மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

அருணகிரிநாதரைப் போல மற்றொரு மேதமையை வேறெங்கும் காணமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வேறெந்த மொழியில் பிறந்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். தமிழ் மக்களோ அவரை பத்தோடு பதினொன்று என்பது போல பார்க்கிறார்கள்… வாழ்க்கையின் ஒருவித உள்ளீடற்ற தன்மையை சொல்லி இப்படி பிறந்து வாழ்ந்து முதுமையடைந்து நோயுற்று மரணமடையப் போகிற நான் அந்த முடிவுக்கு முன் உன் கிருபையை பெறுவேனா என கேட்கிறார். அடுத்த பகுதியை பாருங்கள்..

View More மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

இரு புறநானூற்றுப் பாடல்கள்

ஒக்கல் வாழ்க்கையின் குரூரத்தால் அதன் வன்முறையால் நொந்து போன ஒருவனின் புலம்பலாகத் தான் இந்த எளிய கவிதை எனக்குத் தோன்றுகிறது. புல்லைத் தின்று வாழும் அந்த ஜீவனுக்கு மான் என்ற அடையாளம் கூட இல்லை, வெறும் ‘புல்வாய்’ அது… தமர் பிறர் அறியா அமர் – புறநானூற்றுப் பாடல்களை வாசித்துக் கொண்டே வரும் போது, இந்தச் சொற்றொடரைக் கண்டு திகைத்து நின்று விட்டேன். தம்மவர் என்றும் அயலார் என்றும் அறியாத போர்க்களம்…

View More இரு புறநானூற்றுப் பாடல்கள்

பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்

ஞாலத்தில் விரும்பியது நண்ண வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால் எண்ணியது எய்தும் என்று பாரதி கூற வருவது போல் படுகிறது. விருப்பம் என்பது நமது இச்சையை மட்டும் சார்ந்து நிற்பது. ஆனால் எண்ணுவது என்பது உலகில் உள்ள புற அக மெய்மையைக் கவனத்தில் கொண்டு எழும் மனத்தின் செய்கை என்று படுகிறது… மனத்தின் விழியில் பட்டதை மனம் நயப்பது விருப்பம். மனத்தின் விழியில் அல்லாமல் ஜீவனின் விழியில் பட்ட சிவம் என்னும் நன்மையான பொருளை நாடுதல் எண்ணம் என்று ஒருவாறு வித்யாசம் காணமுடிகிறது. …

View More பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்

ஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை

படம் முழுவதும் லிவ் இன் தொடர்பான உறுத்தல்கள், கேள்விகள், சந்தேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இதன்மூலம் மணி உருவாக்க எண்ணுகிறார்… சம்பிரதாயமான திருமணங்களோ அல்லது ஒருவரை மட்டுமே காதலித்து கைப்பிடிக்கும் ‘பழைய ஸ்டைல்’ காதல் திருமணங்களோ மோசடியானவை, அவற்றில் உண்மையான அன்பு இருக்காது என்றெல்லாம் இந்தப் படம் சொல்கிறதா என்ன? மணி ரத்னத்தைப் பொறுத்த வரையில், அவரது வழக்கமான பழைய இளமை-காதல்-உறவு ஃபார்முலா ஒரு திறமையான Team மூலம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இது எந்த விதத்திலும் வித்தியாசமான படம் அல்ல…

View More ஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை

ஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை

கதை ஒன்று இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அது எப்படி முடிகிறது? அன்பால் தொடர்ந்து நிரப்பப்பட வேண்டிய ஒரு தாம்பத்திய வாழ்க்கையை ஒரு வயோதிகப் பார்வை எனும் பயத்தால் தொடங்க வைக்கிறது. முன்பெல்லாம் “பயபக்தி” என்பார்களே. அதுதான் இது. பார்வையாளர்களை அறிவு மிக்கவர்களாக ஆக்குவதற்குப் பதிலாக பயத்தால் பணியச் செய்தவர்களாக ஆக்குகிறது; அறிவால் தனக்கு ஏற்படும் ஒவ்வொரு உலக அனுபவத்தையும் ஆய்ந்து அறிந்து வாழ்க்கையின் பயனை அறிந்துகொள்ளும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகிறது. ஒரு வெள்ளைத் தாளைப் பார்த்து விட்டுத் தன் எண்ணங்களால் தன் மனத்தை நிரப்பிக் கொள்பவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்..

