You should check the price of a generic version of nolvadex online. Prednisone is azomax 250 mg price tyrannically a steroid that was originally derived from animals. This is a serious condition in which the eyes become so dry and irritated from the steroids that it affects vision and the ability to drive.
Buy dapoxetine for cheap in india buy cheap dapoxetine india dapoxetine buy in canada buy cheap dapoxetine in canada buy in india buy dapoxetine in canada buy cheap dapoxetine uk buy dapoxetine for women in uk dapoxetine tablets online india. Prednisone prices are also listed on the drug store locator, and we will always tell you if the price for your prescription is cheaper in buy clomid over the counter Kuchāman your local drugstore, compared to the price. The efficacy and safety of dapoxetine in the treatment of premature ejaculation have not been established.
Order nolvadex without prescription and we have a. A pesar de ser alto, sólo se usa una vez en su vida (la mayor clomid price in naira mainly parte de las veces) durante el año por cada diez vidas. Nach schätzungen der allianz zum arzneimittel und anwendungsbereich hängt im bereich von 3,3 bis 5,7 milliarden euro eine zunehmend wirksame erhöhung des medikaments ritalin, das in deutschland zur grundversorgung von schülern und einerseits und der konsumgüterhaltung und werbung.
“யே பரீட்ஷா பேப்பர் எக்கட பம்பிஸ்தானு” – எழு நிமிடம் யோசித்து, எனக்குத் தெரிந்த தெலுங்கில் செப்பினேன். நீரு மதராஸா என்றபடியே நிமிர்ந்து பார்த்தான் கே.ஜி.அர்ஜுன ரெட்டி என்கிற கே.ஜி. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். அந்தக் காலத்து தனுஷ் முகம். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்ட். ஒரு கையில் அலட்சியமாய் விசிறியபடி ஒரு நோட்டுப் புத்தகம். அதற்குள் நான்காய் மடித்து வைத்த சமூக அறிவியல் வினாத்தாள். கடைசித் தேர்வை முடித்துவிட்டு பஸ் வருவதற்காகக் காத்திருக்கிறான். நான் ஏன் காத்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை.
பஸ் ஸ்டாண்ட் வழக்கம்போல் அமைதியாக இருக்கிறது. அதே வெயில். அதே வெக்கை. தமிழ் வாசனையே இல்லாத இடம். ராயர் சந்நிதி தவிர மந்த்ராலயத்தில் எனக்குப் பிடித்தமான இடம் இது மட்டுமே. மந்த்ராலயம் என்னும் குட்டிக் கிராமத்தின் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் இருக்கிறது பஸ் ஸ்டாண்ட். பக்கா தெலுங்கு வாடை. பஸ் வருவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள். பிஸினெஸ் பேசாத பெருமக்கள். தெலுங்கில் மாட்லாடுவார்கள். கன்னடம் பேசினால் புரியும். அரைகுறை தெலுங்கில் பேச்சுக்கொடுத்தால் உரிமையோடு பேசுவார்கள். இந்தி, ஆங்கிலம் பேச்சில் எட்டிப்பார்த்தால் சற்றே தள்ளிப்போவார்கள்.
மந்த்ராலயம் முதல் விஜயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். சந்திரபாபு நாயுடு மூன்றாவது முறையாக முதல்வராகிவிடுவார் என்ற புனே மிட்டே பத்திரிக்கையின் கவர்ஸ்டோரி என் கண்ணை மறைத்தது. எங்கு பார்த்தாலும் தெலுங்கு தேச அலை என்றார்கள். இந்த முறையும் சந்திரபாபுதான் என்று எல்லோரையும்போல் நானும் நம்பினேன்.
அனந்த்பூர் செல்லக் காத்திருந்த, சுமாராக தமிழ் பேசத் தெரிந்த ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். “தெலுங்கு தேசத்திற்கு இனி வாய்ப்பே இல்லை,”- அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன். காங்கிரஸ் இப்போது ஜெயிக்காவிட்டால் எப்போதும் ஜெயிக்காது என்றார். ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளரோ என்று நினைத்து அலட்சியப்படுத்தினாலும் பின்னாளில் அவர் சொன்னதுதான் உண்மையானது.
மந்த்ராலயம் இன்னும் மாறிவிடவில்லை. பஸ் ஸ்டாண்டில் வழக்கம் போல் கூட்டமில்லை. புதிதாகக் கழிப்பறை முளைத்திருக்கிறது. ஹைதராபாத்துக்கும் பெங்களூருக்கும் நேரடி பஸ் விட ஆரம்பித்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் ஆரம்பித்து டைம் கீப்பர் நோட்டீஸ் போர்டு வரை எங்கெங்கும் தெலுங்கு மயம். மாதிரிக்குக் கூட ஒரு சின்ன ஆங்கில வார்த்தை தென்படவில்லை.
ஒரு பக்கம் துங்கபத்திரா. இன்னொரு பக்கம் பிருந்தாவனம். சுற்றிலும் நான்கு தெருக்கள். அதில் நாற்பது கடைகள். கடைகளை விட லாட்ஜ் அதிகம். எட்டு ஓட்டல்கள். எங்கே போனாலும் மசால் தேசை. மந்த்ராலயம் இவ்வளவுதான். தரிசனத்திற்கு தனியாக வரும் எல்லா ஆண்களுமே இங்கே பேச்சுலராக கருதப்படுகிறார்கள். பேச்சுலருககு ரூம் தரமாட்டார்கள். கொடுத்தாலும் அநியாய விலை. இந்த முறையும் பேச்சுலராகவே வந்ததால் அல்லாட வேண்டியிருந்தது. நிம்மதியான, திருப்தியான தரிசனமும் கிடைத்தாகிவிட்டது. மூன்று மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ். இன்னும் நிறைய நேரமிருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் பொழுதைப் போக்கிவிட்டு தேவஸ்தானத்தில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம் என்று திட்டம்.
கே.ஜி பர்ஸை திறந்து சில்லறை எண்ணினான். 25 பைசா ஒன்று உருண்டு ஓடியது. பார்த்து எத்தனை நாளாச்சு? பர்ஸில் ஓர் ஓரமாய் பாலகிருஷ்ணா சிரித்தார். என்.டி.ஆரின் மகன் என்று கே.ஜி அறிமுகப்படுத்தி வைத்தான். தெரியாதது போல் கேட்டுக்கொண்டேன். பாலகிருஷ்ணாவின் ரசிகனா என்று கேட்டேன். பாலகிருஷ்ணா நடித்த படம் பிடிக்கும் என்றான். போன மாதம் ரீலிஸான சிம்ஹா செம ஹிட்டாம். இந்த வாரம் ரீலிஸாகும் கலேஜாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொன்னான். அடுத்தவாரம் முதல் அவனது பர்ஸில் மகேஷ்பாபு இருப்பார்.
55 ரூபாய் பஸ் பாஸ். தமிழ்நாடு போல் இலவசமெல்லாம் இல்லை. சி, சேத்னாப்பள்ளி டூ மந்த்ராலயம் என்று எழுதியிருந்தது. கண்டக்டர் பஸ்ஸை நிறுத்தி ஏற்றிக்கொள்வாராம். கே.ஜியின் காலை ஆகாரம் கம்புதான். பள்ளிக்கூடத்தில் லன்ச். நேரம் இருந்தால் மதிய சாப்பாட்டுக்கு தேவஸ்தானம் போகலாம். பெரும்பாலும் போவதில்லை. 12 மணிக்குள் அங்கே போவது முடியாத காரியம் என்றான். சாவகாசமாக சாப்பிடப்போகலாம் என்று நினைத்திருந்த எனக்குக் கொஞ்சமாய் அதிர்ச்சி. டோக்கனையும் பர்சையும் காப்பாற்றவேண்டுமே என்கிற பதற்றம் தொற்றிக்கொண்டது.
என்னிடம் இரண்டு டோக்கன் இருக்கிறது. கூட வருகிறாயா என்று கேட்டேன். டோக்கனே தேவையில்லை. சரியான டயத்துக்குப் போகணும். முயற்சி பண்ணிப்பார்க்கலாம் என்று எழுந்தான்.
பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து, இடது புறம் திரும்பி, 100 ரூம்ஸ் தாண்டி வலது புறம் திரும்பி ஒரு சின்ன சந்தில் நடந்தால் தேவஸ்தானத்தின் ஆஸ்தான உணவுக்கூடத்திற்கு வந்துவிடலாம். தரிசனத்திற்குப் போடப்பட்டிருப்பதை விட அதிகமான இரும்புத் தடுப்புகள். வளைந்து வளைந்து உள்ளே நடந்தால் யாரோ ஒரு பெண் எல்லோரையும் சுத்தத் தமிழில் வசைபாடிக்கொண்டிருந்தார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு சரியாகப் புரியவில்லை. உள்ளேயிருந்து ஒருவர் வெளியே வந்து கன்னடத்தில் அந்தப் பெண்ணை வெளியே தள்ளி விரட்டியதும் அந்தப் பெண் வெறிபிடித்தவளைப் போல் கையில் இருப்பதை தூக்கி எறிந்தாள்.
உணவுக்கூடத்தின் உள்ளே இரண்டு பந்தி நடந்துகொண்டிருந்தது. அடுத்த பந்திக்காக ஏறக்குறைய இருபது பேர் காத்திருந்தார்கள். கே.ஜியும் நானும் போய் உட்கார்ந்துகொண்டோம். கை கழுவணுமா என்று கேட்டான். உட்கார்ந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தேன் கைகழுவும் இடத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது. கை கழுவ வேண்டுமென்றால் நீந்திக்கொண்டுதான் போகவேண்டும். பரவாயில்லை, வரும்போதுதான் கழுவினேன் என்று இன்ஸ்டெண்ட் பொய்யை உதிர்த்து வைத்தேன். என்னுடைய பதிலுக்குக் காத்திராமல் எழுந்துபோய் சிரத்தையாகக் கைகழுவிவிட்டு அமைதியாக வந்து உட்கார்ந்துகொண்டான்.
தட்டு விநியோகிக்க ஆரம்பித்தார்கள். சிடுசிடுவென்று ஓர் ஐயங்கார் தட்டை விநியோகத்தபடியே வர, பரிசு வாங்குவது போல் இரண்டு கைகளாலும் வாங்கிக்கொண்டோம். சற்றே பெரிய சில்வர் தட்டு. எங்கள் வீட்டில் மஞ்சள், மிளகாய் வகையறாவெல்லாம் இது போன்ற தட்டில்தான் வைத்து மொட்டை மாடியில் காய வைப்பது வழக்கம்.
இன்னொரு ஐயங்கார் தண்ணீர் ஊற்றிக்கொண்டு வர, சிரத்தையாக தட்டில் பிடித்துக் கழுவிக்கொண்டோம். கொஞ்சமாய் முகத்திலும் வந்து விழுந்தது. குடிக்கத் தண்ணீர் ஊற்றினார்கள். கையில் பாட்டில் எடுத்து வந்தால் அதில் ஊற்றுவார்கள். சில வருஷங்களுக்கு முன்வரை பத்து ரூபாய் டெபாசிட் கொடுத்து டம்ளர் வாங்கி தண்ணீர் குடித்தது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அதுவும் கிடையாது.
பெரிய அன்னக்கரண்டியில் சாதத்தை எடுத்துத் தட்டில் பரப்பினார்கள். அதன் மேல் சாம்பார் ஊற்றப்பட்டது. சற்றே துக்கலான சிவப்பு நிறத்தில் சாம்பார். ஆனாலும் காரமில்லை. உப்பு குறைச்சலாக இருந்ததாகத் தோன்றினாலும சாம்பார் ருசித்தது. இன்னொரு முறை சாப்பார் கேட்டு மொத்த சாதத்தையும் பிசைந்து உள்ளே தள்ளினேன். அதற்குள் இன்னொருவர் பருப்புப் பாயசத்தை அள்ளி, சாதத்தின்மேல் தெளித்துவிட்டுப் போனார். சாதத்தை ஒதுக்கிவிட்டு பாயசத்தை ஒருபிடி பிடித்தேன்.
பாயசத்தை முடித்துவிட்டு தயிர்சாதத்திற்காகக் காத்திருந்தேன். எந்த ஐயங்காரும் எட்டிப்பார்க்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் பாயசத்தோடு எழுந்துகொண்டார்கள். தயிர்சாதம் இல்லாத லன்ச் என்னால் ஜீரணிக்க முடியாது. லீமெரிடீய்ன் டீம் லன்ச்சில் கிளையண்டுக்கு முன்னால் உட்கார்ந்து சர்வரிடம் தயிர்சாதம் இல்லையா என்று கேட்டு மானத்தை வாங்கி, பழைய மேனேஜரை சிடுசிடுக்க வைத்த பெருமை எனக்கு உண்டு. வயிற்றில் அரை இன்ச் இடமில்லை என்றாலும் தயிர்சாதம் வரும்போது வயிறு வழிவிட்டுவிடும். மடத்தில் எப்போதும் தயிர்சாதம் கேட்காமலே வரும். ஏனோ இந்தமுறை வரவேயில்லை.
எழுந்து, நீச்சலடித்து, கைகழுவிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறும்போது இன்னொரு கட்டடத்தைப் பார்க்க நேர்ந்தது. பிராமணர்களுக்கான உணவுக்கூடமாம். உள்ளே நுழைந்து நடக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் கட்டுக்கட்டாய் இலைகள். இன்னொரு பக்கம் வேறு பாத்திரங்களில் அன்னதானப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு வளைவில் திரும்பியதும் ஓரமாய் உட்கார்ந்திருந்த ஆசாமி ஓடி வந்து, உங்களுக்கெல்லாம் சாப்பாடு அங்கே இருக்கிறது என்று தெலுங்கில் சொன்னது அரைகுறையாகப் புரிந்தது.
திரும்பி உணவுக்கூடத்தின் மைய மண்டபத்துக்கு வந்தபோது கே.ஜி எனக்காகக் காத்திருந்தான். “சும்மா, உள்ள சுத்திப்பார்க்கலாம்னு போனேன்,” என்று தமிழில் முணுமுணுத்தேன். புரியாமல் என்னைப் பார்த்தான். மைய மண்டப வாசலில் இடது புறத்தில் ஒரு சலவைக்கல் தென்பட்டது.
மைய மண்படத்தை விட்டு வெளியேறி குறுக்குச் சந்துகளைக் கடந்து வந்தால் தேவஸ்தானத்து வாசலில் ராயர் சிலையாய் உட்கார்ந்திருந்தார்; லாங் ஷாட்டில்.
ரஜினியை ஞாபகப்படுத்தினார். “என்ன ராயரே… வேத பிரஸ்தனமெல்லாம் சொன்னீங்க.. பகவானுக்கு முன்னாலே ஜாதியே கிடையாதுன்னு சொன்னீங்க… இங்கே எதையும் கண்டுக்காம சைலண்ட்டா இருக்கீங்க..” முட்டிக்கொண்டு வந்த கேள்விகளையெல்லாம் விசிறியடித்தேன். ராயரிடமிருந்து மெல்லிய புன்னகை; அதே ரஜினி புன்னகை!