வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?

View More வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது… சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்… தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?

View More நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்

நாம் வன்முறையில் இறங்க வேண்டியதில்லை. சாத்வீக வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வெற்றியடையவும் நிறையவே அவகாசம் இருக்கிறது. அதுவே நிரந்தர அமைதியைக் கொடுக்கும் வழியும் ஆகும். ஆனால் அதற்கு முதலில் வெளிப்படையான விவாதமும் விழிப்புணர்ச்சி கொள்வதும் அவசியம் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டும். இந்து தர்மத்திற்கு வரும் சோதனைகளை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தையாவது கொள்வோம். வெளிப்படையாக விவாதிப்போம். இந்து என்ற குடையின் கீழ் ஒன்றுபடுவோம்.

எம்மதமும் சம்மதம் என்பது அனைத்து மதமும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியம் என்பது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை…

View More சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்