கன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கே ஹிந்து சமயத் தத்துவம் தான் உயிர்நாடியாக விளங்கிற்று. “ஹே ராம்” என்பதுதான் அதன் தொடக்கமும் முடிவும் ஆகும். இந்தியப் பாரம்பரிய மதக் கருத்துக்களைத்தான் காந்தி தயங்காமல் உபயோகித்து இந்தியர்களை ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்தார். இந்து சமயத்திற்கே உரித்தான அனைத்தையும் துறக்கும் மனப்பான்மையைக் காட்டும் ஒரு கோவண ஆண்டியின் கோலத்தையே கிட்டத்தட்ட தானும் தழுவிக் கொண்டு, நாற்பதுகளில் பாரத தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக தளராது அலைந்து கொண்டு, அவர் இந்தியக் குடிமக்களின் மத உணர்வை அதற்குப் பயன்படுத்தினார். அவருக்கும் வெகுகாலம் முன்பாக அப்படி உலவிய ஆதி சங்கரரின் உருவகத்தை அப்படி வரவழைத்த அவர், எப்போதுமே புருஷோத்தமன் ஸ்ரீ ராமன் நாமத்தை ஜெபித்துக்கொண்டும், வேளை தவறாது பஜனை செய்துகொண்டும், அவ்வப்போது உபவாசம் இருந்துகொண்டும், தனது பழக்க வழக்கங்களில் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் எப்போதுமே ஒரு சந்நியாசி போலவே தனது கடமைகளை ஆற்றிக்கொண்டும் வாழ்ந்த அவர் ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு ஒரு பெரிய சவாலாக விளங்கினார்.

அவரைப் பொருத்தவரை இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பது என்பது இந்தியாவின் ஆன்மாவையே அதன் தளைகளிலிருந்து விடுவிப்பது என்பதுதான். அதற்கு அவர் அப்போது இருந்த காங்கிரசை அந்த வேட்கையில் ஒரு கருவியாக்கிக் கொண்டார். நாட்டில் பல கிராமங்களில் இருந்த ஏழைத் தொழிலாளிகளைப் போலவே தானும் ஒரு தக்ளியிலோ, ராட்டையிலோ நூல் நூற்பதிலும், ராட்டையைச் சுற்றிக்கொண்டு கதர் நெய்ய உதவுவதிலும், அவர் ஓர் தூய சந்நியாசி வழி முறைகளைப் பின்பற்றியது எல்லாமே அரசியல் வாழ்வில் ஆன்மீகத்தையும் தேச பக்தியையும் அவர் இணைத்துக் காட்டிய பாதைதான். அப்படித் தானே வாழ்ந்து காட்டிய அவர் பாதையையே தேசத்திற்கு அவர் கொடுத்த செய்தி போன்று, வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்வதுபோல, காங்கிரஸ் கட்சியும் தனது தேசிய எண்ண ஓட்டமாகத் தழுவிக்கொண்டது.

View More கன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்

சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்தி சாலி சீனர்கள்..அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை.. “அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை..

View More சீனா – விலகும் திரை: ஒரு பார்வை