மாரியம்மன்

மாரியம்மன் என்பதை தமிழ்ச்சொல்லாக எடுத்துக்கொண்டு மழையுடன் (மாரி) தொடர்புறுத்தி விளக்கம் அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறான விளக்கம். மாரியம்மனை அம்மை போன்ற பெருநோய்களைத் தீர்க்கும் தெய்வம் என்றே பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனரே அன்றி மழை, விவசாயம், பயிர் விளைச்சல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாக அல்ல. உண்மையில் அம்மனின் பெயர் மஹாமாரீ என்ற சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வருகிறது. தேவி மகாத்மியத்திலும், அதனோடு இணைந்த சாக்த நூல்களிலும் இப்பெயர் உள்ளது…

View More மாரியம்மன்

கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரும் மரபு உண்டு. ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்… எனவே, பொருத்தமான 700 பாடல்களை கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து, சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்…

View More கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்

பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்… சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன… மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா…

View More பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்! உலகின் வெளித் தோற்றங்கள் அனைத்தும் காரிருளில் கரைந்து மறையும் அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் – ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள் யாராயினும்…

View More இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

போகப் போகத் தெரியும் – 2

ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த தொடர் ‘சுவருக்குள் சித்திரங்கள்’. தியாகு என்றழைக்கப்படும் தியாகராஜன் கல்லூரி மாணவராக இருந்த போதே படிப்பை உதறிவிட்டு நக்சலைட்டாக மாறினார். அந்த இயக்கத்தின் கட்டளையை ஏற்று ஒரு பண்ணையாரைக் கொலை செய்தார். பிறகு பிடிபட்டு ஆயுட்கைதி ஆனார். அவருடைய சிறை அனுபவங்கள்தாம் இந்தத் தொடர்.

தூக்குத் தண்டனைக் கைதிகளைக் கிறிஸ்துவ போதகர்கள் அணுகும் முறை பற்றியும், மதமாற்ற நடவடிக்கைகள் பற்றியும் விவரமாகச் சில பக்கங்கள் இதில் உண்டு.

View More போகப் போகத் தெரியும் – 2