தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!

முகலாயர்களுடைய வரலாற்றைச் சற்றுத் திரும்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்கெல்லாம் புலப்படும். அதாவது ராஜகுடும்பத்தில் அரசபதவி என்றால் உறவுகள் மறக்கப்படும் என்பதுதான் அந்த உண்மை. முந்தைய முகலாயமன்னர்களாலும் சொந்தங்களுடன் போராடித்தான் அரச சிம்மாசனத்தைப் பிடிக்கமுடிந்திருக்கிறது. அங்கு அண்ணன்-தம்பி பாசமோ, அப்பன்-பிள்ளை என்கிற உறவோ குறுக்கே நிற்கமுடியாது. தன் சொந்த மகனாலேயே சிறையிடப்பட்ட ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் சிறையில் இருந்தபடியே கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தே 1666 ஜனவரி 22ல் உயிரிழந்தார்.
துரோக வரலாற்றின் அடிச்சுவட்டில் அரசகட்டில் ஏறிய ஒளரங்கசீப்தான் முகலாய மன்னர்களின் கடைசிமாமன்னராக இருந்தார் என்கிறது வரலாறு. துரோகம் எப்போதும் நிலைத்திராது. அதற்குரிய விலையை துரோகிகள் கொடுத்தாக வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி.

View More தந்தையும் தனயனும் பதவிப் போட்டியில்!

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17

நேர்மையும் புனிதமும் நிறைந்த முனிவர்களிலும் ஆசைகளை வளர்த்து அதனால் மோசம் போனவர்கள் உண்டு… நமக்கு இன்று கோடிகள் தான் பெரிய எண். ஆனால் எண்ணவும் முடியாத மிகப் பெரிய எண்களையும் குறிப்பிட ஒவ்வொரு பெயர் அன்றே இருந்திருக்கிறது… இராமர் தன்னை விடவும், தன் தம்பியை விடவும் ஒருவர் மிகப் பொருத்தமானவராக இருக்கும்போது, அந்த இடத்தைத் தாங்களே எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரை அமர்த்துவதும் ராமராஜ்யத்தின் ஓர் அம்சமே…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17

மலைக்குல மயில்

ராமாயண நாயகனான ராமனின் மனைவி சீதை. எதிரணித் தலைவன் இராவணன் மனைவி மண்டோதரி. இருவரும் சிறந்த கற்புக்கரசிகள். அவர்களுக்கு நடுவில் வைத்துப் போற்றப்படுகிறாள் தாரை. அவளை “மலைக்குல மயில்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறான் கம்பன்….

View More மலைக்குல மயில்