந்த வார்த்தை எல்லாம் சொல்லி விஞ்ஞானரீதியாகக் கொள்ளையடித்தாலும் பிச்சை காசு 100 கோடியைத் தாண்டமுடியவில்லை தாண்டவக்கோனே!. ஆனால் திருவிளக்கு அம்மையார் திருவிளையாடல்கள் எல்லாமே ஊழல் எல்லாமே 2G, 4G, காமன்வெல்த், நிலக்கரி ஊழல், ராணுவ ஆயுத பேர ஊழல் என்று லட்சம் கோடிகளுக்கு மேலான மெகா, மகா சைஸ்தான் தம்பி. பிரிட்டிஷ்காரன் 400 வருடங்களில் கொள்ளையடித்ததை விட அதிகமாக 8 வருடங்களில் கொள்ளையடிக்கும் அம்மணியின் கால் தூசுக்கு ஈடாவர்களா யாரேனும்? இல்லை இனியும் பிறக்கத்தான் முடியுமா சொல்லடா உடன்பிறப்பே!

பிரிட்டிஷ்காரன் 400 வருடங்கள் கூட்டமாக வந்திருந்தும் 1,50,000 தமிழ்- மன்னிக்க திரமிள, திராவிட மக்களைக் கூடக் கொல்லவில்லை. ஆனால் இத்தாலியத் திருவிளக்கு அம்மையார் ஒரே ஆண்டில் 1,50,000-க்கும் மேலான தமிழ் மக்களை துள்ளத் துடிக்க கொன்று ரசித்தார்களே, இந்தச் சாமர்த்தியமும் துணிவும் யாருக்கு வரும்? அதற்குக் கூட இருந்து கொடுவாள் பிடித்ததற்காக 40,000 கோடி செலவு என்று கணக்கு மட்டும் காண்பித்த சேது சமுத்திர திட்டத் தொகையையும் நமக்கே தாரைவார்த்த அந்த இத்தாலிய பால் வடியும் வதனத்தை பாராடா என் அன்பு தம்பி. அண்ணா அன்றே சொன்னார் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டர் என்று. .பாலிடால் போல வெள்ளையாய் இருக்கிறார் அம்மையார். 400 ரூபாய் கொடுத்தாலே நான் அவர்களுக்கு விசுவாசமாய் இருப்பேன். 40,000 கோடியை வீசி எறிந்த அந்த தியாகத் தாய்க்கு ஒரு பிரச்சினை என்றால் அமைதியாக இருக்கலாமா? வரலாறு நம்மை மன்னிக்குமா? புவியியல் நம்மை கவனிக்குமா? அறிவியல் தான் நம்மை அவிக்குமா?.

இதற்கு முன்னால் கூடத்தான் நாம் கூட்டணி வைத்திருந்தோமே காவி பண்டாரங்களோடு! ஒத்தை பைசாவிற்கு பெற மாட்டார்கள். பிரதம மந்திரி என்றுதான் பெயர் வாஜ்பாயிக்கு. கூரை வீடாக இருந்தாலும், கூழாக இருந்தாலும் குடித்து விட்டுப் படுத்து விடுவார். ஆடம்பரத்தின் அரிச்சுவடி கூட தெரியாதவர், கேட்டால் ‘ஸ்வயம் சேவக்’ என்று பெருமை வேறு பேசுவார். கிராம மக்களுக்குத் தொண்டாற்றினார் என்பதற்காக தானே வலிந்துபோய் பகுத்தறிவுக்கு பங்கம் விளைவிக்கும்படி சின்னதாய் என்ற பெண்ணின் காலில் விழுகிறார். யார் வேண்டுமானாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச வேண்டுமானால் எப்பொழுது வேண்டுமானாலும் போய் பார்க்கலாமாம். கூடவே கன்னம் வைக்கும் கூட்டணித் திருடர்கள் மன்னிக்கவும் தலைவர்கள்கூட திருவிளக்கு அம்மையாரைப் பார்க்க முடியாது.

