இது தாண்டா பட்ஜெட்!

இந்த ஆண்டுதான் உண்மையான நிதிநிலை அறிக்கை சுதந்திர இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த்தகைய முன்மாதிரி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க மோடி அரசுக்கே நான்காண்டுகள் ஆகி இருக்கின்றன. ஏனெனில், இதற்கான அடிப்படையை கடந்த ஆண்டுகளில் அரசு உருவாக்கி வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் அவற்றின் இரு பகுதிகள் மட்டுமே… நாட்டிலுள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களில் உள்ள 50 கோடி பேர் பயனடையும் விதமாக, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வசதி பெறும் வகையிலான மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். விவசாயத் துறையில் கடன் வழங்க ரூ. 11 லட்சம் கோடி இலக்கு. ஊரக வளர்ச்சிக்கு ரூ. 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு… 2019ல் தேர்தல் வரவுள்ளதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று ஊடகங்கள் கட்டியம் கூறின. ஆனால், மோடியும் ஜேட்லியும் தாங்கள் சாதாரண அரசியல்வாதிகள் அல்லர், எதிர்காலத் தலைமுறையைக் கருதும் தலைவர்கள் என்பதை இந்த பட்ஜெட் மூலம் நிரூபித்திருக்கின்றனர்…

View More இது தாண்டா பட்ஜெட்!

உங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்

நான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க – அது அல்ல விஷயம்; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளுங்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல – போராளிகள்… இங்கு நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ – நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை – ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கா நல்ல முதலீட்டு சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்….

View More உங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்

மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை….

View More மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு