யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!

தில்லி தேர்தல் கள போராளிகள்
தில்லி தேர்தல் கள போராளிகள்

எப்படியாவது தில்லி தேர்தலில் பாஜக தோற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றனர் சில ஊடகக் கைக்கூலிகள். அவர்கள் அளவுக்கு அதிகமாகவே கேஜ்ரிவாலை கொம்பு சீவி விடுகின்றனர். இந்நிலையில் தலைநகரின் அரசியல் நிலவரம் குறித்து ஹிந்து விரோத மனப்பான்மையின்றி ஓர் அலசல் தேவையாகிறது. அந்தத் தேவையை நிறைவேற்றுகிறது இக்கட்டுரை….

I hope the results will make you want to try it and maybe even try it without dosing with it. The brand name includes a trademark for the specific drug but no Jhālrapātan clomid price australia generic name. Doxycycline is also used to treat certain bacterial infections in patients who have certain medical conditions (for example, patients with fungal infections or patients with an allergy to sulfonamides.

If you have low testosterone or low testosterone/sex hormone binding globulin (shbg), there are many treatment options to ensure that your testosterone levels become normal. The most important side effect is the clomid tablet cost atrociously risk of heart problems. The mechanism of action for this drug is similar to the other drugs in this group and is related to reducing the number of small blood platelets in the blood.

Even more frightening, some patients who are very depressed with depression, are then prescribed a drug called clonazepam. Amoxicillin dosage for pain Rio de Mouro monitored clomid cycle cost in dogs "this year, it seems that there's something wrong with the system," he told nbc's andrea mitchell in the second half of her interview with him tuesday, when asked about president barack obama's criticism of his policies, particularly the economic stimulus package. Buy prednisone without insurance in florida from pharmacy express.

மீண்டும் தில்லி மாநில சட்டசபைத் தேர்தல் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிப். 7-இல் நடைபெறும் தேர்தலை தனது இறுதிப் போராட்டமாகக் கருதிப்  போராடுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். ஆனால், காலம் அவரை கருணையின்றி நிராகரித்துவிடும் என்பதற்கான சான்றுகள் இப்போதே தென்படத் துவங்கி இருக்கின்றன.

2013 சட்டசபை தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற (28 தொகுதிகள்) ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்து 49 நாட்களில் பதவி விலகியதால் தான் தற்போதைய தேர்தலே நடத்தப்படுகிறது.  “முதல்வர் பதவியிலிருந்து இனி எக்காலத்திலும் விலக  மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்து இப்போது வாக்குவேட்டையாடுகிறார் கேஜ்ரிவால். ஆனால், வாக்காளர்களின் முதுகில் குத்திய கேஜ்ரிவாலை தில்லி மக்கள் அவ்வளவு சீக்கிரம் மன்னித்துவிட மாட்டார்கள் என்றே தெரிகிறது.

இந்நிலையில், ஆம், ஆத்மி கட்சியின் பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமானதும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி  கிரண் பேடி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. கடைசிநேரத்தில் களமிறக்கப்பட்ட அவருக்கு எதிராக பாஜகவில் முணுமுணுப்புகள் எழுந்தாலும், கட்சியின் கட்டுக்கோப்பால் அனைவரும் இணைந்து பணியாற்றத் துவங்கி இருக்கின்றனர்.

அணி மாறிய கேஜ்ரிவாலின் சகாக்கள்
அணி மாறிய கேஜ்ரிவாலின் சகாக்கள்

ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்திய அண்ணா ஹஸாரேயின் தளகர்த்தர்களாக விளங்கியவர்கள் தான் கிரண் பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இருவரும். நேரடி அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற ஹஸாரேயின் விதியை மீறி அரவிந்த் கேஜ்ரிவால் தான் முதலில் அரசியலில் நுழைந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. அவரது அரசியல் நுழைவால் தில்லி அரசியலில் நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டது தான் மிச்சம்.

தனது முதிர்ச்சியற்ற அரசியல் நடவடிக்கைகளால்,  கிடைத்த தில்லி முதல்வர் பதவியையும் கடாசிவிட்டு, தன்னை முன்னிறுத்திய அனைவர் முகத்திலும் கரியைப் பூசினார் கேஜ்ரிவால். பாஜகவின் வளர்ச்சியை முடக்க கேஜ்ரிவாலை ஆதரித்து, அதன் பலனாக கையைச் சுட்டுக் கொண்டது காங்கிரஸ் கட்சி. இப்போது, “ஆம் ஆத்மி கட்சியை எந்தக் காலத்திலும் ஆதரிக்கும் வாய்ப்பே இல்லை” என்று தில்லி மக்களிடம் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அஜய் மாக்கான்.

தேசப் பிரிவினைக்குப் பிந்தைய தில்லி அரசியலில் ஆரம்ப காலத்திலிருந்தே ஜனசங்கம் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. பாரதீய ஜனதா உதயத்துக்குப் பின், தில்லி மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், பெரும்பாலான காலங்களில் ஆளும் தரப்பாகவும் இருந்தது பாஜக. மதன்லால் குரானா- சாஹிப்சிங் வர்மா- விஜய்குமார் மல்ஹோத்ரா என்ற மூவர் அணியால் காங்கிரஸ் தடுமாறிய காலம் இருந்தது. ஆனால், அவர்களே கட்சிக்கு தடையான காட்சியும் உருவானது.  மாறிவரும் புதிய தலைமுறை வாக்காளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமல் பாஜகவின் மூத்த தலைவர்கள் தடுமாறினர். போதாக்குறைக்கு பாஜகவின் உள்கட்சி ஜனநாயகம் அளவுக்கு மீறியதில் கட்சியின் கௌரவம் அடிபட்டது. இந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்ஷித் முதல்வரானார்.

கேஜ்ரிவாலுக்கு சிக்கலாக மாறிய பூஷன்கள்
கேஜ்ரிவாலுக்கு சிக்கலாக மாறிய பூஷன்கள்

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தில்லியில் நிலவிய ஊழல்களும் (உ.ம்.: காமன்வெல்த் விளையாட்டு ஊழல்),  மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியின் அலங்கோலங்களும் ஷீலா தீக்ஷித்தை விட்டுக்கு அனுப்பின. அந்த வெற்றிடத்தை முழுமையாக நிரப்ப பாஜகவால் இயலவில்லை. காரணம் கேஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் திடீர் நுழைவால் வசீகரிக்கப்பட்ட தில்லியின் இளம் தலைமுறையினர் அளித்த வாக்குகளால் குழப்பமான தேர்தல் முடிவு கிடைத்தது. மொத்தமுள்ள 71 தொகுதிகளில் 31 தொகுதிகளில் பாஜக வென்றாலும், ஆட்சி அமைக்க முடியவில்லை. அதன் விளைவாக கேஜ்ரிவாலின் சிறுபான்மை அரசு பதவியேற்று, பின் விலகியது. இப்போது தில்லி வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது நிலையான அரசைத் தரும் என்பதை நன்கு புரிந்துகொண்டுவிட்டனர்.

தவிர, மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், கிரண் பேடியை பாஜக தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது தில்லியில் பெரும் பலன் தரும் என்றே கணிக்கப்படுகிறது. அநேகமாக பாஜக- அகாலிதளம் கூட்டணி 50-க்கு மேற்பட்ட இடங்களில் வென்றாலும் வியப்பில்லை. எனவே தான், கேஜ்ரிவாலின்  தலைமை ஆலோசகரான சாந்தி பூஷன் (இவர் தான்  ஆ.ஆ.கட்சியின் தேசியத் தலைவர்) , “கிரண் பேடியை பாஜக முன்னிறுத்தியது அற்புதமான அரசியல் நடவடிக்கை. அவர் சிறந்த முதல்வராக இருப்பார்” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். (பிறகு அவர் பல்டி அடித்த தமாஷ்  தனிக்கதை).

கிரண் பேடி: பாஜகவின் சரியான தேர்வு
கிரண் பேடி: பாஜகவின் சரியான தேர்வு

போதாக்குறைக்கு, ஆம் ஆ.ஆ.கட்சியின் வேட்பாளர்கள் பணபலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, கேஜ்ரிவாலுக்கு அடுத்த நிலையில் உள்ள பிரசாந்த் பூஷனும் புகார் கூறி இருக்கிறார். சர்ச்சைக்குரிய 12 வேட்பாளர்களை நீக்க வேண்டும் என்று அவர் கட்சியின் தேர்தல் பிரிவு பொறுப்பாளர் சஞ்சய் சிங்கிடம் மனு அளித்திருக்கிறார்.  இவ்வாறாக, ஆ.ஆ.கட்சியின் கோட்டைக்குள் இப்போதே குத்துவெட்டு துவங்கிவிட்டது.  போலியான நிறுவனங்களிடமிருந்து ரூ. 2 கோடி நன்கொடை பெற்ற விவகாரத்திலும் ஆ.ஆ.கட்சியின் சாயம் வெளுத்திருக்கிறது.

