இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)

என்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். பகவத் கீதையை உருது மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஒருவர். இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு செய்தி. புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது குறித்து…

View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)

காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்?

View More காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை