சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்

சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. இவற்றை மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளைத்தனம் போன்றது… ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார். எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம்..

View More சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்

அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

வேதநெறியும் தமிழ் சைவத்துறையும் (2009) என்பதில் தொடங்கி சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளன. ஐயா அவர்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும், அவரது சைவசித்தாந்த ஞானத்தெளிவுக்கும், அவரது சிவபக்திச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக இருக்கும். திருமுறைகளைப் பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாது, இசைக்கவும் வல்லவர். ஆழ்ந்த கர்நாடக சங்கீத ரசனை கொண்டவர். பேராசியரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து சைவ அன்பர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் கற்பித்து வந்தவர். .

View More அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது? இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற “ஆய்வு” நூல்கள் வெளிவரும் என்று வேறு பயமுறுத்தியுள்ளார். மிகக்கொடுமை. ஆரூர் த்யாகேசப்பெருமான் காப்பாற்றட்டும்…

View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1

சென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று “திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது… இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன. ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது? இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும்? இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம் நம்பிக்கையை அசைத்து விளையாட முனைந்து , வரலாற்று எச்சங்கள் ஒன்றும் தெளிவாக இல்லாத காரணத்தால், கிடைத்த செதில் கற்களை கொண்டு ஒரு பெரிய கற்பனை கோட்டையை கட்டி எழுப்புகிறார்…

View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

View More மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?… சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது….

View More பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

உயிருண்ணி

சீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான். இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது… விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார் மாணிக்கவாசகர். பெற்ற இன்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப்  பெருக்கின் மாண்பினைக் கூறுகின்றார்….

View More உயிருண்ணி

‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின…. எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்… இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை….

View More ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’

அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது…. மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது… அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன. கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம். எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்…

View More அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

சங்க இலக்கியமும் சைவர்களும் – 2

சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும்… புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்…

View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 2