இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21

 

Lotensin hct dose information was recently a little confusing. Doxycycline is an Târgu Secuiesc antibiotic that treats bacterial infections and prevents infections from existing. The term is often erroneously applied to non-malignant tumors, though it was originally applied.

As a small child i spent hours doing little things to prepare to have sex. They also recommend antibiotic therapy for any symptoms and/or signs of mythically amoxycillin and potassium clavulanate tablets price an ear infection or sinus infection. The drug's dosage form, how it works, and its side effects are the same as those of the original drug,

It is essential that you consult a doctor before taking any medication, because you need to have certain medical examinations and tests in order to determine which medication or drug is best suited to your individual needs. The most frequently reported symptom was Apartadó price of clomid in kenya headache (58%), followed by anorexia (31%) and blurred vision (28%). They have the same time-zone and time-zone offsets as the rest of the country when the sun is above the horizon.

 முந்தைய பகுதிகள் :

 

 தொடர்ச்சி…

சென்ற கட்டுரையில் பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமிய அமைபினர் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இளம் பெண்களை பயன்படுத்துவதுப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம்.  இந்தக் கட்டுரையிலும் அதன் தொடர்ச்சியாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் சில செய்திகளை காணலாம்.  இந்த கட்டுரையில் சிமி இயக்கம் உத்திர பிரதேசத்தில் துவங்கினாலும், இதன் செயல்பாடுகள் மற்றும் இவர்களின்  நெட் ஒர்க் சம்பந்தமான செய்திகளை இக் கட்டுரையில் காணலாம்.

women0பாரத நாட்டின் எல்லையை சுற்றிலும் அந்நிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ( Enclave) அமைந்துள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில், பயங்கரவாத தாக்குதலுக்கு என தேர்வு செய்யப்பட்ட இளம் பெண்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்கப்படுகிறது.  இதற்காகவே உத்திர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியாகள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கு என தனி கூடுதல் பயிற்சி மையங்கள் நடத்தப்படுகிறது.  இந்தக் கூடுதலில் கலந்து கொள்ளும் இஸ்லாமிய பெண்களை, முளை சலவை செய்து, பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும்படி போதனைகள் நடத்தப்படுகின்றன.  இவ்வாறு இஸ்லாமிய இளம் பெண்களை பயங்கரவாத செயலுக்கு தயார் செய்யப்படுவது பலருக்கு தெரியாத செய்தியாகும், இன்னும் பலருக்கு புரியாத செய்தியாகும். இவ்வாறு பெண்களை பயங்கரவாத செயலுக்கு தயார் செய்வது ஏன் என்பது பலருக்கு தெரியாது, ஆனால் பயங்கரவாத செயலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் ஜிகாதிகளுக்கு நன்கு தெரியும், இவ்வாறு ஜிகாத்திற்கு பயன்படும் உள்ளுர் பெண்களிடம் இந்தியாவின் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது, பல்வேறு வழிகளில் பயங்கரவாதிகள் தப்பிப்பதற்கு உதவி புரியும் என்பது அடைப்படை நோக்கமாகும்.

எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாவலர்கள், அடையாள அட்டை வைத்திருக்கும் இஸ்லாமிய பெண்களை முழுவதும் சோதனை செய்வதில்லை.  இதன் காரணமாகவே பயங்கரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள், வெடி பொருள்கள், தேவையான நிதி ஆதராங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு இம் மாதிரியான பெண்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இதைப் போலவே எல்லைப் பகுதிகளில் ஊடுருவும் பயங்கரவாதிகளை பாதுகாப்பாக இந்தியாவிற்குள் கொண்டு வருவதும் இவர்களின் தலையாய பணியாகும்.  மேலும் குறைந்த கட்டணத்தில் இப் பணியை செய்வதற்காகவே சிலர் இருக்கிறார்கள், (Touts ) .  உத்திர பிரதேசத்தின் எல்லைப் புறங்களில் உள்ள மாவட்டங்களில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் இவ்விஷயம் வெளியே தெரியவந்தது. இந்த செய்தியை உறுதி செய்யும் விதமாக ஒரு முறை ஹூஜி அமைப்பின் பொறுப்பாளர் ஜலால்வுதீன் (Mufti Ibrahim alis Jalauddin ) என்பவன் கைது செய்யப்பட்டு, அவனிடம் நடத்திய விசாரனையில் இம் மாதிரியான சம்பவங்கள்  உறுதி செய்யப்பட்டது.

