வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்

ஜேம்ஸ் பர்டன் சாண்டர்ஸன் ஹால்டேன் என்கிற JBS ஹால்டேன் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அட்டகாசமான மனிதர். உயிரியலாளர். கணிதவியலாளர். நல்ல எழுதுவார். பேசுவார். எல்லாவற்றுக்கும் மேல் மனிதர் மார்க்ஸிஸ்ட். கிரேட் பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of Great Britain CPGB) நட்சத்திர ஆதரவாளர். morning_hindutvaகம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் இவர் எழுதுகிற கட்டுரைகளுக்காகவே கட்சி பத்திரிகைக்கு பிரிட்டன் அறிவுஜீவிகளிடம் தனி கவர்ச்சி இருந்தது. ஆனால் கொஞ்சம் பிரச்சனையான ஆசாமி. அப்படியே கட்சியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுகிறவர் கிடையாது. உதாரணமாக CPGB க்கு காந்தி மீது பெரிய அபிமானமெல்லாம் கிடையாது. அந்த குஜராத்தி கிழவரின் உப்பு சத்தியாகிரகம் குறித்தும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனால் ஹால்டேன் உப்பு சத்தியாகிரகத்தை உயிர்வேதியியல் (bio-chemistry) அடிப்படையில் நியாயப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார்.

Calcium carbonate percent mass (% dry weight)mg per 1000gmg/kgmg/kgca per 1000mg200--250100 ± 302040 ± 60300 ± 8270 ± 9060 ± 1070 ± 2080 ± 210 ± 30 ± 30 ± 010 ± 020 ± 030 ± 30 ± 6050 ± 3050 ± 3060 ± 40*mean *±* sd. Latest on ivermectin in veterinary Mequon medicine & in the uk. But, when my husband had been taking your levitra no prescription drugs for about five years i could see the progress.

If you are looking to save money with your next buy, then you should take a look at our online price compare tool. The drug is also prescribed to treat urinary tract infections in people over age 50 https://frenchwarveterans.com/?author=3 and to treat acne and other skin conditions. What are the benefits of using plavix (generic version) instead of plavix generic name plavix for the treatment of angina.

You will still take all your medicine at the same time every day. Clomid for sale online buy 100mg or 200mg clomid McKeesport overnight delivery. Cortisone tablets price online has become more common than ever before.

எதுவானாலும் மார்க்ஸிசத்துக்கும் ஹால்டேனுக்குமான காதல் இறுதியில் மன-முறிவில் முடிந்தது. சோவியத் ஆட்சி ஜெனிடிக்ஸ் எனும் மரபணுவியலை கடுமையாக எதிர்த்தது. அது பூர்ஷ்வா கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட போலி அறிவியல் என்றது. அதற்கு மாற்றாக லைசன்கோ என்கிறவரை வைத்து ஒரு கேலிக்கூத்தை நடத்தினார்கள். மரபணுவியலாளர்களையெல்லாம் பிடித்து சிறையில் போட்டார்கள். சித்திரவதை செய்து வாக்குமூலம் சேகரித்தார்கள். சைபீரியாவுக்கு அனுப்பி பட்டினி போட்டு கொன்றார்கள். லண்டனின் பாதுகாப்பில் வாழ்ந்த ஹால்டேனுக்கு இரண்டு விஷயங்கள் தெரியும். லைசன்கோ ஒரு போலி ஆசாமி என்பதும் ஜெனிடிக்ஸ் சத்தியம் என்பதும்.  ஹால்டேன் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை துறந்தார். 1957 இல் இந்தியாவுக்கு வந்தார். இந்தியா  விடுதலை அடைந்து பத்தாண்டுகள் ஆகியிருந்தன. இந்திய அறிவியல் மையங்களை உருவாக்குவதில் ஹால்டேன் தன்னாலான பங்களிப்பை செய்தார். அவர் சுதந்திர இந்தியாவின் அறிவியல் அமைப்புகளின் உருவாக்கத்தில் சில விரும்பத்தகாத போக்குகளை அவதானித்தார். அதை பதிவு செய்யவும் அவர் தயங்கவில்லை. அவர் கூறுகிறார்:

இந்தியாவில் haldane1பழைய சாதி அமைப்பு போவதற்கு முன்னரே ஒரு புதிய சாதி முறை உருவாகி வருகிறது. அந்த புதிய முறை பட்டபடிப்புகளின் அடிப்படையில் அமைந்தது.  வங்க மொழியையோ, வேதியியலையோ வரலாற்றையோ அல்லது எதை விரும்புகிறீர்களோ அதை கற்றுக்கொடுக்க அந்த துறையில் நீங்கள் கட்டாயம் பட்டம் வாங்கியிருக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டுமா அல்லது பேராசிரியர் ஆக வேண்டுமா அந்த துறையில் கட்டாயம் உயர்பட்டங்கள் தேவை.  எனக்கு அறிவியலிலோ புள்ளியியலிலோ பட்டங்கள் கிடையாது. எனவே எப்போது நான் இவற்றை கற்பிப்பதில் இருந்து நிறுத்தப்படுவேன் என்பது எனக்கு தெரியாது…. பழைய சாதி அமைப்பில் குறைகள் இருந்தன. மிக மோசமான குறைகள் என நான் அவற்றை கருதுகிறேன். ஆனால் அதில் கல்வி செல்வத்துக்கு அடிமையாகவில்லை. ஆனால் நிர்வாக அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் இந்த புதிய சாதி அமைப்பில் அந்த அம்சமும் கூட இல்லை.

இது ஒரு நேருவிய குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் அனைத்தையும் வைத்துக் கொள்வதில் நேருவுக்கு ஒரு அலாதி பிரியம் இருந்தது. இதன் விளைவாக உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளிலும் அதிகாரிகள் கோலோச்சினார்கள். நகராட்சிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை இதுதான் கதை. இதன் உச்சகட்ட விளைவு என்ன? இந்தியாவிலிருந்து ஒரு அறிவியல் குழு வெளிநாட்டுக்கு அறிவியல் மாநாட்டுக்காகவோ கருத்தரங்குக்காகவோ செல்கிறது என வைத்துக் கொள்வோம். கூடவே ஒரு அரசு அதிகாரியும் செல்வார். அல்லது மத்திய அமைச்சர் செல்வார். அவருக்கு அது வெளிநாட்டு இன்பச் சுற்றுலாவாக அமையும். கட்சி வேறுபாடில்லாமல் துறை வேறுபாடில்லாமல் இதுதான் கதையாக இருந்தது. அண்மையில் பாஜகவே ஆளும் கோவாவில் அமைச்சர்கள் அரசு செலவில் உலக கால்பந்து போட்டியை பார்க்க முயற்சிகள் மேற்கொண்டது நினைவிருக்கலாம். Old Habits die hard என்பார்கள் ஆங்கிலத்தில். ஆனால் இன்றைய பிரதம மந்திரி வேறுமாதிரி ஆள். இன்று இருக்கும் அரசு வேறுமாதிரி அரசு.

அண்மையில் சாண்டியாகோவிலும், பாஸ்டனிலுமாக இரு அறிவியல் கருத்தரங்குகள். வழக்கம் போல அறிவியல் தொழில்நுட்பத்துக்கான இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. jsinghஅறிவியலாளர் குழுவை முன்னடத்தி வெளிநாடு செல்வதற்காக. பொதுவாக அமைச்சர் அல்லது அரசு அதிகாரி ஒருவர் இப்படி செல்வது வழக்கம். சாச்சா நேரு முதல் அன்னை சோனியா வரை தலைமுறை தலைமுறையாக ஆகிவந்த வழக்கம் அது. ஆனால் இம்முறை ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நல்ல, தகுதி வாய்ந்த, தனித்துவம் கொண்ட விஷயங்களை கருத்தரங்கில் முன்வைக்கக் கூடிய அறிவியலாளர் ஒருவர் இதற்காக செல்லும் அறிவியல் அணிக்கு தலைமை தாங்கட்டும் என்று சொல்லிவிட்டார் அமைச்சர். ஆக ஜூலை 25 சாண்டியாகோ பாஸ்டன் செல்லும் அறிவியலாளர் குழுவுக்கு விஞ்ஞானி டாக்டர். ராகவன் தலைமை தாங்குவார். (பிடிஐ செய்தி ஜூன் 7 2014)

இதே போக்கு பிற துறைகளிலும் தெரிகின்றன. இந்த நல்ல கண்டிப்பான போக்குக்கு பிரதம மந்திரியும் விதிவிலக்கு அல்ல என்பதுதான் சந்தோஷமான விஷயம்.உலக கால்பந்து இறுதி ஆட்டம் நடப்பது ஜூலை 13. பிரேஸில் – இந்தியா- ரஷியா-சீனா தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டுத்தலைவர்களின் உச்சி மாநாடு (BRICS) நடக்கவிருப்பதுmodi2 ஜூலை 15-17 அதே பிரேஸிலில். இந்த மாநாட்டில் மோதி கலந்து கொள்கிறார்.எனவே பிரேஸில் அரசு கால்பந்து இறுதி போட்டிக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதில் கலந்து கொள்ளும் எண்ணம் மோதிக்கு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்திருக்கிறார். (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூன் 25). பிரதம மந்திரி இப்படி இருந்தால்? இதுவே போன அரசாக இருந்திருந்தால் குடும்பம் குடும்பமாக அமைச்சர்களும் அதிகாரிகளும் குடும்ப அடிவருடிகளும் தனி விமானத்தில் சென்று இந்தியாவை அசிங்கப்படுத்திவிட்டு வந்திருப்பார்கள். தனக்குத்தானே பாரத ரத்னா அளித்து கொண்ட நேருவிய பாரம்பரியமல்லவா? கிழக்கு பாகிஸ்தானில் கஷ்டப்படும் இந்து தலித், பௌத்த வனவாசி அகதிகளைக் குறித்து கவலைப்படாமல் நாஸரிடமும் ஸ்டாலினிடமும் மாவோவிடமும் கிண்ணங்கள் தட்டி உலக அமைதிக்காக உறவாடிய பாரம்பரியமல்லவா?

சாதியம் – பழசோ புதுசோ – நரேந்திரர் அதை ஒழித்து எல்லா துறைகளிலும் ஆரோக்கியமான ஜனநாயக போக்கை கல்விசார்ந்த புத்துணர்வை பரவ வைக்கிறார். நல்ல தினங்கள் காத்திருக்கின்றன எனும் நம்பிக்கை வருகிறது.

இறுதியாக ஒரு நவீன வேதாளம் சொன்ன கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் வேதாளம் இருந்த உடலை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு செல்லலானான். chandamama_1அப்போது அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, ”நீ எதற்காக இதை செய்கிறாய்? நீ இதை செய்வதால் நன்மை ஏற்படும் என நினைத்தால் நன்மைக்கென்றே அவதாரம் எடுத்ததாக சொல்லுபவர்கள் கூட உன்னை எதிர்க்கக் கூடும். இது குறித்து நான் ஒரு ராசா கதை சொல்கிறேன் கேள்..” என்று சொல்லி சொல்லத் தொடங்கியது.

பின்னொரு காலத்தில் டெல்லி டெல்லி எனப்படுகிற மாநகரத்தில் அனிதா ஷெனாய் என ஒரு வழக்கறிஞர் இருந்தார். அவர் பழைய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவின் வழக்கறிஞர். நவம்பர் 2010 இல் ஸ்பெக்ட்ரம் விஷயம் குறிப்பாக வழக்குகள் சோதனைகள் என ராசாவின் சோதனை காலம் அது. ராசாவுக்கு மட்டுமல்ல சோனியா-மன்மோகன் அரசாங்கத்துக்கும். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்போது சிபிஐ அதிகாரிகள் அழைக்கப்பட்டு அனிதா ஷெனாயிடம் பேச வைக்கப்பட்டனர். எங்கே இந்த சந்திப்பு நிகழ்ந்தது? அன்றைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (Solicitor General) அலுவலகத்தில்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு நவம்பர் 15 2010 இல் இப்படி செய்தி வெளியிட்டது: “Documents accessed by TOI conclusively establish the SG’s efforts to coordinate between the agencies and the counsel of the telecom minister, whom they were to investigate…” gs1சிபிஐயின் மறுப்புகளை புறக்கணித்து அன்றைய மத்திய அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் நடந்து கொண்டார். மட்டுமல்ல அவர்தான் சிபிஐ தரப்பில் ராசா விவகாரத்தில் வழக்கறிஞராக செயல்படுவேன் என பிடிவாதமும் பிடித்தார். இறுதியில் அவர் வழக்கறிஞராக இருப்பதை சிபிஐ விரும்பவில்லை என சிபிஐயே எழுத்து மூலமாக சொல்ல வேண்டிய நிலை வந்தது.

யார் இப்படி தனது பதவியை பயன்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட ஆசாமி? யார் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ ‘ராசா விசயத்தில் நீர் ஆஜராக வேண்டாம்’ என எழுத்து மூலமாக கோரிய ஆசாமி? அவர்தான் திருவாளர்.கோபால் சுப்ரமணியம். அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த போதே இப்படி செயல்பட்டவர் தலைமை நீதிபதியானால்? ராசாவுக்கும் கனிமொழிக்கும் நன்மை பயக்கலாம். காங்கிரஸுக்கு தப்பிக்க முடியலாம். ஆனால் இந்தியாவுக்கு? … எனவே மோதி அரசு ஆசாமியை நிராகரித்ததில் அநியாயமும் இல்லை. அநீதியும் இல்லை. நீதித்துறையின் குறிக்கீடும் இல்லை.

இப்படி சொல்லி நிறுத்திய வேதாளம் சொன்னது.

மன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தின் பெயரை உச்ச நீதிமன்ற நியமன பட்டியலில் இருந்து மோதி அரசு நீக்கியதை 2G பிரச்சனையில் தொடர்புடைய காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஊழலை எதிர்க்கவே அவதாரம் எடுத்ததாக சொல்லும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன தலைவர் சாந்திபூஷன் இந்த ஆசாமிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கிறாரே… அது ஏன்?

உடனே விக்கிரமன்,

வேதாளமே…கேள் ஆம் ஆத்மி கட்சி என்பது ஊழலை எதிர்ப்பதைவிட காங்கிரஸுக்கு எதிரான கோபத்துக்கான ஒரு வடிகாலாக காங்கிரஸாலேயே உருவாக்கப்பட்டது என ஒரு பேச்சு உண்டு. அப்படி இருக்க சொந்த எசமானர்களுக்கு எதிராக எப்படி அவர்கள் செயல்பட முடியும். எனவே சாந்திபூஷனின் இந்த பேச்சில் நியாயம் இல்லைதான். ஊழல் எதிர்ப்பு இல்லைதான். ஆனால் நிச்சயமாக எசமான விசுவாசம் வெளிப்படுகிறது.

என்றான். விக்கிரமனின் சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

கழக அரசுகளை திரும்பத் திரும்பத் தன் தலையில் தானே போட்டுக் கொள்ளும் தமிழக மக்கள் போல, தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் வேதாளம் உறைந்த சவத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கீழிறங்கினான். வேதாளம் பேசத் துவங்கிற்று.

vikramandvetal

“வீரம் மிகுந்த அரசனே! இது வரை பல கதைகள் சொல்லி விட்டேன். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீயும் சரியாகப்  பதில் சொல்லிக் கொண்டே வருகிறாய். இம்முறை உனக்கு தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறேன் கேள். “ என்று ஆரம்பித்தது.
anna_paintஅண்ணாதுரை என்று தலைவர் ஒருவர் தமிழ் நாட்டில் இருந்தார். ஆரம்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் படித்து முடித்து 1935ல் ஜஸ்டிஸ் பார்ட்டி என்கிற கட்சியில் சேர்ந்தார். தனது பேச்சாற்றலால் தமக்கென அக்கட்சியில் ஆதரவாளர்களை உருவாக்கினார். கட்சியும் வளர்ந்து திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அக்கட்சித் தலைவர் ஈவேராவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுக் கட்சி துவங்கினார்.  எதையும் தாங்கும் இதயம் கொண்ட மனிதராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பலகாலம் நடத்தி இந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தார். தென்னாட்டை தனி திராவிட நாடாக பிரிக்க வேண்டும் என்று மேடை தோறும் கொள்கை முழக்கம் செய்தார்.

