தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?

செம்படம்பர் மாதம் முதல் 2015 துவக்க காலம் வரை தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது, இம்மாதிரியான கேள்வி எழ முக்கிய காரணம், தமிழகத்தின் முதலவராக பதவி ஏற்ற திருவாளர் பன்னீர்செல்வம், இன்னும் தன்னை ஒரு நிதி அமைச்சரகவே கருதுவதால் ஏற்படும் பிரச்சனையாகும்… கள்ளநோட்டு புழக்கம் அதிக அளவில் நடமாடுவதாக உளவுத் துறையினர் தகவல்களை கொடுத்தாலும், கள்ள நோட்டு கும்பலை பிடிப்பதில் அக்கரை காட்டாத அரசு… மருத்துவ மனைகளில் பச்சிளம் குழந்தைகள் பரிதபமாக பலியனதை கண்டு கொள்ளாத அரசு இந்த அரசு. மருத்துவ மனைகளில் உரிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் நியமிக்காமல் காலந் தாழ்த்தியதால் ஏற்பட்ட இழப்பு என்பதை கூட புரிந்து கொள்ளாத அரசு…

View More தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?

தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

அந்தப் போலீஸ்காரர் தன்னுடைய தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ அப்படி அடிப்பாரா, அல்லது வீசி எறிவாரா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணங்களைக் குறித்து அலசுவதை விட, நடந்துவிட்ட காரியங்களிலுள்ள நியாய அநியாயத்தைக் குறித்துத்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்… இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்திய போலீசார் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்க என்ன வெறி காரணம். இவர்களை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?… குற்றவாளிகள் செய்த கொடூர பாதகச் செயலுக்குத் தக்க தண்டனையை உடனடியாக அவசரகால நீதிமன்றத்தில் தினந்தினம் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு டில்லியில் மட்டுமல்ல, நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்….

View More தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

தேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா? – 1

ஒருபுறம் பணத்திற்காகக் கொலை கொள்ளை நடந்தாலும், மறுபுறம் ஆயுதக் கடத்தல், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பிய சம்பவங்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் சட்டத்தை வளைத்த கொடுமைகளும் திமுக ஆட்சியில் நடைபெற்றன… 2006-இல் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய அராஜகம் நீதிமன்றம் வரை சென்று சந்திசிரித்தது. மருத்துவர் ச. ராமதாஸ்- “காவல் துறையினருக்கும் கிரிமினல்களுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படும் வரை இது நீடிக்கும்; தமிழகம் அமைதிப் பூங்கா என்று வசனம் பேசி வந்தோம், இனி அவ்வாறு பேச முடியாது..”.

View More தேர்தல் களம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவையா? – 1