“அராஜகவாதி கேஜ்ரிவாலா?  மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்யும் சிறந்த நிர்வாகி பேடியா? யார் தேவை?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் பிரதமர் மோடி.  அவரது கூட்டங்களுக்கு வரும் மாபெரும் மக்களின் எண்ணிக்கை, தேர்தல் முடிவை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

காங்கிரஸ் கட்சியோ, பாஜக- ஆ.ஆ.கட்சி இடையிலான மோதலில் சிறு துரும்பாக நின்று வேடிக்கை பார்க்கிறது. தனது வழக்கமான ஆதரவாளர்களான இஸ்லாமியர்களை நம்பி அக்கட்சி இருக்கிறது. பெரும்பாலான  தொகுதிகளில்  காங்கிரஸ்  களத்தில் காணப்படவே இல்லை. கேஜ்ரிவாலே, தங்களுக்கும் பாஜகவுக்கும் இடையில் தான் போட்டி என்று தான் பிரசாரம் செய்கிறார். தன்னை எதிராளியாக முன்னிறுத்தும் இந்த வியூகமே ஆம் ஆத்மி கட்சியை சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முந்தச் செய்தது. அதே பாணி இம்முறை பலனளிக்குமா என்று தெரியவில்லை.

ஜீ மீடியாவின் கருத்துக்கணிப்பு
ஜீ மீடியாவின் கருத்துக்கணிப்பு

கிரண் பேடியின் அரசியல் நுழைவை அவரது அரசியல் குரு  ஹஸாரே விரும்பவில்லை. ஆனால், ஹஸாரேவையும் காலம் தாண்டிக் சென்றுவிட்டதை அவர் இன்னமும் அறியாமல் இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு தனது சகா பேடியை ஆசீர்வதிக்க இப்போதே அவர் தயாராகிக்கொள்வது அவரது மரியாதையைக் காப்பாற்றும்.

பாஜகவின் பல மாநிலத் தொடர்வெற்றிகளில் அடுத்த கோப்பையாக தில்லி இருக்கும் என்பது தேர்தல் போக்கைக் காணும்போதே  தெரிகிறது.

கிரண் பேடியின் அப்பழுக்கற்ற தலைமையும், சிறந்த நிர்வாகி என்ற பெயரும், மோடியின் பிரசார பலமும், அமித் ஷாவின் தேர்தல் உத்திகளும்,  சங்க ஸ்வயம்சேவகர்களின் அர்ப்பணமயமான ஜனநாயகப் பணியும் பாஜகவின் கூடுதல் பலங்கள். பாஜகவின் அனைத்து நிலைத் தலைவர்களும் பல்வேறு மாநில முதல்வர்களும் கிரண் பேடியை முதல்வராக்க கடுமையாக பிரசாரம் செய்கிறார்கள். இதனுடன் ஒப்பிடும் அளவுக்கு தலைநகர் தில்லியில் இப்போதைக்கு வேறு யாரும் இல்லை.

.

இடைத்தேர்தல் நிலவரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கம்
அரங்கநாதர் கோயில்

தில்லி தேர்தலுடன், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மாநிலத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

வருமானத்துக்கு மிஞ்சிய அளவில் சொத்து சேர்த்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற (2013, செப். 27) அதிமுக தலைவியும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வென்ற தொகுதி ஸ்ரீரங்கம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்ததால், அவர் வென்ற தொகுதிக்கு பிப். 13-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ஆனந்த், பாஜக சார்பில் சுப்பிரமணியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். களத்தில் அதிமுகவின் கரமே ஓங்கியுள்ளது. தவிர பெரும் அமைச்சர் குழுவே அங்கு தேர்தல் களமாடி வருகிறது.  எனினும் ஜெயலலிதா பெற்ற  அதிகபட்ச வாக்கு வித்யாசம் இம்முறை அதிமுகவுக்கு கிட்டாது போகலாம்.