அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது…. மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது… அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன. கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம். எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்…

View More அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?

ஜூலை 2014 இல் மேலும் 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் என அறிவிக்கப்பட்டன. இது அறிவித்தவுடன் மருந்துகம்பெனிகள் மும்பை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் இதை நீக்க கோரி அணுகின. செப்டம்பர் 2014 இல் மேற்கண்ட உத்தரவுக்கு அரசு ஒரு விளக்கம் அளித்தது. இதிலே ஜூலை 2014 உத்தரவு அப்படியே இருக்கும் ஆனால் மேற்கொண்டு உத்தரவுகள் ஏதும் வராது. எனவே ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துவிலைகள் அப்படியே இருக்கும். லட்சரூபாய் எல்லாம் ஏறவில்லை. ஏறவும் ஏறாது. அது கடைந்தெடுத்த டுப்பாக்கூர்…. இது பற்றி தெரிவதற்கு முன்னர் நானும் ஏமாந்திருக்கேன். ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு 320 கொடுத்து வாங்கினேன். ஆனால் அதே மருந்து 120க்கும் கிடைக்கிறது. அதிலிருந்து மருத்துவர் எழுதிக்கொடுத்தாலும் அங்கிருக்கும் மருந்துக்கடையில் வாங்காமல் வேறு மருந்துக்கடையில் ஜெனிரிக் இருக்கா என கேட்டு குறைந்த விலை மருந்தை வாங்குவது. எல்லாம் அதே தான் ஆனால் விலை மட்டும் தான் வித்தியாசம்…

View More மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?

நரேந்திர மோடி எனும் சாமுராய்

நரேந்திர மோடிக்கும் ராமாயண வாலிக்கும் ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் அசகாய…

View More நரேந்திர மோடி எனும் சாமுராய்

விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்!

சென்னை, ஜன 12-15, 2012: ஆளுமை, ஆரோக்கியம், தலைமை பண்புகள், ஆன்மீக விழிப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க உதவும் – விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்.
08-01-2012-க்கு முன் பதிவு செய்துகொள்ளவும். இடம்: சம்வித் சாகர் ட்ரஸ்ட், உத்தண்டி (ECR)…

View More விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்!

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

நமது ஒவ்வொரு வேளை உணவிலும் இப்படிப்பட்ட தயார் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது என்பது சிரமமாகவே ஆகிவருகிறது. இப்படி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இப்படிப்பட்ட உணவு வகைகளில் சில பயங்கரமானவை, அதி ஆபத்தானவை… ஓலெஸ்ட்ரா – செரிக்கமுடியாத செயற்கை கொழுப்பு.
இது பல உணவுச்சத்துக்களை நம்மால் செரிக்க முடியாமல் ஆக்குகிறது; வயிற்றுக்குழாய் வியாதிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, ரத்தம் போகுதல் ஆகியவற்றை கொடுப்பதாக அறியப்படுகிறது…

View More ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

ஹலால் கறியா ஜட்கா கறியா?

ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது…ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன.

View More ஹலால் கறியா ஜட்கா கறியா?

மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை

அத்வைதத்தை அறிவியல் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் ஆஸ்த்மாவை அறிவியல் சரியாகவே கையாள்கிறது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது… அர்ஜுனன் நம்மைப்போன்ற நிலையில் ஒரு கேள்வியை கேட்கிறான் – ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடும் ஒருவன் நம்பிக்கை இருந்தும் நடுவில் வழி தவறினால் அதுகாறும் செய்தபயிற்சி வீண்தானா? என்று. இதற்கு பதில் அளிக்கும் பகவான் எவ்வளவு குறைந்திருந்தாலும் ஆன்மீகப்பயிற்சிகள் வீணாவதில்லை. தோல்வி அடையும் ஒருவன் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய பயிற்சியை தொடருவான் என்று கூறுகிறார்.

View More மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை