தாய்மதம் திரும்புதலும் சாதியும்

இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…

View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்

மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்

2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின் கடந்த 67 ஆண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற வேலையை எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்… கிறிஸ்துவ மத மாற்றத்தின் காரணமாக சமூக அமைதி குலைவதையும், கலவரங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஆசை காட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மத மாற்றங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் – இது வேணுகோபல் கமிஷன் தெரிவித்த பரிந்துரை… சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் போதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவதை பாரக்கிறோம். வாக்கு வங்கி அரசியலை மறந்து விட்டு, தேசிய சிந்தனையோடு இப்பிரச்சனையை அனுக வேண்டும்…

View More மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்

உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்

2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மானிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர். இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே..

View More உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்

எழுமின் விழிமின் – 21

”சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” …எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?….

View More எழுமின் விழிமின் – 21