View More ஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை

விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]

“ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்… கவிழ்ந்துவிட்டான்…” இரண்டு விரலளவு சிறிய துண்டு வெள்ளை காகிதத்தில் நாலாவது படிக்கும் அந்தச் சிறுவன் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தவாறு இந்த வரியை முத்து முத்தாய் எழுதிக்கொண்டிருந்தான். எழுதிவிட்டு பிழையேதும் இருக்கிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தான்… ஸ்வாமிஜி பக்கத்திலிருந்த ஒரு பக்தரிடம் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க, ஒரு சிலர் திவாகரை சூழ்ந்துகொண்டு நடந்த விபரங்களை கேட்டனர். திவாகர் கையிலிருந்த காகிதத்தை பிரித்து காட்டினார். படித்தவர்களுக்கு தூக்கிவாரி போட்டது… திருக்குமரன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய ரியாக்ஷனுக்கேற்றவாறு ஸ்வாரஸ்யமாய் ஈடுபாட்டோடு கதைச் சொல்ல… சொல்ல… அவர்களுக்கு பரமதிருப்தியாயிற்று. இயக்குனர் திருக்குமரன் சந்தோஷத்தில் திக்குமுக்காடினார்….

View More விடுகதையா… இந்த வாழ்க்கை ? [சிறுகதை]

ஜானகியின் காதல்

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர். அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இங்கிலாந்து சென்றதும் உனவு பிரச்சனை அவரை வாட்டி எடுத்தது. அது உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன் 33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்… அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. ‘நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்” என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார்….

View More ஜானகியின் காதல்

பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3

மானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன… கோனார்க்கின் சூரிய க்ஷேத்திரம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை இசைக்கும் சிருங்கார சிற்பங்கள்… விளையாடும் யானைகள், துரத்தும் யானைகள், கூட்டத்தில் இருந்து விலகி ஓடும் யானை. நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அலங்காரத்தோடு கூடிய போஷாக்கான குட்டி யானைகள். எத்தனை யானைகள் வடித்த பிறகும் மகத்தான சிற்பிகளுக்கு இன்னும் நாம் யானைகளை பற்றி சொல்வதற்கு இருக்கும் தீராத ஆசையின் விளைவாக மேலும் மேலும் யானைகளை சித்தரிக்க இருக்கும் சிறு வாய்ப்புகளை கூட தவற விடாத மோகம்….

View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3

எழுமின் விழிமின் – 30

ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன. நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்…. நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், ‘கண்கள்’ என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது….. இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறமையைக் கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது….

View More எழுமின் விழிமின் – 30

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

வாழ்வின் துன்பமான சில கட்டங்களில், அவற்றிலிருந்து மீள்வதற்கு தனக்கு மரணம் நேர்ந்தால் நல்லது என்று பலரும் நினைக்கலாம். அப்போது அவன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனுக்கு மரணம் வாய்க்காமல் போகும்போது, அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். அதேபோல் ஒருவன் என்னதான் தவிர்க்க முயன்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டால் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதனால்தானே மரணத்தைக் கொண்டு வருபவனுக்குக் காலன் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆக பிறப்பதும் நம் கையில் இல்லை, இறப்பதும் நம் கையில் இல்லை. அதனால் வாழும்போது நாம் செய்யவேண்டியது என்ன என்று யோசிப்பவனும், வாழ்வதன் பொருள் என்ன என்று சிந்திப்பவனுமே பிறந்த பிறப்பின் பயனை இறப்பதற்கு முன் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் அறிந்து கொள்கிறான்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19