துக்கதரன்-இ-மிலாட்   Dukhtaran-e-Millat

islam01துக்கதரன்-இ-மிலாட் என்கின்ற அமைப்பு லஷ்கா-இ-தொய்பாவின் பெண்கள் பிரிவு, இப் பிரிவு 1987-ல் துவக்கப்பட்டது.  முதன் முதலில் காஷ்மீர் மாநிலத்தில் துவக்கப்பட்டது, என்றாலும், பின்னாலில் மற்ற மாநிலங்களுக்கும் இப் பிரிவு விரிவுபடுத்தப்பட்டது.  இந்த அமைப்பு துவக்கப்பட்ட போது, காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே துவக்கப்பட்டது என்றாலும், பின்னர் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரிவதும் முக்கியமான நோக்கமாக மாற்றப்பட்டது    இந்த அமைப்பின் தலைவர் திருமதி ஆய்ஷா ஆண்ட்ரபி (Ayesha Andrabi ) என்பவர்..  இந்த அமைப்பிற்கு இணையாக லஷ்கா-இ-ஜப்பர் என்ற ஒரு புதிய அமைப்பு துவங்கப்பட்டது.  2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ந் தேதி, இஸ்லாமிய உடை அணியாத இரண்டு பெண்கள் மீது துக்கரன்-இ-மிலாட் அமைப்பினர் திராவகம் வீசிய நிகழ்ச்சிக்கு பின்னர்தான் இம் மாதரியான அமைப்பு இருப்பதாக வெளி உலகிற்கு தெரியவந்தது.  இந்த காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு முழு ஆதரவு கொடுத்த்து துக்கரன்-இ-மிலாட் என்ற அமைப்பு.  இந்த சம்பவம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 9ந் தேதியும், 10-ந் தேதியும் வெளியிட்ட அறிக்கையின் மூலம் ஆய்ஷா ஆண்ட்ரபியின் உண்மை சொரூபம் வெளிச்சத்திற்கு வந்த்து.  அதாவது இரண்டு பெண்கள் மீது ஆசிட் வீசிய சம்பவத்திற்கு beginning of a comprehensive  social reform movement based on true Islamic thought   என்று அறிக்கை விட்டார்.

தூக்கதரன்-இ-மிலாட் (Dukhtaran-e-Millat )  என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், பயங்கரவாத செயலுக்கு தேவையான உதவிகளை புரிந்தது என்ற தகவல்கள் பல்   வேறு கட்ட விசாரனையில் தெரியவந்த்து.   பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதும், தீவிரவாதிகளுக்கு தேவையான நிதி ஆதராங்களை கண்டு பிடிப்பதும், வசூலித்த நிதியை அவர்களிடம் சேர்ப்பதும் இவர்களின் தலையாய பணியாகும்.  1995-ல் அமெரிக்காவின் ஸ்டேட் டிபர்ட்மெண்ட் அறிக்கையின் படி ஸ்ரீநகரில் உள்ள பி.பி.சி. அலுவலகத்தில் குண்டு வெடித்த சம்பவத்தின் குற்றவாளிகள்      தூக்கதரன்-இ-மிலாட் (Dukhtaran-e-Millat )  அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிக்கை கொடுத்துள்ளது. 2002-ம் ஆண்டு மே மாதம் ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினரின் தகவலின் படி இந்த அமைப்பினர் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது.  இஸ்லாமாபாத்-லண்டன்-ஸ்ரீநகர் நகரங்களுக்கிடையே சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும், இந்த அமைப்பைச் சார்ந்த பெண்கள் முழுமையாக இச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.  இந்த தகவல் காவல் துறையினர் கைது செய்த Imtiaz Ahmed Bazaz என்பவன் கொடுத்த வாக்குமூலமாகும்.  இதன் பின்னர் 9.2.2002-ல்  தன்னை கைது செய்ய வருவார்கள் என நினைத்து ஆய்ஷா ஆண்ட்ராய் தலை மறைவாகி விட்டார்.  இவரது கணவர் டாக்டர் பக்குத் (Dr.Fuktoo ) தாரீக்-உல்-முஜாஹூதின் எனும் அமைப்பின் பொறுப்பாளர்.  எனவே கணவன் மனைவி இருவரும் பயங்கரவாத அமைப்பினருக்கு தேவையான உதவிகள் செய்தவர்கள் என்பது காவல் துறையினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