தொடர்ந்து பெரும் பேச்சாளராக வலம் வந்த அவர், தமிழக முதல்வரும் ஆனார். அதுவரை மதராஸ் பிரசிடென்சி என்று இருந்ததை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.  அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்ததால் பேரறிஞர் அண்ணா என்றே நினைவு கூறப் படுகிறார். மேலும் அவர் பல வகையான நாவல்கள், நாடகங்கள், இலக்கிய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பல கதைகள் படங்களாக வந்திருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகம் கூட அவரது அறிவை மெச்சி பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” ஆகிய நெறிகளை தன் வாழ்க்கையில் மேற்கொண்டு, தன் தொண்டர்களையும் அக்கொள்கைகளின் படி நடக்கச் செய்தார்.

தென்னாட்டு பெர்நாட்ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி தந்த கரிபால்டி என்றெல்லாம் புகழப்பட்ட அவர் வாழ்ந்த போதும், மறைந்த பின்னும் தமிழ்நாட்டு அரசியலில் இன்றியமையாத சக்தியாக நிலை பெற்றிருக்கிறார். அண்ணா இறந்த பொது உலகில் அதுவரை நிகழாத வகையில் உலக சாதனையாக பெறும் மக்கள் கூட்டம் கூடி அஞ்சலி செலுத்தியது.

இப்போது சொல்.

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல்  எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?

இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.”
என்று நிறுத்தியது வேதாளம்.

வேதாளம் பேச்சை நிறுத்திய கணமே, சவத்தைக் கீழே போட்டுவிட்டு சிரி சிரி என்று விழுந்து விழுந்து சிரித்தான் விக்ரமன்.

anna“அட முட்டாள் வேதாளமே…  ஒரு நாட்டையே முட்டாளாக்கிய ஒரு மனிதரைப் பற்றி ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சி செய்துகொண்டு அந்த முட்டாள் கும்பலில் ஒருவனாக ஆகிவிட்டாயே… உன்னையும் நீ கேட்கும் கேள்விகளையும் நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீ சொல்வதெல்லாம் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பள்ளி பாட புத்தகத்திலும் பொது ஊடகங்களிலும் செய்து வரும் பிரச்சாரம். உண்மைக்கும் நீ அடுக்கிய செய்திகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை.” என்றான்.

ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு சுயநலக் கொள்கை ஒன்றுதான் இருந்தது. மற்ற கொள்கைகளை எல்லாம் வசதிக்கு தகுந்தது போல ஏற்றுக் கொண்டார்.  எம்.ஏ படித்த இளைஞராக ஈ.வே.ராவின் கட்சியில் அண்ணா சேரும் போது (1935) அக்கட்சிதான் மதராஸ் ராஜதானியில் ஆட்சியில் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து நடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றது. பின்னர் சில வருடங்களில் (1944) ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவிப்பது அண்ணாவையும் அவர் கோஷ்டியையும் வெறுப்பேற்றியது.

evrandmaniyammaiஇதேதடா… உருப்படாத கட்சியாக இருக்கிறதே என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948), ஈவேரா மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை ஒரு சாக்காக வைத்து வெளியேறினர். ஈவேராவின் வாரிசு எனக் கருதப் பட்டு வந்த ஈ.வி.கே சம்பத்தும் அண்ணாதுரையும் சேர்ந்து புதுக் கட்சி துவங்கினர்.  அப்படி ஆரம்பித்ததுதான் திமுக.

அன்றைய கால கட்டத்தில் மக்கள் இன்றைய நாளை விட பல மடங்கு படிப்பறிவு குறைந்தவர்கள். அப்போதுதான் வெள்ளையர் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்த நேரம். நாடெங்கும் வறுமையே நிறைந்திருந்தது. இன்றைக்கு உள்ளது போல் தொலைக் காட்சி ஊடங்கங்கள் எல்லாம் அப்போது இல்லை. தனிமனித துதி தழைத்தோங்கிய காலம்.

