மலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்

என்ன நடக்கிறது மலேசியாவில்?

It is also one of the most popular medications in the world to relieve male impotence problems. Please don't miss the opportunity to order, store, keep and use zantac (tartrate sodium) at clomid liquid cost Beypazarı the low price from united kingdom now. If this persists then talk to your doctor about a possible medication that might help your period.

Check out our gametracker to find out an even earlier start time for your game: www.nytimes.com/sports/c-s/spt2. In-house docking slam-bang is the most widely used method when the dog is sedated or anesthetized. But i know i will feel better with food in the next couple of days.

I have recommended this drug to numerous of my friends who have colds and flu. We are always looking to make your life easier, better and http://judtile.net/plumbing-and-accessories/ more pleasant and dapoxetine hcl tablets 30 mg tablets 30mg. I saw the specialist when i came home and he said that i have to wait another year to see if his incision will not heal on its own.

hindraf011957ல் சுதந்திரம் பெற்ற மலேசியாவில் முஸ்லீம்களும், சீனர்களும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 80% பேர் தமிழ் ஹிந்துக்கள் . முஸ்லீம் பெரும்பான்மை நாடான மலேசியாவில் பெருமான்மையினரான முஸ்லிம்களுக்கான சிறப்பு சலுகைகள் இருக்கின்றன. தமிழ் இந்துக்களும், இந்தியர்களும் தேயிலை ரப்பர் ,தோட்டங்களிலும், கொத்தடிமைகளாக ஆங்கிலேயர்களால் பணி அமர்த்தப்பட்டவர்கள் . அவர்களுக்கு எந்த உரிமையும் ,சலுகையும் இன்றி இன்னும் அப்படியே இருக்கிறார்கள். சிறிது முன்னேறும் குடும்பங்களுக்கு அரசு எந்த விதமான சலுகைகளையும் அளிப்பதில்லை. இவர்களுக்கு முன்னால் வந்த மலாய் முஸ்லீம்களும் பூர்வ குடிகள் அல்ல. ஆனால் இஸ்லாமிய பாசத்தில் அவர்களுக்கு சலுகை கிடைக்கிறது. மேலும் வானம் பொய்த்த கிழக்கு ,தெற்கு தமிழ் நாட்டில் இருந்து சென்ற சகோதரர்களும் கீழ் நிலை வாழ்க்கையையே அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். 25 லட்சம் இந்துக்கள் அங்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமை போல் வாழ்கிறார்கள்.
hindraf02இவர்களுக்கு கல்வி கற்க, அரசு வேலைகளில் இடம் பெற தடை நிலவுகிறது. மிகவும் உயர்ந்த பொறுப்புகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் மக்களுக்கான தமிழ் கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு உரிய அளவிலான நிதி ஒதுக்காமலும், ஆசிரியர்களை நியமிக்காமலும் மாணவர்கள் படிப்பதை தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறது மலேசிய இஸ்லாமிய அரசு. உயர்கல்வியிலோ தமிழ் இந்துக்கள் படிக்கவே கூடாது என்பதற்காக தனது தேசத்தில் உள்ள சுமார் 8 லட்சம் இடங்களில் 5000 இடங்களை மட்டும் இந்துக்களுக்கு ஒதுக்கி இருக்கிறது மலேசிய அரசு. அடிமையாக இந்துக்களை வைத்து ரிங்கிட்களை அறுவடை செய்யும் மலேசிய அரசும் தொழில் நிறுவனங்களும் இந்துக்களுக்கு நல்வாழ்வு ஏற்பட்டு விடவே கூடாது என்ற கெடுமதியோடு காரியம் ஆற்றுகிறார்கள். அங்கு வாழும் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் பல விதங்களில் முடக்கப் படுகின்றன.

புதிய ஆலயங்களோ வழிபாட்டு இடங்களோ கூட அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கூட கட்டகூடாது என்கிறது  மலேசிய அரசு. ரப்பர் தோட்டங்களில் ஏராளமான முருகன் கோவில்கள், சிவன் கோவில்கள், அம்மன் கோவில்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அரசு குறிவைத்து அழிக்கிறது. அவர்களின் மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் தீவிரமாக மறுக்கிறது. இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் முயற்சிகளை அரசே ஆதரிக்கிறது. இது பற்றி உரிமைக்குரல் எழுப்பும் உணர்வாளர்களை உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு கைது செய்து வருகிறது. குறைந்த அளவு கூலியே தரப்பட்டாலும் அதையும் ஒழுங்காக தர அரசு ஆவன செய்ய மறுக்கிறது. ஆலய வழிபாட்டை சீர் குலைக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன் பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தின் போது கூடியிருந்த லட்சக்கணக்கான இந்துக்கள் மீது காவல் துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி அடுத்த வந்த ஆண்டுகளில் மக்கள் கூட்டத்தை திட்டமிட்டு குறைக்கிறது .hind03

இந்துக்களின் குழந்தைகள் காலம் காலமாக அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வி உரிமையை மறுக்கும் மலேசிய அரசுக்கு தமிழ் ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. 2005 ஆம் ஆண்டிலிருந்து போராடி வரும் ஹிண்ட்ராப் அமைப்பானது இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மிகப்பெரிய மக்கள் இயக்கமாகும். இதன் தலைவர் திரு வேதமூர்த்தி அவர்கள் மலேசிய இந்துக்களின் வாழ்வு மேம்படுவதற்காகவும் , அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைப்பதற்காகவும் மகா சிவராத்திரி தொடங்கி கடந்த 10 நாட்களுக்கு மேலாக அகோர வீரபத்திரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்.அவருக்கு பெரும் மக்களின் ஆதரவு இருக்கிறது.

 

அவரது கோரிக்கைகளை பரிசிலீத்து மலேசிய வாழ் இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க இந்திய வெளியுறவுத் துறை ராஜதந்திர நடவடிக்கைகளை மேர்கொள்ள வேண்டும். ஹிண்ட்ராப் அமைப்பின் பெயரிலேயே இந்து என்ற வார்த்தை இருப்பதால் அதை ஆதரிக்க முடியாது என்று திராவிட கூட்டங்கள் சொல்லி விட்டன. கம்யூனிஸ்ட் கயவர்களும் இடையே சொல்லி உதவ மறுக்கிறார்கள். மத்திய காங்கிரஸ் அரசோ இவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. தன் தாய் நாட்டு மக்கள் அந்நிய தேசத்தில் உரிமைகள் மறுக்கப்பட்டு கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல கையலாகாத காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. பெருமளவில் மலேசியாவில் இருந்து நாம் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம். பல மலேசிய நிறுவனங்கள் பாரதத்தில் தொழில் செய்கின்றன. இந்திய அரசு ராஜ தந்திர உறவுகள் மூலம் முயற்சி செய்தால் அங்குள்ள அப்பாவி இந்துக்களுக்கு விடிவு பிறக்கும்.  மலேசிய தமிழ் ஹிந்துக்கள் நிலையும்  இலங்கையைப் போல  மேலும் மேலும் சீரழியாமல் இருக்க உடனடியாக  இந்திய அரசு செயலாற்ற வேண்டிய தருணம் இது.

waythamoorthy-on-hunger-strike-300x198

வேதமூர்த்தியின் செய்தி : http://www.hindraf.org/news-statements/945-13-0317-01.html

மேலும்:

தமிழ் ஹிந்து இணையத்தின் முந்தைய கட்டுரை

இது தொடர்பான திராவிட மாயை சுப்புவின் கட்டுரை 

அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை

ஜடாயுவின் கட்டுரை