பாரதி மரபும்,திரிபும் – 6

ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, கள்ளி, சரிவு, முயல். இது தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்.பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஈனம் என்ற வார்த்தையை பாரதி எந்த அர்த்தத்தில் பறையர்களுக்குப் பொருத்தினார்? ‘ஈனப் பறையர்களேனும்’ என்ற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே பாரதி பயன்படுத்தினாரா? பாரதியின் கருத்து என்ன? பறையர்களைப் பற்றிய பாரதியின் கருத்து மிகத்தெளிவாகவே இருக்கிறது…. பாரதி ‘ஈனம்’ என்ற சொல்ல இழிவுநிலை, கீழ்மை, தாழ்வு என்ற பொருளிலும் பயன்படுத்தி இருப்பதால்  ஏன் மோசமான விளித்தலுக்கு இந்த கவிதையில் பயன்படுத்தியிருக்ககூடாது என்ற கேள்வியும் எழலாம்.

View More பாரதி மரபும்,திரிபும் – 6

ஓடிப் போனானா பாரதி? 04

என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பற்றியது மட்டும்தான். ‘வாரண்டு ‘இந்தியா’ ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார். ‘ஆசிரியர்தானே? நான் இல்லை,’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,’ என்ற ரா அ ப வாசகங்களும், எஸ் ஜி ராமானுஜலு நாயுடு அவர்களுடைய (மேற்காணும்) சித்திரிப்பும், பாரதி ‘தன்னையே நம்பியிருந்த ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு, தான் தப்பி ஓடிவிட்டான்,’ என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
ஐயா பெரியவர்களே! எந்த ஊரிலாவது வாரண்டு பதவிப் பெயரில் பிறப்பிக்கப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா?

View More ஓடிப் போனானா பாரதி? 04