ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது

சோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. சங்ககாலத்திலேயே 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள் – முழுப்பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது…

View More ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து

எனக்கு இந்தியா பெரும் மனக்காயம் அளித்தது. இந்தியா ஒரு போற்றிப் புகழப்பட்ட நாயகமான நாடு. அதே நாட்டின் பெரும் வறுமையிலிருந்துதான் என் முன்னோர்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தப்பித்து வெளியே ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டு இந்தியாக்களும் வெவ்வேறாக இருந்தன.. என் சிறுவயதில் சரியான வார்த்தை தெரியாவிட்டாலும் இந்தியாவின் ‘பூரணத்துவம்’ (wholeness) என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்பானியப் படையெடுப்பாளர்கள் முன்னால் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் எப்படி ஒன்றுமே இல்லாமல் போனதோ அதுபோல் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் முன்னால், இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த எங்கள் காலனியில் பழமையானதும், சிதைந்து போகாததென்றும் நினைத்து நாங்கள் பல்வேறு விதமாக சிறந்த மரியாதை செலுத்தி வந்த எங்கள் தொன்மையான நாகரிகம் சிதைந்து போயிருந்தது; பாதி அழிந்து விட்டிருந்தது. அவர்கள் தொன்மையான கோயில்களுக்குச் சென்றார்கள். ஆனால் அக்கோயில்களைக் கட்டியவர்களுக்கிருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்களால் நீண்டு நிலைத்திருக்கும் எதையும் கட்ட முடியாது.. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், பிரிட்டிஷ் வருகைக்கு முன்னால் இந்தியா சந்தித்த பேரழிவுகளை மறைத்து விட்டது. பேரழிவுகள் நடந்ததற்கான சாட்சியங்கள் மிக எளிதாக எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆனால் சுதந்திர இயக்கம் ஒரு மதம் போன்றிருந்தது; தான் பார்க்க விரும்பாத விஷயங்களை அது பார்க்கவில்லை..

View More இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து

உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்

வாஸ்கோட காமா கடல் வழி கண்டுபிடித்த கனவான் அல்ல; அவன் ஒரு கிறிஸ்தவ மதவெறி பிடித்த கடற்கொள்ளையன் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய திரைப்பட வரலாற்றில் துணிச்சலான ஒரு முயற்சியே… ஆக்கிரமிப்பாளனுக்கு உதவும் அரவாணி அமைச்சரின் துரோகச் செயல்கள் சுதந்திர இந்தியாவிலும் அரசியல் வாதிகளால் தொடர்வதை குறியீடாக காட்டி இருப்பது அற்புதம்… பல காட்சிகள், ஒளிப்பதிவு நுட்பத்துக்கான முன்மாதிரிகளை உருவாக்கி உள்ளன. உருமி ஒவ்வொரு முறை சுழலும்போதும் காமிராவும் அழகாகச் சுழல்கிறது….

View More உருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்

சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்

நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன… ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம்… உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள்…

View More சான்றோர் சமுதாய வரலாறு: ஒரு நூல் அறிமுகம்

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….

View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி