காங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் எழுதியுள்ள சுயசரிதை காங்கிரஸ் கட்சிக்குள் கலகத்தைக் கிளப்பி உள்ளது. 2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்தி தான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார் நட்வர் சிங். இதுவரை, தேடிவந்த பிரதமர் பதவியை மறுத்த தியாகியாக, பாரத தேசத்தைக் காக்கவென்றே இத்தாலியில் பிறப்பெடுத்துவந்த அன்னையாக  காங்கிரஸ்காரர்களால் புகழ் பாடப்பட்டுவந்த சோனியா அம்மையார், உயிரச்சத்திற்குப் பயந்தே அந்தப் பதவியை மறுத்தார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

Azithromycin (also called aza) is a macrolide antibiotic and is used to treat many different. Tamoxifen also has the potential metformin ritemed price to decrease fertility. This will depend on the type of infection you are suffering from.

In a way, this drug is a miracle drug, it's cheap and you don't need a doctor to prescribe it. Sixty animals with clinical lesions of scabies were bimanually enrolled in the study (38 dogs and 32 cats) and treated with ivermectin or vehicle. Best acne cream for skin with and acne before and after.

And, how a lot more, the medical doctor may supply the remedy, also which the patient may or may not decide to make use of or not. Amoxicillin is an antibiotic medication used to treat bacterial infections, such as urinary tract infections, order clomid online pneumonia, and skin infections. Bph is a condition in men that can be treated by the drug.

புயலைக் கிளப்பும் நட்வரின் சுயசரிதை
புயலைக் கிளப்பும் நட்வரின் சுயசரிதை

“சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர் பதவியை மறுக்கவில்லை. அவர் இந்தியப் பிரதமராக தயாராகவே இருந்தார்.  எனினும் அப்போது சோனியா பிரதமராவதை ராகுல் காந்தி விரும்பவில்லை. தனது பாட்டி இந்திரா காந்தி,  தந்தை ராஜீவ் காந்தி ஆகியோருக்கு ஏற்பட்டது போன்ற துயரமான முடிவு தனது அம்மா சோனியாவுக்கும் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் தான் ராகுலின் எதிர்ப்புக்கு காரணம். ஒரு மகனாக சோனியா பிரதமராவதை தான் விரும்பவில்லை என்றும் ராகுல் கூறினார். அதனால்தான் சோனியா பிரதமர் பதவியை ஏற்கவில்லை” என்று புதிய குண்டை வீசி இருக்கிறார் நட்வர் சிங்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் தனது சுயசரிதையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் நட்வர் சிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது சுயசரிதை பரபரப்பாக விற்பனையாக நட்வர் சிங் செய்துள்ள விளம்பர உத்தியே இது என்று மன்மோகன் சிங் பதில் அளித்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன் சோனியாவுக்கு நல்லுறவு இருக்கவில்லை என்பதையும் பகிரங்கப்படுத்தி இருக்கிறார் நட்வர் சிங். இது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. ஆனால், அதிகார மையத்தில் புழங்கிய ஒருவரின் வாயிலிருந்து வரும் வாக்குமூலத்திற்கு அதிரடிப் புயலைக் கிளப்பும் சக்தி இருக்கவே செய்கிறது.

தவிர, ஊழலில் கரை புரண்ட காங்கிரஸ் கட்சி தனது நேர்மையை நிரூபிக்க பலிகொடுத்த ஆடு தான் நட்வர் சிங் (இராக் நாட்டுடனான உணவுக்கு எண்ணெய் ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேட்டால் 2005 டிசம்பரில் அமைச்சர் பதவியை இழந்தார் நட்வர் சிங்).. எனவே புகைச்சலில் காரநெடி அதிகமாகவே இருக்கிறது. அவரது சுயசரிதையின் பெயர் ‘ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்’. உண்மையில் காங்கிரஸின் கயமைகளைத் தோலுரிக்க இந்த ஒரு நூல் போதாது. சோனியாவும் தன் பங்கிற்கு சுயசரிதை எழுதப் போகிறாராம்.  மன்மோகனும் கூட எழுதலாம்.

ஆயினும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த பல தலைவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருப்பது புதிராக இருக்கிறது. பாஜகவை சீண்டுவதற்காக செய்தியாளர்களை சந்திக்கவென்றே நியமிக்கப்பட்டிருந்த தில்லி வழக்கறிஞர் கபில் சிபல் ஏளனமாகப் பேசுவதில் வல்லவர். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை; மணிஷ் திவாரியையும் காணோம்; அபிஷேக் சிங்வி, திக்விஜய் சிங், ஜெயந்தி   உள்ளிட்ட பல வாயாடி வித்தகர்களும் மௌனமாகிவிட்டனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சோனியாவுக்கு சலாம் போட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டு பதவி சுகம் அனுபவித்த பலர் இப்போது கட்சித் தலைமையகம் பக்கமே வருவதில்லை. இப்போதுதான் தெரிகிறது, காங்கிரஸ் கட்சியை இதுவரை ஒன்றுசேர்த்து வைத்திருந்தது அதிகாரப்பசி மட்டுமே என்பது.

அதனால் தான் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தேசியத் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். குறிப்பாக ராகுல் காந்திக்கு எதிராக பல தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டத் தயாராகிவிட்டார்கள். 3 மாதங்களுக்கு முன்னிருந்த நிலைமையே வேறு!

தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனால் ஒரே படுதோல்வியில் காங்கிரஸின் எதிர்காலமின்மை பூச்சாண்டியாக அக்கட்சியினரை மிரட்டுகிறது. அதனால் தான் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் முதல்வர்களுக்கு எதிராக பூசல் கிளம்பி இருக்கிறது. மகாராஷ்டிராவில் நாராயண் ரானே, ஹரியானாவில் சௌத்ரி பீரேந்தர் சிங், அசாமில்  ஹிமந்தா பிஸ்வ சர்மா தலைமையிலான 40 எம்எல்ஏக்கள் ஆகியோரின் கலகக்குரலால்  காங்கிரஸ் தலைமை ஆடிப்போயிருக்கிறது. கர்நாடகாவில் சித்தராமையாவுக்கும், இமாச்சலப் பிரதேசத்தில் வீரபத்ர சிங்கிற்கும் கூட எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் குத்துவெட்டு துவங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடனான காங்கிரஸின் கூட்டணி முறிந்துவிட்டது. வரும் தேர்தலில் அங்கு 4 முனைப்போட்டி உறுதி. பாஜக முதல்முறையாக அங்கு ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் கனிந்து வருகிறது. ஜார்க்கண்டிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி விரைவில் முறியலாம்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அசாம், மகாராஷ்டிரா, பிகார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இப்போதே நிலைகுலைந்து போயிருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கட்சி மாறும் காட்சிகளை வரும் நாட்களில் அதிகமாகக் காண முடியும். மூழ்கும் கப்பலில் தங்கியிருக்க எவரும் விரும்புவதில்லை.

லோக்சபா தேர்தலில் அசாமில் பாஜக பெற்ற பெரும் வெற்றி, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகளுக்கு பூகம்பம் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை- பாஜக கூட்டணிக்கு கிடைக்கப்போகும் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இப்போதே புரிந்துகொண்டுவிட்டது.

இந்நிலையில் புதிய அரசியல் சாகசத்தை பிகார் மாநிலத்தில் அரங்கேற்றியுள்ளது காங்கிரஸ். அங்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் பாஜக கூட்டணியின் செல்வாக்கை முறியடிக்க, நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ். அக்கட்சிகளுக்கும் பாஜகவை எதிர்க்க வேறு துணையில்லை என்பதால் தங்கள் முன்பகையை மறந்து, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கீட்டில் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளன.

Dinamani Cartoon 30.07.14
நன்றி: திரு. மதி/ தினமணி- 30.07.2014

பிகாரில் நிலவிய நிதிஷ்- லாலு மோதல் அனைவரும் அறிந்தது. லாலுவின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியவர் நிதிஷ்குமார் தான். பாஜகவுடன் அவர் ஏற்படுத்திய கூட்டணியால் தான் அங்கு லாலுவின் காட்டு தர்பாருக்கு எதிரான மக்கள்சக்தியை ஒன்றுதிரட்டி, ராப்ரிதேவியை (லாலுவின் மனைவி) வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. நாட்டின் பிற மாநிலங்கள் பலவகையில் முன்னேறிவந்த சூழலில் பிகார் இன்னமும் 40 வருடங்கள் பின்தங்கியிருக்கிறது. அதை மாற்ற நிதிஷ்குமார்- சுஷீல்குமார் மோடி கூட்டணி பெரும்பாடுபட்டது. அதற்கு வித்திட்டவர் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அவர்தான் நிதிஷ்குமாரை பிகார் கூட்டணிக்கு தலைமை தாங்க அனுப்பிவைத்தார். அதையெல்லாம் மறந்துவிட்டார் நிதிஷ்.