islam02எனவே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்த பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவானது மெல்ல மெல்ல உத்திரபிரதேசம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு பரவ துவங்கியது.  2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பெண்கள் சம்பந்தப் பட்டிருப்பதாக ஊடகங்கள் வழியாக தகவல்கள் வெளி வந்தன.  இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினா 45 வயது மதிக்கதக்க பாத்திமா கான் என்பவரை கைது செய்தனர்.  அவரிடம் நடத்திய விசாரனையில் மும்பை தாக்குதலில்   Fehmida Hanif   மற்றும் அவரது 15 வயது மகளும் தொடர்ப்புடையவாகள் என தெரிவித்தார்.  ஏதே இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு பெண்களை பயன்படுத்தியது மும்பை தாக்குதல் என எண்ணிவிடக் கூடாது. 2001 டிசம்பா மாதம் 13ந் தேதி பாராளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட  சம்பவத்தில் நவஜோதி சிந்து என்ற பெண்மணி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த்தாகவும், பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து டெல்லி விமான நிலையம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பயங்கரவாதிகளுக்கு தெரிவித்தார் என  விசாரனையில் தெரியவருகிறது.   நவஜோதி சிந்து என்பவர் தனது இஸ்லாமிய பெயரான அப்ஷன்( ) என்பதை இந்து பெயராக மாற்றிக் கொண்டார்.  19 வயதான இஸ்ரத் ஜகான் என்பவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டதாகவும், இதன் காரணமாக அவரை கைது செய்ய முற்பட்ட போது தப்பி செல்ல முயன்றார், அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்.  ஆனால் இச் சம்பவத்தை வைத்து மதசார்ப்பற்ற வாதிகளாக காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள் இஸ்ரத் அப்பாவி என்றும், ஆட்சியாளர்கள் திட்டமிட்டு கொன்றார்கள் என்றும் திரும்ப திரும்ப பொய்யை கூறி வருகிறார்கள். மேலும் இச் சம்பவம் நீதி மன்றத்தில் இருப்பதால் இச் சம்பவத்தை விவரிக்க இயலாத நிலையில் உள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தேடப்படும் குற்றவாளியாக ஏழு பெண்கள் இருப்பதாக உளவுத் துறையினர் தெரிவித்தார்கள். உள்துறை அமைச்சகத்தின் குறிப்பின்படி இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளில் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதாகவும், ஆகவே பெண்களையும் கண்கானிக்க வேண்டும் என்ற குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மா பகுதியில் கோடலி ( Kotli) யில் Jaish-e-Mohammed  அமைப்பின் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கு ஆயுதங்கள பயன்படுத்துவது, மனித வெடிகுண்டை எவ்வாறு கையாள்வது போன்ற பயிற்சிகள் கொடுக்க்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  லஷ்கர்-இ-ஜப்பர் அமைப்பின் பெண்கள் பிரிவான அஞ்சுமன்-இ-க்வாதீன்( Ajukan-e-Khwateen) அமைப்பின் பொறுப்பாளர் நஜ்மா அக்தர் (Najma Akhtar ) பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத பயிற்சி முகாமில் பெண்களுக்கு பயிற்சி கொடுத்தவர்.

மேலும் பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் பயிற்சி பெற்ற பெண்கள் ஒன்று நேபாளம் வழியாக உத்திர பிரதேசத்தில் நுழைவதும், இரண்டாவதாக பங்களா தேஷ் நாட்டிலிருந்து கொல்கத்தா வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவது அடிப்படையாக வழியாக வைத்திருக்கிறார்கள்.  இவ்வாறு இந்தியாவில் ஊடுருவியவர்கள், முதலில் தங்களது பெயரை இந்து பெயராக மாற்றிக் கொண்டு , ஏதோனும் ஒரு வழியில் அடையாள அட்டையை பெற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அனுப்படுகிறார்கள்.  பயங்கரவாத அமைப்பிற்கு உதவி புரிய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உள்ள நுழையும் பெண்களில் பெரும்பாலானவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும், ஆதரவற்ற அனாதைகளுமே இந்தப் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.  இவ்வாறு நியமிக்கப்படுபவர்களுக்கு பயிற்சியின் போது ஜிகாத் சம்பந்தான அனைத்து தகவல்களும்  புரிய வைக்கப்படுகின்றன..  இந்த காலகட்டத்திலேயே லஷ்கர் அமைப்பின் நோக்கங்களும். அவர்களுக்கு உள்ள தொடர்புகளும் போதிக்கப்படுகிறது.  இதன் காரணமாக பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் நுழையும் பெண்கள் தாங்கள் எந்த காரியத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டுதான் இணைகிறார்கள் என பல்வேறு உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

