ஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்

ண்மையில் பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி அவர்கள் அரிசோன ஆனைமுகன் ஆலயத்திற்கு வருகை தந்தார்.  இக்கோவிலை ஆகம முறைப்படி கட்ட அவர்தான் வரைபடங்கள் வடிமைக்கிறார்.  அப்பொழுது பக்தஹனுமான் மற்றும் இராம, இலக்குவ சீதை ஆலயங்களுக்கு ஆகம முறைப்படி வடிவமைத்துக்கொடுத்தார்.  மேலும், கோவில் இராஜகொபுரத்திற்கு வரைபடம் தீட்டிக்கொடுத்தார்.  கோவிலில் அவருக்கு சால்வை போர்த்தி அவரது பணி சிறப்பிக்கப் பட்டது.

Generic orlistat 60 mg for weight loss is the active ingredient that can be combined with other medications that can enhance the effects of the drug. Auch hier erhält es sich die frage: in welchem umfang kann http://torrallardona.net/es/centros/ man so gute auswahl an echten und verwandten lebensmitteln entwickeln? I'd be willing to pay a bit more if i hadn't had any real life experience with any of the medications.

It is best to take the drug once per day at bedtime or on a separate night. Nolvadex (diclofenac) is used to treat https://gostomix.com.br/mini-churros/ pain, fever, and other conditions such as rheumatoid arthritis. Zonisamide (zns) is sold under the brand name neurontin(neurontin) and is an antiseizure drug used to treat epilepsy.

New: the best way to download new and best way to download the best way to download new topamax lilly script. Dapoxetine is available by prescription in prednisone 5mg cost both canada and the us. For those of you who are not familiar with the term "best" i will explain it.

அவ்வமயம் அவர் இராஜகோபுரத்தைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

“கோவில் கர்ப்பக்கிரகம் கடவுளரின் முகம் போன்றது.  இராஜகோபுரம் அவரது பாதத்திற்கு ஈடாகும்.  இராஜகோபுரத்தை நிறுவுவது கடவுளின் பாதத்தை அமைத்து அவரது அமைப்பை முழுமை அடையச் செய்வதற்கு ஒப்பாகும்.  இந்தப் பணியில் தொண்டாற்ற நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்.  இக்கனவை நிறைவேற உழைக்கும் அரிசோனா ஆலய அலுவலகர்களுக்கும், பக்தர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தனது சிறப்புரையை முடித்துக்கொண்டார்.

இடையிடையே தனது கருத்தை வலியுறுத்த ஆகம சாஸ்திரத்தில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களையும் எடுத்துக்காட்டாக இயம்பினார்.

அவர் ஆலய இராஜகோபுரத்திற்காகப் படம் வரைந்துகொண்டிருந்தபோது அவருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  அதைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆலயக் கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் இருக்கும் என்றார் முத்தையா ஸ்தபதி.  கோபுரத்தின் நிலைகளை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அது கோவிலின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொறுத்திருக்கிறது.  மக்கள் தொகையைப் பொறுத்தே கோவில் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் படுகிறது.  அதைப் பொறுத்தே இராஜகோபுரத்தின் நிலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் கூறி, தனது ஒவ்வொரு கூற்றுக்கும் ஆகம சாத்திரத்திலிருந்து வடமொழி சுலோகங்களைக் கூறி சான்று காட்டினார்.

agama-temples-muthiah-sthapati

ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்களில், கருவறையிலிருந்து அபிஷேக நீரை வெளிக்கொணரும் கோமுகிகள் காட்டிவிடும் என்றவர், கோமுகிகள் பசுவைப்போலவோ, யாளியைப்போலவோ, சிங்கத்தைப்போலவோ, வராகத்தைப்போலவோ, அல்லது வெறும் குழாயாகவோ, நேராகவோ நிலத்திற்குள்ளோ சென்றிருப்பதைப் பார்த்து கோவில்கள் எப்பிரிவினரால் கட்டப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அதே மாதிரி, கடவுளர்களின் சிலைகளும் எப்படி வடிவமைக்கப்படவேண்டும் என்றும் மேற்கோள்கள் காட்டினார்.  நமது விருப்பப்படி சிலைகளைச் செதுக்கக்கூடாதா என்று வினவியதற்கு, “ஆகம சாத்திரம் அதற்கு அனுமதிப்பதில்லை.  விநாயகர் சிலைகளையே பலவிதமாக வடிவமைக்க சாத்திரங்கள் இருக்கின்றன என்று மேற்கோள்கள் காட்டினார்.  அதுபோலவே, சிவன், பார்வதி, முருகன் முதலிய பல கடவுளர்கள் சிலைகளையும் வடிவமைக்க ஆகம விதிகள் உள்ளன.” என்று பதில் கூறினார்.  அவரது வடமொழி அறிவு என்னை வியக்கவைத்தது.

“தாங்கள் வடமொழி சுலோகங்களை உதாரணம் காட்டுகிறீர்களே?  தமிழில் சிற்ப சாத்திரம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“நானே சிற்ப சாஸ்திரம் என்று ஒரு நூலைத் தமிழில் எழுதி இருக்கிறேன்.  அது சென்னையில் கிடைக்கும்.” என்று கூறினார்.

அதன்பிறகு அவர் காஞ்சி முனிவர் சந்திரகேகர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் (மகாபெரியவாள்) அவர்களுடன் பேசியதைக் குறிப்பிட்டார்.  அவரையே செய்யச் சொல்லி ஒரு திட்டத்தைக் கொடுத்ததாகவும், அதைத் தான் வடிவமைத்ததை ஒரு பாக்கியமாகவும் கருதுவதாகப் பெருமையுடன் பேசினார்.

தான் சிறுவயதில் ஸ்ரீசைலத்திருச் சென்றதையும், அங்கு மலையடிவாரத்தில் நண்பர்களுடன் இரவு தங்கவேண்டி வந்ததையும், அங்கு தூரத்தில் கொள்ளிக்கண்களாக ஒளிரும் புலிகளைக் கண்டதாகவும், அவர்கள் குளிருக்கு மூட்டிய நெருப்பே அவைகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் சொன்னபோது எனக்கு மேனி சிலிர்த்தது.

“சென்னை வந்தால் அவசியம் என்னை வந்து சந்தியுங்கள்!” என்று சொல்லி விடைகொடுத்தார் பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி.  ஆலயம் பல எழுப்பி, இந்து சமயத்தையும், ஆகம சாத்திரங்களையும், சிற்பக்கலையையும் நிலை நிறுத்திவரும் அவரை வணங்கி விடைபெற்றேன்.

 

அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

morning_hindutva“அந்த 5000  வருடங்கள் பழைய கடவுள் உறுதியான கார்ட் போர்ட் அட்டைப் பெட்டியில் பாதுகாப்பாக என்னிடம் வந்து சேர்ந்தார்.. 9000 மைல்களுக்கு அப்பால், தென்னிந்தியாவின் ஒரு தொலைதூர மூலையில் மண்ணிலும் உலோகத்திலும் நெருப்பிலும் வியர்வையிலும் பிறந்து, வரலாற்றிலும் மரபிலும் யுகங்கள் கடந்து, கனெக்டிகட் நகரத்தின் ஒரு கடை வழியாக என்னை வந்தடைந்திருக்கிறார்… “

Mark Morford என்ற அமெரிக்க எழுத்தாளர், யோக பயிற்சியாளர் ஒரு பெரிய நடராஜர் சிலையை வரவழைத்து தன் வீட்டில் வழிபடு தெய்வமாக நிறுவியது குறித்து எழுதிய ஒரு பத்திரிகைக் கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மேலே உள்ளவை அக்கட்டுரையின் ஆரம்ப வரிகள்.

நடராஜ தத்துவத்தைப் பற்றியும் அந்தத் திருவுருவின் கலைச் செழுமை பற்றியும் அவருக்கு மிக எளிமையான, ஆனால் ஆன்மீக நோக்கு கொண்ட ஒரு புரிதல் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமும் பூரணமும் விசாலமும் வாய்ந்த ஒரு கடவுளை எப்படி நான் ஒரு சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து சம்பிரதாயமாக வணங்குவது என்று திகைக்கிறார்.

“உங்களது கடவுள்களை எப்படி பிரதிஷ்டை செய்வீர்கள்? எப்படி முறைப்படி போற்றுவீர்கள்? எந்த வகையான பேரதிர்ச்சியுடன், மூச்சடைக்காமல் தலைகுனிந்து வணங்குவீர்கள்? எனக்கு சர்ச்சுகளில் நம்பிக்கை இல்லை. குற்ற உணர்விலும் அவமதிப்பிலும், ஒரு கூச்சலிடும் நியாயத் தீர்ப்புக் காரரிடம் உங்களது அடையாளத்தைத் தொலைத்து விடுவதில், பாவத்திலும் வெட்கத்திலும் நிறைந்து, ஒரு கட்டையில் ஆணியடிக்கப் பட்டு ரத்தவிளாறாகி நிற்கும் உடலின் கோர உருவத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவற்றால் புனிதமானது எதையும் அடைய முடியாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்?

இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? மாயையை அழித்து, அறியாமையைத் தோற்கடிக்க முயன்றால் என்ன? ஒவ்வொரு சுவாசத்திலும், புன்னகையிலும், பாடலிலும், கைகுலுக்கலிலும், காயத்திலும், பரவசத்திலும், வேதனையிலும், சாவிலும் முழுமையான உணர்வுடன் இருந்து பார்த்தால் தான் என்ன? அது என்னால் முடியும். அதை நோக்கி சுவாசிக்க, கண்ணசைக்கவாவது முடியும்..  கடவுளர்கள்? திருப்பிக் கண்ணசைப்பது எப்போதும் அவர்களுக்குப் பிடித்த விஷயம் அல்லவா?”

இப்படி முடிகிறது அந்தக் கட்டுரை.

நடராஜர் (புஜங்க த்ராஸித மூர்த்தம்), சீயமங்கலம்
நடராஜர் (புஜங்க த்ராஸித மூர்த்தம்), சீயமங்கலம்

நடராஜரின் திருவுருவம் உலகின் எந்த மூலையிலும், பிரக்ஞையும் தேடலும் கொண்ட மனிதர்களிடம் ஒரு ஆன்மீகமான பிரமிப்பையும் மூச்சடைப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம். அப்பரையும் மணிவாசகரையும் மட்டுமல்ல, கார்ல் சாகன், ப்ரிட்ஜாஃப் காப்ரா, ஆனந்த குமாரசுவாமி, புதுமைப்பித்தன் போன்ற நவீன மனங்களையும் ஆடவல்லானின் பேரெழில் கொள்ளை கொண்டிருக்கிறது.

நமது முன்னோர் பிரபஞ்ச சக்தியின் வடிவாக,  சிருஷ்டி, நிலைபெறுதல், அழிவு என்பதன் அலகிலா விளையாட்டாக நடராஜரின் திருவுருவை மெய்யுணர்வில் கண்டனர். உண்மை, நலம், அழகு ஆகியவற்றின் சாரமாக சத்தியம், சிவம், சுந்தரம் என்ற அடைமொழிகளின் காட்சிப் படிமமாக அந்தத் திருவடிவம் தோற்றம் கொண்டது.  பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்.  அந்த வகையில் நடராஜர் காலமாகவும், காலம் கடந்த காலாதீதமாகவும் இரண்டு நிலைகளிலும் தொடரும் சலனமாக இருந்து உறைகிறார் எனலாம்.

எல்லையொன்றின்மை எனும்படி விரிந்து கிடக்கும் ஆடலரசனின் அற்புதப் பான்மைகளை அழகாக வடித்தெடுத்து நமக்கு அளித்திருக்கிறார்  இந்தியாவின் தலைசிறந்த கலை வரலாற்று ஆளுமைகளில் ஒருவரான சி.எஸ்.சிவராம மூர்த்த்தி. nataraja_book_cs_sivarama_murthyதனது வாழ்நாள் முழுவதும் நடராஜரைக் குறித்த தியானத்திலும் கல்வியிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டிருந்த மனம் அவருடையது. அதன் பயனாக, Nataraja in Art, Thought and Literature  என்ற மகத்தான நூல் 1974ம் ஆண்டு உருவானது. பெரிய அளவு தாளில் 400 பக்கங்களுக்கு மேல் பல புகைப்படங்களுடன் விரியும் இந்த நூல் நடராஜரைக் குறித்த முழுமையான கலைக்களஞ்சியம் என்று சொல்வதற்குத் தகுதியானது. நாட்டியம், கரணங்கள், சிவ நடனத்தின் வேத மூலங்கள், சம்ஸ்கிருத, தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நிகழ்த்து கலைகளிலும் நடராஜரின் வெளிப்பாடுகள் என விரிகிறது இந்த நூல். சோழர் காலத்திய நடராஜர் செப்புப் படிமங்கள், கேரளக் கோயில்களின் சிவ நடன ஓவியங்கள், சாளுக்கிய, காகதீய, ஹொய்சள காலத்திய நடராஜ சிற்பங்கள்,  வங்கத்திலும் ஒரிசாவிலும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியே இலங்கை, நேபாளம் கம்போடியா, இந்தோனேசியா, பாலி, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ள சிவ தாண்டவ மூர்த்திகள் என்று அனைத்தையும் ஆவணப் படுத்தியிருக்கிறார்.

நடராஜ மூர்த்தியின் சிற்ப லட்சணங்களும் அழகியலும், தத்துவ விளக்கங்களும் பிற்காலச் சோழர்களின் காலமான 9-10ம் நூற்றாண்டுகளில் தான் உருவாகி வளர்ந்தன என்று பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளும், அறிவியல் முறையிலான அகழ்வு-உலோக ஆய்வியல் (archeo-metallurgy)  பரிசோதனைகளும் 6-7ம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்திலேயே இது நிகழ்ந்து விட்டதை நிரூபிக்கின்றன.

நடேசர் (ஊர்த்வஜானு மூர்த்தம்), கூரம்
நடேசர் (ஊர்த்வஜானு மூர்த்தம்), கூரம்

ஆரம்பத்தில் உற்சவங்களில் மரத்தால் செய்யப் பட்ட நடராஜ மூர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கல்லிலும் உலோகத்திலும் அவை வடிக்கப் பட்டன. சீயமங்கலத்தில் உள்ள தூண் சிற்பமும், கூரம் கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டு சென்னை அருங்காட்சியத்தில் உள்ள நடேசர் உலோகப் படிமமும் தமிழகத்தின் மிகப் பழமையான நடராஜ சிற்பங்களின் வகையைச் சார்ந்தவை.

எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம்.  வஸ்திரங்களும் மாலைகளும் இன்றி இயல்பான எழிலுருவில் நடராஜரைக் காண மனம் விழையும். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜரின் திருமுகம் நேராகவோ, ஒரு பக்கமாக சாய்ந்தோ இருப்பது, உடுக்கையும் அக்னியும் தரித்திருக்கும் மேற்கைகள் உயர்ந்து அல்லது தாழ்ந்து இருக்கும் கோணம், சடா மகுடத்தின் அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு. நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்.

2010ம் ஆண்டு திருவாதிரைத் திருநாள் அன்று சிதம்பரத்திலேயே சபா நாயகரை தரிசனம் செய்யும் நற்பேறு கிட்டியது.  தில்லைக் கோயிலின் பெரும்பரப்பு  முழுவதும் மக்கள் திரள். உள் மண்டபத்துள் அடியார் குழாத்துடன் காத்திருப்பு. மதியம் இரண்டு  மணி ஆருத்ரா தரிசன நேரம் நெருங்கியது. மெல்ல வாத்திய ஓசை எழுந்து, பின் பெரும் நாதமாக வளர்ந்தது.. நீண்ட கொம்பு வாத்தியங்கள், எக்காளங்கள்,  சங்குகள்,   உடுக்கைகள், பிரம்ம தாளங்கள் முழங்கின.   தீவட்டிகளை சட்டமாகச் சொருகிய பெரும் தீச்சுடர்களைச் சுமந்து தீட்சிதர்களும் அடியார்களும் தோளோடு தோள் சேர்த்து சன்னதத்துடன் அந்த தாளகதிக்கு ஆடி வர,   சகல ஆபரணங்களுடன் சபாநாயகர் மண்டபத்துக்குள் நுழைந்தார் ! பக்தர்கள் மெய்சிலிர்த்தார்கள்.. வார்த்தைகள் எதுவும் அந்த நேரத்தில் வரவில்லை.  அற்புத தரிசனம் !  “கனக சபாபதி தரிசனம் ஒரு நாள் – கண்டால் கலி தீரும்”   என்ற கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் தான் ஞாபகம் வந்தது.

சிதம்பரம் மட்டுமின்றி அந்த வட்டாரத்திலுள்ள மற்ற முக்கிய கோயில்களையும் பார்த்துக் கொண்டே சென்றோம். சீர்காழியில்  நடராஜர் சிவகாமி திருவுலாக் காட்சி அற்புதமாக இருந்தது. எங்கும் திருவாதிரை விழாக் கோலம். திருவெம்பாவைப் பாடல்களும் நடராஜர் அபிஷேகமும் களை கட்டிக் கொண்டிருந்தன.

nataraja_amidst_boxes

திருக்கடையூரில் சன்னிதிகள் எல்லாம் பார்த்து முடித்ததும் நடராஜரைத் தேடிக் கொண்டிருந்தேன். வெளி மண்டபத்தில் இருந்தார். திருவாதிரை ஊர்கோலம் எல்லாம் முடிந்த களைப்பில், அலங்காரங்கள் எல்லாம் துறந்த நிலையில் அட்டைப் பெட்டிகளுக்கு இடையில் கொலுவிருந்தார் அம்பல வாணர். அமெரிக்க ஆப்பிள்களை சுமந்து வந்திறங்கிய அட்டைப் பெட்டிகள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

வேல் உண்டு, பயமேன்?

இலங்கைத் திருத்தலங்களைப் பற்றிச் சிந்திக்கிற போது, வடபுலத்தே இருக்கிற யாழ்ப்பாணமே முதலில் ஞாபகத்திற்கு வரும். அவ்வளவுக்கு முற்றிலும் தமிழ் பேசும் மக்களையே தன்னகத்தே கொண்ட, இந்து மதம் பழம் காலம் தொட்டு செழித்து வளர்ந்திருக்கிற பூமி இது.

யாழகம்

மிகவும் புராதன காலத்திலே பழந்தமிழ் இசைக் கருவியான யாழ் இசைக்க வல்லார் அதிகம் வாழ்ந்ததால் இந்நிலம் யாழ்ப்பாணம் எனப்பட்டது என்பர். இன்னும் இச்சொல் வரக் காரணமாக, பல்வேறு ஐதீகக் கதைகளும் உண்டு. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு.. ஒரு பக்கம் மட்டும்.. இலங்கையின் பிறபாகங்களோடு தொடுக்கப்பட்டிருக்கிற யாழ்ப்பாணத்தை யாழ். குடாநாடு என்று அழைப்பர்.

சுற்றிலும் கடல் சூழ்ந்திருந்தாலும் நல்ல செம்மண் பூமி நிறைவாக இருப்பதால் வயல் வளம் சிறந்திருக்கிறது. பல்வேறு பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்றன.

ஆறில்லாத… மலையில்லாத இப்பிராந்தியத்தில் இவை இல்லாத இடத்தும் இயற்கை அழகும், செழிப்பும், இயல்பான குளிர்ச்சியும் நிறைவாய் உள்ளமை ஆச்சரியமானது..

நகுலேஸ்வரம் போன்ற அநேக சிவாலயங்கள், அரசர்கள் ஸ்தாபித்த அநேக விநாயகர் ஆலயங்கள், நயினை நாகபூஷணியம்பாள் ஆலயம் போன்ற அநேக அம்பிகை ஆலயங்கள், இன்னும் வல்லிபுரம், பொன்னாலை போன்ற வைஷ்ணவாலயங்கள், இவற்றிற்கு எல்லாம் அதிகமாக பார்க்கும் இடமெல்லாம் குறைவில்லாது வெற்றி வேல் பெருமானுக்குரிய ஆலயங்கள்..

நீண்ட காலமாக தொடர்ந்த இனப்பிரச்சினையால் உயிரை எப்போதும் கையில் பிடித்து வாழ்ந்திருக்கிறார்கள் யாழக மக்கள்… காலத்திற்குக் காலம் நாட்டுக்குள்ளும்.. பின் ஒவ்வொரு நாடுகளாகவும் இவர்கள் அலைந்திருக்கிறார்கள்..

அப்போதெல்லாம் அவர்கள் எழுப்பிய குரல் முருகநாமமே… அவர்களின் வாய் பாடியதெல்லாம் கந்தஷஷ்டி கவசமே… அந்த வேற்பெருமானே தங்கள் வழித்துணையாய்.. உயிர்த்துணையாய் நின்றான் என்று இவர்கள் நம்புகிறார்கள்..

‘விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே..’

என்பதே இந்த யாழ்ப்பாண மக்களின் முழுமையான நம்பிக்கையாக இன்றும் இருக்கிறது. அதனால் தான் இம்மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்..

இன்றைக்கு நீங்கள் இலண்டனுக்கு போனாலும், அமெரிக்கா போனாலும், அவுஸ்ரேலியா போனாலும், மலேசியா போனாலும் ஜேர்மனி போனாலும் இன்னும் இன்னும் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கெல்லாம் யாழ்ப்பாணத்து மக்கள் அமைத்திருக்கிற அழகு முருகன் கோயில்களை காணலாம்.

யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது. இன்றைக்கும் யாழ்ப்பாணத்து ஊர்கள் தோறும் கந்தபுராணபடனம் நடப்பதைக் காணலாம்.

யாழ்ப்பாணத்தை பொ.பி 08ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் தமிழரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் இடபக் கொடியினை தமது கொடியாகக் கொண்டவர்கள்.. சேது என்பதை தமது மங்கல முத்திரையாகக் கொண்டவர்கள்.. யாழ்ப்பாணத்து நல்லூரை தலைமையகமாக உடையவர்கள்.

நல்லூர்க் கந்தன்

இவர்களின் தலைமையகமான யாழ். நல்லூரின் பெயரை யார் கேட்டாலும் அங்கிருக்கிற முருகன் கோயிலைப் பற்றியே சொல்வார்கள்..

யாழ்ப்பாண மக்கள் நல்லூரை நல்லையம்பதி என்றும் செல்லப்பெயரால் அழைப்பர். நல்லைக் கந்தன் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே புதிய உணர்வைப் பெறுவார்கள். அவர்கள் மனதில் நல்லூரில் கவின் கோயில் கொண்டு காட்சி தரும் தம் சொந்தப்பெருமானாம் கந்தப்பெருமானின் எண்ணம் குடி கொள்ள… கண்களில் கண்ணீர் பெருகும்… கைகள் தானே விரியும்…

முதல் முதலில் எப்போது.. நல்லையில் குமரவேள் கோயில் கொண்டார்..? என்கிற கேள்விக்கு சரியான பதில் காண்பது கடினம்.. என்றாலும் ஈழமண்டலச்சதகம் என்ற நூலில் சகஆண்டு 870ல் புவனேகபாகுவால் நல்லையில் முருகப்பெருமானுக்குக் கோயில் எழுப்பபட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இலக்கிய சகாப்தம் எண்ணூற்றெழுபதாம் ஆண்டின் எல்லை
அலர் பொழி மார்பனாம் புவனேகபாகு
நலமிகு யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து நல்லை
குலவிய கந்தவேட்குக் கோயிலும் இயற்றினானே

ஆக, பொ.பி 948ல் இங்கு கோயில் எழும்பியிருக்கிறது. அரசர் முதல் ஆண்டி வரை நல்லூர் ஆண்டவனை இங்கு வழிபட்டிருக்கிறார்கள். 1450ல் தென்னிலங்கை அரசனான ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போது இக்கோயில் இடமாற்றம் பெற்று சிறிது தொலைவில் அமைந்தது.

இப்பெருங்கோயிலும் 1621ல் போர்த்துக்கேய மதவெறியர்களின் ஆளுமைக்குள் அகப்படவே கற்குவியலாயிற்று… யாழ்ப்பாணத்துச் சைவர் இதயமெல்லாம் கண்ணீரில் தோய்ந்தது. அந்த சம்பவத்தில் உயிர் விட்டவர்கள் ஏராளம்.. நாட்டை விட்டு ஓடியவர்கள் ஏராளம்.. இவற்றை போர்த்துக்கேயரின் டயறிகளே சொல்லி நிற்கின்றன.

இச்சம்பவத்தின் போது நல்லூர் கோயில் குளத்தில் கும்பிட்ட விக்கிரகங்களைப் புதைத்து விட்டு (போர்த்துக்கேயர் கண்ணில் படின் சிதைத்து விடுவர் என்று அஞ்சி புதைத்தனர்) கோயில் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடியதாக வரலாறு பேசுகிறது..

கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர். கத்தோலிக்க தேவாலயம் புரொட்டஸ்தாந்து தேவாலயமாயிற்று..

இக்காலத்தில் ஒல்லாந்தரின் மதவெறி சற்று மாற்றுக் குறைந்திருந்தது.. இவ்வேளையில் நல்லூரில் குருக்கள் வளவு என்ற தனக்குரிய காணியில் 1734ல் கிருஷ்ண சுப்பையர் என்பவர் முருகனுக்குச் சிறிய கோயில் அமைத்தார்.

அந்தக் காலத்தில் ஒல்லாந்த அரசில் உயர்பதவி வகித்த பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்களின் உதவியுடன்.. அங்கே கோயில் சிறப்புறத் தொடங்கியது. (யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் ச-ம்-ப-ள-ம் என்ற ஐந்தெழுத்துக்காக கிறிஸ்துவத்திற்கு மாறியவர்களை பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள் என்பது வழக்கம்.. இவர்கள் வெளியில் கிறிஸ்தவராய் நடித்து அரசில் உயர் பதவி பெற்றாலும்.. அகத்தே சைவராய் வாழ்ந்தனர். உள்ளத்தில் சிவாயநம என்ற பஞ்சாட்சரத்தை உடையவர்களாய் இருந்தனர்)

ஓல்லாந்தரையும் கலைத்து விட்டு காலப்போக்கில் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றினர். ஒல்லாந்தரின் புரொட்டஸ்தாந்து தேவாலயமும் மெதடிஸ்த தேவாலயமாக மாறியது.. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்..

நேரந்தவறாமையும் தூய்மையும் நல்லூர்க் கோயிலின் தனிச்சிறப்புக்கள்.. ஆண்கள் எவராயினும் மேலாடை இன்றியே உள் செல்லலாம் என்பதும் சிறப்பு விதி.. இதனை இன்று வரை இலங்கை ஜனாதிபதி முதல் யாவரும் நல்லூருக்குள் வரும் போது கடைப்பிடிப்பதைக் காணலாம்..

இந்தப் பெரிய திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் வேலாயுதமே இருக்கிறது.. ஆம்.. வேல் வடிவமாகவே இறைவன் முருகன் காட்சி தருகிறான்.. என்றாலும்.. உற்சவ வடிவங்களாக ஷண்முகர், தேவியருடனான முத்துக்குமாரப்பெருமான், தண்டாயுதபாணி ஆகிய முருக வடிவங்களைத் தரிசிக்கலாம்..

ஆவணி மாதத்து அமாவாசையை நிறைவு நாளாய் கொண்டு இருபத்தைந்து நாட்கள் மஹோற்சவம், ஐப்பசியில் கந்தஷஷ்டிவிழா என்பன இங்கு பெருஞ்சிறப்புடன் நடைபெறுகின்றன.

வுழமையான நமது ஆலயங்கள் போல முழுமையாகச் சிவாகம மரபைச் சாராமல்.. அதே வேளை அதனை முற்றும் புறந்தள்ளாமல் தனக்கே உரிய பாணி அமைத்துச் சிறப்புடன் விளங்குகிறது நல்லைக் கந்தன் பெருங்கோயில்.. வட இலங்கைக்கு வருகிறவர்கள் யாவராயினும்.. அவர் எக்காரியத்திற்கு வருபவராயினும்.. தவறாமல் தரிசிக்கும் திருத்தலம் இதுவாகும்.

யோகர் முதலிய சித்தர்கள் வாழ்ந்த பூமி.. இங்குள்ள வெற்றி வேற் பெருமானின் திருவருளே இவ்வளவுக்குப் பிறகும்.. இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் உயிரோடு மக்கள் வாழ்வதற்கு காரணம் என்றால் மிகையல்ல.. பொய்யுமல்ல.. அதுவே மெய்யுமாகும்..

மா.. விட்ட… புரம்…

சோழமன்னன் ஒருவனின் மகளாய்ப் பிறந்தவள் மாருதப்புரவீகவல்லி.. தன் முன் வினைப்பயனாய் இளமையிலேயே குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டாள்.. அழகில் சிறந்தவளாய அந்த ராஜகுமாரியின் முகம் குதிரைமுகம் போல ஆயிற்று.. அரசனும்.. யாவரும் வருந்தினர். பரிகாரம் என்ன என்று தேடினர்.. பல்வேறு வைத்தியர்களும் தம்மால் குணப்படுத்த இயலாது என்று கைவிட்டு விட்டனர்.

ஆக, தல யாத்திரை செய்வதே சிறந்தது எனக் கருதி பல்வேறு ஸ்தலங்களுக்கும் இந்த அரசிளங்குமாரியும் அவளது பரிவாரங்களும் யாத்திரை செய்தனர்.. அவ்வாறே ஈழநாட்டுக்கும் வந்தனர்.. யாழ்ப்பாணத்திலுள்ள நகுலேஸ்வரப்பெருமானை தரிசித்து.. அங்குள்ள கண்டகி தீர்த்தத்தில் நீராடிப் போற்றினர். அங்கிருந்த கோயில்கடவை முருகனை பூஜித்தனர்.