அதனால் தான் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து மோடியை எதிர்ப்பதாகக் காரணம் கூறி விலகினார் நிதிஷ். அந்த முடிவு எத்துணை தவறானது என்பதை அவர் தேர்தல் முடிவுகளில் உணர்ந்திருப்பார். ஆனால், அதனால் அவர் படிப்பினை பெற்றதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராக்கி, பிரதமர் நரேந்திர மோடியை அலுவல்ரீதியாகச் சந்திப்பதிலிருந்து தன்னைத் தவிர்த்துக்கொண்ட நிதிஷ்குமார், இதுவரையிலும் யாரை எதிர்த்து அரசியல் நடத்தினாரோ அவர்களுடனேயே கொஞ்சிக் குலாவத் தயாராகி இருக்கிறார். நிதிஷின் வீழ்ச்சி மிகவும் செங்குத்தானது.

அரசியல் கணிதத்தில் கூட்டல் கழித்தல் கணக்குகள் நாம் நினைப்பது போல முடிவுகளைத் தருவதில்லை என்பதை காங்கிரஸோ, நிதிஷோ, லாலுவோ அறியாமல் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் முரண்பட்ட மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது, அக்கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் குலைக்கும் என்பதை வரும் சட்டசபைத் தேர்தலில் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

போதாக்குறைக்கு ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியுடனான கூட்டணியும் முன்னாள் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடியின் செல்வாக்கும், பிகார் அரசியலில் பாஜக கூட்டணியை வலுவாக வைத்திருக்கின்றன. எதிரிகள் சேர்ந்திருப்பதால், அவர்களை எதிர்க்கவும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்கவும் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தவிர, இடதுசாரிக் கட்சிகள் (சிபிஎம், சிபிஐ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி) ஆகியவை இணைந்து  ‘மாபெரும் கூட்டணி’யை உருவாக்கியுள்ளதாக அறிவித்திருக்கின்றன. இக்கட்சிகள் மூன்றும் இதுவரை தனித்தனியே காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி கண்டிருந்தவை. கூட்டணி பேரத்தில் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கருதும் இக்கட்சிகள் தனியே அணி அமைத்திருப்பது, காங்கிரஸின் கனவுகளை கூடுதலாகச் சிதைக்கும்.

இவ்வாறாக தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை புயலில் சிக்கிய பாய்மரக் கப்பல் போலத் தள்ளாடுகிறது. துடுப்புகளும் உடைந்துபோய், மாலுமிகளும் வேறு கப்பல்களுக்குத் தாவும் நிலையில் தலைமை மாலுமி சோனியாவும் தளபதி ராகுலும் என்ன தான் செய்ய முடியும்? சுயநலமொன்றே பின்னிப் பிணைத்திருந்த, அதிகார அரசியலை மையமாகக் கொண்ட காங்கிரஸுக்கு இது ஒரு சோதனைக்காலம்.

வரும் மாதங்களில் மத்திய அரசால் எடுக்கப்படும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளும், தொடுக்கப்படும் வழக்குகளும் காங்கிரஸ் கட்சியின் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம். உள்கட்சி ஜனநாயகம் இல்லாத கட்சிக்கு-  சம்பாத்தியத்தையே குறிக்கோளாகக் கொண்ட தலைவர்களால் நடத்தப்பட்ட கட்சிக்கு – என்ன நடக்குமோ அதுதான் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு நடக்கிறது.

அதிகார இடைத்தரகர்களின் கட்சியாக எப்போது காங்கிரஸ் மாறியதோ, சோனியா என்ற தனிநபருக்கு ஜால்ரா போட எப்போது நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் துணிந்ததோ, அப்போதே அதன் படுகுழி நோக்கிய பயணம் துவங்கிவிட்டது. இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவுக்கும் பாடம் இருக்கிறது.

.

.