உத்திர பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.யின் பங்கு

1998-ம் ஆண்டு உத்திரபிரதேச காவல் துறையினர் சட்ட விரோதமாக ஊடுருவல் செய்த 78 பேர்களை கைது செய்தார்கள்.  இவர்கள் அனைவருக்கும் ஐ.எஸ்.ஐ யின் தொடர்பு உண்டு, மேலும் இவர்கள் ஐ.எஸ்.ஐயின் ஏஜென்ட்கள்.  இவர்களில் சிலர் கட்டாயத்தின் பேரில் இந்தியாவிற்குள் ஊடுருவல் செய்துள்ளார்கள். இந்த ஊடுருவல் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்  நடத்துவதற்காகவே ஊடுருவியதாகவும் விசாரனையில் தெரியவந்த்து.  இந்த ஊடுருவல் சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை தயாரித்த்து, மேற்படி அறிக்கையில் அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐயால் உருவாக்க்ப்பட்ட பயங்கரவாத அமைப்பகளான அல்ஹதீஸ்(Al-Hadis ) , லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல்-அன்சார் ( Harkut-ul-Ansar) போன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை உத்திர பிரதேசத்தில் ஊடுருவல் செய்ததில் ஐ.எஸ்.ஐயின்  பங்கு உள்ளதாக உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் காணப்படும் குளறுபடிகளை பயன்படுத்திக் கொண்டு, ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் எவ்வித தடங்களும் இல்லாமல் இந்தியாவில் நுழைகிறார்கள்.   பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் ஊடுருவுவதால், ஆயுத கடத்தல், இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் கள்ள நோட்டுகள் புழகத்தில் விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  பாகிஸ்தான் ஏஜென்ட்கள், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காகவே இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் கையெழுத்திடாத ஒப்பந்தங்களை போட்டுக் கொள்கிறார்கள்.  ஹஸாரத்கஞ்ச் (Hazratganj ) என்ற பகுதியில் தாவுத் இப்ரஹிம் சுற்றி வளைக்கப்பட்ட போது, அவனிடமிருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.  இவனிடம் நடத்திய முழு விசாரனையில் மேற்படி துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும். நேபாளம் வழியாக இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டது, கடத்தி கொண்டு வரப்பட்ட இவைகள் தனது நன்பன் சோட்ட ஷகீல் வசம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தான்.  மேற்படி கடத்தல் சம்பவத்தை 28 வயது நிரம்பிய அஸுதின்(Azizuddin ) என்பவனை காவல் துறையினர் கைது செய்து விசாரனை நடத்திய போது இதை தெரிவித்தான்.  இவன் பல ஆண்டு காலமாக ஐ.எஸ்.ஐயின் ஏஜென்ட்டாக உத்திர பிரதேசத்தில் செயல்பட்டதாக தெரிகிறது.

islamஐ.எஸ்.ஐயின் மூலம் இஸ்லாமாபாத்தில் நடந்த பயங்கரவாதிகளுக்கான நான்கு மாத பயிற்சியில் அஸுதின் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவன்.  மும்பையின் முன்னாள் மேயர் மிலந்த வைத்யாவை (Milind Vaidya ) கொல்ல முயன்ற போது, மேயர் படுகாயமடைந்தார், இந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலின் போது, தாக்குதலை நடத்திய அஸுதின் தப்பிவிட்டான்.  சில காலம் கழித்து அஸுதின் கைது செய்யப்பட்டு , விசாரனை நடத்திய போது , தான் அலிகார் பல்கலை கழகத்தில்  உள்ள முன்னாள் மாணவ தலைவர் தனக்கு பாதுகாப்பு கொடுத்த்தாகவும்,  பயங்கரவாதிகளுக்கு   பாகிஸ்தானிலிருந்து  நிதி உதவி செய்யும் வங்கியான ஹாபிப் வங்கி (Habib Bank ) உத்திர பிரதேசத்தில் உள்ள பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களுக்கும், மதரஸா பள்ளிகளுக்கும் லட்சக் கணக்கில் நிதி கொடுக்கிறது என்றம் தெரிவித்தான்.   முனிரூல் அசன் ( Manirul Ahsan) என்பவன் மேற்கு உத்திர பிரதேசத்தில் உள்ள தாரூல் உலம் தியோபாந்த் என்ற அமைப்பில் பயிற்சி பெற்றவன்.  லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவன், ஐ.எஸ்.ஐ. மூலம் பயிற்சிக்கு  அனுப்பபட்டவன் என மேற்கு வங்க மாநில டி.ஐ.ஜி தெரிவித்தார்.

பாங்களாதேஷ் நாட்டிற்கு இந்திய பிரதமர் திரு மன்மோகன் சிங் விஜயம் செய்த போது, அந்த நாட்டின் உளவுத் துறை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தேகங்கா (Deganga ) என்ற பகுதியில் தேடப்படும் பயங்கரவாதியான அஃப்சன் (Afsan) பதுங்கி இருப்பதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் அனுப்பினார்கள்.  இந்த தகவலின் அடிப்படையில் மேற்கு வங்க காவல் துறையினர் அஃப்சனை கைது செய்தார்கள்.  அவனிடம் நடத்திய விசாரனையில் , பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன், பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹுஜீயில் தான் பயிற்சி பெற்றதாகவும், பின்னர் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நடத்துவதற்கு தேவையான ஆட்களை தேடுவதற்காக ஊடுருவியதாகவும், தான் வந்த பணிக்காக உத்திர பிரதேசத்தில் உள்ள ஷாரன்புர் மாவட்டத்திலிருந்து 21 இஸ்லாமியர்களை தேர்வு செய்து பயங்கரவாத பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக தெரிவித்தான்.  கார்கில் பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்த இருவர் உத்திர பிரதேசம் முஸப்பர் நகரைச் சார்ந்தவர்கள்.  இதன் காரணமாக இந்திய அரசு நடத்திய தீவிர விசாரனையில் கார்கில் பகுதிலேயே மேலும் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.  இவர்கள் மூவருக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் மூலம் தலா ரூ5 லட்சம் கொடுக்கப்பட்டு, கராச்சியில் அவர்களுக்கு முழு பயிற்சி அளிக்க்பட்டு, பின்னர் கார்கில் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என தெரிவித்தான்.

1990லிருந்து உத்திர பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐயின் பணி துவங்கியது என்றே கூறலாம்.  பெரேலி , ராம்புர் , பிலிப்பட் மற்றும் மோராதாபாத் போன்ற மாவட்டங்களில் தங்களின் கால்களை பதித்தார்கள்.  இந்த மாவட்டங்களில் உள்ள சிறுபான்மையினரிடம் குறிப்பாக இஸ்லாமியர்களிடம் அதிக செல்வாக்கு கொண்ட அமைப்பாக ஐ.எஸ்.ஐ விளங்கியது.  மேற்படி மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை செய்த போது, கலவரத்தை தூண்டும் விதமான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பிட் நோட்டீஸ்கள் கைப்பற்றப்பட்டன.  இதை போலவே  Tarai Region பகுதியில் பஞ்சாப் தீவிரவாதிகளுடன் ஐ.எஸ்.ஐக்கு நெருங்கிய தொடர்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.  உத்திர பிரதேசத்தில் காவல் துறையினரின் தீவிர கண்கானிப்பின் காரணமாக ஐ.எஸ்.ஐ தனது இருப்பிடத்தை மேற்கு பகுதிக்கு மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் காட்மான்டுவிலும் தங்களது நெருங்கி தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  உத்திர பிரதேத்தின் மேற்கு பகுதிக்கு தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட பின்னர் தான் மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த்து.  கயாவில் யுனானி மருத்துவம் படித்துக் கொண்டிருந்த   Mushtaq Ahmed     என்பவர் உண்மையிலேயே மருத்துவம் படிப்பதற்கு சேர்ந்தவர் இல்லை, இதற்கு மாறாக பயங்கரவாத செயல்களுக்காகவும், ஐ.எஸ்.ஐயின் ஏஜென்ட்களை பல பகுதிகளில் ஜிகாத்க்கு உதவி புரிபவர்கள், பயங்கரவாத தாக்குதலகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மற்றும் வேறு வழிகளில் உதவி செய்பவர்களை கண்டு பிடிப்பதற்காகவும் குறிப்பாக மீரட் மற்றும் ஷரன்புர்  பகுதியில் ஆட்களை கண்டு பிடிக்கவும்  கல்லூரியில் சேர்ந்தவன். இவன் பயங்கரவாத அமைப்பான Hizabul-Mujahideen    பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவன் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும்.