காவி பண்டாரக் கூட்டத்தில் இருந்து வந்த வாஜ்பாய், 30000 கொடுத்தால் தான் தொலைபேசி கிடைக்கும் என்று இருந்த கௌரவத்தை மாற்றி அனைவருக்கும் தொலைபேசியைக் கிடைக்கச் செய்து அதன் மரியாதையையே போக்கி விட்டார். கிராமப் பெண்கள் அடுப்பூதிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் தங்கு தடையில்லாமல் சிலிண்டர் கிடைக்க உத்தரவு இடுகிறார். இந்தியாவை இணைக்க சாலைகளை அதுவும் நான்கு வழி சாலைகளை அமைக்க உத்தரவு இடுகிறார். குழந்தைகள் கல்வி பெறுவதற்காகவும், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் சர்வ சிக்‌ஷ அபியான் என்று கொண்டுவர நிதி ஒதுக்குகிறார். அணுகுண்டு வெடித்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். சுதேசி தொழில் நுட்பத்தை வளர்க்கத் திட்டமிடுகிறார். சுய அறிவு இருப்பவர்கள், சூடு, சொரணை இருக்கிறவர்கள், ஊழல் செய்யாதவர்களுக்கு பதவி அளிக்கிறார். தேச எல்லைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார். மின்சார உற்பத்தியை பெருக்குகிறார். தொழில் துறையை பலப்படுத்துகிறார். ஊழலை அனுமதிப்பதே இல்லை.

எப்பொழுது பார்த்தாலும் மக்கள் முன்னேற்றம் தான் முக்கியமென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கும்பல் எல்லாம் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள்?. ஜனாதிபதியாவது தேறினாரா என்றால், இவர்கள் கொண்டு வந்த அப்துல் கலாம் உள்ளூர் ஊழலும் தெரியாமல் வெளிநாடு சுற்றுப்பயணமும் செய்யாமல் மாணவர்களிடம் பேசுகிறேன், உள்நாட்டை பார்க்கிறேன், வல்லரசாக்குகிறேன் என்று சொல்கிறவரைக் கொண்டு வந்து பதவில உட்கார வைத்தார்கள். இவர்களை எல்லாம் ஆதரிக்க வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமாகப் போய்விட்டது,

என்னுடைய பதவியே போனாலும் திமுக ஆட்சி கேடு கெட்டதாக இருந்தால்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, ஆட்சியை ஒரே ஓட்டில் இழந்ததால் வந்த வினை. நானெல்லாம் பதவி போகுமென்றால், பதவிக்கு ஒரு ஆபத்து வருமேயானால் பெற்ற பிள்ளையைக் கூட யாரென்று தெரியாது என்று தைரியமாகச் சொல்லுவேன். இந்த காவிக்கும்பல் என்னவென்றால் நீதி, நியாயம் தர்மம் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். பண்டாரக் கும்பலின் துணை பிரதமரோ, பிரதமர் பதவியை சிபாரிசு செய்கிறார். செய்யாத ஊழலுக்காக குற்றம் சுமத்தியதற்கே பதவியை ராஜினாமா செய்கிறார். குற்றம் இல்லை என்று சொல்லும் வரை தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார். கேட்டால் சங்கம் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒழுக்கம் என்கிறார்கள். இவர்களோடு கூட்டுவைத்தால் விளங்குவோமா?

இதே நம் இத்தாலியத் திருவிளக்கு அம்மையாரை பார்! பெட்ரோல் விலையை மட்டும் 18 தடவை ஏற்றி இருக்கிறார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையையும் தாறுமாறாக ஏற்றி விடுகிறார். அமெரிக்கா அரசும், அதன் நிறுவனங்களின் நலனுக்காகவும் நம் மக்களைப் பிழிந்து எடுக்கிறார். நாட்டிற்கு கேடு தான் விளையும் ஆனால் தனக்கு 1,00,000 கோடி கமிஷன் கிடைக்கும் என்பதற்காக அபாயகரமான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு சாமானியர்களின் தலையெழுத்தை மாற்றுகிறார். சிலிண்டர் உபயோகப்படுத்தி மக்கள் ஆரோக்கியக் குறைபாடு அடையக்கூடாது என்பதற்காக வரலாறு காணாத வகையில் சிலிண்டர் விலையை 250% கூட்டி அதற்கும் ,ரேஷன் வைத்து வறுமையை எப்படி வளர்க்கிறார் பாருங்கள். 1947-லிருந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்து கொள்ளையடித்துச் சுரண்டி வருகிறது; என்றைக்காவது சாலை போட வேண்டும்,. பள்ளிக்குழந்தைகளின் கல்விக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று சிந்தித்தது உண்டா? எல்லையில்தான் பாதுகாப்பை பலப்படுத்தினால், பின் போர் எப்படி வரும்? பாதுகாப்புத் துறையில்தான் பின் எப்படிக் கொள்ளைஅடிப்பது?

