காலா: திரைப்பார்வை

ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்… மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்…இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்…

View More காலா: திரைப்பார்வை

டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்

வட கிழக்குப் பகுதி தனது தனித்தன்மையை வன்முறைப் பிரிவினை என்ற அளவுக்குக் கொண்டு சென்றதால் அந்த முயற்சியில் எப்படிப் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதை ‘வடகிழக்கு ஆயுதப் போராளிகளுடன் ஒரு ரகசிய சந்திப்பு” என்ற இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது. இதன் ஆசிரியர் தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் பயணம் ஊடகச் செயல்பாடுகளுக்கு ஓர் நல்ல முன்னுதாரணம்… வடகிழக்கு பிரிவினைவாதிகள் அனைவரிடமும் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்: இந்தியாவே நம் எதிரி என்பதுதான். சீன, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பிராந்திய சக்திகளிடையே இருக்கும் இந்த உள் மோதல்களினால்தான் அவை தோற்றுவிட்டிருக்கின்றன. எனவே இதை இந்திய தேசியத்தின் வெற்றி என்று நிச்சயம் நினைத்துவிடக்கூடாது… தமிழகத்திலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ சக்திகள் தத்தமது அஜெண்டாக்களுடன் களம் இறங்கியிருக்கின்றன. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள் (அல்லது இந்தப் போராட்டங்கள் நடக்கத் தோதாக அவருடைய மரணம் நடத்தப்பட்டதா) பனி மலையில் சிறு நுனி மட்டுமே. இந்தப் போராட்டங்களை கொஞ்சம் எள்ளலுடன் எகத்தாளமாகப் பார்க்கும் போக்கே இருக்கிறது… இந்து மற்றும் இந்திய அம்சங்களை எதிர்க்க எந்தவொரு நியாயமான காரணமும் வசதி வாய்ப்பும் இல்லாத நிலையிலும் தனியாகப் பிரிந்தே தீரவேண்டும் என்ற கூக்குரல்களால் சூழப்பட்டுவரும் நமக்கு வடகிழக்கின் அந்தப் போராட்டத்தின் வீழ்ச்சி பற்றிய வரலாறு ஒரு நல்ல பாடம்…

View More டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்

ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்

ஒன்றுபட்ட  ஒரே தேசமாக, ஒற்றுமையாக  நமது நாடான இந்தியா இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று நானும் நண்பரும் ஒரு நாள் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தோம்.  பேசப் பேசத் தான் இது எவ்வளவு பெரிய, மகத்தான விஷயம்  என்ற உணர்வு ஏற்பட்டு அதிகரித்து வந்து.  பின்பு, இந்த உரையாடலையே ஒரு காணொளியாகப் பதிவு செய்தால் என்ன எண்ணம் தோன்றியது. அதன் விளைவே கீழ்க்கண்ட வீடியோ பதிவு… வைகோ, சீமான் போன்ற முட்டாள்கள் இந்தியா துண்டு துண்டாக உடையும்  என்ற ரீதியில் செய்யும் பிரிவினைவாத பிரசாரங்கள்,  இந்தியா ஏதடா,  இந்து ஏதடா என்பது போன்ற உளறல்கள் ஆகியவற்றையும் பற்றி இந்த உரையாடலின் ஊடாக  பதிலடி கொடுத்துள்ளோம்.  தனித் தமிழ் தேசம் சாத்தியமில்லாத ஒன்று  என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம்…

View More ஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்

இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது…. இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான அளவு கிளர்ச்சி எழுப்பப் பட்டவுடன் பந்தை அமெரிக்கா இந்தியா மீது திணிக்கிறது. இப்பொழுது ராஜபக்சேவைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பால் திருப்பப் படுகிறது. இந்தியா அதைக் கட்டாயம் செய்ய முடியாது. அப்படிச் செய்யாத பொழுது தனித் தமிழ் நாடு கோரிக்கையை மேலும் வலுப் படுத்தலாம். இப்படி ஒரு திட்டம் இதன் பின்னே இருக்கக் கூடுமோ என்றும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது….

View More இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!

திருமாவளவனைத்தான் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கான எம்.பி. க்கள் குழுவில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இடம் பெறச்செய்தது. அவரும் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற ஒரு தேசிய தலைவரைப் போல் அவர்களுடன் காஷ்மீருக்குச் சென்று திரும்பினார். திரும்பிய பிறகு அவர் கூறியது, ‘காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்பதுதான்.

View More இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி!