தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்

யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார்… மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை…

View More தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்… தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல். நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது…

View More ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

டிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..

அந்த சிலிர்ப்பூட்டும் சரித்திர நிகழ்வில் முதல் கல்லை எடுத்து வைத்தவர் காமேஷ்வர் சௌபல். பீகார் விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர். தலித்…. ஒரு தவறும் செய்யாத 400க்கும் மேற்பட்ட அப்பாவி இந்தியப் பிரஜைகள், உதிர்ந்து போன பழைய கும்மட்டங்கள் இடிக்கப் படலாம்; அவற்றைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் “மதச்சார்பின்மையின்” பெயரால் ஈவிரக்கமின்றி கொல்லப் பட்டனர்… இந்திய முஸ்லீம்களிடம் உள்ள பிரசினை, அவர்களது ஆக்கிரமிப்பு மனப்பான்மையோ, அல்லது அவர்களுக்கு சொந்தமில்லாததைக் கூட அநியாயமாக உரிமை கோரும் தீவிரமோ அல்ல. இதற்கெல்லாம் உந்துதல் அளிக்கும் ஒரு மதத்தை அவர்கள் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவது தான்… [உண்மையான] மதம் என்பது எப்போதும் கருத்து நெறிகளாகவே இருக்க வேண்டும். கட்டளைகளாக இருக்க முடியாது. அது கட்டளைகளாக மட்டுமே கீழிறங்கும் போது, மதம் என்ற மதிப்பை இழக்கிறது….

View More டிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..

பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2

ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களும் களத்தில் மாண்டு விட பெண்கள் ஆயுதமேந்தி போராட வருகிறார்கள். மனம் வெதும்பும் அசோகன் போரை கைவிடும் முடிவை எடுக்கிறான் . இவை எல்லாம் மிக நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளது… இஸ்லாமிய படையெடுப்பில் கலிங்கத்தின் தொன்ம அடையாளங்கள், முக்கியமான வரலாற்று ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு இருந்திருக்கிறது… இஸ்லாமிய படைத்தலைவர்கள் ஊர்களை எரியூட்டி அழித்தும், ஏராளமான பெண்களை கற்பழித்தும் , நகரங்களை நாசம் செய்தும், தீ வைத்தும் இருக்கிறார்கள். பொய்யை மட்டுமே சொல்வதற்காக பிறப்பெடுத்திருக்கும், இடது சாரி வரலாற்று ஆய்வாளர்கள் இவைகளை எல்லாம் சொல்வதற்கு வசதியாக மறந்து விடுவார்கள்.மேற்கு வங்கத்தில் இருந்த கம்யூனிஸ் அரசோ அரசாணை வெளியிட்டு இஸ்லாமிய கொடுரர்கள் செய்த பேரழிவுகளை வரலாற்றில் மறைக்க சொல்லி ஆணையிடும்…

View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2