காஷ்மீர்: இதுவே சரியான பாதை

பாகிஸ்தானில் எப்போதெல்லாம் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீரில் ஊடுருவலைக் கட்டவிழ்த்துவிட்டு, உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்வது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கடமையாக இருந்து வருகிறது. அதேபோல, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கைக்கு மக்கள் தயாராகி வருவதைக் கண்டாலும் பிரிவினைவாதிகளுக்குப் பொறுக்காது. உடனே வன்முறை தூண்டிவிடப்படும். 2016-இல் இங்கு நிகழும் வன்முறைகளுக்கு இவ்விரு காரணங்களுமே பொருந்தும்.

View More காஷ்மீர்: இதுவே சரியான பாதை

காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

அக்டோபர்-27  ஞாயிறு காலை 10 மணிக்கு.  திரு. ஆறுமுகம், காவல் துறை கண்காணிப்பாளர்…

View More காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்!

View More காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

அயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் – “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்….க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் – ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம். அது என் வேர். என் மூலாதாரம். என் தொன்மை…”. ஸ்ரீ நஸ்கி அவர்களது தாகத்துடன் ஒப்பிடுகையில் எனது தேடலில் இருக்கும் ஆவல் மிகவும் மாற்றுக் குறைவானதே. நான் ஸ்தலத்தின் வெகு அருகில் சென்றிருந்தாலும் தேசப்பிரிவினையால் இடப்பட்ட வெம்மை மிகுந்த தடைக்கோட்டால் வெகு தொலைவில் இருக்கிறேன் என்பது நிதர்சனம்…

View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1

வழிபாட்டு ரீதியாக அன்னிய மதத்தைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக ஹிந்துஸ்தானத்தை தாய்நாடாகக் கொண்ட பற்பல இஸ்லாமியச் சஹோதரர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்றுவதைக் கண்டிருக்கிறேன். அவ்வாறு போற்றும் அன்பர்களை நினைவு கூர்வதன் மூலம் ஹிந்துத்வம்வெறும் கருத்தாக்கம் அல்லது கற்பனை அல்ல மாறாக நடைமுறை சாத்யம் என்பதை சித்தப்படுத்த இயலும்… ஆங்காங்கு முந்தைய இரவில் விழுந்த பனித்துளிகள். கோபாத்ரி பர்வதம் என்ற ஒரு சிறு குன்றின் மீது ஆலயம். காஷ்மீரத்தில் ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வருகை தந்தமை பதியப்பட்டிருந்தது. அப்படியானால் அந்த ஸர்வக்ஞ பீட ஸ்தலம் எங்கிருக்க வேண்டும்?…. ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி என்ற இஸ்லாமியப்பெருந்தகை சாரதா பீடத்திற்குச் சென்று வர வேண்டும் எனத் தணியாத ஆசை கொண்டிருந்தார். அது நிறைவேறியது எப்படி எனபதை ஒரு அழகிய வ்யாசமாக எழுதியுள்ளார்…

View More மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1

காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

… எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் கொடுக்கும் விதமாக அரசியல் ஷரத்து 370, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம் போன்றவற்றை கொடுத்ததில் விளைவு, காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. இநத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டும் என பல்வேறு குழுக்கள் நியமித்து பரிந்துரை செய்த பின்னும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்பது வேதனைக்குரியது….

View More காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

பாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்… லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர்.

View More லஷ்கர்-ஏ-தொய்பாவும் காங்கிரசின் குள்ளநரித்தனமும்

லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்

அரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது… லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்… கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். இந்த இயக்கம் ஆற்றும் மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே!

View More லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்

அழைத்து அருள் தரும் தேவி

சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது…“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது… நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்…

View More அழைத்து அருள் தரும் தேவி