மக்கள் தலைவர்களை பெரிதும் நம்பினார்கள். நாட்டின் பிரச்சனைகளுக்கு தம்மாலே தீர்வு காண முடியும் என்று இளைஞர்கள் நினைத்தார்கள். எளிதில் உணர்ச்சி வசப் பட்டார்கள். வேலைவாய்ப்பு மிகக் குறைந்த காலம் அது. தனியார் துறை நிறுவனங்கள் வளராத வளரமுடியாத காலம் அது. அரசியல் கூட்டங்களுக்கு மிக எளிதாகவே கும்பல் கூடியது. மக்கள் கொள்கை முழக்கங்களில் மயங்கினார்கள். அப்போது கவிந்தது தான் திராவிட கழக இருட்டு. அன்றைய நிலையைப் சரியாக பயன்படுத்திக் கொண்டது அண்ணாதுரையின் அரசியல் தந்திரம். அடிப்படையில் அவருடையது ஒரு வெறுப்பரசியல். மக்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டி விட்டு அரசியலை மலினப் படுத்துவதே அந்த அரசியலின் வழி.

தன் அரசியலின் ஆரம்ப கட்டத்தில் அண்ணாவின் பொன்மொழிகள் சிலவற்றை கேட்டால் ஆடிப்போவாய்.

anti_jew_prop1“ஜெர்மன் அதிகாரியான ஹெர் ஹிட்லர் ஜெர்மனி தேசத்திலே யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததைத் தமது சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனராதிக்கம் இருந்து வருவதினால் விளையும் சமூகக்கேட்டை நன்கு உணர்வர்,” என்று ஹிட்லரின் வெறுப்பியலை ஆதரித்து மேலும் கூறுகிறார்:

“பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வ கலாசாலைகளில் யூதர்களே. கலா மண்டபங்கள் அவர்கள் கரங்களிலே. புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது. செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மனியரிடம் – ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும், என ஹிட்லர் சுயசரிதையில் எழுதினார். எழுதியபடி செய்தும் முடித்தார்” என்று அறுபது லட்சம் யூத மக்களை கொன்றதை ஆதரிப்பது போல தம் தொண்டர்களுக்கு குறிப்புணர்த்தினார்.

ஏனோ அவர் நினைத்த அளவு தமிழகத்தில் இனவெறுப்பு ஈடேறவில்லை.

மகாத்மா காந்தியின் புகழைப் பொறுக்காமல் “காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி” என்று பொருமினார்.

பேரறிஞர் என்று புகழப் படுகிற அண்ணாவின் தீர்க்க தரிசனத்துக்கு ஒரு உதாரணம் அவர் “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மா காந்தியைக் குறித்து சொன்னது:

“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.

is_woஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாவின் பங்கு குறித்து சொன்னாய். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா.. திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின. அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார்.

சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும்  வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்தவர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்.

அடுத்து திராவிட நாடு கோரிக்கையும் இப்படியே முடிந்தது. உண்மையில் பார்த்தால் திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அண்ணாவுக்கே திராவிடம் என்பதின் பொருள் தெரியவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை உள்ளடங்கிய மதராஸ் ராஜதானியையே இவர் தனி நாடாக்க கேட்டுக் கொண்டிருந்தார். இவர் கேட்டது தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது.

hypeஇவர் திராவிட நாடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படத் துவங்கின. 1965ல் சீனப் போர் துவங்கிய போது, எங்கே தனி நாடு கேட்கும் தம் கட்சியை தடை செய்து தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வருவதில் மண்ணைப் போட்டு விடுவார்களோ என்று தனி திராவிட நாட்டுக் கொள்கையை குப்பையில் கிடத்தினார்.

ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின் கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின் இறைக் கொள்கை விளக்கத்தில் தி.கவின் கடவுள் மறுப்பு கழன்றது.

கற்பு என்ற ஒன்றே கிடையாது என்ற ஈவேராவின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, கண்ணகி என்கிற கற்புக்கரசி கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கத் துவங்கினார் அண்ணாதுரை. 1962 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் “அண்ணாதுரை முதலியார்” என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது. இப்படி எந்த கொள்கையிலுமே அண்ணா உறுதியாக இருந்ததில்லை.

அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டாய். அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல. அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது. இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.

annayaleயேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி. டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.

இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப் பட்டன. அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.

எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார். அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம். அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார். இதனால் சிறுமைப் படுவது கம்பன் அல்ல, அண்ணாதுரைதான்.

hopelessஅண்ணாதுரைக்கும் ஒரு நடிகைக்கும் கள்ளத் தொடர்பு என்று ஊருக்கெல்லாம் தெரிந்து சட்ட சபையிலேயே கேள்வி எழுப்பப் பட்டது. கடமை கண்ணியம் என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்த இந்த மகான் அதற்கு பதில் அளிக்கும் போது சொன்னது:

“[……] ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [………] என்பவள் ஒரு பேனா மைக்கூடு – அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”.

கண்ணியம் என்பது அறவே அண்ணாவிடம் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. அன்றைக்கு அண்ணாவின் கட்சியில் பேச்சாளராக இருந்த மூடர்கள் சற்றும் தயங்காமல் அண்ணாவின் இந்த வசனத்தை மேடை தோறும் மறு ஒலிபரப்பு செய்து மகிழ்ந்தார்கள்.

பல தந்திரங்கள் செய்து ஆட்சியைப் பிடித்தபின் என்ன ஆனது என்றால், அண்ணாவின் ஆட்சியில் தான் கீழ்வெண்மணி என்கிற ஊரில் சாதி வெறியால் நாற்பது விவசாயக் குடும்பங்களை உயிருடன் தீயிட்டு கொளுத்தப் பட்டார்கள். இவர்களின் சாதி ஒழிப்பு கொள்கைகளும், ஆட்சியில் சட்டம் ஒழுங்கும் சிறந்து விளங்கிய லட்சணம் அது.
இவ்வாறு பிழைப்பு நடத்தினாலும் அக்காலத்தில் தமிழகத்தில் அண்ணாவுக்கு மயங்காதவர் குறைவே. இன்றைக்கு கருணாநிதியை  எதிர்த்து பேச யாரும் துணியாதது போலவே அண்ணாவையும் யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. நாடு முழுவதையும் முட்டாளாக்கி விட்டு அண்ணா போய் சேர்ந்தார்.

திராவிட நாடு, தமிழ் மொழி என்றெல்லாம் அரசியல் செய்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு எத்தனையோ பேர் தீக்குளிக்கவும், சிறை செல்லவும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரவும் காரணமாக இருந்தது அன்றைய அண்ணா அரசு.

family_businessஅண்ணாவின் கூச்சல்களை நம்பி இந்தி மொழி கற்காமல் போனதால் நட்டம் தமிழர்களுக்கே. ஆனால், கழகத்தினார் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை இந்தி படிக்க வைத்திருக்கிறார்கள்.

தன் பிள்ளைகளுக்கு பதவி என்றால் துள்ளி எழுந்து தில்லி சென்று மத்திய அரசை மிரட்ட முடிகிறது. ஆனால் இலங்கையில் தமிழன் இனமே அழிந்து கொண்டு இருக்க, அந்த மக்களை பற்றி சற்றும் கவலையின்றி, ஒப்புக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கொடநாட்டிலும், கோவாவிலும் ஓய்வேடுப்பதுமாக அரசியல் வளர்ந்திருக்கிறது.

அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் “விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்று பிரச்சாரம் செய்து விற்றது. உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது. ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது. அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது. பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது.

tamilcastefightsகழக அரசியலை புரிந்து கொண்டு முற்றாக இவற்றை ஒதுக்கும் வரை தமிழக மக்களுக்கு விடிவு காலம் இல்லை. நாட்டைக் கடனில் ஆழ்த்தி, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கழகங்கள் வீசும் இலவச எலும்புத் துண்டுகளுக்கும், வாய்ஜாலங்களுக்கும் மயங்கி சுரண்டலுக்கு ஆட்பட்டு, சுயமரியாதை இழந்து, கழகங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான்.

இவ்வாறு விக்ரமன் பதிலுரைக்க, மூடர்கள் கையில் சிக்கி சீரழிந்து போய்க்கொண்டிருக்கிற தமிழ்நாட்டுக்கு சுடுகாடு மேல் என்று வேதாளம் பறந்தது.