அப்போது அற்புதம் நடந்தது.. மாருதப்புரவீகவல்லியின் குதிரை(மா) முகம் மறைந்தது.. அவள் அழகில் சிறந்தவளாய் மிளிர்ந்தாள்.. அவ்விடம்… துரகானன விமோசன புரியாக… “மாவிட்டபுரம்” ஆகச் சிறப்புற்றது. இச்செய்தி மாருதப்புரவீகவல்லியின் தந்தையான சோழனுக்கு பறந்தது.. அந்த கோயிற்கடவையை சிறந்த ஒரு கந்தகோட்டமாக மாற்றும் எண்ணம் மாருதப்புரவீக வல்லியிடம் பிறந்தது.. அந்த எண்ணத்தை சோழப்பெருமன்னனும் ஏற்றுப் போற்றினான்..

விளைவு.. தமிழகத்திலிருந்து சிற்பாசாரிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர்.. சிற்பங்கள், விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன.. மூலவர் வடிவமான வல்லி தேவசேனா உடனாய காங்கேயப்பெருமானின் திருவடிவம் சிதம்பரத்தில் உருவாக்கப்பட்டு கடல் வழியே யாழ்ப்பாணக் கரையடைந்தது.. அந்தக் கரை இன்றளவும் காங்கேசன்துறை என்றே அழைக்கப்படுகிறது.

சிதம்பரத்திலிருந்து பெரியமனதுள்ளார் என்ற தீட்சிதரும் அவர் குடும்பத்தாரும் அரசனால் வரவழைக்கப்பட்டு இத்தலத்து அர்ச்சகர் மற்றும் அறங்காவலர் பொறுப்பும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. இன்று வரை இத்தீட்சிதர் பரம்பரையினரே இக்கோயிலை நிர்வகிப்பதுடன் அர்ச்சகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய முருகன் ஆலயங்களுள் ஒன்றான இந்த மாவிட்டபுரத் திருத்தலத்தில் ஆடி மாதத்து அமாவாசையை தீர்த்தமாகக் கொண்டு 25 நாட்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கம்..

செல்வச் சந்நதியான்

இன்னொரு முக்கிய முருகன் ஆலயம் செல்வச்சந்நதி ஆகும். இத்திருத்தலத்தில் பூஜை செய்பவர்கள் மீனவ(பரதவ) மரபில் வந்தவர்களாவர்.

மௌனபூஜையாக வாய்கட்டி பூசிக்கும் வழக்கம் இங்கிருக்கிறது. என்றாலும்.. இங்கே நடைபெறும் அன்னதானத்தில் ஜாதி மத பேதம் எதுவுமின்றி யாவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கம் பழைய காலம் தொட்டு இருந்து வருகிறது.

மிகவும் அற்புதமான இந்த ஸ்தலத்தில் கொடுக்கப்படுகிற ஆலமிலை அமுது நோய் தீர்க்கும் மருந்து என்று கொண்டாடப்படுகிறது. நல்லைக் கந்தனை அலங்காரக்கந்தன் என்றும் மாவிட்டபுரக் கந்தனை அபிஷேகக் கந்தன் என்றும் போற்றுகிற முருக பக்தர்கள் சந்நதிக் கந்தனை அன்னதானக் கந்தன் என்று புகழ்கிறார்கள்.. வணங்குகிறார்கள்.

நீர்வேலியில் கடம்ப மரநீழலில் ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கந்தன் ஆலயம், சித்தர்கள் வாழ்ந்த செல்வக்கதிர்காம ஆலயம், இணுவிலில் உலகப் பெருமஞ்சம் அமைவு பெற்றிருக்கிற கந்தன் ஆலயம், காரைநகரில் திக்கரை என்ற பதியில் தரிபந்தாதி முதலிய பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஸ்தல நூல்களாகப் பெற்றிருக்கிற கந்தன் ஆலயம்.. இப்படி எங்கு நோக்கினும் சிறப்பு மிக்க பல்வேறு தலங்களைத் தரிசிக்கலாம்..

நம்மைப் போன்றவர்கள் பிறப்பதற்கு முன்னரே தொடங்கி சொல்லொணாத துன்பத்தைத் தந்த போரின் அவல வாழ்வியலுக்குள்ளும்.. தாங்கொணாத இழப்புகளுக்குள்ளும் இன்னும் யாழகத்து தமிழ் இந்துக்கள் ஓரளவேனும் மனசாந்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு வெற்றிவேற் பெருமான் வழிபாடும்.. அவனருளுமே காரணம் என்றால்.. அதுவே உண்மையாகும்.