பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ

மலேசியாவிலிரிந்து 1965ல் பிரிய வேண்டிய சூழல். ஏற்பட்டது. நிலையில்லாத அந்தக் காலகட்டத்தில் துணிந்து முடிவெடுத்து சிங்கப்பூர் என்னும் ஒரு தனி நாட்டை உருவாக்கினார் திரு லீ… ‘எனது சிங்கப்பூர் எந்த சித்தாந்தத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. பல முயற்சிகள் செய்தோம். சில வெற்றி கண்டன. சில தோல்வியுற்றன. நாட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய எந்த முயற்சியையும் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை’, என்று சித்தாந்த ரீதியான கட்டுக்கள் எதுவும் இல்லாத ஒரு தலைவராகவும் அதே நேரத்தில் ஒரு பழுத்த யதார்த்த வாதியாகவும் திகழ்ந்தார் திரு.லீ…

View More பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ

வன்முறையே வரலாறாய்… – 20

சிறிய தீவுக் கூட்டங்களில் நெருங்கி வாழும் மக்களின் மீது செலுத்தப்பட்ட கட்டற்ற வன்முறையே இந்தோனேஷியா மற்றும் ஃபிலிப்பைனில் பெருமளவு பழங்குடிகளை வெகு வேகமாக இஸ்லாமியர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தது என்பதே இன்றைய வரலாற்றாசிரியர்களின் முடிவு. சூஃபிக்கள் அமைதியான முறையில் தென் கிழக்கு ஆசியாவில் இஸ்லாமைப் பரவச் செய்தார்கள் என்பது வெறுக் கட்டுக்கதையே அன்றி வேறோன்றுமில்லை. மேலும் அப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான ஷாஃபி இஸ்லாமிய சட்டங்களும் இதற்கு இன்னொரு காரணம். இந்தியாவில் கொடூரங்கள் ஓரளவிற்குக் குறைந்த ஹனீஃபி இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்து காஃபிர்கள் “திம்மி”க்களாக நடத்தப்பட்டார்கள். ஆனால் ஷாஃபி சட்டங்கள் “மதம் மாறு; அல்லது மரணம்” என்னும் கொள்கையை உடையது….

View More வன்முறையே வரலாறாய்… – 20

வன்முறையே வரலாறாய்… – 19

தொடர்ந்த தோல்விகளால் மிகவும் மோசமான நிலையிலிருந்த பரமேஸ்வரன் அவனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முஸ்லிம் படைவீரர்களை முழுவதும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தான். 1410-ஆம் வருடம் முஸ்லிமாக மதம் மாறிய பரமேஸ்வரன், ஸ்ரீவிஜய அரசினை ஒரு முஸ்லிம் சுல்தானிய நாடாக – சுல்தானேட் ஆஃப் மலாக்கா – அறிவித்ததுடன் அவனது பெயரையும் சுல்தான் இஸ்கந்தர் ஷா என மாற்றி கொண்டான்…. மலாக்கா சுல்தானிய ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் இந்த வன்முறை (ஜிகாத்) பெருமளவில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது. இஸ்லாமின் ஆக்கிரமிப்பை அந்தப் பகுதிகளில் பரப்பும் நோக்கத்துடன் சுல்தானேட்டைச் சுற்றியிருந்த நாடுகளின் மீதான ஜிகாத் பெருமளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. மத அடிப்படைவாதம் கொண்ட சுல்தானியப் படையினர் “காஸி”களாகும் (காஃபிரை கொல்பவர்கள்) நோக்கத்துடன் சுற்றியிருந்த நாடுகளின் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்…

View More வன்முறையே வரலாறாய்… – 19