திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்

பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…

View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்

தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்

இதே மந்திரத்தைத்தான் பிராமணர்களும் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சூத்திரனை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது இந்த மந்திரம் கேவலமாக இருந்தால் பிராமணர்கள் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துவார்களா? சூத்திரனைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் சூத்திரனுக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார்கள். ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அதே மந்திரம்தான் பயன்படுத்தப்படுகிறது…காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லாத ஒன்றை காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்தானே! இப்படி திரிபுவாதம் செய்பவர்கள்தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள்….

View More தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்

படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?

“அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான். உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார்.” திராவிடர் கழகம் செய்யும் இந்த பிரச்சாரம் எந்த அளவு உண்மை? தெரிந்து கொள்ள படியுங்கள்…

View More படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?

பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை

பகுத்தறிவைக் குத்தகைக்கு வாங்கிய திராவிட தலைவர்கள் உடையும் இந்தியா? என்ற நூலை பற்றி விமர்சனம் செய்கிறேன் என்ற பேரில் திராவிட தலைவர்கள் செய்த ‘வடிவேலு காமெடி’யை பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஒரு நிலப்பகுதியை இனமாக மாற்றிய இவர்களுக்கு ஒரு வார்த்தை கண்டமாக மாற்றுவதா கஷ்டம்? குமரி கண்டம் என்பது வரலாற்று திரிப்பு என்று சொன்னவுடன் காலில் வெந்நீர் கொட்டியது போல் அலறுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. தமிழ் மொழியின் எந்த இடத்திலும் குமரி கண்டம் என்ற வார்த்தை இருந்ததாக தெரியவில்லை…

View More பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை

உடையும் வீரமணி – பாகம் 2

தமிழ்ஹிந்து இணைய தளத்தை தி.க. அரங்கில் அறிமுகப்படுத்தி அதன் பெயரை விமர்சித்தார் வீரமணி… வன்முறை நேரடி நடவடிக்கையை சொல்லி ஒரு மாநில முதலமைச்சரையே மிரட்டியவர் தான் ஈவெரா. … ஈ.வெ. ராமசாமி வகையறாக்களை காமராஜர் எப்படி நடத்தினார், இந்துத்துவர்களை எப்படி நடத்தினார் என்பதைக் கூறினால்…வீரமணியும் அவரது கும்பலும் தமிழ்நாட்டில் பரவலாக கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆர்ப்பாட்டங்களை எங்கெங்கெல்லாம் செய்திருக்கிறார்கள்?… வேர்ல்ட்விஷன் போன்ற பன்னாட்டு மதமாற்ற அமைப்புகளின் பணம் எவருடையது?…

View More உடையும் வீரமணி – பாகம் 2

உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

அறியாமையை இந்த அளவு அப்பட்டமாக அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்திருக்க வேண்டாம் என தோன்றியது.. ‘குமரி கண்டம்’ எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக கேள்விக்கு உள்ளாக்கியவர் இவர்கள் ‘ஆரியர்’ என முத்திரையிடும் சமுதாயத்தைச் சேர்ந்தவரல்லர்… இந்த நூலை எரிக்க வேண்டுமென்று சொன்னது புத்தகங்களை எரிக்கும் புத்தி கில்ஜிக்கு மட்டுமில்லை ஈவெராவின் சீடகோடிகளுக்கும் உண்டு என்பதை நிரூபித்தது… ‘திராவிட’ என்பது மிகத் தெளிவாக பிராந்தியம் சார்ந்த பதமாகவும், ‘ஆரிய’ என்பது சமூக அந்தஸ்து சார்ந்த பதமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது…

View More உடையும் இந்தியா? குறித்து வீரமணியின் வசையரங்கு

தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? . இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, “ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!” என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?

View More தேர்தல் களம்: இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை!

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

அண்ணாத்துரை குறித்து பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்… கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள். இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!

View More புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?

இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.” என்று நிறுத்தியது வேதாளம்.

View More வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை