ஆகஸ்ட் 15

மிக முக்கியமான ஒன்று இப்புத்தகத்தில் உள்ளது. மகாத்மாவின் கடைசி பேட்டி: காந்தி தன் அஹிம்சை வாதத்தை ஒரு அபத்த எல்லை வரை எடுத்துச் செல்கிறார். அணுகுண்டுக்கு எதிராக உங்கள் அஹிம்சையை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று மிஸ் வொய்ட் கேட்கிறார். ”நான் என்ன பதில் சொல்ல இயலும்?” என்று உடன் சொன்ன காந்தி, சற்றுக் கழித்து ”பிரார்த்தனை செய்வேன்” என்கிறார். ”அணுகுண்டை ஏந்தி விமானம் மேலே பறந்து கொண்டிருந்தால் பிரார்த்தனை செய்வீர்களா?” என்று கேட்கிறார் மிஸ் வொய்ட். ’விமானத்தைப் பார்த்ததும் நான் திறந்த வெளிக்கு வருவேன். என்னிடம் தீய எண்ணம் ஏதும் இல்லையென அந்த விமானி அறிந்து கொள்வான்” என்கிறார்… பாவம் ஹிரோஷிமா, நாகசாகி நகர ஜனங்களுக்கு இந்த தற்காப்பு தெரிந்திருக்கவில்லை. நாதுராம் கோட்சேக்கும் காந்தியிடம் தீய எண்ணம் எதுவும் இல்லை என்று அவர் முகம் பார்த்து தெரிந்திருக்கவில்லை…. ஆகஸ்டு-15 அன்ற நீலகண்டனின் இப்புத்தகத்தில் நாம் காணவிருப்பது ஒரு தனி மனிதன் மகாத்மாவானதும், அவர் மறைவிற்குப் பின் அம்மகாத்மா விழித்தெழ வைத்த நாட்டின் அதள பாதாள வீழ்ச்சியும், தார்மீக சீரழிவும்… 1947 பிரிவினை சமயம். அகதிகள் முகாம்களில் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்ட குடும்பங்கள், பாகிஸ்தானில் முஸ்லீம்களால் கற்பழிக்கப்பட்ட பெண்கள், அவர்களை ஏற்க மறுக்கும் ஹிந்து குடும்பங்கள் “உங்கள் பெண்கள் தானே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இவர்கள் வேண்ட அதை மறுக்கும் ஹிந்து குடும்பங்கள், முன்னர் காந்திக்கும் இப்போது லேடி மௌண்ட்பாட்டனுக்கும் வரும் இத்தகைய வேதனை நிறைந்த கடிதங்கள் பற்றி கல்யாணம் சொல்கிறார்… காந்தியுடன் இருந்த அனுபவத்தை, நாம் இதுகாறும் தெரிந்திராதவற்றை கல்யாணத்திடம் கேட்டு வலைப்பூவாக இப்புத்தகம் தருவது இப்புத்தகத்தின் சிறப்பு. எத்தனையோ அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் புத்தகத்தை நிறைக்கின்றன…

View More ஆகஸ்ட் 15

காந்தியின் (கி)ராம தரிசனம்

குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை… நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.. சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்… இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம்…

View More காந்தியின் (கி)ராம தரிசனம்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 02

இஸ்லாமிய எதிரிகளுக்குப் பயந்து கோவிலை மூடி வைத்திருந்த சரித்திரங்கள் நமக்குத் தெரியும். ஆனால் சொந்த சகோதரர்கள் எங்கே கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து புகழ்பெற்ற கோவிலை சனாதன இந்துக்கள் மூடி வைத்திருந்ததை அறிவீர்களா? ஆம். தம் சொந்த இன மக்கள் கோவிலில் நுழையக்கூடாது என்ற காரணத்திற்காக. ஒருநாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. ஒரு வருடக்காலமாக சனாதன இந்துக்கள் கோவிலை மூடி வைத்திருந்தனர்.

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 02

உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

ஆண்டாண்டு தோறும் அமெரிக்க மக்கள் நியூ யார்க் நகர நிர்வாகத்தின் முன்னெடுப்போடு, இந்த தினத்தை ஒரு துக்க தினமாகக் கடைப்பிடிக்கிறார்கள்… அவர்களுடைய துயரங்களைப் புரிந்துகொள்ளும், பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், சில விதமான நிகழ்வுகளை ஆண்டாண்டு தோறும் துக்க தினமாக நினைவு கொள்வது விவேகம் அல்ல.. செப்டம்பர் 11 ஆம் தேதியை உலக சகோதரத்துவ தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் 2005 ஆம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்துக்கு அனுப்பினேன்…

View More உலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…

அகமதாபாதில் ஒரு நாள்

ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது… முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை… சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்…

View More அகமதாபாதில் ஒரு நாள்

ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? … முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும்.

View More ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்தவர் மகத்தான இந்த இஸ்லாமியர் ….

View More கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்