ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும், இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன.

View More ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே நமது நீதி பரிபாலனத்தின் ஆதார அம்சம். அதற்காகவே நீதித் துறையில் பல அடுக்குகளாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானதாக மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அமைவது ஒன்றும் புதிதல்ல. அதற்காகத் தான் மேல்முறையீடு என்ற நடைமுறையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையே ஜெயலலிதா தரப்பு தனக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இனி மேல்முறையீடு செய்ய வேண்டியது கர்நாடக அரசுத் தரப்பின் பொறுப்பு.

View More தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டா விருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. இப்படி ஏலம் குறைந்ததற்குக் காரணங்கள் என்ன என்று அலசுவோம்….. நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு… தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை…

View More 2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?

View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?