தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!

முகலாயர்களுடைய வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்கெல்லாம் புலப்படும். அதாவது ராஜகுடும்பத்தில் அரசபதவி என்றால் உறவுகள் மறக்கப்படும் என்பதுதான் அந்த உண்மை. முந்தைய முகலாயமன்னர்களாலும் சொந்தங்களுடன் போராடித்தான் அரச சிம்மாசனத்தைப் பிடிக்கமுடிந்திருக்கிறது. அங்கு அண்ணன்-தம்பி பாசமோ, அப்பன்-பிள்ளை என்கிற உறவோ குறுக்கே நிற்கமுடியாது. தன் சொந்த மகனாலேயே சிறையிடப்பட்ட ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்தபடியே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தே 1666 ஜனவரி 22ல் உயிரிழந்தார்.
துரோக வரலாற்றின் அடிச்சுவட்டில் அரசகட்டில் ஏறிய ஒளரங்கசீப்தான் முகலாய மன்னர்களின் கடைசிமாமன்னராக இருந்தார் என்கிறது வரலாறு. துரோகம் எப்போதும் நிலைத்திராது. அதற்குரிய விலையை துரோகிகள் கொடுத்தாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி.

View More தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!