வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

– கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்   கிரைம் நாவல்…

View More வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

மேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..

அவரது உணர்வுகளை அவர் பால்கனியிலிருந்து பார்க்கும் கோயில் மிருகபலிக் காட்சிகள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. வீட்டை மாற்றிவிடலாமா என்று கூட யோசிக்கிறார்…. மக்களது அப்பாவித்தனத்தையும், பக்தியையும் பயன்படுத்தி அவர்களை ஏய்ப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆன ஒரு யுக்தி சாதனமாகவே இருக்கிறார் பிள்ளையார். கதை எழுதப் பட்ட விதம், இந்த ஆன்மிகப் போலித் தனத்தை சுட்டவில்லை. அந்த விஷயம் கோடி காட்டப் படக் கூட இல்லை. இது அடிப்படையில் ஒரு மேட்டிமைவாத ஐயங்கார் பார்வை மட்டுமே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தக் கதையின் கண்ணோட்டம் இந்து மத அளவில் பொதுமைப் படுத்தப் படக் கூடிய அபாயம் இருக்கிறது…

View More மேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..

கோவை புத்தகக் கண்காட்சி 2010

இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது… கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம்…

View More கோவை புத்தகக் கண்காட்சி 2010

போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.
-பக்.283/திராவிட இயக்க வரலாறு”

View More போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை ‘மலையிலிருந்து வந்தவன்’ என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்… கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.

View More கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்