வன்முறையே வரலாறாய்… – 5

எந்தவொரு மத்தியகால இந்திய, இஸ்லாமிய வரலாற்றாசிரியர் எவரும், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிற்கு மதம் மாறினார்கள் என்னும் குறிப்பினை எழுதியிருக்கவில்லை. உண்மையில், இஸ்லாமிய ஆட்சியின் கொடுமைகள் காரணமாக, எல்லா சாதியினரும் இஸ்லாமிற்கு மாறியிருப்பதைக் காணவியலும்… சுல்தான் குத்புதீன் முபாரக் கில்ஜியால் காயடிக்கப்பட்டு, குஸ்ரூகான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட ஹிந்து, 1320-ஆம் வருடம் கில்ஜியைக் கொன்றான். அத்துடன் நில்லாமல் கில்ஜியின் அத்தனை போர்த்தலைவர்களையும் 20,000 பேவாரி ஹிந்துக்களின் (Bewari or Parwari) துணையுடன் கொன்றழித்தான்… சித்தூர் போரில் (1568) ஏறக்குறைய 40,000 விவசாயிகள் – அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் – 8000 ராஜபுத்திர வீரர்களுடன் இணைந்து மொகலாயர்களுக்கு எதிராகப் போரிட்டனர். இறுதியில் அக்பரின் படைகளால் கைப்பற்றப்பட்ட எந்த விவசாயிகளுக்கும் மன்னிப்பு வழங்காமல், அவர்கள் அனைவரையும் கொலை செய்ய உத்தரவிட்டார் அக்பர்…

View More வன்முறையே வரலாறாய்… – 5