குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!

View More குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்… துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது…

View More தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்… மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?… சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள்.

View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை…சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை…

View More சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

போகப் போகத் தெரியும் – 6

பெரிய புராணத்தையும் கம்ப ராமாயணத்தையும் எரிக்கச் சொல்லி உத்தரவு போட்டவர் ஈ.வே.ரா.

ஈ.வே.ரா.வோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது. மறைமலை அடிகள் “பெரிய புராணத்தை எரிப்பேன் என்று சொன்ன பெரியாரின் குடலைக் கிழித்து மாலையாகப் போடுவேன்” என்றார்…

View More போகப் போகத் தெரியும் – 6