கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

பயணம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். சிலர் முதல் வாரத்திற்குப் பதிலாக இரண்டாவது மூன்றாவது வாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றுசொன்னார்களே தவிர எவரும் கண்டிக்கவோ மோடியை எதிர்க்கவோ இல்லை. இதை ஒரு மாபெரும் துணிவான புரட்சிகரமான நடவடிக்கை என்றே ஏகோபித்துப் பாராட்டினார்கள். வங்கிகளில் காத்திருத்தலை ஒரு தேச தேச சேவையாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள்… நிச்சயமாகப் பல எளிமையான வணிகர்களும் பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். சிலர் அவசரத்தேவைகளுக்காகத் தவித்திருப்பார்கள். இருந்தாலும் இங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப் பட்டவர்கள் அல்லர். கூடுமானவரை பரஸ்பர புரிதலுடன் அனுசரித்துச்செல்கிறார்கள். எவரும் எவரையும் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாக அனுமதிப்பதில்லை. பரஸ்பர உதவிகளின் மூலமாகக் கடந்து செல்கிறார்கள்… இந்த மாபெரும் பணியைக் கூடுமான வரையிலும் மக்களுக்கு இடர்பாடின்றி செயல் படுத்த உதவிக் கொண்டிருக்கும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும், அரசுப் பணியினருக்கும் நமதுபாராட்டுக்கள்….

View More கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

திருச்சியில் சுதேசி இயக்க தேசிய கருத்தரங்கம் – ஆகஸ்டு 10-12

எஸ்.குருமூர்த்தி, கோ.நம்மாழ்வார், பேரா. வைத்தியநாதன், ஜோ டி குரூஸ், கே.என். கோவிந்தாசார்யா மற்றும்…

View More திருச்சியில் சுதேசி இயக்க தேசிய கருத்தரங்கம் – ஆகஸ்டு 10-12

சுதேசி விழிப்புணர்வு பாதயாத்திரை

மார்ச், 5, 2012 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக ஏப்ரல், 5, 2012 அன்று சென்னையை வந்தடையும். விரிவான விவரம் கீழே தரப்பட்டுள்ளது.. மூன்று முக்கிய குறிக்கோள்களைக் கொண்டதாக யாத்திரை அமையும் – சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய மூதலீடு என்ற ஆபத்திலிருந்து நமது வர்த்தகத்தக் காப்பாற்ற.. , முழுமையாக அந்நியரின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கும் நமது விவசாயத்தை மீட்டெடுக்க…, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர…

View More சுதேசி விழிப்புணர்வு பாதயாத்திரை

ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்….

View More ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை

ஏ, ஏ, அம்மா. இந்தா பாருங்கமா. அழாதீங்கம்மா. அம்மா, அழாதீங்கம்மா. பாருங்க. நீங்கள் அழுவதைப் பார்த்தால் எனக்குக் கண்ணில் கண்ணீர் தேங்குகிறது… நான் திருடவில்லை என்று, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் நீங்கள் கூப்பாடு போட ஆரம்பித்தது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூப்பாடு போட்டால்தான் இந்தியப் பத்திரிக்கை உலகமும் கவனிக்கும். யவன ராணி கூப்பிட்ட குரலுக்கு ஆஜராவதில்தான் மெக்காலே புத்திரர்களுக்குப் பெருமிதம் அதிகம்..

View More அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1

தமிழர்கள் தமது தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆம், மே 13ம் தேதி நமது எதிர்காலத்தை நிச்சயிக்கும் நாள். நல்லவர்கள் கூடவே திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களும் வந்து ஓட்டுக் கேட்கும் பொழுது யாருக்கு ஆதரவளிப்பது என்று வாக்களர் குழம்பிப் போவது இயற்கைதான். நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பமில்லாமல் சிந்திக்க உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்…

View More பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1