வன்முறையே வரலாறாய்…- 30

முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 30