ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் – வேற்றுமையற்றவன் – பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் – சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் – சத்தியப்பொருளென அறியப்படுபவன்… அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?…

View More ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்

ஓசூரில்  ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்… அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக,  கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது  குறித்து ரங்கன்ஜி  பேசினார். இறுதியாக,  பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார்.  உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்…

View More ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்

‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின்  சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்…

View More ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..

View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

ஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை

கடந்த ஜூன்-4, 2017 ஞாயிறு அன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் வளைகுடாப் பகுதியிலுள்ள பாரதி தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ‘இளங்கோ முதல் தாயுமானவர் வரை: தமிழ் இலக்கியச் சுடர்கள்‘ என்ற தலைப்பில் உரையாற்றினார் ஜடாயு. அதன் ஆடியோ, வீடியோ பதிவுகள் கீழே… அவரது உரையை கிட்டத்தட்ட இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள்/படைப்பாளிகள் பற்றிய ஒரு கழுகுப் பார்வை (Bird’s eye view) என்று சொல்லலாம். உரையின் அடிநாதமாக இருந்தது தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு எல்லாம் அகில இந்தியப் பண்பாட்டோடு இணைந்த ஒன்று, அதன் பகுதி என்ற வாதம்….

View More ஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?… காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்… ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன. காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது….

View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

காலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்

கடந்த சில வருடங்களாக ஜடாயு எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம் கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகள் இதில் உள்ளன. ராமாயணத்தின் பரிமாணங்கள், ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இவற்றின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன. நீண்ட நெடிய வரலாறு கொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன….

View More காலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்

பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

பாரதியாரின் பகவத்கீதை மொழியாக்கத்தை எனது குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். கூடிய வரையில் நிதானமாகவும், வாசகங்களின் பொருள் நன்கு வெளிப்படுமாறும் வாசிக்க முயன்றுள்ளேன். கீதா ஜெயந்தியும் வைகுண்ட ஏகாதசியும் ஆகிய இப்புனித நாளில் இந்த ஒலிப்பதிவை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். 18 அத்தியாயங்களும் தனித்தனி ஒலிக்கோவைகளாக உள்ளன. அவற்றைத் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்…. கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வதும், கேட்பதும், மனதில் மீட்டிப் பார்த்து தியானிப்பதும், கீதையைக் கற்கும் மாணவர்கள், கற்று முடித்தவர்கள், யோக சாதகர்கள், ஆன்மத் தேடல் கொண்டவர்கள் எனப் பல சாராரும் எப்பொழுதுமே கைக் கொண்டு வந்துள்ள ஒரு முறையாகும். கீதையின் மூல சுலோகங்களை நேரடியாக சம்ஸ்கிருதம் மூலம் பயின்றவர்கள் அவ்வாறே வாசித்தும், கேட்டும் தியானிப்பார்கள். அவ்வாறு பயிலாதவர்களும் தாங்கள் பயின்ற மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வாசித்தும், கேட்டும் இதனை மேற்கொள்ளலாம். காத்திருக்கும்போதோ, பயணம் செய்யும் போதோ கூட கவனத்தைச் செலுத்தி இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்பதன் மூலம் கீதையின் உட்பொருளைச் சிந்திக்கலாம்….

View More பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

கம்பராமாயணம் – 66 : பகுதி 3

மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?…. இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, அவனுடைய மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு…

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 3

கம்பராமாயணம் – 66 : பகுதி 2

இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின…. எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். (வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்….

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 2