உத்திர பிரதேசத்தில் சிமி அமைப்பின் பங்கு

simiமுதன் முதலில் சிமி இயக்கம் உத்திர பிரதேசத்தில் துவங்கிய என்றாலும், சிமி இயக்கம் உத்திரபிரதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் ( Jammat-e-Islami-Hind)என்ற அமைப்பில் இருந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இயக்கம் 1940-ல் மௌலான மவ்துடி (Maulana Mawdudi )என்பவரால் துவக்கப்பட்டது. ஜமாத்-இ-இஸ்லாமிய-ஹிந்த் இயக்கத்தினர் துவக்கிய சிமி இயக்கம் பின்னர்  நாடு முழுவதும் பரவியது. சிமி என்ற அமைப்பு துவங்குவதற்கு முன் உத்தர பிரதேசத்தில் இருந்து ஸ்டுடேன்ட் இஸ்லாமிக் ஆர்கனைஷேன் ( Students Islamic Organization) என்ற அமைப்பில் இருந்தவர்களையும் ஒருங்கிணைந்த பின்னர் சிமி அமைப்பு துவக்கப்பட்டது.  1981-ம் வருடம் வரை சிமி இயக்கத்தினர் ஜமாத்-இ-இஸ்லாமிய-ஹிந்த் இயக்கத்தினருடன் இணைந்தே அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்றன. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் இந்தியாவிற்க வருகை தந்து போது. இந்த வருகையை எதிர்த்தின் காரணமாக சிமி அமைப்பினர் முழுமையாக ஜமாத்-இ-இஸ்லாமிய-ஹிந்த் அமைப்பிலிருந்து விலகி தனியாக செயல்பட துவங்கினார்கள்.  சிமி அமைப்பு உத்திர பிரதேசத்தில் வலுவானதாக இருக்க கூடிய சூழ்நிலை ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த்து. இஸ்லாமிய மாணவர்களிடையே இஸ்லாம் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தவும், நம்பிக்கையில்லாதவர்களிடையே மனக் கசப்பை உருவாக்கவும்,  1971-ல்  ஸ்டுடேன்ட் இஸ்லாமிக் ஆர்கனைஷேன் ( Students Islamic Organization)         அமைப்பானது உருவாக்கப்பட்டு,  40 இடங்களில் தங்களது கிளைகளை வலுவாக வைத்துக் கொண்டிருந்த்து.  1975-ல் பல்வேறு பட்ட இஸ்லாமிய அமைப்புகள் அலிகாரில் ஒன்று கூடி  தங்களுக்குள் ஒரு அமைப்பு ஏற்படுத்தினார்கள், இதனுடைய முக்கியமான பணி  அனைத்து இஸ்லாமிய மாணவர் அமைப்புகளுடன் ஒரு இனக்கத்தை ஏற்படுத்தவும், எந்த செயலாக இருந்தாலும் அனைத்து மாணவர் அமைப்பும் இனைந்து செயல்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது.  இந்நிலையில் இந்தியாவில் இந்திரா காந்தி  கொண்டு வந்த அவசர நிலையின் காரணமாக ஸ்டுடேன்ட் இஸ்லாமிக் ஆர்கனைஷேன் ( Students Islamic Organization)   ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் ( Jammat-e-Islami-Hind) ஆகிய இரண்டு அமைப்புகளும் தடை செய்யப்பட்டன.                        1977-ல் அவசர நிலை ரத்து செய்யப்பட்டவுடன் ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் ( Jammat-e-Islami-Hind) புத்துயிர் பெற்றது, இந்நிலையில் மாணவர் அமைப்பிற்கு என ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்த்தின் காரணமாக சிமி உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பினர் பயங்கரவாத அமைப்புகளுக்கு எவ்வாறு உதவினார்கள், உத்திர பிரதேசத்தில் இவர்களின் பங்கு என்ன என்பதை பார்க்க வேண்டும்.  ஏன் என்றால் 2001-ல் சிமி இயக்கம் தடை செய்யப்பட்ட பின் பல்வேறு அரசியல் கட்சிகள், சிமி மீது உள்ள தடையை நீக்க வேண்டும் என்ற குரல் தொடர்ச்சியாக ஒலிக்க தொடங்குகிறது.  தமிழகத்தில் 2004-ல் பாராளுமன்ற தேர்தல் முடிந்து, மத்தியில் ஐக்கிய ஐனநாயக முன்னணி ஆட்சியில் அமர்ந்தவுடன், பிரதமரை சந்தித்த இரு கட்சிகளின் தலைவர்கள், சிமி மீது விதிக்க்ப்பட்ட தடையை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.  ஆனால் உத்திர பிரதேசத்தில்  சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்துக் கொண்டு விளையாட்டு நடத்துவதால், சிமி இயக்கத்தினர் தங்களது காரியங்களை எவ்வித தடங்களும் இன்றி செயல்படுத்தி வருகிறார்கள்.

simi0227.9.2001-ல் சிமி இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் 122க்கு மேற்பட்ட சிமி இயக்கதினர் கைது செய்யப்பட்டார்கள், கைது செய்யப்பட்டவர்களை பற்றிய விசாரனையில் பல மாநிலங்களில் நடந்த வகுப்பு கலவரங்களை தூண்டக்கூடிய செயல்களில் இவர்களின் தொடர்ப்பு இருப்பதாக தெரியவந்த்து.  இந்த தடையானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தடையை நீடிக்க செய்யும் விதமாக தடை நீடிப்பு செய்யப்படுகிறது.  2001-ல் தடை செய்யப்பட்ட போது தடா சட்டத்தின் படியும், Maharashtra Control of Organized Crime Act     சட்டத்தின் படியும் விதிக்கப்பட்டது.  ஆனால் காலப்போக்கில் சிமி இயக்கத்தினரின் தொடர்ப்பு சம்பந்தமான ஆவணங்கள் அரசுக்கு கிடைத்த்தின் காரணமாக பல்வேறு காரணங்களை கூறி தடை நீடிப்பு செய்யப்படுகிறது. சப்தர் நாகோரி உட்பட பல முக்கிய தலைவர்கள் கைது செய்த பின்னர், சிமியின் ஒரு பிரிவினர் தொடர்ந்து தங்களது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வேண்டும் என்றார்கள்.  ஆனாலும் கூட According to media reports Nagori gave an insight into a potent and subrly growing female cadre which is managed by wives or family members of top SIMI activists wanted in serial blasts across the country  ( Journal of defence studies  page no 222)  மத்திய அரசு முறையான தடை ஆணையை மாநில அரசுகளுக்கு அனுப்பாத்தால் உத்திர பிரதேச அரசு, கைது செய்யபட்ட சிமி அமைப்பினரை விடுதலை செய்ய நீதிமன்றத்தில் மனு செய்த குளறுபடிகளும் நடந்துள்ளன.

2000-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி உத்திரபிரதேச காவல் துறையினா பைசாபாத் நகரில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக அலிகார் பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவரும் சிமி இயக்கதின் உறுப்பினருமான முகமது அகில் (Mohammad Aquil )என்பவனை  கைது செய்தார்கள்.  நாட்டில் கலவரத்தை தூண்டுபவர்களாகவும் சிமி இயக்கத்தினர் ஈடுபட்டார்கள் என்பதும் நிதர்ச்னமான உண்மையாகும்.  2000-ம் வருடம் மார்ச்சு மாதம் மகாராஷ்ட்ர சட்ட மன்றத்தில் மாநிலத்தின் துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான சஜ்ஜன் பஜ்பால் (Chahagan Bhujbal ) மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதமாக செயல்படும் தாதா சோட்ட ஷகீல் என்பவன் சிமி இயக்கத்துடன் தொடர்ப்பினல் இருப்பதாகவும், வகுப்பு கலவரங்களை நடத்த இவர்களின் உதவியை நாடினான் என்றும் தெரிவித்தார்.