குடிக்கிற தண்ணிருக்கு கூட வரி விதித்து மக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி தன் அடிமை தாகத்தை தீர்த்துக்கொள்கிறார் அம்மையார். குடியரசுத் தலைவர் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு கூட எவ்வளவு ஊழல் மிகுந்த உத்தமர்களைத் தேர்வு செய்கிறார் பாருங்கள். ஊழலுக்காக எவ்வளவு கீழ்த்தரமாகவும் செயல்படுவேன் என்கிற உறுதிதான் இத்தாலிய அம்மையாரின் கவர்ச்சிக்குக் காரணம். எதிரிகளை எப்படி ஹெலிக்காப்டர் விபத்தில் கொல்வது என்பதை கலையாகப் பயின்றுள்ள அம்மையார் எங்கே? தன் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வைத்த ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த இடையூறும் பண்ணாத வாஜ்பாயி எங்கே? அட, இந்தப் பண்டார கும்பலின் அடுத்த பிரதமராவது ஊழல் செய்பவரா என்றால் அவரும் ஒழுக்கமானவராக இருக்கிறார். தேசத்தின் வளர்ச்சிக்காக எந்நேரமும் சிந்திப்பவராக இருக்கிறார். விடுமுறை தினங்களில் கூட ராணுவ வீரர்களோடு கழிக்கிறார்.

எல்லா பிரச்சினைகளையும் நேருக்கு நேர் சந்தித்து தர்மத்தின் படி நின்று தீர்க்கிறார். மோடியை பார்ப்பான் என்று திட்டி வெறுப்பை விதைக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. மனைவி, துணைவி, இணைவி, மகளிரணித் தலைவி பெற்ற மகளின் கூட படிக்கும் பிள்ளைகள் என்றாவது ஏதாவது தொடர்புகள் இருக்குமா என்றால் அதுவும் இல்லை? ”அவரும் பத்தினி இல்லை, நானும் உத்தமனில்லை” மாதிரியான ஆபாச அறுவெறுப்பு மேற்கோள்கள் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை!! இது போன்ற காவிப்பண்டாரங்களின் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மனதை இரும்பாக்கிக்கொண்டு, கண்ணின் மணியாம் கனிமொழியை வழக்கில் இருந்து விடுவிப்பதோடு 10,000 கோடியோ எவ்வளவோ அவர்கள் போடும் பிச்சைக் காசையும் வாங்கிக்கொண்டு, நம் தம்பி ராசா களி தின்றாலும் பரவாயில்லை என்று கண்ணீரோடு கழகம் இந்த முடிவை எடுக்கிறது.

சோனியா அம்மையார் நம் ஆதரவை எதற்காகக் கேட்கிறார்? பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் தானே அடகு வைப்பதற்காகக் கேட்கிறார். அதற்கு பதிலாகத்தான் கற்றை, கற்றையாகப் பணம் தருகிறாரே? வேறு என்ன வேண்டும். கூட கொள்ளையடிக்க பதவி தருகிறார். கொள்ளையை மறைக்க அனைத்து தகிடுதத்தங்களையும் செய்கிறார். இதற்காக என்ன வேண்டுமானாலும் தரலாமே? பதவியையும், பணத்தையும் யார் எதற்காகக் கொடுத்தாலும் அதற்கு ஈடாக எதையாவது கொடுக்கத்தானே வேண்டும். அது பெற்ற தாயாக இருந்தால் என்ன? பெற்ற பிள்ளையாக இருந்தால் என்ன? அம்மா செண்ட்டிமெண்ட், தாய் நாடு செண்டிமெண்ட் எல்லாம் நம்மை கட்டிப்போட வந்த ஆரிய சதி என்று சொல்லி விட்டு வேறு வேலை பார்க்க போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். வெறும் 30 கோடி குடும்பங்கள் நாசமாகப் போகும் என்பதற்காக நமக்கு கிடைக்கும் பதவி, லஞ்சத்தை விட்டுக்கொடுக்க முடியுமா? இல்லை கனிமொழியைத்தான் திகாரில் தினமும் பொங்கலும் கெட்டிசட்னியும் தின்ன அனுப்ப முடியுமா? மதவாத சதியை முறியடிப்போம், திராவிடத் தமிழ் இனம் காப்போம்.

எனவே இனமானத் தம்பி இதையெல்லாம் நீ உணர்வில் இருத்தி சிறை செல்லவும், தூக்குக் கயிற்றை முத்தமிடவும் நீயும், உன் வாரிசுகளும் தயாராக வேண்டும். உங்களை ஆட்சி செய்ய நானும், என் வாரிசுகளும் தயாராக இருக்கிறோம் என்பதை அன்போடு கட்டளை இடுகிறான் உன் அண்ணன்.

அன்புடன்,
மு.கருணாநிதி

— என முடியும் கடிதத்தையும் வெளியிட்டு, தான் இந்த முடிவை நாட்டின் நலன் கருதியே எடுத்தேன் என்பதை தன் கரகர குரலில் கண்ணீர் வரப் படித்துக் காண்பித்து தன் தேச பக்தியை நிலை நிறுத்தினார். கருணாநிதி.

பத்திகளிலும், பத்திரிக்கைகளிலும் வரும் தன்னிலை விளக்கம்
(நன்றி முகனூல் நண்பர்கள்)

 1. பொருளாதார மேதை, குலாம் நபி ஆசாத் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் ஆபத்தையும், 2ஜி வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் கனிமொழிக்கு ஏற்படும் ஆபத்தையும் விரிவாக எடுத்துரைத்ததை அடுத்து, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தருவது என்று முடிவெடுத்தார்….
  (சஸ்பென்ஸ் ஓவர்!) – அன்பழகன் முகனூலில்
 2. நான் பார்ப்பனராக இல்லாமல் சூத்திரனாக பிறந்துவிட்டதால் தான் நான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு கொடுத்ததை கண்டிக்கிறார்கள் – கருணாநிதி வெளியிடப்போகும் அறிக்கையில் இருந்து – த.முத்துகிருஷ்ணன்
 3. கருணாநிதி :
  நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கேட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை இல்லை. காரணம் வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு மதவாத சக்திகள் என்ற காரணம். அதை போட்டுகொள்ளுங்கள்.வீரமணி : அப்படித்தான் அப்படித்தான் ராசா அதேதான்.
 4. அண்ணே..தலிவர் இப்படி பண்ணிட்டாரே..சஸ்பென்ஸ்ன்னு கூட சொன்னாரே..அதிரடியா ஏதாவது செய்வாருன்னு எதிர்பாத்தா இப்படி விழுந்து கிடக்காரே..?நேத்து ஒருத்தர் வந்துட்டு போனாரே..அவரு பேரு தான் குலாப் ஜாமுன்..ஆனா கொண்டுவந்தது அக்மார்க் திகார் களிடா…ஒண்ணும் பண்ண முடியாது..

  அண்ணே..மூணு மாசமா..நான் சும்மா இருக்காம பேஸ்புக்ல சில்லறை..கல்லறைன்னு எதிர்த்து கவிதை, கட்டுரைலாம் எழுதிட்டேண்ணே..இனி ஒரு பய மதிக்கமாட்டானே..

  அடேய்…நீ என்ன புதுசா..? பலகாலமா இதாண்டா நடக்குது..இதெல்லாம் எங்களுக்கு பழகிபோச்சு..போய் அதையெல்லாம் தேடி டெலிட் பண்ணிட்டு புதுசா சாதகமா பாயிண்ட்ஸ் ரெடி பண்ணு..போ..

  அண்ணே..எங்கப்பா மளிகைக்கடை வெச்சிருக்கார்ண்ணே..கொஞ்சம் சங்கடமா இருக்கு..

  சரி..நீ அப்ப கரண்டு, காவேரி பிரச்னையை பத்தி எழுது..இல்லன்னா “புல்லட் ராஜா”ன்னு ஒரு படம் வந்துருக்கு..இன்னும் இங்க யாரும் விமர்சனம் எழுதலை..நீ அதை எழுது..

  சரிண்ணே..யாருனா கலாய்ச்சா நீங்க வந்து சப்போர்ட் பண்ண மறந்துடாதீங்க..வரேன் — ராஜேஷ்

 5. அன்னிய முதலீடு: ஆட்சி கவிழாமல் இருக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு – தலிவர்..!!

  பின்குறிப்பு :படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை .:) – சுந்தர வடிவேல்

சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பழமொழி காங்கிரஸ் கட்சிக்கு என்றே உருவானது போல இருக்கிறது. “சண்டையிலே சட்டை கிழியாம என்ன செய்யும்?’ என்று வாய்ச்சவடால் விடுவார் நடிகர் வடிவேலு ஒரு படத்தில். அது நமது நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஜனநாயக நெறிமுறைகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் குட்டு விழுந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை மன்மோகன் சிங்.

தற்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிக்கக் கூடும்; அண்மையில் நாடாளுமன்றத்தில்  சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு தொடர்பான மசோதாவைக் கொண்டு வருவதற்காக மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு முடிவு செய்ததும், அதற்கு எழுந்த எதிர்ப்பால் பின் வாங்கியதும் வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு என்ற முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’   என்று முழங்கிய பிரதமர், மறுநாளே தனது பேச்சைக் குறைத்துக் கொண்டார். அரசு கவிழாமல் காக்க இம்முடிவை ஒத்திவைப்பதாக(8.12.2011) பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

ந்த அளவுக்குச் சில்லறை வணிகம் அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியதா? இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதற்கு முன்னர் இந்த விவகாரத்தின் அடிப்படையைச் சிறிது புரிந்து கொள்வது குழப்பங்களைத் தெளிவிக்கும்.

தாராளமயம், உலகமயம் போன்ற சொற்களால் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைக்கச் செல்வந்த நாடுகள் தீட்டும் திட்டத்தின் பல அம்சங்களுள் ஒன்றுதான், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு. இந்தத் திட்டம் விரைவில் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்படும்  என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிய வந்த விஷயம் தான். நாட்டின் ஒவ்வொரு துறையையும் சீர்திருத்த வேண்டுமானால் அவற்றை அந்நியருக்குத் திறந்து விடுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது பொருளாதார மாமேதை மன்மோகனாரின் கருத்து.  இத்தாலிய அன்னையின் தயவில் ஆளும் அவரிடம் வேறெந்த நல்ல முடிவையும் நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.

ந்த நிலையை எதிர்பார்த்து, அன்றே எதிர்ப்புக் குரலை ஒலிக்கத் துவங்கியது ‘சுதேசி ஜாக்ரண் மஞ்ச்’ எனப்படும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம். சில்லறை வணிகம் என்பது நாடு முழுவதும் உள்ள மக்களை மிகவும் நெருக்கமாகப் பிணைக்கும் பொருளாதார அமைப்பு. இந்தியாவில் உள்ள வணிகர்கள் தானாக  அமைந்த சுயம்புவாக உருவானவர்கள். இதற்கு சமூக அடித்தளமும் உண்டு. சொல்லப்போனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வர்த்தகத்துக்கென்றே சில சமூகங்கள் உள்ளன. தமிழகத்தில் நாடார்கள் இதற்கு ஓர் உதாரணம். கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலுள்ள நடுத்தர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்பவர்களாகச் சில்லறை வணிகர்களே உள்ளனர். அந்த அடிப்படையான வேரில் தான் வெந்நீர் ஊற்ற காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்பதை சுதேசி இயக்கம் உணர்ந்து கொண்டு, ஆரம்பத்திலேயே எச்சரித்தது.

த்துடன் சுதேசி இயக்கம் சும்மா இருந்து    விடவில்லை; வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளோரைத் தொடர்பு கொண்டு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் ஆபத்து குறித்து விளக்கியது. சிறு வணிகர்கள் துவங்கி, வணிகர் சங்கங்கள் வரை சுதேசி இயக்கத்தால் தொடர்பு கொள்ளப்பட்டனர். குறிப்பாகச் சுதேசி இயக்கத்தின் முன்னணித் தலைவரான எஸ்.குருமூர்த்தியின் பணி இதில் மிக முக்கியமானது. (காண்க: மொத்தமாய் விலை பேசப்படும் சில்லறை வியாபாரம்) அவரது  தொடர்ந்த பிரசாரம், அறிவுஜீவிகளையும் சிந்திக்கச் செய்தது. மாவட்டம் தோறும், சில்லறை வணிகத்தின் சிறப்புகளையும் அதற்கு எமனாக வரவுள்ள அந்நிய முதலீடு குறித்தும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அவற்றில் அந்தந்தப் பகுதியிலுள்ள தொழில் அமைப்புக்கள், வணிகர் சங்கங்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்றனர்.

சுதேசி இயக்கம் இது தொடர்பாகப் பல நூல்களையும் வெளியிட்டது. பத்திரிகைகளில் கட்டுரைகள் பல வெளிவந்தன. ஒரு வகையில் இவை அனைத்தும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சியாகவே இருந்தன. இடதுசாரிகளும் கொள்கையளவில் அந்நிய முதலீட்டுக்கு எதிரானவர்களாக இருந்த போதும், வணிகத் துறையில் அந்நிய முதலீடு குறித்துத் தீவிர இயக்கம் நடத்தத்  தவறினர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், சுதேசிப் பொருளாதாரத்தை வலியுறுத்தி வந்த சுதேசி இயக்கத்துக்கு, இவ்விஷயம் மிக அத்தியாவசியமாகப் பட்டது. எனவே தான், நாடு முழுவதும் இது குறித்த பிரசார இயக்கத்தையும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் முதற்பெரும் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கமும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. அரசியல் ரீதியாகப் பாரதீய ஜனதாக் கட்சியும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் ஆபத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியது.

தொடர்ந்து நடந்த கருத்துருவாக்க நிகழ்ச்சிகள் காரணமாக, வணிகர்கள் பலரும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் அபாயத்தை உணரத் துவங்கினர். அவர்களும் தங்கள் பங்கிற்கு இக்கொள்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் துவங்கினர்; தமிழகத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன் இக்கருத்தைப் பிரசாரம் செய்தவர்களில் முக்கியமானவர்.

ரு கிழக்கிந்தியக் கம்பெனி வர்த்தகம் என்ற பெயரில் நாட்டில் நுழைந்து நடத்திய அக்கிரமங்கள் போதாதா எந்ன்ற கேள்வி எழத் துவங்கியது; அமெரிக்காவின் வால்மார்ட்டும் பிரிட்டனும் டெஸ்கோவும் தங்கள் பல்லாயிரம் கோடி டாலர்களை  இந்தியாவில் முதலீடு செய்வது நமது நாட்டை வளர்ப்பதற்காக இருக்காது என்பது ஓரளவு புரிந்து விட்டது.    

ற்கனவே குளிர்பானத் துறையில் கோலா சகோதரர்களின் நுழைவால் இந்தியக் குளிர்பானச் சந்தை எப்படிக் கபளீகரமானது என்பதை நேரிடையாக உணர்ந்த அனுபவமும் கை கொடுத்தது.  ஆனால், ஆளும் காங்கிரஸ் கட்சியினருக்கு  இவை எதுவும் புரிவதாக இல்லை; வழக்கம் போல நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கும் தருணத்தில்  நாடாளுமன்றத்துக்கு வெளியே இது குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் பிரணாப் முகர்ஜி; இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தெரிந்தும் அவ்வாறு செய்யக் காரணம் இருந்தது.

முதலாவதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அன்னா ஹசாரே நிர்ப்பந்திக்கும் சட்டத்தை எப்படியாவது தள்ளிப்போட வேண்டும் என்பது அரசின் கபட எண்ணம். லோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி.

வர் எதிர்பார்த்தது போலவே நடந்தது; ஏற்கனவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வந்த பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அந்நிய முதலீட்டுக்கு நேர் எதிரிகளான இடதுசாரிகளும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். தவிர அரசுக்கு எதிரான ஒத்திவைப்புத் தீர்மானங்களுக்கும் எதிர்க்கட்சிகள் முயன்றன. அ.தி.மு.க, பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்தன. அரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் காங்கிரசும் இவ்விஷயத்தில் அரசை எதிர்த்தது; தி.மு.கவும் கூட அரசுக்கு அறிவுரை கூறியது.

நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருந்த நிலையில் நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் கடையடைப்பு, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களால் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரியப்படுத்தின. பெரும்பாலான வர்த்தகர்கள் அரசின் முடிவுக்கு எதிராக இருந்தது கண்டும் கூட, “அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது; இது தீர்க்கமாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு” என்றே கூறி வந்தார் பிரதமர்.

ந்நிலையில் ‘பாஜக ஆளும் மாநிலங்களில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டாளர்களை அனுமதிக்க மாட்டோம்’ என்று அறிவித்தார் பாஜக தலைவர் நிதின் கட்காரி.  தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், உ.பி. முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இவ்வாறே அறிவித்தனர். ஆரம்பத்தில் அரசு முடிவை ஆதரித்த அகாலி தளம் போன்ற கட்சிகள் கூட, வணிகர்களின் ஒற்றுமை கண்டு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டன.

மொத்தத்தில் சில ஜால்ராக் கட்சிகள் தவிர பிற கட்சிகள் அனைத்தும் அரசு முடிவுக்கு எதிராக ஒருங்கிணைந்தன. நாடாளுமன்றத்தில் பாஜகவும் இடது சாரிகளும் கைகோர்க்க மாட்டார்கள் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்த காங்கிரசுக்கு அதிர்ச்சி கிடைத்தது. இரு தரப்பும் ஒன்று சேர்வது போன்ற தோற்றம் கண்டதும், தான் நடத்திய நாடகம் தனக்கே எமனாகி விடுமோ என்று தவித்தது காங்கிரஸ்.  இறுதியில் திரிணாமூல் காங்கிரஸ் எதிர்ப்பதால் இதைக் கைவிடுவதாகச் சால்ஜாப்புக் கூறி, இப்போதைக்கு இம்முடிவை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.

சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அந்நிய முதலீடு என்பது கிட்டத்தட்ட நமது வர்த்தகத்தைத் தாம்பாளத்தில் வைத்து அந்நிய நிறுவனங்கள் கையில் கொடுத்து விடுவது போலத்தான். அரசு நிறுவனமான ‘மாருதி உத்யோக்’ நிறுவனம் எவ்வாறு ‘மாருதி சுசுகி’ நிறுவனமாக மாற்றம் பெற்றது என்பதை நாடு அறிந்தே உள்ளது. ஊழல் மயமான அரசு அதிகாரிகளை மிக எளிதாக விலைபேச முடியும் நம் நாட்டில், பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரித்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ( காண்க : சந்தைப் பொருளாதாரமா? அல்லது சந்தை சமூகமா? ) தினசரி கடன் வாங்கித் தொழில் நடத்தும் சிறு வணிகர்கள் ‘வால்மார்ட்’டுக்கு வால் பிடிக்க வேண்டியதுதான். அதைப் பற்றிய கவலை ஏதும் இன்றி நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் மன்மோகனார்.

இப்போதும் கூட, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால் இதைக் கைவிடுவதாக அரசு அறிவிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவே இம்முடிவை ‘ஒத்தி வைத்திருப்பதாக’ அரசு அறிவித்திருக்கிறது.  அந்நிய நேரடி முதலீடு என்ற முடிவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற பாஜக, இடதுசாரிகளின் கோரிக்கை அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிகளும், நாடாளுமன்ற முடக்கத்தைத் தவிர்க்க, வேறு வழியின்றி அரசின் முடிவில் திருப்தி அடைந்திருக்கின்றன.  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ‘இவ்விஷயத்தில் யாருக்கும் தோல்வி இல்லை; மக்களுக்கே வெற்றி’ என்று கூறி இருக்கிறார். அவ்வளவு பெருந்தன்மை காட்ட வேண்டிய அவசியமோ, தகுதியோ காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

எது எப்படியாயினும், சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்பது  தெரிந்து விட்டது. இப்போதைக்கு அக்கட்சி தன்னைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளிலிருந்து தப்பிய பிறகு மறுபடியும் முருங்கை மரம் ஏறவே போகிறது. சில்லறை மனிதர்கள் திருந்தப் போவதில்லை. ஆனால், சுதேசி இயக்கம் ( பார்க்க : http://www.swadeshionline.in ) உருவாக்கிய பொதுக்கருத்து மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சி கனன்று கொண்டே இருக்கும் என்பதை அரசுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது.