விஸ்வரூபம் 2: திரைப்பார்வை

50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது.. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது…பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும்…

View More விஸ்வரூபம் 2: திரைப்பார்வை

வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”

ஒரு பெரிய பிரசினை வேண்டும். மணி ரத்தினத்துக்கு அது ஒரு கோட்ஸ்டாண்ட். அதில் அவர் தன் காதல் கதையை, பாடல்களை, நடனங்களை, அழகான லொகேஷன்களை, அழகான புகைப்படக் காட்சிகளைத் தொங்க விடுவார்…. ஆனாலும் ரஸவாதம் செய்வதில் மணிரத்தினத்திடம் ஒரு கெட்டிக்காரத்தனம், இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஓடும் ரயில் வண்டியின் மேல் கும்மாங்குத்து ஆட வைத்த தைரியம் வேறு யாருக்கு வந்தது?… என்ன கற்பனை ஐயா, கலை உலக மேதைக்கு! கல்யாணம் எல்லாம் நல்லா நடந்திச்சாய்யா,? என்று கேட்டால் சாப்பாட்டிலே வடை போட்டாங்க, பிரமாதம்” என்று சொல்ல வேண்டி வந்தால் என்ன அர்த்தம்?… மகாதேவன் ரிபேர் வேலையில் ஒரே பாசமழை பொழிகிறது. சிவாஜி கணேசன் சாவித்ரி ஜோடியைத் தான் புக் செய்ய வேண்டியிருக்கும்…ஆனாலும் மகாதேவன் ஒரு விக்கிரக விநாசன். அந்த காரியத்தை மிக நன்றாகச் செய்கிறார். திரை உலகிலிருந்து இப்படி ஒருவர் வந்துள்ளது சந்தோஷம் தரும் ஒன்று. இங்கு விக்கிரஹங்கள் நிறைய மண்டிக் கிடக்கின்றன…

View More வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின் ”மணிரத்னம்: தலைகீழ் ரசவாதி”

விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்

ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போது இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள்… இணையத்திற்கு வெளியே, கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக முஸ்லிம்களிடமிருந்து கவனிக்கத் தக்க வகையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது… வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துபவர் கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு கமல் மூன்று நாட்கள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் அளித்த பரிசு – ”விநாயகர் என்று ஒரு கடவுளே இல்லை; ஹிந்துத்துவ வெறிக்காக விநாயகர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார்”… தமிழக அரசின், காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கு, தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு முக்கிய கேந்திரமாக ஆவதற்குத் தான் வழிவகை செய்து கொண்டிருக்கிறது….

View More விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்