simi32007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ந் தேதி மும்பை காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த ஐவரை கைது செய்தார்கள்.  கைது செய்யப்பட்ட Afzal Mutalib Usmani, Mohammed Ansar Shaikh, Mohammed Arif Shaikh, Mohammed Zakir Shaikh, Mohammed Saddik Shaikh  அனைவரும் உத்திரபிரதேசத்தில் உள்ள ஆசம்கார் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது. இவர்கள் ஐவரும் உத்திரபிரதேசத்தில் உள்ள சிமி அமைப்பினர் என்றும், பின்னர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் என்று காவல் துறையின் இணை கமிஷனர் ராகேஷ் மரியா என்பவர் பத்தரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.   இவர்களை கைது செய்த போது, 10 கி.லோ ஜெலட்டின், மற்றும் அமோனியம் நைட்ரேட், 8 கி.லோ பால்பேரிங்க், 15 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.  கைப்பற்றப்பட்ட பொருள்களின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 2007-ம் வருடம் டிசம்பர் மாதம் 4ந் தேதி உத்திர பிரதேச சட்ட மன்றத்தில் மாநில முதல்வர் தெரிவித்த தகவல்,  மத்திய அரசு முறையான வழிகாட்டி கொடுக்காத்தால் Baharaich    நீதி மன்றத்தில் சிமி இயக்கத்தினர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறவும், கைது செய்தவர்களை விடுவிக்கவும் மனு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

1999-ம் சிமி இயக்கத்தின் பத்திரிக்கையான சிம் செய்தி மடலில் காஷ்மீர் இந்தியாவின் கொசோவோ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை, இந்திய ராணுவத்திற்கும், இந்திய அரசுக்கு எதிராகவும், இந்த நாட்டின் இறையான்மைக்கு எதிராகவும் கருத்துக்கள் அக் கட்டுரையில் உள்ளன என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னையை சார்ந்த மொய்தீன், சமிமுல் இஸ்லாம், போத்தனூர் செய்யது அப்தா ரகுமான் உமரி, செய்யது முகமது, தூத்துக்குடி காதர் பாபா, கோவை ஷாஜஹான், அபுதாகீர் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கின் மீது நடந்த விசாரனையில் இவர்கள் குற்றவாளிகள் என கூறி ஆறு பேருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ1,000 அபராதமும் விதிக்கபட்டது.  இவ்வாறு பல்வேறு வழக்குகளில் சிமி இயக்கத்தை சார்ந்தவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

சிமி மீது விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் நிலை

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தேதி சிமி இயக்கத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், தொடர்ந்து இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தடை நீடிப்பு செய்யப்படுகிறது.  தடை நீடிப்பு செய்யப்படும் போது, மத்திய அரசு தெரிவிக்கும் காரணம், பயங்கரவாத அமைப்பினருடன் சிமி இயக்கத்திற்கு தொடர்ப்பு இருப்பதாக கூறி தடை செய்யப்படுகிறது. 2008-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிரப்பினல்  சிமி மீது விதிக்கபட்ட தடை நீக்கியது.  தடையை நீக்கியதற்கு கூறப்பட்ட காரணங்கள் மைய அரசு சிமி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை .   ஆனாலும் கூட சில சம்பவங்கள் சிமி இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்கதையாகவே இருப்பதாக உளவுத் துறையினர் தெரிவித்தனர்.  சிமி இயக்கத்தின் கமாண்டராக இருந்த குரேஷி, பின்னர் பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாட்டில் உள்ள பயங்கரவாத இயக்கத்தினருடன் சேர்ந்து இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.  கேரள மாநிலம் கோட்டயத்தில் வகமோன் என்ற இடத்தில் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பினருக்கு உடற்பயிற்சி, ஆயுதப் பயிற்சி, பெட்ரோல் குண்டுகள் தயாரிக்கும் பயிற்சி, மற்றும் பயங்கரவாத செயல்பாட்டிற்கு தொடர்புடைய அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2008-ல் கோட்டயம் காவல் துறையினரால் குரேஷி உட்பட 30 பேர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.  ஆமை வேகத்தில் வழக்கின் விசாரணை சென்றதால், தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதன் காரணமாக குரேஷி உட்பட 30 பேர்கள் தலைமறைவாகி விட்டார்கள்.  இன்னும் கண்டுபிடிக்க இயலாத நிலையில் காவல் துறையினர் உள்ளனர்.

simi4இன்னும் சிமியின் பங்கு உத்திர பிரதேசத்தில் இருந்தும், இத்துடன் நிறுத்திக் கொண்டு, அடுத்த கட்டுரையில்  இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கிறது, இந்த நெட்
ஒர்க்கில் உள்ள அமைப்புகள், வங்கிகள், மற்றும் நிறுவனங்கள் சம்பந்தமான செய்திகளை பார்க்கலாம்.  மேலும் குஜராத் , ராஜஸ்தான் மாநிலங்களில் இஸ்லாமிய பயங்கரவாத தன்மையை பற்றிய செய்திகளை தொடர்ந்து படிக்கலாம்.