எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

புதிய கொள்கைகள், பெரிய திட்டங்கள், பெரிய கட்டமைப்புகள் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவது ஒரு வழி.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதை மக்களின் இயக்கமாக மாற்றி பெரும் அளவில் செய்வது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் வளர்ச்சியை கொண்டுவரும்… அரசில் இருக்கும் நாங்கள் எப்போதும் ஒரு கேள்வியை கேட்கிறோம், எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. அதற்கு என்ன வகையான பலன் கிடைக்கிறது? இதற்கு அரசு அலுவலகங்கள் திறமையாக செயல்படவேண்டியிருக்கிறது. இதற்கு சில சட்டங்களை மாற்ற வேண்டி இருக்கிறது… முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை எல்லாம் வேலைவாய்ப்புகள் இல்லையேல் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும். நமக்கு உற்பத்தி மட்டும் தேவையில்லை, வெகுஜன மக்கள் செய்யும் பெரும் உற்பத்தி தான் தேவை…. பல நாடுகள் வருமானத்தால் பணக்கார நாடுகளாக இருக்கிற போதிலும் சமூக அமைப்பில் ஏழைகளாக இருக்கின்றன. சமூகத்தை ஒன்றாக பிணைக்கும் அவர்களின் குடும்ப அமைப்புகள், நம்பிக்கை முறைகள், சமூக உறவுகள் ஆகியவை சிதறியுள்ளன. நாம் அந்த வழியில் போகக்கூடாது. நமக்கு சமூகமும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுதல் வேண்டும்…

View More எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா

எனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமிஜியின் கனவே என் கனவும்… விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். அதில் என்ன தவறு?…. கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. ..காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான்… அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு நிலமாகக் காய்ந்து கிடந்த கட்ச் பாலைவனம் முழுதும் இன்று சாலைகளின் இருமருங்கிலும் அலையடிக்கும் பசுமையுமே…

View More நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா

[பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்

‘பாரத்’ என்ற சொல்லில் அம்பேத்கருக்கு அலாதியான பிரியமும் அன்பும் இருந்தது. அதனால்தான் தன்னுடைய வார இதழுக்கு ‘பகிஷ்கிரித் பாரத்’ என்று பெயரிட்டார்… தலித்துகள் தேசியக் கண்ணோட்ட இயல்பை வளர்த்துக்கொண்டு இதர சமூகத்தினரின் மற்றும் கட்சியினரின் பரிவைச் சம்பாதிக்க வேண்டும்…இஸ்லாமின் இரண்டாவது குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூக தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான்…. முஸ்லீம் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்: உண்மையில், தீவிர சமயவெறி கொண்ட முஸ்லீம்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் முஸ்லீம் சமய உட்பிரிவினர் பாதுகாப்பாக இருக்க முடியாது….

View More [பாகம் -17] இஸ்லாமும் இந்திய தேசியமும் – அம்பேத்கர்