புனித சிலுவையின் நாசி கொலைக்களம்

ஈஸ்டர் காலங்களில் இந்த ‘கிறிஸ்துவின் பாடுகள்’ (நாகர்கோவில் வட்டாரங்களில் சிலுவைபாடு) மிகவும் முக்கியமான விஷயமாக ஐரோப்பிய மக்களிடையே இன்றும் விளங்குகிறது. இதைச் சித்தரிக்கும் மெல்கிப்சனின் ‘Passion of Christ’ திரைப்படம் வன்முறைக் காட்சிகளும் யூத வெறுப்பியலை நியாயப்படுத்தும் காட்சிகளும் நிரம்பியது. ஜெர்மனியில் நாசிகளின் உதயத்திற்கு பலகாலம் முன்பே அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்த சிலுவைபாடு நாடகங்கள்தான்…

View More புனித சிலுவையின் நாசி கொலைக்களம்

பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

அக்கவிதையில் பாரதி சொல்லும் “உயிர்த்தெழுதல்” சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்… கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்….

View More பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்

இரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, ஆனால் கிறித்துவம் குப்பையில் சேரும். இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்… கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன்  கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். ‘பாவிகளே’ என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக, முழுதும் இயேசுவின் அதிசய பிறப்பு இறப்பு மீட்பு என்பதை மட்டுமே சார்ந்த மதம். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பட்ட அதிசயம் இல்லை என்றானால் ‘டப்பா டான்ஸ் ஆடிவிடும்’, ஆகவே தான் இளையராஜாவின் அந்த பதிலுக்கு இத்தனை எதிர்ப்பு…

View More இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்

இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. …

View More இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இளையராஜா @ கூகிள்

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….

View More இளையராஜா @ கூகிள்

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10

அனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி.
சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது.

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10