திருவள்ளுவர்: காவிக்கு எதற்கடா சாயம்? [கவிதை]

பைபிள் பரங்கிய அடிமைகளுக்கு பைந்தமிழ் குறள் பேகனியப் பகை நூலே.. குர்ரான் மகமதியருக்கு குறள் முழுவதும் காஃபிரியமே.. உலகப் பொதுமறை தந்து உலகின் குருவாக அவர் உயர உங்களில் ஒருவராக அவர் இருந்திராததே காரணம்.. உலகில் உள்ளோரைக் கொன்றும் ஏய்த்தும் தன் மறையைப் பரப்பென்று சொல்லாத எங்கள் தர்மத்தின் வழியில் அவர் இருந்ததே காரணம்.. கள்ளுண்ணாமை போதித்து கற்றவற்றின்படி நிற்கச் சொன்னவர் சாராயம் விற்று நடக்கும் சாக்கடை மாடல்களையெல்லாம் காலில் கிடப்பதைக் கழற்றி அடிப்பார்..

View More திருவள்ளுவர்: காவிக்கு எதற்கடா சாயம்? [கவிதை]

திருக்குறளும் மஞ்ச்சூரியனும்

திருவள்ளுவர் தடாலென்று வானத்திலிருந்து குதித்து தடாலடியாக 1330 குறள் எழுதிவிடவில்லை. அவரது பண்பாட்டில், சூழலில் ரிஷிகளும் முனிவர்களும் உபதேசித்து, வாழ்ந்து ஊறிய ஞானத்தைத் தான் குறளாகப் படைத்தார். ஆனால், இந்த உண்மையைச் சொன்னால் தமிழ்பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்டு ஆசாமிகளும் அதைக் கற்க விரும்ப மாட்டார்கள், எதிர்ப்பார்கள். எனவே, திராவிட இயக்கம் உருவாக்கிய அந்தப் பொய் அப்படியே நீடிக்கட்டுமே. தமிழகம் “அமைதிப் பூங்காவா” இருக்கவேண்டாமா? – இப்படியும் ஒரு தரப்பு…

View More திருக்குறளும் மஞ்ச்சூரியனும்

தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி

ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..

View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி

வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி

டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…

View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி

இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

இந்த ஆண்டு விநாயகரின் பிறப்பைப் பற்றியும் பிள்ளையார் வழிபாடு பற்றியும் திண்டுக்கல், கோவை போன்ற சில ஊர்களில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. […]மக்கள் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எல்லா ஊர்களிலும் சந்து பொந்துகளில் உள்ள சின்னஞ்சிறு பிள்ளையார் கோயில்களிலும்கூட மிக விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது.

View More இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

தலபுராணம் என்னும் கருவூலம் – 2

இந்தப் பாடலில் ஏனையோர் கூறுமாறு பிராமணர் முதலியோர் முகம் முதலிய உறுப்புகளில் தோன்றியதாகக் கூறிய சுவாமிகள், நான்காம் வருணத்தவரை, “முகம், தோள், தொடை ஆகிய உறுப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் சரணம் என்று உரைக்கும் உறுப்பினில்” தோன்றியவர்கள் எனக் கூறுகின்றார். சரணம் என்பதற்குக் கால் என்ற பொருளோடு, புகலிடம் என்பதும் பொருள். ஏனைய மூவருக்கும் புகலிடமாக இருப்பவர் நான்காமவர் என்றும், தம் உழவுத் தொழிலின் மேன்மையால் மூவரையும் நிலைபெறத் தாங்கும் வேளாளர் என்னும் பெயரைத் தமக்கே உரியவர்கள் என்றும் விளக்கினார். வேளாளர் என்பதற்கு பிறருக்கு உபகாரியாம் தன்மை உடையவர் என்று பரிமேலழகர் பொருள் உரைப்பார்….

View More தலபுராணம் என்னும் கருவூலம் – 2