திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் சுந்தரர் மடம் அறநிலையத்துறை ஆவணங்களின்படி ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலின் கிளை கோயிலே. எனவேதான் 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் இணை ஆணையர் புது மண்டபம் கட்டுதல் என்றபடிக்கே உபயதிருப்பணி அனுமதி கொடுத்துள்ளார். இந்த உபயதிருப்பணிக்கு அறநிலையத்துறை 6 நிபந்தனைகளை கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக இரண்டாவது நிபந்தனை ஆகமவிதிப்படி செயல்படவேண்டும் என்பது. ஆனால் இன்று அத்தனை நிபந்தனைகளும் ஆள்பலம் அரசியல் பலத்தால் மீறப்பட்டிருக்கின்றது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அறமற்றதுறை… சைவவேடதாரிகள், ஆணவப்போக்கோடு, சுந்தரர் மடம் நிலைப்பெற கடந்த நூறு ஆண்டுகளில் காரணமாக இருந்த சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்கியும், பாரம்பர்ய சைவ ஆதினங்களின் வழிகாட்டுதல் இல்லாமலும் தான்தோன்றித் தனமான திருப்பணியும் குடமுழுக்கும் செய்து விட்டிருக்கிறார்கள். இந்த சைவவேடதாரிகளின் இன்றைய செயல்பாடு சரிதானா? சைவதர்மமா? என்பதை சைவசமயத்தார்கள் சீர்தூக்கி சிந்திக்கவேண்டும்…

View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

அக்காலத்தில் குருக்கள் நித்யபடி வாழ்க்கையே கஷ்டமானது. அந்த கஷ்டத்திற்க்கும் நடுவில், ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் எல்லாம் சேர்ந்து திருப்பணி செய்வது அசாத்யமானது. ஆனால் ஸ்ரீ சுந்தரர் பெருமான் மீது கொண்ட பக்தியும் அன்பும், சுவாமி திருவருள் துணை ஒன்றையுமே நம்பிச் செய்தார்கள். அன்று அவ்விடத்தில் திருமடம் அமைக்கவில்லை என்றால், காலப்போக்கில் பல கோயில் இடங்கள் மாயமானது போன்று, ஸ்ரீ சுந்தரர் அவதார பூமியும் மயமாகி மறைந்தே இருக்கும். ஆனால், இன்றோ சுந்தரர் பூமியை அடையாளப்படுத்திய சிவாச்சாரியார்களை அவ்விடத்திற்கு வரவிடாமல் குண்டர்களை வைத்து மிரட்டும் சைவவேடதாரிகளை திருமுறை வியாபாரிகளை என்னவென்று சொல்வது? சிவாச்சாரியார்களை மிரட்டி வெளியேற்றி சுயநல லாபத்திற்ககாக, அடையாள அரசியலுக்காக திருப்பணி செய்யும் ருத்திராட்ச வேடதாரிகளை இறைவன் மன்னிக்கவே மாட்டார். இப்பொழுது நடைபெற்றுள்ள திருப்பணி பல உண்மையான சிவாச்சாரியார்களின் மனவேதனையில், மன துக்கத்தில் எழும்பும் ஒரு ஆகம விதியற்ற மாயக் கட்டிடம். ஒரு மரபிடம் இருந்து பிடுங்கி அவர்களை மிரட்டி வெளியேற்றி செய்யும் இந்த திருப்பணி கண்டிப்பாக இறை திருப்பணி அல்ல.. உண்மை சைவர்களின் பரவலான எதிர்ப்பையும் மீறி முற்றிலும் வேதாகம விரோதமாக ஒரு சமய, கலாசார அழிப்பு குடமுழுக்கு என்ற பெயரில் திருநாவலூரில் நடந்தேறியிருக்கிறது…

View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்

சிதம்பரத்தில் நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது நந்தனார் மடம் . சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர். ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர்… என்ன ஒரு காட்சியது. ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்‌ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயில் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார்… எப்படி சீர் செய்வது? 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை…

View More சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்

மீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்

காஷ்மீருக்குள் இந்தியாவின் ஜனாதிபதி கூட ஒரு ஊசிமுனை நிலம் கூட வாங்க முடியாது. ஆனால் இந்தியாவை எதிர்க்கும் காஷ்மீர் முஸ்லீம்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கடை போட அனுமதித்திருக்கிறார்கள். திருமலை நாயக்கர் கட்டிய புது மண்டபம் முழுக்க முஸ்லீம்கள் வைத்துள்ள பல கடைகளால் நிரம்பியுள்ளது. அதன் எழில் வாய்ந்த சிற்பங்களையும் தூண்களையும் விதானங்களையும் நாம் காணவே முடியாது. அந்த அளவுக்கு ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். சித்திரை வீதியில் இருக்கும் பெரும்பாலான ஜவுளிக் கடைகளில் பல பட்டாணி, பாக்கிஸ்தானி என்று வடக்கத்திய உருது முஸ்லீம்கள் மற்றும் உள்ளூர் முஸ்லீம்களின் கடைகளே. பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் இவற்றில் ஊடுருவியுள்ள தகவல் ஜூனியர் விகடன் போன்ற நக்சல் பத்திகைகளில் கூட வெளி வந்தது. இருந்தாலும் அரசாங்கம் கவலையின்றி உள்ளது. அங்குள்ள ஆக்ரமிப்புக்களை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை… மீனாட்சி அம்மன் கோவிலைக் காக்க இன்னும் ஒரு விஜயநகரப் பேரரசு வரப் போவதில்லை. மீனாட்சி அன்னையும் சொக்கநாதரும் அரசுக்கு நல்ல புத்தி அளிக்க வேண்டும். இன்னும் ஒரு திருமலை நாயக்கரை, கம்பணரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்…

View More மீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்