நம்பிக்கை – 1

“என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்… ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்” என்ற முன்னுரையுடன் இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று, தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் (Skill Development) துறையில் வேலையில்லா இளைஞர்களுக்குப் பல தளங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் உன்னதப் பணியைத் திறம்படச் செய்து வந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். 2017ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் மறைந்தார்..

View More நம்பிக்கை – 1

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17

இருட்டில் திசைகளை அறியமுடியாத பிரமை சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ‘எனது’ என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்ம சொரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்… வண்டினால் கொட்டப்பட்ட புழு வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்… சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16

உள்முகப்பார்வை கொண்ட ஜீவான்மாவெனும் அரணிக் கட்டையில் இப்படியாக ஆன்மத் தியானம் என்ற உள்முகக் கடைதலை ஒருவன் இடைவிடா முயற்சியோடு எப்போதும் செய்துவர, அதிலிருந்து கிளம்பும் ஞானம் எனும் தீ அறியாமை என்ற விறகுக்கட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எரித்துவிடும்… ஆன்மாவானது எப்போதும் நம்மால் அடையப்பட்டதே ஆனாலும், நமது அஞ்ஞானத்தினால் நாம் அதை அடையவில்லை என்று தோன்றும். தன் கழுத்திலே இருக்கும் நகையொன்று தொலைந்து போய்விட்டதே என்று எண்ணித் தேடுபவன் அது தன் கழுத்திலேயே இருப்பதைக் கண்டது போல, அஞ்ஞானம் அழிந்தவனுக்கு ஆன்மா புதிதாக அடையப்பட்டது போலப் பிரகாசிக்கிறது… இருட்டில் இருக்கும் மரக்கட்டை ஒன்று மனிதனாகத் தோன்றுவது போல, மனப்பிராந்தியால் பிரம்மத்தில் ஜீவன் கற்பிக்கப்படுகிறான். கற்பனையில் உருவான இந்தப் பொய்யாகிய உருவத்தின் உண்மை எதுவெனத் தான் உணரும்போது அந்தக் கற்பனையுருவம் பொருளற்றது என்று அறிவாய்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15

எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்வாயாக…. உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற ஞானானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்…. வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும்போது தான். அப்போதுதான் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும்போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் கிடையாது. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான் என்ற இரு “நான்”கள் அல்லவா இருக்கவேண்டும். “நான்” என்ற நமது உணர்வு எப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளதால், அது என்றும் ஒன்றானதாகவே இருக்கும். அங்கு இரு “நான்”கள் இல்லாததால் முப்புடிகளான வேற்றுமைகள் ஆன்மாவிற்குப் பொருந்தாது….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்…. சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்… “எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ” என குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன். அந்த “நான்” என்பது “எப்போதும் அறிவோடு கூடிய தன்மயமாக இருக்கும்” ஆன்மாவிலிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதால், அந்த சுயம் பிரகாசமான பேரறிவை அறிவதற்கு வேறு எந்த அறிவின் துணையும் தேவை இல்லை. வேறு எதுவும் அந்தப் பேரறிவுக்கு ஒளி தருவதாகவும் இல்லை என்பதே இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதனாலேயே எவரும் “நான் இருக்கிறேனா?” என்று கேட்பதில்லை. தான் இருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அனைவரும் மற்ற விஷயங்களை அறிகின்றனர், பேசுகின்றனர்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12

[பாகம் 22] அமுதாக மாறிய மது

ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொருத்து உருவாகின்றது… தான் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதை மனிதன் தெரிந்து கொள்ளுவதில்லை. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம்… காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்தமயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான்… கிரீச சந்திரகோஷரிடம், “நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு” என்றார் ராமகிருஷ்ணர்…

View More [பாகம் 22] அமுதாக மாறிய மது

[பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள்… உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று சொல்வது தகுதியன்று… வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் கிடைத்த ஞானத்தைவிட குருவிடம் உபதேசம் பெறுவதே சிறந்ததாக நினைத்தான்… அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர் யாத்திரை சென்றார்…

View More [பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

அறியும் அறிவே அறிவு – 2

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே… உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும்.

View More அறியும் அறிவே அறிவு – 2